Sunday, March 11, 2018

AINDHAAM VEDHAM

ஐந்தாம் வேதம்       ஜே.கே. சிவன் 

                   
   15.     சர்ப்ப யாகம் 


ஸ்ரீ  கிஷாரி  மோகன் கங்குலி, பிரதாப்  சந்திர  ராய் எனும் இரு அதிசய வங்காளி  மேதைகள்  அரும்பாடு பட்டு  உருவாக்கிய  லக்ஷக்கணக்கான  மஹா பாரத ஸமஸ்க்ரித   ஸ்லோகங்களின்  ஆங்கில மொழிபெயர்ப்பு ஒருமுறை நான் படிக்க நேர்ந்தது என் பாக்யம்.  ரசித்து ருசித்து மகிழ்ந்த நான் அந்த மா பெரும் படைப்பை எளிதாக்கி தமிழில் குழந்திகளுக்கு கதை ரூபமாக  அளித்தது  தான் ''ஐந்தாம் வேதம் ''   இரு பாகங்களில்  ஒவ்வொன்றிலும் ஐநூறுக்கு மேற்படாத பக்கங்கள், வண்ணப்படங்களுடன்அளிக்க எனக்கு தேவைப்பட்ட நேரம்   ரெண்டுவருஷம், ஒன்பது மாதம் 14 நாள் ---  ஒவ்வொருநாளும் குறைந்தது 18மணி நேர உழைப்பு. பிரதிகள் குறைந்த பக்ஷம் ரூபாய்  ஆயிரம் நன்கொடை  வழங்குவோர்க்கு தரப்படுகிறது. ல்  இந்த நண்கொடை எதற்கென்றால் இது போன்ற மற்ற புத்தக வெளியீடுகளை  அச்சுக்கூலி செலவை சந்திப்பதற்கு --   சிவன் 
++

''அஸ்திகர்  தனது  தாயிடம்  கேட்டார்:

''எதற்கம்மா என்னிடம்  ஏதோ சொல்லவேண்டும் என்று  உரைத்தீர்கள்?''

 ஜரத்காரு என்ற பெயர் கொண்ட அவரது தாய்  ''மகனே, உனது மாமன் சர்ப்பராஜா. அவனது தாய்  கத்ரு சர்ப்பங்கள் அனைவருக்குமே  தாய். காச்யபர்  கொடுத்த வரத்தால்  அனைத்து சர்ப்பங்களின் தாயானவள்.  பாண்டவ  வமிச அரசன் ஜனமேஜயன் ஒரு  மா பெரும்   யாகம்  ஆரம்பித்திருக்கிறான். அதன் சக்தியால்  பிரபஞ்சத்தின் அனைத்து சர்ப்பங்களும்  தன்  வசமின்றி கவரப்பட்டு  ஜனமேஜயன்  யாகத்தீயில் வந்து விழுந்து மாண்டுவிடும் . இதை உன்னால்  எவ்வாறாவது தடுத்து நிறுத்த இயலுமா?''

 அஸ்திகர்  வாசுகியிடம் சென்றார்.

 ''மாமா,  உங்கள் கவலையை விடுங்கள்.  இனி  கத்ருவின்  சாபம் உங்களை யும்,   சர்ப்ப வர்கத்தையும்  அழிக்காதவாறு  நான்  பார்த்துக்கொள்கிறேன். இன்றே  நான்  ஜனமேஜயன் அரண்மனை செல்கிறேன். என் வார்த்தை பொய்க்காது. இனி சர்ப்பங்களுக்கு  மரண பயம் வேண்டாம்.''

அஸ்திகர் ஜனமேஜயன் அரண்மனை சென்று அவனைப் பார்த்தார். அவன் இந்த இளைய தேஜஸ் மிகுந்த ரிஷியை வரவேற்றான்.

