Friday, March 9, 2018

harivamsam 2

ஸ்ரீ  ஹரி வம்ச புராணம்  -  ஜே.கே. சிவன்

        2. ஜனமேஜயன் - வைசம்பாயனர் சம்வாதம் 

மஹாபாரதத்தை அறிமுகப்படுத்துமுன் முதற்கட்டமாக  நைமிசாரண்யத்தில் ரிஷிகள் கூடி அங்கே வேதவியாசர் மஹாபாரதம் எழுதவேண்டும் என்பதை  எல்லோருமாக வேண்டிக்கொள்ள அவர் விநாயகரின் உதவியோடு ஓலைச்சுவட்டில் வடிக்கிறார் என்று வருவது தான் இங்கும். மகாபாரதத்தின் தொடர்ச்சி தான் ஹரி வம்சம். மாஹபரதத்தின் ஆதி பர்வம் இங்கும் அதனால் வரும்.  எனவே சுருக்கமாக அதைப்பற்றி ஒரு சில வார்த்தைகள். சுதர்  என்கிற உக்ரஸ்ரவர் சௌனகருக்கு மஹாபாரத நிகழ்வுகளை சொல்கிறார்.
AdyaM puruSham IshAnaM puru-hUtaM puru-ShTutam |
R^itam eka-akSharaM brahma vyakta-avyaktaM sanAtanam ||1-1-1

 asat ca sat-a-sat caiva yat vishvaM sat-asat-param |
parAvarANAM sraShTAraM purANaM param avyayam ||1-1-2

ma~NgalyaM ma~NgalaM viShNuM vareNyam anaghaM shucim |
namaskR^itya hR^iShIkeshaM cara-acara-guruM harim ||1-1-3

naimiShAraNye kulapatiH shaunakaH tu mahAmuniH |
sautiM papracCha dharmAtmA sarva-shAstra-vishAradaH ||1-1-4
saute sumahat AkhyAnaM bhavatA parikIrtitam |
bhAratAnAM ca sarveShAM pArthivAnAM tathaiva ca ||1-1-5\

devAnAM dAnavAnAM ca gandharva-uraga-rakShasAm |
daityAnAm atha siddhAnAM guhyakAnAM tathaiva ca ||1-1-6
\
ati-adbhutAni karmANi vikramA dharma-nishcayAH |
vicitrAH ca kathA yogA janma ca agryam anuttamam ||1-1-7

kathitaM bhavatA puNyaM purANaM shlakShNayA girA |
manaH-karNa-sukhaM saute prINAti amR^ita-sammitam ||1-1-8

tatra janma kurUNAM vai tvaya uktaM laumaharShaNe |
na tu vR^iShNi-andhakAnAM ca tat bhavAn vaktum arhati ||1-1-9

" சௌதி சிரேஷ்டரே,  மஹாபாரதத்தை உமது வாயினால் விஸ்தாரமாக கேட்க  என்ன பாக்யம் பண்ணி இருக்கவேண்டும். மஹாபாரத வம்சாவளியை கோர்வையாக அற்புதமாக நீங்கள் விவரிக்கும்போது ஒவ்வொருராஜாவையும் நேரில் கண்டு மகிழ்வதைப் போல் இருக்கிறது.  இவற்றில் அசுரர்கள், கந்தர்வர்கள் , நாகர்கள்,  ஏனைய  ராஜாக்கள், அவர்கள் வம்சம், ராக்ஷஸர்கள், தேவதைகள், சித்த புருஷர்கள் ரிஷிகள், முனிவர்கள்,  அனைவரும் வருகிறார்களே. எத்தனை வீராதி வீரர்கள், மகா புருஷர்கள் ஞானிகள் இருந்திருக்கிறார்கள். ஒவ்ஓருவர் கதையுமே  தனித்தன்மை வாய்ந்திருக்கிறது. ஆஹா, என்ன ஒரு மஹான்கள்  அந்த துரோணர், பீஷ்மர் போன்றோர்,  அம்ரிதத்தை பருக வைத்துவிட்டீர்களே . குரு வம்சத்தையும் சொன்னீர்களே, விருஷ்ணி குலத்தை பற்றியும் அந்த வம்ச மகா புருஷர்களை பற்றி கேட்க ஆவலாக உள்ளோம்.


