‘’ குளப்புள்ளி கதாதாரி வெண்ணை கிருஷ்ணன்’- 3 J.K..SIVAN
ஹிமாலய மலைத்தொடர்களில் எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறியது போல் ஒரு பெருமிதம் பிரசன்ன குமாருக்கு.
''கிருஷ்ணா நீ வெளியே படியில் கிடந்தது போதுமப்பா, வா உள்ளே. உன் கோவில் தயாராகி விட்டது''. அன்று
பிரதிஷ்டை பண்ணி குளப்புள்ளி ஸ்ரீ கிருஷ்ணன் குடி புகுந்தான். ஆலயத்தில் மட்டுமா குடி புகுந்தான். மாயாவி. ஊர் முழுதும்,
ஏன், எங்கெங்கோ இருப்பவர் மனதை எல்லாம் ஆக்கிரமித்து அல்லவோ குடி பெயர்ந்தான். இனி இந்த கோவில் விடாமல்
பராமரிக்கப் பட வேண்டும். எங்கே சரியான ஆட்கள்? 2006ல் ஒரு அமைப்பு பொருத்தமான நண்பர்களோடு உருவானது.
இதெல்லாம் சொன்னேனே அந்த கிருஷ்ணன் பற்றி சொல்லவில்லையே? யாராவது ஏன் என்று கேட்டீர்களா? அவன்
வித்யாசமானவன். வலது உள்ளங்கையில் பெரிய வெண்ணை உருண்டை. இடது கையில் அதை யாரும் தொட நெருங்க
முடியாமல் ஒரு பெரிய கதாயுதம். எந்த கோபியின் வீட்டு வெண்ணையோ? திருட்டுத்தனமாக வெண்ணையை வெற்றிகரமாக
எடுத்த சந்தோஷம் தான் முகத்தில் புன் சிரிப்போ? நீ ஏன் எத்தனையோ வித பக்ஷணங்கள் இருக்கும்போது இந்த
வெண்ணையை பிடித்தாய்? எனக்கு தெரியும் காரணம்? நீ செய்யும் சேஷ்டிதங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு காரணம் உண்டே.
இந்த வெண்ணை எப்படி கிடைக்கிறது? சொல்லட்டுமா?
உனக்கு பிடித்த பசுக்கள் தரும் பாலைக் காய்ச்சி, அது ஆறினவுடன் , சிறிது தயிரோ, மோரோ கலந்து, அசைவற்று, பிறகு அது தெளிந்து , இறுகி கெட்டியாக தயாராகிறது. அதை அப்புறம் கடைந்து அதில் இருந்து மேலே எழும்பி ஒட்டாமல் மிதப்பது தானே வெண்ணை. ஓஹோ இதை ஒரு காரணமாக உதாரணமாக காட்டுகிறாயோ?
''ஓஹோ, புரிகிறது, அப்பனே, நீ எதை உணர்த்துகிறாய் என்று புரிகிறது. கொந்தளிக்கும் மனதை, கொஞ்சம் கொஞ்சமாக
உணர்ச்சிகளிலிருந்து ஆறவைத்து, அதில் தன்னலமற்ற எண்ணத்தை புகுத்தி, மனதை ஆடாமல் அசையாமல் ஒரு
நிலையில் நிறுத்தினால், அது உறுதிப் பட்டுவிட்டதே. பிறகு, அதனை மீண்டும் அலசி, கடைந்து, கொஞ்சம் நஞ்சம் இருக்கும்
ஆசை, மோகம், க்ரோதம், லோபம், மாச்சரியம் என்ற தேவையற்றவைகளை நீக்கினால் பெறுவது தானே நிர்மலமான
வெண்ணை. அது தான் தூய்மையான மனம். இதை தான் நீ எங்களிடம் எதிர்பார்க்கிறாய். விரும்புகிறாய். உனக்கு பிடித்த
வெண்ணை.... இது தானே உன் வலது கையில் வெண்ணை உருண்டையின் தாத்பரியம்.