''ஹே  ராஜன், ஜனமேஜயா, உன்  யாகம்  எந்தவிதத்திலும்   சோமன், வருணன், பிரஜாபதி, சகரன், யமன், ஹரிமேதன், ரந்திதேவன் ஆகியோர் நிகழ்த்திய யாகங்களுக்குத்  தாழ்ந்தது அல்ல. எனவே இந்த யாகத்தை சிறப்பாக நடத்தி தக்க  பலனை  அடைவாய். '

''வயதில் சிறியவராக இருந்தபோதிலும் இவர் ஒரு  பாலயோகி  ஞானஸ்தர் ''என்று  புகழ்ந்தான்   ஜனமேஜயன். 
''இந்த  சிறிய வயது முனிவரை நன்றாக உபசரித்து  கவனியுங்கள்.  யாகம் முடிந்து  தக்க  சன்மானம் வழங்கவேண்டும். அவர்  விருப்பம்  திருப்தியாக  நிறைவேற வேண்டும்''  என்றான் ஜனமேஜயன்.''

யாகம் நடந்தது தொடர்ந்தது. பல சர்ப்பங்கள் யாகத்தீயில் விழுந்து மாண்டன .

 ''தாங்கள் விரும்பிய வரம் பெறலாம்'' என்றான்  ஜனமேஜயன் அஸ்திகரிடம்.  அதற்குள்  யாக  அதிகாரி 

 ''இன்னும்  தக்ஷகன் இங்கு வரவில்லை. மந்திரங்களை நிறுத்தாமல்  உச்சாடனம் செய்யுங்கள். அவனும் கவரப்பட்டு இந்த யாகத்தீயில் விழுந்து மாளட்டும்'' என்று ரித்விக்குகளுக்கு  உத்தரவிட்டார். .
 ''ஆமாம்   என் முதல் எதிரி என் தந்தை பரிசக்ஷித்தை கொன்ற   தக்ஷகன் இந்த யாகத்தில்  மந்திர வசப்பட்டு  கட்டுண்டு இந்த வேள்வித்தீயில் விழுந்து  முடிந்தால் தான் என்  யாகம் வெற்றிபெறும்'' என்றான் ஜனமேஜயன்.

''தக்ஷகன் பயத்தில்  இப்போது   இந்திரனிடம்  சரணடைந்து இருக்கிறான்.  இந்திரனும் அவனுக்கு ''என்னிடம்  நீ இருக்கும் வரை  உன்னை  அக்னி அணுகாது'' என்று அடைக்கலம் கொடுத்திருக்கிறானாம்''.

 ''பிராமணர்களே   யாக மந்திரத்தை  உக்ரமாக்குங்கள்.   தக்ஷகனுக்கு  இந்திரன்  அடைக்கலம் கொடுத்தால்,  இந்திரனையும்  வசியப்படுத்தி  இந்த  யாகத்தீயில் இருவரையுமே  முடியுங்கள்''  என்று  ஜனமேஜயன்   உற்சாகப் படுத்தினான்.

 சக்தி வாய்ந்த மந்திரங்கள் இந்திரனையும் கட்டுப்படுத்த  அவன்  தக்ஷகனுடன்  யாக மண்டபத்தின் மேல்  ஆகாயத்தில் தோன்றினான். மந்திரங்கள் அவனைக் கட்டுபடுத்தாமலிருக்க  தக்ஷகனை  உதறிவிட்டு இந்திரன் திரும்பினான்.  தக்ஷகன்  யாகத்தீயை மெதுவாக  நெருங்கி  கீழே  விழத் தொடங்கினான்.

 '' மகாராஜா, யாகம்  பூரணம் ஆகப்போகிறது.  இந்த  பிராம்மணருக்கு  வேண்டிய வரத்தைக் கொடுக்க இதுவே  நேரம்''  என்றனர்.

