Monday, March 5, 2018

THENAANA VEMANA 3


தேனான வேமனா​​ 3 - J.K. SIVAN
வேமனா இந்த சதகத்தில், நூறு நீதி ஸ்லோகங்களை தனக்குத் தானே உபதேசித்துக் கொள்வதைப் போலவே எழுதியிருக்கிறார். ஒவ்வொரு பாடலில் கடைசி வரியிலும் ''அடே வேமா, ​இந்த உலகைக்கண்டு பிரமித்து அதில் மயங்குபவனே, நான் சொல்வதைக் ல்கொஞ்சம் காது கொடுத்துக் கேளடா'' என்று வருவது அற்புதம்.
నీవు నిలిచియుండు నిఖిలంబు నిలువదు
నిలిచియుండు నెండు నీరువలెను
నీవు నిశ్చయంబు నిఖిలంబు మాయయౌ​​
విశ్వదాభిరామ వినుర వేమ!

నీవు ఏమాత్రం మందగించినా, సర్వ విశ్వము నిలబడలేదు. అది ఎండి పోయిన చెరువు నీళ్ళలాగా అయిపోతుంది. నీవు సత్యము. మిగిలిన వన్నీ మాయలు. ఓ వేమా, విను. వేమన మహాకవి పద్యాలు చాలా లోతుగా ఉండి, వేదాంత సందేశాలతో నిండి ఉంటాయి. కొన్ని ఎంతో ఎన్నో రోజులు మధన పడితే తప్ప అర్ధం కావు.

nIvu nilici yunDu nikhilambu niluvadu
nilici yunDu enDu nIru valenu
nIvu niScayambu nikhilambu mAyayau
viSvadAbhi rAma vinura vEma.

இந்த உலகமே அசைவில், இயக்கத்தில் தான் ஜீவிக்கிறது. அசைவு நின்றால்.......? ''நான் அசைந்தால் அசையும் இந்த அகிலமெல்லாமே அறிவாய் மனிதா'' பாட்டு சிவாஜி கணேசன் கண்ணை இரு ஓரங்களுக்கும் அசைத்து சிரிப்பாரே... அசைவு நின்றால் பிரபஞ்சம் ஸ்தம்பிக்கும். அதனால் தான் இறைவன் நடராஜன். ஆடிய பாதன், ஆடல் வல்லான். நீரில்லாத ஏரி. நீ ஒருவன் தான் அசைவில்லாத ஸா
ஸ்வதன். மற்றெல்லாம் அசையும் மாயை.

హింసఁ జేయకుండుటే ముఖ్య ధర్మంబు
ఆనక హింసచేసి రవనిసురులు
చావుపశువుఁ దినెడు చండాలుఁడే మేలు
విశ్వదాభిరామ వినర వేమ!

himsa cEyakumDuTE mukhya dharmambu
Anaka himsa cEsir avani surulu
cAvu paSuvu tineDu camDAluDE mElu
viSvad abhi rAma vinura vEma.

வேமனா வாழ்ந்த காலத்திலும் யாக யஞங்கள் உண்டு.​ புத்தருக்கு முந்திய காலத்தில் யாகத்தில் அஸ்வம், அஜம் என்று மிருகங்களை பலியிடுவதுண்டு. வேத வித்தகர்கள் பிராமணர்கள் நடத்தும் யாகத்தில் இந்த ஹிம்சை வேண்டாமே. உங்களுக்கும் மிருகங்களை வெட்டி உண்பவர்க்கும் என்ன வித்யாசம்​. பிராணிகளை வதைப்பது வேண்டாம் என்று கண்டித்தார்.

வேத சாஸ்திரம் அறிந்தவர்கள் கடவுளுக்கு சமானம். உயிர்வதை, ஹிம்சை வேண்டாம். அஹிம்ஸா பரமோ தர்மா.. உயிர்களிடம் கருணை தான் தர்மங்களில் எல்லாம் தலையாயது.

చంద మెరిగి మాట చక్కగా చెప్పిన
ఎవ్వడైన మాట మరికేల పలుకు
చంద మెరింగి యుండు సందర్భ మెరుగుమీ
విశ్వదాభిరామ వినుర వేమ.

