Thursday, March 29, 2018

MAHAVEER



மஹாவீர ஜெயந்தி - J.K. SIVAN

இன்று நல்ல வெயிலில் வெளியே செல்ல நேரிட்டது. வழியில் கும்பல். யாரோ ஒரு ஜைனர் எல்லோரையும் நிறுத்தி குளுகுளு என்று பசு மோர் பெரிய லோட்டாக்களில் கொடுத்துக் கொண்டிருந்தார். நிறைய பேர் முகம் திருப்தியால் நிறைந்திருந்தது. பரவாயில்லையே தர்மம் இன்னும் சாகவில்லையே, நங்கநல்லூரில் தெரிகிறதே என்று நினைத்தபோது என் தோளில் ஒரு கை . திரும்பினால் ஒரு ஜெயின் சிரித்துக்கொண்டே என் முன் ஒரு லோட்டாவை நீட்டினார். எதற்கு ஸார் ? நான் கேட்கவே இல்லையே? என்றேன்.

இல்லை இன்று மஹாவீர் ஜெயந்தி. அதை சந்தோஷமாக இப்படி கொண்டாட எனக்கு ஒரு ஆசை. என் குடும்பம் நண்பர்கள் எல்லோரும் இதில் ஈடுபட்டிருக்கிறோம் என்கிறார். வெயிலில் அவர் பேச்சு குளுமையையும், அவர் கொடுத்த மோர் உள்ளே குளிர்ச்சியையும் நிரப்பியது

ஜன வெள்ளம் நிறைந்த நமது பாரத தேசத்தில் ஹிந்துக்களை தவிர மிகவும் பிரபலமான பல பழைய மதங்கள் புத்த மதமும் ஜைன மதமும் தான் நாடாளாவியதாக இருந்தது. இந்த இரு புது மதத்தினர் நிறைய பேரை தம் வசம் இழுக்க என்னென்னவோ பிரயத்தனங்கள் பண்ணியும் நாளடைவில் எண்ணிக்கையில் குறைந்து போய்விட்டனர். இந்துக்களுடன் சேர்ந்து வாழ தெரிந்து கொண்டார்கள். இன்று வரை. மற்ற பிற்கால மாதங்களில் கிறிஸ்துவ மதமும் இஸ்லாமும் தான் திருப்தி இன்றி நிறைய இந்த தேசம் முழுதும் தம் வசமாக இன்று மதியம் வரை ஓயாமல் ஒழியாமல் பிரயாசைப் படுகிறார்கள். அவர்களால் நமக்கு ஏற்படும் இடைஞ்சலை விட நம்மவர்களே நமக்கு செய்யும் தீங்கு தான் அதிகம் என்பேன்.

சுப்பிரமணியம், ராமன், கிருஷ்ணன், என்றெல்லாம் அப்பா அம்மா பேர் வைத்தாலும் ஹிந்துக்களை ஏதோ அந்நியர்கள் போல் நடத்தும் மனதை புண் படுத்தும் காரியங்களில் ஈடுபடுவது காலத்தின் கோளாறு.
ஆனால் எல்லாமே சில்லறை பனித்துளிகள் பரந்த ஹிந்து சூரியன் முன்னே காணாமல் மறைபவை.

இன்று ஒரு மஹான் பிறந்த நாள். அவர் பெயர் வர்த்தமானர். கடைசி 24வது ஜைன மத தீர்த்தங்கரர் 72 வருஷங்கள் வாழ்ந்தவர். அப்பா அம்மா சிததார்த் என்ற புத்தர் பெயர். அம்மா த்ரிஷ்லா. த்ரிஷா இல்லை. வைசாலியில் கி.மு. 527ல் பிறந்தவர். புத்தர் காலத்தவர் என்பதை விட புத்தரைப் போலவே அவரும் ஒரு ஒரு ராஜ வம்சம் என்று சொல்லலாம். முப்பது வயதில் துறவறம் பிடித்து விட்டது. பன்னிரண்டரை வருஷம் த்யானம் இருந்து ''கேவல ஞானம்'' எனும் ஞான சக்தி பெற்று மஹா வீரர் என்று புகழப்பட்டவர்.
இந்தியா முழுதும் நடந்தவர்

ஜைன மதம் அஹிம்சை காருண்யம், சத்யம், களவு இன்மை, பிரம்மச்சர்யம், பிறர் பொருள் கவராமை ஆகியவற்றை அடிப்படை கொள்கையாக கொண்டதால் அதெல்லாம் நிறைய ஏற்கனவே இருந்த ஹிந்து சமுதாயத்தில் எடுபடவில்லை. இங்கே காலூன்ற முடியவில்லை.

எனக்கு இன்றும் புத்தர் சிலையா மஹாவீரர் சிலையா என்று சந்தேகம் வரும்போதெல்லாம் துணியை தேடுவேன். இல்லை என்றால் மஹாவீரர். நல்ல உயரமான மனிதர். சிலர் யசோதா என்ற பெண்ணை மணந்தவர் என்கிறார்கள். சிலர் அவருக்கு மணமாகவில்லை என்கிறார்கள். அவர் சிறந்த துறவி என்பதால் திருமணம் பற்றி மேலே பேச தேவையில்லை.

ஜைனர்களின் முக்கிய இரு பிரிவு ஸ்வேதாம்பரர்கள் வெள்ளை ஆடை உடுத்தும் சந்யாசிகள். திகம்பரர்கள் ஆடை அற்றவர்கள் என்பது தான். இரு சாராரும் இன்றும் உண்டு. ஜைனர்களைப் பொறுத்தவரை கடவுள் இல்லை. இந்த பிரபஞ்சம் ஆரம்பம் முடிவு இல்லாத ஒரு சூன்யம். அஹிம்சை அன்பு ரெண்டு தான் பிரதானம். மறு பிறவி என்பது இல்லை என நம்புபவர்கள், உண்டு என்றும் சிலர் வாதிப்பது உண்டு. மஹா வீரர் நம்மைப்போல் கர்ம வினைக்கேற்ப மறுபிறவி உண்டு என்பவர். சத்தியத்தை உணர முடியுமே தவிர விவரிக்க முடியாது என்பவர்கள்.

அவர்களுக்கு மஹாவீரர் பிறந்த நாள் பெரும் பண்டிகை. மஹாவீர் ஜெயந்தி. மற்றொன்று தீபாவளி. அன்று தான் புதுவருஷம். ஜைனர்கள் பெருமபாலோர் ஏதேனும் தொழில்களில் வியாபாரிகள்.

மஹா வீரர் தான் ஜைன மத ஸ்தாபகர் என்று சொல்வது தவறு தான். அவருக்கு முன்பே 23 தீர்த்தங்கரர்கள் இருந்திருக்கிறார்கள். மஹா வீரர் அஹிம்சாவாதி, ஜைனர்களில் பெண் சன்யாசினிகளும் உண்டு.
வெகுகாலம் நான் ஜைன உணவு அருந்தியவன். எங்கள் வீட்டில் அரிசி பருப்பு வகையறா ஒரு ஜெயின் கடையில் தான் வாங்கினார்கள்.விலை குறைக்க மாட்டார். ''இன்று ரொக்கம் நாளை கடன்'' அட்டையில் தொங்கும்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...