''எங்கே  அந்த   பால்ய  யோகி,  அழைத்து வாருங்கள். முதல் பிராமணனாக  அவருக்கே  கேட்ட தக்ஷிணை தருகிறேன்''''

அஸ்திகர்  அழைக்கப்பட்டார்.

 'மகாராஜா,  மகாராஜா,  இதோ  தக்ஷகன்  அருகே  வருகிறான்.  கதறுகிறான்  அவனால்  மந்திரக் கட்டிலிருந்து  விடுபட முடியவில்லை. முக்ய தருணம் வந்துவிட்டது'' என்றனர்  யாக  ரித்விக்குகள்.

''ஜனமேஜய மகாராஜா,  நீங்கள் எனக்கு என்ன வரம் கேட்டாலும் தருவதாக  சொன்னீர்களே.  இந்த யாகம் இப்போதே  முடியவேண்டும். எந்த  சர்ப்பமும் இனி யாகத்தீயில் மரணமடையக்கூடாது.   என்னைப் பொறுத்தவரை என்  தாய் வர்க்கம் இதால்  உயிர்பிழைக்கும்.''

''பால முனிவரே  வேறு எதாவது வரம் கேளுங்கள்'' என்றான்  ஜனமேஜயன்.

''நான் கேட்ட, கேட்கும் வரம் இது ஒன்றே தான்''  தருவதாக ஒப்புக்கொண்ட அரசன்  இனி  பின் வாங்கக்கூடாது.''

''அரசே  அவர் கேட்டதை அளிக்கவேண்டியது ஞாயம் என்றனர்  யாகம் செய்துகொண்டிருந்த  ரித்விக்குகளும்''.

நைமிசாரண்யத்தில்  ரிஷிகள் ஆர்வமாக இந்த  மஹா பாரத நிகழ்ச்சிகளை கேட்க,  அவற்றை சொல்லிக்கொண்டிருந்த  உக்ரஸ்ரவ  ரிஷியிடம் சௌனகர்   ''முனீஸ்வரா,  எங்களுக்கு   அந்த  யாகத்தீயில் விழுந்து மாண்ட  சர்ப்பங்களின் பெயர்களைச்  சொல்லவேண்டும்'' என்றார்

''அதெப்படி   லட்சோப லக்ஷம்  சர்ப்பங்களின் பெயர்களைச் சொல்லமுடியும்.  முக்யமாக  வாசுகியின் வம்சத்தை சார்ந்த   நாகங்கள் சிலவற்றின்  பெயரை வேண்டுமானால்  சொல்கிறேன்.   

''கோடிசன் ,மானசன், பூமா,கலா, பாலா, ஹால்மகன், பிச்சலன், கௌனபன், சக்ரன் ,காலவேகன், ப்ரகலனன், ஹிரன்யவஹு, சாரணன், கக்ஷகன், காலதண்டகன்,  இவர்களெல்லாரும்  வாசுகியின் மக்கள். யாகத்தீயில் எண்ணற்றோர்  மாண்டுவிட்டனர்.  இப்போது  தக்ஷகன்  வமிசத்தில் சில பேரைச் சொல்கிறேன்.  புச்சண்டகன், மண்டலகன், பிண்டசேக்த்ரி, ராவேனகன், உச்சோச்சிகன் , சரவன், பங்கஸ், வில்வதேஜஸ்,  விரோஹணன், சில்லி, சலகாரன், முல்கன், சுகுமாரன்,  ப்ராவேபணன்,முத்கரன்,  சிசுரோமன், சுரோமன், மகாஹனு.   ஐராவதன் என்னும்   சர்ப்பத்தின் மக்கள்  யார்  யார்  தெரியுமா  இந்த  தீயில் மாண்டவர்கள்?. அவர்கள் பெயர்களையும் சொல்கிறேன் கேள். பரவதன் , பாரிஜாதன், பாண்டரன், ஹரிணன்,  க்ரிசன் ,சரபன், விஹங்கன், மேதன், ப்ரமொதன், சௌஹடபனன்.   இன்னும் சொல்லட்டுமா?''  என்றார்  உக்ரஸ்ரவர் என்கிற  சௌடி ரிஷி.

