கிருஷ்ண கர்ணாம்ருதம் (லீலா சுகர்)
J.K. SIVAN
அவர் பெயரே அழகாக சொல்கிறதே அவர் எப்படிப்பட்டவர் என்று. கிருஷ்ணனின் லீலைகள் சுகத்தில் தன்னை இழந்த ஆனந்த ஜீவி என்று. லீலா சுகர் என்ற பேர் அவர் சுகானுபவத்தை பறை சாற்றுகிறதே.
अस्ति स्वस्तरुणीकराग्रविगलत्कल्पप्रसूनाप्लुतम्
वस्तु प्रस्तुतवेणुनादलहरीनिर्वाणनिर्व्याकुलम्।
स्रस्त स्रस्त निरुद्धनीवीविलसद्गोपीसहस्रावृतम्
हस्तन्यस्तनतापवर्गमखिलोदारम् किशोराकृति॥ १-२
(शार्दूल-विक्रीडितम्)
asti svaḥ taruṇī kara agra vigalat kalpa prasūna āplutam
vastu prastuta veṇu nāda laharī nirvāṇa nirvyākulam
srasta srasta niruddha nīvī vilasat gopī sahasra āvṛtam
hasta nyasta nata apavargam akhila udāraṁ kiśora ākṛti
அதோ பாருங்கள். அந்த சோலையில், மந்தமாருதம் வீசுகிறது. மலர்கள் வித வித வர்ணங்களில் மணத்தோடு மலர் மழை பொழிகிறது. அந்த மரத்தடியில் தான் வீற்றிருக்கிறான் கிருஷ்ணன். அவனது கரத்தில் மலர்போன்ற விரல்கள் புல்லாங்குழலில் விளையாடுகிறது. அற்புத நாதம் எழுப்புகிறது. பிரபஞ்சமே மயக்கத்தில் தள்ளாடுகிறது. இன்ப மயக்கம். சகல ஜீவன்களும் ஆனந்தமயமான காணப்படுகின்றன. எங்கும் அமைதி. அவனது குழலோசை ஒன்றே எங்கும் பரவி இருக்கிறது. அமைதி என்றால் யாருமில்லாத என்று அர்த்தமில்லை . நிறையவே கோபிகள் சூழ்ந்திருந்தனர். ஆனால் சிலையாக அவன் இசையில் மயங்கி நின்றனர்.
கண்ணன் குழல் மனதை தடவி வசீகரிக்கும் இசை ராகங்களை பொழிந்தது. பிரணவத்தின் அடிநாதத்தை தொட்டு நின்றது. செவி படைத்த அனைத்து ஜீவன்களுக்கும் விருந்து சமர்த்தியாக அங்கே நடந்து கொண்டிருந்தது. தேவலோக அரம்பையர் பூமாரி பொழிவது போல் புஷ்பங்கள் மரங்களிலிருந்து புஷ்பார்ச்சனை புரிந்தன. .கோபியர்கள் நெரிசல். பலருக்கு புடவை முடிச்சு அவிழ்ந்து தொங்குவது கூட தெரியாமல் சரியும் புடவைகளை கைகளில் ஏந்தி நின்றனர். தேவாதி தேவன் பரமமூர்த்தி அல்லவோ அங்கே கானமிசைக்கிறான்.
चातुर्य एक निदान सीम चपल अपाङ्ग च्छटा मन्थरम्
लावण्यामृत वीचि लोलित दृशम् लक्ष्मी कटाक्ष आदृतम्
कालिन्दी पुलिन अङ्गण प्रणयिनं काम अवतार अङ्कुरम्
बालम् नीलम् अमी वयम् मधुरिम स्वाराज्यम् आराध्नुमः
cāturya eka nidāna sīma capala apāṅga cchaṭā mantharam
lāvaṇyāmṛta vīci lolita dṛśaṁ lakṣmī kaṭākṣa ādṛtam
kālindī pulina aṅgaṇa praṇayinaṁ kāma avatāra aṅkuram
bālam nīlam amī vayam madhurima svārājyam ārādhnumaḥ
அவன் சாதுர்யமிக்கவன். நாம் ஒன்றுமே பண்ணவேண்டாம். பேசாமல் அந்த நீல மணி வண்ணனைப் பார்த்துக்கொண்டே இருந்தால் போதும். நம்மையே மறந்துவிடுவோம். அவன் கடை விழிப் பார்வையை சந்தித்தால் நமது பல ஜென்ம பாபங்கள் மடியுமே. மனதை சுண்டி இழுக்கும் பார்வை தேன் தோய்ந்தது. மஹாலக்ஷ்மி தேவியே மயங்கும் பார்வை அது. அவனா இப்படி சாதாரண பிருந்தாவன கோபியர், சிறுவர்களுடன் யமுனை நதியில் குதித்து ஆடுகிறான். கரையில் அழகிய பசுக்கள் கன்றுகளோடு ஓடி ஆடுகிறான். எல்லோர் இதயத்திலும் முழுமையாக வீற்றிருப்பவன் .
मधुर तर स्मित अमृत विमुग्ध मुख अम्बु रुहम्
मद शिखि पिङ्छि लाङ्छित मनोज्ञ कच प्रचयम्
विषय विष आमिष ग्रसन गृध्नुनि चेतसि मे
विपुल विलोचनम् किम् अपि धाम चकास्ति चिरम्
madhura tara smita amṛta vimugdha mukha ambu ruham
mada śikhi piṅchi lāṅchita manojña kaca pracayam
viṣaya viṣa āmiṣa grasana gṛdhnuni cetasi me
vipula vilocanam kim api dhāma cakāsti ciram
எப்படி அந்த தாமரை வதனத்தில் ஒரு அம்ருதமான ஆள் மயக்கும் கவர்ச்சிப் புன்னகை ! அந்த தலை அலங்காரம் யார் செய்து விட்டது? சாதாரண மயில் பீலியை வைத்து இவ்வளவு அபூர்வ கண்ணிமை கொட்டாமல் பார்க்கவைக்கும் சிகையாலங்காரமா. ஓ அந்த கருத்த சுருண்ட குழல் ஒரு முக்கிய காரணமோ?அதை வளைத்து சுற்றி கட்டியிருக்கும் முத்து நவரத்னமாலைகள் தம் அழகையும் சேர்த்துவிட்டனவோ? விசாலமான கண்கள் எடுப்பாக காட்டுகிறதோ? கண்கள் தான் கண்ணைக் கவருகின்றன என்பதில் சந்தேகமில்லையே.. நான் ஒரு முட்டாள், மூடன், மதியிலி, சாதாரண உலக சாதனங்களில் மதி மயக்கம் கொள்பவன். அம்ரிதம் கொட்டிக்கிடக்க அரை லிட்டர் தண்ணீர் பாட்டிலுக்கு க்யூவில் நிற்பவன். அடேடே சொல்ல மறந்தேன். அந்த சிறுவன் பெயர் பால கிருஷ்ணன். முக்தி அளிப்பவன்.
No comments:
Post a Comment