చెప్పాల్సిన పధ్ధతిలో చెప్తే ఎవరైనా ఎదురు మాట చెప్పరు. సందర్భం తెలుసుకుని మాట్లాడాలి. పధ్ధతులను పాటించాలి.

candam erigi mATa cakkagA ceppina
evvaDaina mATa mArikEla paluku
canda meringi yunDu sandarbha merugumI
viSvada abhirAma vinura vEma.

யாருக்காவது ஏதாவது மனதில் உறைக்கும்படியாக உபதேசம் பண்ணவேண்டு மானால் அந்த உபதேசம், அறிவுரையானது, எளிமையாக, எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் குட்டியாக இருக்கவேண்டும். அப்போது தான் அவன் ''ஆஹா நான் இதை அறிந்துகொண்டேன். அப்படியே செய்வேன்'' என்று ஏற்றுக்கொள்வான்.
இன்னொரு சமாச்சாரம். நீ யாருக்காவது அறிவுரை வழங்கும்போது அவன் அதை ஏற்றுக்கொள்ள, கேட்டுக்கொள்ளும் மன நிலையில் இருக்கிறானா, சந்தர்ப்ப சூழ்நிலைகள் உச்சிதமாக இருக்கிறதா என்று வேறு பார்க்கவேணும். அவசரமாக ஆபிஸ் லேட்டாகிவிட்டது என்று பஸ்ஸில் ஓடுபவனுக்கு கீதை ஞான யோகம் சொல்லட்டுமா என்றால்....!

Anagananaga raga matisayilluchunundu..............ఆనగననగ రాగ మతిశయిల్లుచునుండు
thinaga thinaga vemu tiyyanundu.................................తినగ తినగ వేము తియ్యనుండు
sadhanamuna panulu samakuru dharalona...................సాధనమున పనులు సమకూరు ధరలోన
Viswadhaabhiraama, Vinura Vema...............................విశ్వధాభిరామ, వినుర వేమ
​​
நானும் பாடுகிறேன் என்று திடீரென்று ஒருநாள் பாத்ரூமில் ஞானம் வந்து பாடமுல்லடியாது. '' எவண்டி உன்னை பெத்தான், கையிலே கிடைச்சா செத்தான்'' வேண்டுமானால் பாடவரும். கலிகால கவிஞனின் பாடல்கள் இவை. மஹான்கள் சிந்தனையே வேறு.
அது இசையில் இறைவனை காண வழி வகுக்கும். நாத உபாசனை. அப்படிப்பட்ட கீர்த்தனைகளை, பாடல்களை, பாசுரங்களை, மனம் கனிந்து பக்தியோடு கேட்டு பாடினால் தான் பாட வரும். பாடப் பாட தான் ராகம் வரும். கசப்பான வேப்பிலையைக்கூட மேலே மேலே மென்று தின்றால் அதுவே இனிக்கும் அல்லவா? அதுபோல தான் வாழ்க்கையிலும் விடாத சாதகத்தில் மெய்ப்பொருள் கைகூடும் என்கிறார் வேமனா.

வேமனாவைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லவேண்டுமே. அவர் சிவ பக்தர். பொய்மை வேஷம் கொண்ட பக்தர்களையோ சந்நியாசிகளையோ சாடுவதில் அவருக்கு நிகர் அவரே​.
Anuvu gani chota Nadhikulamanaradu...................అనువు గాని చోట అధికులమనరాదు
Kochmayina nadiyu kodava gadu..........................కొంచమైన నదియు కొదవ గాదు
konda addamandu knochami undada...................కొండ అద్దమందు కొంచమై ఉండదా
Viswadhaabhiraama, Vinura Vema........................విశ్వధాభిరామ, వినుర వేమ

ஆரவாரத்தின் இடையே அமைதியைத் தேடலாமா. நேரம் இடம் சரியில்லை என்றால் வெற்றி யேது நிம்மதியேது? ஒன்று புரிந்து கொள் . இதனால் எல்லாம் உன்னுடைய திறமை சக்தி, பயிற்சி முயற்சி யெல்லாம் மட்டமாகி விடுமா?

சின்னக் கண்ணாடியிலே பார்க்கும்போது பெரிய மலை கூட குட்டியாகத்தான் அளவின் குறைந்து முழுமையாகத் தெரியும். வேமனா காலத்தில் காமிரா கண்டுபிடிக்கவில்லை. எனவே கண்ணாடியில் தெரியும் பிம்பம் என்று உதாரணம் காட்டுகிறார்.

வேமனா இன்னும் சொல்லட்டும்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...