''ஸார், அறுபதுக்கு மேலேயா வயசு?''
''ஆமாம்''
''அப்படின்னா உங்களுக்கு தான் இது. அவசியம் கேளுங்கோ''.
''உங்களுக்கு அப்புறம் உங்களைப்பத்தி யார் என்ன பேசறா, பேசுவா, இந்த கவலையே வேண்டாம். நீங்களே இல்லாதபோது யார் என்ன சொன்னாலும் அது உங்களுக்கு கேக்கவா போகிறது. இப்பவே அப்படி இருக்க பழக்கிக்குவோமே.
குழந்தை குட்டி, பேரன் பேத்தி -- இனிமே உங்களை நம்பி அவர்கள் இல்லை சுவாமி. அவரவர்க்கு விட்ட வழி அவர்களுக்கு நடந்த தீரும். நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம். அவன் ஒருவனுக்கு நீங்கள் அடிமை. குடும்பத்துக்கு அல்ல.
நமக்கு நிறைய எல்லோரும் செய்வார்கள்.... ஆஹா இந்த எதிர்பார்ப்பு தான் குழியில் தள்ளுகிறது. ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் அவரவர்களுக்கு அவர்கள் கவலை, வேலை,இன்னும் என்னன்னவோ கவனிப்பதற்கே நேரம் இல்லை....உங்களைப்பற்றி.......?? நோ நோ அதுக்கெல்லாம் டைம் கிடையாது ஸார்
உங்கள உடம்பை, தேவைகளை , விருப்பங்களை விட உங்கள்சொத்துக்கள் மீது கண்ணாக இருக்கும் குடும்பங்களும் உண்டு. அவர்களில் நீங்கள் ஒருவர் என்றால் இப்போதே ''உரிமை கொண்டாடுபவர்கள்'' சண்டை போட்டிருப்பார்களே.. ஸார் எப்போ வீடு காலி பண்ணுவார் என்று காத்திருப்பார்கள். ஜாக்கிரதை.
என் பையன், பொண்ணு, பேரன், பேத்தி எனக்கு பேஷாக எல்லாம் தருவான்..... இது கனவாக மாறலாம். நீங்கள் என்ன அவர்களுக்கு செய்யவேண்டும் என்று ஏற்கனவே திட்டம் போட்டிருக்கிற வாரிசுகளும் சிலர் வீட்டில் இருக்கலாம். உஷார்
இனிமேலும் பணத்துக்கு உடம்பை பணயம் வைக்காதீர்கள். போதும் சம்பாதித்தது. பணயம் பயணத்தில் போய் முடியும். இருக்கும் வரை அனுபவியுங்கள். பணம் இவ்வளவு போதும் என்று சொல்பவர்கள் எத்தனை பேர்?
எவ்வளவு ஏக்கர் நஞ்சை புஞ்சை இருந்து என்ன ஸார் புண்ணியம். உங்களுக்கு உப்பில்லாமல் ஒரு கவளம் கோதுமை சோறா?
எவ்வளவு வீடுகள் யார் யார் பேரில் வைத்திருக்கிறீர்கள்? ஒரு சின்ன அறையில் ஒத்தைக் கட்டில், மெத்தை தலைகாணி கூடாது என்று டாக்டர் சொல்லிட்டாரா? மேலே மின் விசிறி ..... அது போதுமே? எவனோ ஊரையே ஏமாற்றி வளைத்துப்போட்டு வாங்கிவிட்டு (திருடிவிட்டு) இப்போது ஊர் ஊராக சுற்றி அலைந்துகொண்டிருக்கிறான். இங்கே கால் வைக்க முடியுமா?
ஒரு வார்த்தை. இத்தனை நாள் உங்களையே பற்றி கோட்டை கட்ட நேரம் இல்லை. இனியாவது கொஞ்சம் மற்றவர்களை பற்றி சிந்தியுங்கள், உதவுங்கள், உங்களுக்கு சாப்பிட யதேஷ்டமாக இருந்தால் கொஞ்சம் பசிக்கிறவர்களுக்கு தனம், தானம், கொடுங்கள், அப்போது பாருங்கள் உங்கள் சந்தோஷம் நீங்களே சாப்பிட்டு அனுபவித்ததை விட கூடுதலாக இருக்கும்.உங்களால் முடிந்த உதவி கேட்காமலேயே செய்யலாமே.
இக்கரைக்கு அக்கரை பச்சை. எல்லார் வீட்டிலேயும் ப்ராபளம் இருக்கு. கம்பேர் (compare ) பண்ணாதீர்கள். உங்கள் பழைய உத்யோகம், டவாலி சேவகன், பச்சை இங்க் கைஎழுத்து, மணிஅடிச்சால் எதிரே ஆள். எல்லாம் டிராமாவிலே நீங்கள் நடிச்ச வேஷம். அது முடிந்து ''சுபம்'' காட்டியாய்விட்டது. கனவு காணாதீர்கள். கஷ்டத்தில் தான் முடியும். புரிந்துகொண்டு யதார்த்தமாக வாழுங்கள்.
உங்கள் உடல் நலம், சந்தோஷம், உங்கள் கையில் தான் இருக்கிறது. நல்லதையே நினையுங்கள். நண்பர்களுடன் சிரித்து பேசுங்கள். ஒவ்வொரு கணமும் அழகாக ஆனந்தமாக செலவு பண்ணுங்கள். யாருக்காவது எந்தவிதத்திலாவது உபயோகப்படுங்கள்.
காலண்டர் ஷீட்டில் ஒரு காகிதம் காலையில் கிழித்துவிட்டீர்கள். அதை எடுத்து மறுபடியும் ஒட்டி வைக்கவோ , ஒத்தி வைக்கவோ முடியாது.
மனதில் சந்தோஷம் உற்சாகம் இருந்தால் மனித உடலில் நோய் வராது. டாக்டர் பேரோ அட்ரஸோ மறந்துவிடும்.
வீட்டுக்குள்ளேயே நடந்து கொண்டிருங்கள், இன்னும் கொஞ்சம் வேணும் என்றபோது ஸ்டாப் அவ்வளவு தான் என்று உணவை ஒதுக்குங்கள். இதுதான் சிறந்த வைத்தியம். எதிர்காலத்தை மரணத்தை பற்றிய சிந்தனை வேண்டாம். அது தெரியக்கூடாது என்று தான் கிருஷ்ணன் அன்றே தெரிந்து மறைத்து வைத்திருக்கிறான்.
IF YOU FIND MY ABOVE WRITING BENEFICIAL, PLEASE PASS ON TO YOUR OLD FRIENDS
No comments:
Post a Comment