சுந்தர மூர்த்தி நாயனார் 3 J.K. SIVAN
பஞ்சம் போக்கின பரவையார்
சுந்தரர் காலத்தில் மின்சாரம் இல்லை. திருவாரூர் தியாகராஜன் சந்நிதியில் கூட்டம். சுந்தரர் வந்துவிட்டார் தோழர்களோடு சிஷ்யர்களோடு. அடாடா எங்கிருந்து இப்படி கண்ணைப் பறிக்கும் மின்னல் ஒளி. அந்த நேரத்தில் தானா அவர் எதிரே தியாகராஜனை வழிபட பரவையும் புஷ்பங்களோடு... கண்கள் சந்தித்தன. காலங்கள் கடந்து பின்னோக்கி அசுரவேகத்தில் ஓடி அவர்களை கைலாசத்தில் இணைத்தது. ஓஹோ நீ கமலினி இல்லை? ஆமாம் நீங்கள் தானே ஹாலஹால சுந்தரர். நாம் இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்து பரமசிவன் நம்மை இங்கே கொண்டு வந்து விட்டு மீண்டும் சந்தித்த்திருக்கிறோமா? ஆமாம் கணநேரத்தில் பழசு புதிதாக தொடர்ந்தது.
''இப்போதே நீ என் மனைவி'' என்ற சுந்தரர் எண்ணத்திற்கு ''ஆஹா என் பாக்யம். இதற்குத்தானே இத்தனை காலம் காத்திருந்தேன் '' என்று பரவையார் மௌன சிரிப்பு ஆதரவாக ஆமோதித்து முற்றுப்புள்ளி வைத்தது.
அவர்கள் கனவில் பரமேஸ்வரன் ''இனி நீங்கள் கணவன் மனைவியாக வாழ்வீர்'' என்று ஆசிர்வதித்தான் .
ஆலயத்தில் மறுநாளே கல்யாண சுந்தரர் கல்யாணமான சுந்தரர் ஆனார்.
வழக்கம்போல் ஒருநாள் தியாகராஜனை வழிபட சென்ற ஆரூரர் எண்ணற்ற சிவநேசர்களை, பக்தர்களை அங்கே காண்கிறார். அவர்கள் புகழ் பாடாதிருக்கலாமா? என்ற எண்ணம் அவர் மனதில் எழுந்தது. இதற்காகத்தான் அவரை இங்கே பரமேஸ்வரன் கொண்டுவந்ததே. ''சுந்தரா நான் முதல் ஆதி எடுத்துக் கொடுக்கிறேன். நீ தொடர்ந்து பாடு '' என்று பரமேஸ்வரன் பாடிய முதல் அடி ''தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்....'' அப்படித்தான் சுந்தரரின் திருத்தொண்ட தொகை பிறந்தது.
இதோடு நின்றதா? சுந்தரர் பரவையாரோடு திருவாரூரில் இல்லறம் நடத்திக் கொண்டிருந்த காலத்தில் குண்டையூர் கிழார் என்ற ஒரு வேளாளர் தான் அவர்களுக்கு வழக்கமாக உணவு தானியங்கள் தருவார். சுந்தரர் மேல் பக்தி. நாட்டில் திடீரென்று பஞ்சம். பற்றாக்குறை எங்கும். கிழார் எங்கே போவார் சுந்தரருக்கு தானியம் வழங்க. சுந்தரர் பரவையார் பசியோடு சிவனை வணங்கினார்கள். சிவன் சும்மா இருப்பானா? கிழார் குண்டையூர் கிழார் கனவில் நீ வழக்கமாக பெறும் அங்காடியில் போய் பார். உனக்கு தேவையான அனைத்தும் வழக்கத்தை விட அதிகமாகவே கிடைக்கும் எடுத்துக்கொண்டு சுந்தரர் வீட்டுக்குப் போ ''. அடுத்த நாள் காலை கிழார் தான் தானியம் பெறும் இடம் சென்றார். கனவு நிஜமாகி இருந்தது. சிவனின் கட்டளையில் குபேரன் செல்வத்தை கொண்டு அங்கே சாய்த்திருந்தான். கிழார் வீட்டில் மூட்டை மூட்டையாக தானியங்கள் வந்து இறங்கின.
சுந்தரர் கனவிலும் இந்த விஷயத்தை தியாகராஜன் அறிவிக்க, சுந்தரர் குண்டையூர் போகிறார் கிழாரைப் பார்க்க. பாதி வழியில் அவரே தானியங்களோடு வருகிறார். அருகே இருந்த சிவன் கோவில் செல்கிறார் சுந்தரர்.'' சிவா, இந்த தானியங்களை திருவாரூர் கொண்டு செல்லவேண்டும். அங்கே தான் எல்லோரும் பசியால் வாடுகிறார்கள்'' என்று வேண்ட ''அப்படியே நடக்கும் சுந்தரா. கவலைப்படாதே'' என்றது அசரீரி.
சந்தோஷமாக நன்றியோடு சிவனை பாடியவாறு சுந்தரர் வீடு நோக்கி நடந்து ''பரவை உனக்கு இன்று பரமேஸ்வரன் என்ன அதிசயம் நிகழ்த்தினார் தெரியுமா?'' என்று நடந்ததை சொல்கிறார்.
குண்டையூரில் குபேரன் சாய்த்திருந்த மலைபோன்ற தானிய மூட்டைகளை அன்றிரவே சிவ கணங்கள் எடுத்துச் சென்று திருவாவூரில் எங்கு பார்த்தாலும் தானியமூட்டைகளாக காட்சி அளிக்கிறது.
பரவையார் நன்றியோடு சிவனை போற்றி பாடுகிறார். திருவாவூர் மக்களே எல்லாம் உங்களுக்குத்தான் என்று எல்லோருக்கும் தானியங்கள் பரவையார் வழங்க பஞ்சம் மறைகிறது.
அப்போது சோழராஜாவின் ஒரு சேனைத் தலைவன் கோட்புலி நாயனார். திருநத்தியாட்டங்குடி ஊர் காரர். சிவபக்தர், சுந்தரர் வீட்டுக்கு சென்று திருவாரூரில் ''ஐயா தங்கள் என் இல்லத்திற்கு வருகை தந்து ஆசிர்வதிக்க வேண்டும் '' என்று வேண்டுகிறார். ''ஆஹா, எல்லாம் சிவன் கட்டளை, வருகிறேன்'' . சுந்தரர் அவரோடு போகிறார். அங்கே என்ன நடந்தது?
No comments:
Post a Comment