இடது கை கதாயுதம்? நீ தானே காக்கும் கடவுள். விஷ்ணு என்கிற நாராயணன் என்கிற கிருஷ்ணன் . மேலே சொன்னது
நல்லமனது கொண்ட சிஷ்டர்கள் பற்றி. அந்த சாதுக்களை எப்படி ஸிஷ்ட பரிபாலனம் பண்ணுவாய், பாதுகாப்பாய்?. ஒரு காக்காயை விரட்டவே குச்சியோ, கொம்போ தேவைப்படுகிறதே. கொடிய ராக்ஷஸர்களை, துஷ்டர்களை எப்படி நிக்கிரஹம் பண்ணுவாய்? அதற்கு தான் இந்த கதாயுதமோ? பிரசன்ன குமார் இந்த கிருஷ்ணன் எங்கே இருந்து வந்தான்? எந்த
காலத்தை சேர்ந்தவன் என்று கண்டுபிடிக்க அலைந்தபோது அவர் திரட்டிய தகவலை சுருக்கமாக தருகிறேன்:
ஒரு காலத்தில் பாண்டிய ராஜாவின் ஆளுமையில் கொங்கு தேசம் இருந்திருக்கிறது. அந்த நல்ல பாண்டிய ராஜாவின் பெயர் மாறவர்மன் சுந்தர பாண்டியன். இவன் 13வது நூற்றாண்டில் ஆண்ட மதுரை அரசன். அவன் தான் இந்த கிருஷ்ணனை முதலில்
சிலையாக வடித்து கோவில் கட்டியவன் என்று தெரிகிறது. அப்பறம் ஒரு ஐந்து ஆறு நூற்றாண்டுகள் எந்த பாதிப்பும் இன்றி
கோவில் பராமரிக்கப் பட்டு வழிபட்டிருக்கிறார்கள்.
18வது நூற்றாண்டில் வந்தானய்யா திப்பு சுல்தான்! முஸ்லிம்கள் ஹிந்து கோவில்களை அழித்தது போல் உலகில் வேறு எவரும்
அவ்வளவு கொடுமையாக நடந்ததில்லை என்று கற்பூரம் ஏற்றி சத்யம் செய்யலாம். நிறைய கோவில்கள் காணாமல் போயின.
விக்ரஹங்கள் உடைந்தன. கோவில்கள் மசூதிகளாயின. பெண்கள் கடத்தப் பட்டு மதம் மாற்றப் பட்டனர். ஆண்கள், கொல்லப்பட்டனர். இது நான் சொல்லவில்லை. நீங்கள் கண்களில் ரத்தம் சொட்ட சரித்திர ஏடுகளை புரட்டி படித்து தெரிந்து கொள்ளலாம்.
குளப்புள்ளி கிருஷ்ணன் கோவில் பிடிபட்டது. இடிபட்டது. காலம் ஓடியது. மண் மேடாகியது. புதர் மண்டியது. காடானது. குளப்புள்ளி கிருஷ்ணன் பிரசன்ன குமாருக்காக காத்திருந்தான். மீண்டும் புனருத்தாரணமான கிருஷ்ணன் நவநீத கிருஷ்ணன்
ஆனான். வெண்ணை கிருஷ்ணன். கேரளாவின் முக்கிய கோவில்களின் குளப்புள்ளி ஸ்தல ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயமும்
ஒன்றானது. மற்றவர்கள், ஆமாம், கணபதி, ஐயப்பன், நாகர் புதிய வடிவம் பெற்று அழகாக தனித்தனி சந்நிதிகளில் பிரதிஷ்டை
பண்ணப் பட்டார்கள். புதிதாக ஒரு கருடன் இறக்கையை விரித்து எல்லோரும் வாருங்கள் என்று கூப்பிடுகிறான். கோவிலின்
கிழக்கில் அவனது தோற்றம் கண்ணைப் பறிக்கிறதே . வெண்ணை கிருஷ்ணன் அழகாக காட்சியளிப்பது அவனது நின்ற
திருக்கோலம். நவநீத கிருஷ்ணன் ஊரெங்கும் சென்று பக்தர்களை அவர்கள் வீட்டு வாசலிலேயே கண்டு சௌக்யமாக இருங்கள். அதற்கு தானே நானே உங்களை பார்க்க வந்திருக்கிறேன் என்று சொல்வதற்கு தன்னை சிறிய ஒரு அடி உயர குட்டி கிருஷ்ணனாக உற்சவனாக பண்ணிக் கொண்டிருக்கிறான். ஏன் தெரியுமா? மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்று காட்ட!
கேரள சம்பிரதாயப்படி கட்டப் பட்ட அழகிய கோவில். காற்றோட்டமான ஆரோக்ய, சீரமைக்கப்பட்ட பிரகாரம். பண்டிகை
நாட்களில் சுவற்றில் பதிக்கப்பட்ட எண்ணற்ற விளக்குகளில் எண்ணெய் தீபங்கள் எரியும்போது அந்த இடத்தை விட்டு நீங்கவே மனம் வராது. காலும் நகராது. சுவற்றில் நமது தமிழ் நாட்டு கோவில்களில் பார்ப்பது போல் எண்ணெய் தீற்றவோ, , பரிக்ஷை நம்பர்கள், அட்ரஸ், பெயர், டெலிபோன் நம்பர் எல்லாம் எழுதவோ ஏன் இந்த மலையாளிகளுக்கு தெரியவில்லை. ஒருவேளை தோன்றவில்லையா?.
No comments:
Post a Comment