 ''போதும் போதும்''  என்றார் சௌனகர்.  நமக்கும்  தானே  இது நல்லது.

 ''ஏன்  தக்ஷகன்  மயங்கியவன், சக்தியற்றவன்,  ஆகாயத்திலிருந்து  யாகத்தீயில் விழவில்லை. மந்திரங்களின் உச்சாடன சக்தி  குறைவானதாலா?

 ''இல்லை,  அஸ்திகர்   யாகத்தீயை நோக்கி  கீழே  விழுந்துகொண்டிருந்த  தக்ஷகனை    ''நில், அங்கேயே  நில், என்று  மூன்று தடவை சொன்னதால்  தக்ஷகன் யாகத்தீயில்  விழவில்லை''.

 ஜனமேஜயன் இந்த விவரங்களைக் கேட்டு,  அஸ்திகரின்  தவ வலிமையை அறிந்தான்.  அவர் கேட்ட வரத்தின்படியே  யாகம்  முடிக்கப்பட்டது.  சர்ப்பங்கள்  உயிர் தப்பின.

 சர்ப்பங்கள்  அனைத்தும்  அஸ்திகருக்கு நன்றி தெரிவித்தன.  உங்களுக்கு  நாங்கள்  என்ன வரம்  தரட்டும்  என்று கேட்டன.

அஸ்திகர் ''இனி  நீங்கள்  காலையோ மாலையோ  இரவோ  என்  இந்த   செயலை  எந்த  பிராமணர்கள்   நினைவு கூறு கிறார்களோ ஒரு சர்ப்பமும் அவர்களை  நெருங்கக்கூடாது.''

சர்ப்பங்கள் சத்தியம் செய்து கொடுத்தன. இன்று முதல்  யார்  ஜரத்காரு,  அஸ்திகர், அர்திமன், சுனிதா என்ற பெயர்களைச் சொல்கிறார்களோ அவர்களை எந்த  சர்ப்பமும் நெருங்காது.  (நாம் அன்றாடம் செய்யும் சந்த்யா வந்தனத்தில் இந்த  சர்ப்ப ரக்ஷக மந்த்ரமும்  உண்டே.

 நர்மதையை வேண்டி  வடக்கே  பார்த்துக்கொண்டு  சொல்கிறோமே  அந்த  மந்திரத்தில் ஜரத்காரு ரிஷி, அவர்  மனைவி ஜரத்காரு ஆகியோருக்கு  பிறந்த  அஸ்தீக  மகரிஷி  ஜனமேஜயன் யாகத்தில் அழிய இருந்த சர்ப்பங்களை காத்து உயிர் பிச்சை அளித்து  அவை என்றும் நம்மை கடிக்க மாட்டோம் என்றும்  சத்யம் செய்து கொடுத்த இந்த மந்திரத்தை  உச்சரித்து  சர்ப்பங்களிடமிருந்து எந்த  ஆபத்தும் வராமல் காக்கப்படுவோம்  என்று  வரும் சர்ப்ப ரக்ஷ மந்திரம் இது

.''நர்மதாயை நம:  ப்ராத: நர்மதாயை நமோ நிஷி , நமோஸ்து நர்மதே  துப்யம் த்ரஹி  மாம் விஷ சர்ப்பதா
அப சர்ப்ப சர்ப்ப  பத்ரம் தே  தூரம் கச்ச மகா  யசாஹ  ஜனமேஜயச்ய  யஞாந்தே ஆஸ்தீக வசனம் ஸ்மரண்   ஜரத் காரேர்  ஜரத் கார்வம் ஸமுத்பன்னோ மஹா யஸ அஸ்தீக சத்ய சந்தோ மாம் பன்னகேப்யோ அபி ரக்ஷது''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...