Wednesday, February 7, 2018

PROUD INDIAN



நான் முதலில் பழம் பெரும் இந்தியன்.
J.K. SIVAN

பாரத நாடு பழம்பெரும் நாடு. இதனால் நமக்கு பெருமை. ஆனால் நம்மால் அது பெருமைப்பட வைக்கவேண்டியது நமது கடமையும் பொறுப்பும் ஆகாதா?

எல்லோரும் நமது நாட்டை வெளியே என்ன சொல்கிறார்கள் தெரியுமா? ''ஓ , இந்தியாவா, பிச்சைக்காரர்கள் மலிந்த அசுத்த, அநாகரிக, பொறுப்பற்ற, லஞ்சம் ஊழலில் முதலில் நிற்கும் அதர்ம நாடு ஆச்சே!''

வெளிநாட்டவரை விட்டுத்தள்ளுங்கள். நமது ஆட்களே அப்படி சொல்பவர்கள் பலர் இருக்கிறார்களே. சர்வ சாஸ்திரங்களிலும் முதன்மை பெற்றவர் நாம். பண்பாக அன்பாக பழகுபவர்கள், மிகவும் சிறந்த அறிவாளிகள், ஆன்மீகத்தில் உயர்ந்த, மற்ற மதங்களை மதிக்கும் நாடு என்று விஷயம் முழுமையாக தெரிந்தவர்கள் மட்டுமே சொல்வார்கள். அங்கேயும் இங்கேயும். ஏனெனில் நமது யோக, வான, மருத்துவ, ஜோதிட, கணித சாஸ்திர ஞானம் ஈடு இணையற்றது

நாம் முதலில் குறுகிய மதி, எண்ணம் கொண்டு ''நான் ஒரு மலையாளி, தமிழன், ஹிந்தி, பஞ்சாபி, பெங்காலி, தெலுங்கன்' என்கிற வட்டத்திலிருந்து விடுபட்டு, நான் ஒரு இந்தியன் என்ற எண்ணத்தை மனதில் நிலை நிறுத்திக் கொண்டாலே, பாதி அபிவிருத்தி நடைபெறும். இப்போது இன்னும் மோசமாக போய் பிராமணன், பிராமணன் அல்லாதவன் என்ற மட்டமான நிலைக்கும் போய்க்கொண்டிருக்கிறது. ஐயோ மீடியாக்களே, யூட்யூப்களே , எவ்வளவோ நல்ல விஷயம் பரப்ப முடிந்த உங்களுக்கு இந்த நிலை ஏன். நம்மால். நம்மால். நம்மால். யாரும் அதெல்லாம் பார்க்காதிருந்தாலே போதும். தானே அடங்கிவிடும்.

ஒரு கன்பூஷியஸை வைத்துக்கொண்டு சீனா என்னமாக தன்னைப் பெருமைப் படுத்திக் கொள்கிறது. உலக நாகரீகத்தின் தொட்டில் இந்தியா எதைப் பற்றியும் கவலைப் படாமல் உயர் அதிகாரத்தில் உள்ள சில தனி மனிதர்கள் தமது பெருமையை, மதிப்பை, நாணயத்தை, நல்ல பேரை, புகழை பற்றி மட்டுமே சுயநலவாதிகளாக கவலைப் படுவது பரிதாபமா வெட்கமா?

உலகமே மூக்கின் மேல் கைவைத்து அதிசயிக்கும் சங்கரர், ராமானுஜர், மத்வர், ராமகிருஷ்ணர் விவேகாநந்தர் போன்ற எண்ணற்றோர் தோன்றிய தேசம் இது. இதை எத்தனைபேர் அக்கறையோடு பிரபலப் படுத்துகிறார்கள்?. வாய் ஓயாமல் சொல்லிக்கொ ண்டு இருக்கவேண்டாமா? வேறு யாருக்காவது இந்த சந்தர்ப்பம் கிடைக்குமா? நான் தினமும் ஒருமுறையாவது அவர்களைப் பற்றி உங்களுக்கெல்லாம் சொல்ல தவறவில்லை. தொடரவேண்டும் என ஆசைப்படுகிறேன். உலக புராதன பொருட்செறிவு மிகுந்த மொழிகளின் தாய், சமஸ்க்ரிதம் என்றும் உலகம் அறியும். இதை நம்மில் அநேகர் இன்னும் அறியாதது அவலம். சமஸ்க்ரிதம் வேண்டாம், என்று ஏன் ஒரு கும்பலே கத்துகிறது.

நமது சமஸ்க்ரிதத்தை தப்பும் தவறுமாக புரிந்து கொண்டு நமது வேதங்கள் சாஸ்திரங்களை வெளிநாட்டினர் சிலர் வெளியிட்டு புகழ் பெற்று, அது நம்மிடமே வந்து நாம் அதை தெய்வீகமாக மதித்து போற்றி அறிந்து கொள்ளும் கேவலம் இன்னும் நடக்கிறதே. இன்னும் எத்தனை மஹா பெரியவா வேண்டும் இந்த நாட்டை சீரமைக்க? பெரிய கேள்விக்குறி இது!

ஆங்கிலம் தெரிந்த மேலை நாட்டு மொழிகள் தெரிந்த சிறந்த வேத சாஸ்திர நிபுணர்கள் நம்மில் நிறைய உருவாக வேண்டும். நிறைய விவேகானந்தர்கள் ஒவ்வொரு பக்கமும் இந்த நாட்டில், (கவனியுங்கள், நான் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, வங்காளம் என்று பிரித்தே சொல்வதில்லை, நாலா பக்கத்திலிருந்தும் என்று ஒரு தேசத்தின் அங்கங்களாக மட்டுமே சொல்கிறேன்) தோன்றவேண்டும்.

''கிருஷ்ணா நீ இந்த என் விருப்பத்தை என்றாவது ஒரு நாள் நிறைவேற்றுவாயா?'' கண்டிப்பாக செய்வாய் என்று தோன்றுகிறது.
.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...