பெண்கள் 'முக மதியர்கள் '' J.K. SIVAN
அழகு என்றால் என்ன? யார் இதை இப்படித்தான் என்று நிர்ணயிக்க முடியும். டிக்ஷனரி யில் எழுதியிருந்தால் அது எழுதினவனின் மனதிலுள்ள விஷயம். அது மற்றவனோடு நிச்சயம் வேறுபடும் . இதை யாரும் எல்லையிட்டு கூற முடியாது. கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலர் என்று எல்லோருமேயா சொல்கிறார்கள், சொல்வார்கள். பெண்களை வர்ணிக்கும்ப போதும் அவளை படமாக ஒருவன் சித்திரிக்கும்போதும் இப்படித்தான் கோபுலு வரைந்த அழகுப்பெண் மணியம் மனதில் உருவான பெண்ணோடு வேறுபடுவதால். ஒரு கவிஞன் வர்ணிப்பவள் மற்றவன் வர்ணனையில் வேறுபடுவாள் . எல்லாப்பூக்களும் அழகானவை தான். நிறம் மணம் உருவம் அளவு எல்லாமே மாறுபடும். யார் எதை விரும்புகிறார்களோ அது அவர்கள் தேர்ந்தெடுக்கும் அழகு.
அழகை ரசிக்கவும் ஒரு அனுபவம் வேண்டும். சாமுத்ரிகா லக்ஷணம் என்று ஒரு சாஸ்திரமே இருக்கிறது. தஞ்சாவூர் சரஸ்வதி மஹாலில் ஒரு புஸ்தகத்தை பற்றி படித்தேன். அதில் மிருக, பக்ஷி முக சாயல்கள் மனிதர்களுக்கு இருப்பதை படத்தோடு போட்டிருந்தது. எப்படி அந்தந்த ஜீவன்களின் பிறவி குணங்கள் அதையொத்த மனிதர்களின் குணாதிசயங்களிலும் காண்கிறது என்று வெகு சுவாரசியமாக படித்தது நினைவு இருக்கிறது.
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்பதை டார்வின் தத்வம் படிப்படியாக விளக்குவதை படித்தும் படத்தில் பார்த்தும் இருக்கலாம். டிஸ்கவரி சேன்னலில் ஒரு தொடராகவே பல வருஷங்களுக்கு முன் பார்த்திருக்கிறேன்.
(ஒரு மகன் அம்மாவிடம் -- ''அம்மா, நாம் எல்லோரும் கடவுளின் அம்சமாகவே பிறக்கிறோம் என்று நீ சொல்கிறாய். அப்பா கிட்டே இதை சொல்லும்போது அப்பா வந்து இல்லை இல்லை, நாம் எல்லோருமே குரங்கில் இருந்து தான் பிறந்தோம் என்கிறாரே எது சரி? ''
அம்மா: ''இரண்டுமே சரி கோபு . நான் சொல்வது என் வம்சம். அப்பா சொன்னது அவர் வம்சம்.'')
அழகை ரசிக்க உயர்ந்த மனோபாவம் வேண்டும். தெய்வாம்சத்தை தேடி அதைக் கண்டு ரசிப்பது மதிக்கப்படுகிறது. மிருக உணர்ச்சியோடு காண்பது வெறுக்கத் தக்கது.
பெண்கள் கடவுளின் சிறந்த படைப்பு. அழகை மூலப் பொருளாக கொண்டு படைக்கப்பட்டது எனலாம். மதம் மனிதனால் உண்டாக்கப்பட்டு பெண்கள் தமது உயர்ந்த ஸ்தானத்திலிருந்து கீழே வீழ்த்தப்பட்டார்கள். இன்றும் சில மதங்கள் இதை கடைப்பிடிக்கின்றதை காண்கிறோம். பெண்களின் முகத்தை முக மதி என்போம். பெண்கள் முகமதி இன்றும் பல இடங்களில் அப்பெயர் கொண்டவர்களால் சூரிய வெளிச்சத்தை பார்ப்பதில்லை.. நமது சனாதன தர்மத்தில் பெண்கள் சம உரிமை கொண்ட காலம் வேதகாலம். அதன் பின்னர் முகலாயர்களின் ஆட்சியில் பல நூறு வருடங்கள் எத்தனையோ மாறுபாடுகளை பெண்கள் சந்தித்து அவதிப்பட நேர்ந்தது வருந்தத் தக்கது.
