Friday, February 2, 2018

ADITHYA HRIDHAYAM

சூர்யா உனக்கு நமஸ்காரங்கள் 4 J.K. SIVAN


ஆதித்ய ஹ்ருதயம் அடுத்த பதிவில் நிறைவு பெறுகிறது.

तमोघ्नाय हिमघ्नाय शत्रुघ्नायामितात्मने।
कृतघ्नघ्नाय देवाय ज्योतिषां पतये नमः॥ 20

Tamoghnāya himaghnāya śatrughnāyāmitātmane
kṛtaghnaghnāya devāya jyotiṣāṃ pataye namaḥ

தமோக்னாய ஹிமக்னாய சத்ருக்னாயா மிதாத்மனே
க்ருதக்னக்னாய தேவாய ஜ்யோதிசாம் பதயே நம:

தமோகுணம் என்னும் அஞ்ஞான இருளைப் போக்குபவனே, சூர்யதேவா, பனியையும் குளிரையும் அதேபோல் விலக்குபவனே, கெட்டவர்களுக்கும் தீயோருக்கும் நெருப்பானவனே, சூரியமண்டலத்தில் மற்ற கிரஹங்களின் பிரதம தலைவனே, உலகெங்கும் உன் ஒளியால் ஜீவசக்தி அளிப்பவன், உனக்கு நமஸ்காரம்.

तप्तचामीकराभाय वह्नये विश्वकर्मणे।
नमस्तमोऽभिनिघ्नाय रुचये लोकसाक्षिणे॥

Taptacāmīkarābhāya vahnaye viśvakarmaṇe
namastamo'bhinighnāya rucaye lokasākṣiṇe 21
தப்த சாமீகராபாய வஹ்னயே விஶ்வகர்மணே |
நமஸ்தமோ‌உபி னிக்னாய ருசயே லோகஸாக்ஷிணே || 21 ||

தங்கத்தை உருக்கி ஓட விட்டால் போல தக தக வென்று ஒளிரும் ஆதித்யா, வித்யாசம் பார்க்காமல் சகலத்தையும் ஒரே சமமாக பாவித்து ஜிவாலையோடு எரிக்கும் சூர்யா, அஞ்ஞான இருள் நீக்கியே, பிரபஞ்ச ஸ்ரிஷ்டிகாரண விஸ்வகர்மா, சகல காரியங்களுக்கும் காரணமானவனே, சர்வ ஜீவன்களுக்கும் உயிர்ச்சக்தி அளிப்பவன், நீ விஸ்வ காரணன், அஞ்ஞானத்தை நீக்கும் ஒளிச்சுடர். அக்னிஸ்வரூபம், லோக காரணன், சர்வ வியாபி, செந்நிற ஒளிப்பிழம்பு, ஸ்வர்ணமயன் , சர்வ சாக்ஷி. உனக்கு கோடானு கோடி நமஸ்காரங்கள் ஆதித்ய நாராயணா.

नाशयत्येष वै भूतं तदेव सृजति प्रभुः।
पायत्येष तपत्येष वर्षत्येष गभस्तिभिः॥

naasa yatyesha vai bhootham tadeva srujathi prabha
payathyesha thapathyesha varshatyesha gabhasthibhi

நாஶயத்யேஷ வை பூதம் ததேவ ஸ்றுஜதி ப்ரபுஃ |
பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபிஃ || 22 ||

வாழ்க்கை என்பது வளர்ச்சி. அதற்கு அதி முக்கியம் உன் ஒளிக் கதிர்கள் தானே சூர்ய நாராயணா, இருள் நீக்கி உன் ஒளிக்கதிர்கள் உயிரூட்டுகிறதே. என் மன மாசுகளையும் சுட்டெரித்து உள்ளொளி பெற அருள்வாய், உன் ஒளி க்கதிர்கள் வெம்மையை அளித்தாலும் மழைக்கே ஆதாரம் அவை தான் என அறிவோமே உனக்கு ஆயிரமாயிரம் நமஸ்காரங்கள் ஆதித்யா.

एष सुप्तेषु जागर्ति भूतेषु परिनिष्ठितः।
एष एवाग्निहोत्रं च फलं चैवाग्निहोत्रिणाम्॥

Eṣa supteṣu jāgarti bhūteṣu pariniṣṭhitaḥ
eṣa evāgnihotraṃ ca phalaṃ caivāgnihotriṇām

ஏஷ ஸுப்தேஷு ஜாகர்தி பூதேஷு பரினிஷ்டிதஃ |
ஏஷ ஏவாக்னிஹோத்ரம் ச பலம் சைவாக்னி ஹோத்ரிணாம் || 23 ||

ஆதித்யா, உறக்கத்திலிருந்து மீட்பவன் நீ. உறக்கமில்லாதவன். எங்காவது எப்போதும் ஒளி அளித்து காப்பவன். புத்துணர்ச்சியும், களைப்பையும் போக்குபவன். யக்ன மூர்த்தி, அக்னி ஹோம அக்னிஹோத்ர காரணன். உனக்கு நமஸ்காரங்கள்

वेदाश्च क्रतवश्चैव क्रतूनां फलमेव च।
यानि कृत्यानि लोकेषु सर्व एष रविः प्रभुः॥

Vedāśca kratavaścaiva kratūnāṃ phalameva ca
yāni kṛtyāni lokeṣu sarva eṣa raviḥ prabhuḥ

வேதாஶ்ச க்ரதவஶ்சைவ க்ரதூனாம் பலமேவ ச |
யானி க்றுத்யானி லோகேஷு ஸர்வ ஏஷ ரவிஃ ப்ரபுஃ || 24 ||

நீயின்றி எது யாகம், எது வேதம், எது கர்மம், எது தர்மம், எது காரணம், எது காரியம்?. சர்வமும் நீயே ஆதித்யா, ஹ்ருதயத்தில் வீற்றிருக்கும் சூர்ய நாராயணா.உனக்கு நமஸ்காரங்கள்.





No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...