Sunday, February 18, 2018

EVERYTHING IS FOR GOOD




                               

​         
எல்லாம் நன்மைக்கே   J.K. SIVAN

ஒரு ஊரில் ஒரு ராஜா.  இப்படித்தானே  கதையை ஆரம்பிக்கவேண்டும்.  அவனுக்கு ஒரு மந்திரி.
ராஜாவின் நிழல் அந்த மந்திரி.

ராஜா  எப்போது என்ன கேட்டாலும் அந்த மந்திரி  ''கவலையே வேண்டாம் மஹாராஜா.  பகவான் இருக்கிறார். எதை எப்படி செய்யவேண்டும் என்று அவர் தப்பில்லாமல் வழி காட்டுவாரே '' என்பான்.  அடிக்கடி மந்திரி இதை சொல்வது ராஜாவுக்கு
கடுப்பாகவும்  ஒரு பக்க
​​
ம் ஆச்சர்யமாகவும் இருந்தது.

ஒருநாள் காட்டில் வேட்டையாட மந்திரியோடு சென்றான் ராஜா. மந்திரியும் கூட இருந்தான்.  ஒரு சிறுத்தை எங்கிருந்தோ திடீரென்று பாய்ந்து வந்தது. மந்திரி அதை எதிரத்து ஆயுதங்களால் தாக்கியும் அந்த சிறுத்தை போகிற போக்கில் ராஜாவின் சுண்டுவிரலை சாப்பிட்டுவிட்டுப் போய்விட்டது.

''பகவான் நல்லதையே செய்வார் என்று சொன்னாயே முட்டாளே, இதோ பார் என் விறல் போய்விட்டதே.   வலி  எனக்கல்லவோ தெரியும்?'' என்று கத்தினான் ராஜா.  மந்திரி ஒன்றும் சொல்லாமல் தலை குனிந்து ''மஹாராஜா  பகவான் நிச்சயம் நமக்கு நல்லது தான் செய்வார் '' என்றான்.

கோபத்தில் ராஜா ''யாரங்கே இந்த முட்டாள் மந்திரியை சிறையில் அடையுங்கள்'' என்று கட்டளையிட்டான். மந்திரி சிறைக்குள். அப்போதும் அவன்  ''ராஜா,  எல்லாம் நன்மைக்கே. பகவான் நல்லதே செய்வான்'' என்று சொல்லிவிட்டு தான் உள்ளே போனான்.

சில நாள் சென்று ராஜா மீண்டும் ஒருநாள் வேட்டையாட காட்டுவழியாக ராஜா  மந்திரியில்லாமல்  செல்லும்போது  ஒரு பெரிய
காட்டுவாசிகள் கூட்டம் ராஜாவின் ஆட்களை விரட்டிவிட்டு  ராஜாவை சிறை பிடித்து சென்றுவிட்டது. அந்த காட்டுவாசிகள் தலைவனுக்கு ஒரு வேண்டுதல். ஒரு ராஜ குடும்பத்தை சேர்ந்தவனை நரபலி இட்டால்  அவன் வேண்டியது கிடைக்கும் என்று ஒரு மந்திரவாதி சொல்லி இருந்தானே. ஒரு ராஜா தானாகவே வந்து மாட்டிக்கொண்டது ரொம்ப சந்தோஷம் அவனுக்கு. ஒரு நல்லநாள் பார்த்து அந்த ராஜாவை வெட்டி பலியிட ஏற்பாடுகள் நடந்தது.

அந்த மந்திரவாதி வந்து காளியை வேண்டிக்கொண்டு கையில் கத்தியோடு ராஜாவை நெருங்கினான். ராஜா இரு கை கூப்பி வணங்கி ''என்னை விட்டுவிடுங்கள்'' என்று கெஞ்சும்போது தான் மந்திரவாதியின் கண்ணில் ராஜாவின் ஒருகையில் ஒரு விறல் இல்லை என்று தெரிந்தது.

''நிறுத்துங்கள் இந்த நரபலியை. இந்த ஆள் பிரயோஜனமில்லை. இவன் 'அங்கஹீனன்.முழுமையானவன் இல்லை . குறை

பாடுள்ளவன். இவனை பலி கொடுப்பதால் பயன் இல்லை.  வேறு ஆள் கொண்டுவாருங்கள்'' என்று சொல்லிவிட்டதால்  காட்டுவாசிகள் ராஜாவை அவிழ்த்து காட்டில் விட்டுவிட்டார்கள்.

எப்படியோ தப்பி  ராஜா  ஊர் வந்து சேர்ந்தவன் உடனே '' அந்த மந்திரியை சிறையில் இருந்து விடுதலை செயது என்னிடம் கொண்டுவாருங்கள்'' என்றான்.

தன்னைக் கொல்லப்போகிறார்கள் என்று நினைத்து அதுவும் ஆண்டவன் செயலே'' என்று மந்திரி எதிரே வந்து கை கட்டி நின்றான்.

''மந்திரி  நீ எப்போதும் சொல்வதன் அர்த்தம் இன்று தான் எனக்கு புரிந்தது. ஆமாம்  கடவுள்
தான் இன்று காப்பாற்றினார் என்னை. என் சுண்டுவிரலை புலி தின்றது நன்மைக்கே. சுண்டுவிரல் போய் உயிரே தப்பியது
.ஆனால் இன்னொரு சந்தேகம் என் மனதில் இருக்கிறதே  அதை நிவர்த்தி செய்வாயா?''

''சொல்லுங்கள் மஹாராஜா?''

''எதற்கு  கடவுள் உன்னை என் மூலம் சிறைக்கு அனுப்பினார்?''

''நான் உங்களோடு வழக்கம்போல் வேட்டைக்கு காட்டுப்பாதையில் சென்றிருந்தால் , உங்களை விட்டுவிட்டு அந்த மந்திரவாதி என்னை தேர்ந்தெடுத்திருப்பான். நானும் ராஜகுடும்பம் தானே. அதுவும்  நான் எந்த குறைபாடும் இல்லாத முழு அங்க
த்தோடு  இருப்பவன் அல்லவா.  சிறையில் ஜாக்கிரதையாக பாதுகாப்பில் இருந்ததால் நானும் உயிர் பிழைத்தேன். எல்லாம் பகவான் சித்தம். அவர் நல்லதை தானே எப்போதும் செய்வார் '' என்றான் மந்திரி.

நாமும் இதை மறக்கக்கூடாது

நாட்டில் எங்கோ  எவ்வளவோ பெரிய  ஊழல்கள் எப்போதோ நடந்து இப்போது பெரிதாக பூதாகாரமாக  வந்து சிலர் தவிக்கிறார்களே . அதுவும் நல்லதற்கோ? இதனால் மற்றவர் அஞ்சுவார்களோ? இனியும் இது போன்றோ  இதைவிட பெரிதாகவோ  எதுவும் நடக்காதோ?   விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொள்வார்களோ.
எது எப்படி நடக்கவேண்டுமோ அது அப்படியே நடக்கட்டும். நல்லதாகவே முடியட்டும்.
 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...