ஆஹா  மனமும் நாவும் இனிக்கும்படியான விஷயத்தை அல்லவோ சொல்ல சொல்கிறீர்கள். இதோ சொல்கிறேன்:

janamejayena yat pR^iShTaH shiShyo vyAsasya dharmavit |
tat te ahaM sampravakShyAmi vR^iShNInAM vaMsham AditaH ||1-1-10
shrutva itihAsaM kArtsnyena bhAratAnAM sa bhArataH |
janamejayo mahA-prAj~no vaishampAyanAm abravIt ||1-1-11

"இந்த பாரத வம்சத்தில்  ஒரு ராஜா, ஜனமேஜயன் என்ற பெயர் கொண்டவன் இதே கேள்வியைத்  தான்  வியாச ரிஷியின் சிஷ்யர்  வைசம்பாயனரிடம் கேட்டான்.    அந்த சரித்திரத்திலிருந்து விருஷ்ணி குலம் பற்றி சொல்கிறேன்.

janamejaya uvAca- then janamejaya asked vyshampAyana:

mahAbhAratam AkhyAnaM bahu-arthaM shruti-vistaram |
kathitaM bhavatA pUrvaM vistareNa mayA shrutam ||1-1-12
tatra shUrAH samAkhyAtA bahavaH puruSharShabha |
nAmabhiH karmabhiH caiva vR^iShNy-andhaka-mahArathAH ||1-1-13
teShAM karma avadAtAni tvayA uktAni dvijottama |
tatra tatra samAsena vistareNaiva me prabho ||1-1-14
na ca me tR^iptiH asti iha kathyamAne purAtane |
ekaH caiva mato rAshiH vR^iShNayaH pANDavAH tathA ||1-1-15
bhavAn ca vaMsha-kushalaH teShAM pratyakSha-darshivAn |
kathayasva kulaM teShAM vistareNa tapodhana ||1-1-16
yasya yasya anvaye ye ye tAn tAn icChAmi veditum |
sa tvaM sarvam a-sheSheNa kathayasva mahAmune |
teShAM pUrva-visR^iShTiM ca vicintyemAM prajApateH ||1-1-17

வைசம்பாயனரை அப்போது ஜனமேஜயன் கேட்டான்:   முனிசிரேஷ்டரே,   மஹாபாரத காவியத்தை சொன்னீர்கள். அதில் தர்ம, அர்த்த, காம  மோக்ஷ விஷயங்கள் பற்றி சாஸ்திரங்கள், வேதங்கள் உபநிஷத்துக்கள் சொல்வது  நிறைய பொதிந்து இருக்கிறது.  மகாபாரதத்தின் நக்ஷத்ர மஹா வீரர்களை பற்றியும் விவரித்தீர்கள். 

ப்ராம்மணோத்தமரே, அங்கங்கே  விருஷ்ணி அந்தக  குல வீரர்களும் அதில் வந்தார்கள். அவர்கள் வம்சத்தை கோடி காட்டினீர்கள். இப்போது முழுசாக சொல்லவேண்டும்.  விருஷ்ணி குலத்தோரும்  பாண்டவ வம்சத்தாரும் ஒரே வகுப்பு போல தோன்றியது. உங்களுக்கு தான் அவர்களை நன்றாக தனிப்பட்ட முறையில் தெரியுமே. சொல்லுங்கள்.   கோர்வையாக சொல்லும்போது ஆதியில் பிரஜாபதி பிரம்மாவின் முதல் படைப்பிலிருந்து சொன்னாலும் சந்தோஷம் தான்'' என்கிறான் ஜனமேஜயன்''  என ஆரம்பித்தார் சௌதி.. 

sautir uvAca-sauti said

satkR^itya pari-pR^iShTaH tu sa mahAtmA mahA-tapAH |
vistareNa anu-pUrvyAM ca kathayAmAsa tAM kathAm ||1-1-18

ஜனமேஜயனுக்கு வைசம்பாயனர் ஆரம்பம்முதல் ரன்னிங்  கம்மென்டரி ஒன்றுவிடாமல் கோர்வையாக  தொடர்கிறது  அதை சௌதி அப்படியே பிரதியாக  ரீவைண்ட் பண்ணி சௌனகருக்கு சொல்கிறார். இனி சொல்லப்போவதெல்லாம் ஆகவே  ஜனமேஜயன் கேட்பதாக, வைசம்பாயனர் சொல்வதாகவே வரும்: 

shR^iNu rAjan kathAM divyAM puNyAM pApa-pramocanIm |
kathyamAnAM mayA citrAM bahu-arthAM shruti-sammitAm ||1-1-19
 yaHh ca imAM dhArayet vApi shR^iNuyAt vApi abhIkShNashaH |
sva-vaMsha-dhAraNaM kR^itvA svarga-loke mahIyate ||1-1-20

"ஜனமேஜயா, இந்த விருஷ்ணி குல பெருமையை சொல்கிறேனே, அது சாஸ்த்ரோக்தமான, வேத புராணங்களில் சொல்லப்பட்டவை. கேட்டாலே பாபம் தொலையும் . இதைமட்டும் எவனாவது மனப்பாடம் செய்தாலோ, அல்லது கவனமாக கேட்டாலோ, அவன் மட்டுமல்ல, அவனுடைய வம்சமும் கூட ஸ்வர்கத்தில் இடம் பிடிக்கும்.

வைசம்பாயனர் தொடர்வார் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...