பெண்கள் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்ற நால்வகை குணத்தில் இயற்கையிலேயே அழகோடு பிரகாசித்தனர். மேற்சொன்ன பேரரசின் ஆட்சியில் வடக்கே பல மாநிலங்களில் பெண்கள் முக மலர்கள் திரையிடப்பட்டது. அவர்கள் சாத்திரம் பெண்களை முழுதும் மறைத்தே வைத்தது. குறைத்தே மதிப்பிட்டது. காதல் முகமறியாமல் வளருமா? பெண்கள் வெறும் பசிக்குணவா? இயற்கையின் அழகை கேவலம் துணி மறைக்க இயலுமா?
ஆரியர்கள் மென்மையான வழிமுறையினை பின் பற்றினர் என்று சொல்லும்போது அவர்கள் பெண்ணை உயர்த்தி சமுதாயத்தில் போற்றினர். சரித்திரம் சொல்கிறது. அவர்கள் திரைக்குப் பின்னால் இல்லை. .
பழகியவர்களிடம் நாணம் தோன்றுவதில்லை.
பாரதியார் துணிச்சல் காரர் அல்லவா. அவருக்கு இந்த அழகு பிம்பங்களை மூடி வைத்தால் பிடிக்குமா? எவன் என்னை தடுப்பான் பார்க்கிறேன். இந்த முகத்திரைகளை பிய்த்து எறிகிறேன் என்று கூட குமுறுகிறார். எதையும் வாயால் சொல்லி என்ன பயன். செயலில் காட்ட வேண்டாமா? அதற்கு ஒரு அழகான உதாரணமும் காட்டுகிறார்.
' ஒரு அழகான பழம் உன் கண்ணில் தென்பட்டு கையிலும் விழுகிறது.. என்ன செய்வாய். அப்படியே வைத்துக்கொண்டு அழகு பார்ப்பாயா. அதன் தோலை உரித்து எறிந்து உண்ண மாட்டாயோ? வெறுமே பார்த்துக்கொண்டும் காத்துக்கொண்டுமா இருப்பாய் ?
கண்ணனை காதலியாக பாவித்து, அவள் தலைநகரில் முகலாய வமிசத்தில் மாட்டிக்கொண்டு அழகிய முகத்தை மறைத்து திரைக்கு பின்னால் வாழ்வதை அவரால் பொறுக்க முடியவில்லை. அதை கவிதை வார்த்தையிலே எதிர்த்து வடித்து, எழுந்தது இந்த பாடல்:
கண்ணம்மா - என் காதலி - 3
(முகத்திரை களைத்தல்)
நாதநாமக்கிரியை - ஆதிதாளம்
சிருங்கார ரசம்
தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி! - பெண்கள்
திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்;
வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும் - இந்த
மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்;
வல்லி யிடையினையும் மார்பு ரண்டையும் - துணி
மறைத்தத னாலழகு மறைந்த தில்லை;
சொல்லித் தெரிவ தில்லை, மன்மதக்கலை - முகச்
சோதி மறைத்துமொரு காதலிங் குண்டோ ? ... 1
ஆரியர் முன்னெறிகள் மேன்மை யென் கிறாய் - பண்டை
ஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ ?
ஓரிரு முறைகண்டு பழகிய பின் - வெறும்
ஒப்புக்குக் காட்டுவதிந் நாண மென்னடீ?
யாரிருந் தென்னை யிங்கு தடுத்திடுவார் - வலு
வாக முகத்திரையை அகற்றி விட்டால்?
காரிய மில்லையடி வீண்ட சப்பிலே - கனி
கண்டவன் தோலுரிக்கக் காத்தி ருப்பனோ? ... 2
No comments:
Post a Comment