கருணை மழை
''ஆஹா, இது நான் எங்கோ கேள்விப்பட்ட, அல்லது படித்த ஒரு நிகழ்ச்சி தான். இருந்தாலும் அதை நினைவு கூர்ந்து சொல்வதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
திருப்புகழ் என்றாலே நினைவுக்கு வரும் பெயர் ஸ்ரீ திருப்புகழ் மணி, ஸ்ரீ T .M . கிருஷ்ணஸ்வாமி ஐயர் அல்லவா? அவரது அப்பா அப்பண்ணா. திருவாங்கூர் சமஸ்தானத்தில் பிரதம நீதிபதியாக பணியாற்றியவர். திருப்புகழ் மணி என்ற பெயரை சூட்டியவர் மகா பெரியவா. மைலாப்பூர் வாசி.
மணி ஐயர் மனைவி காசநோயால் அவதிப்படும்போது சிகிச்சைக்காக மதனப்பள்ளி ஆஸ்பத்திரியில் தங்கியிருந்த சமயம் மகா பெரியவா தனது விஜய யாத்திரையில் காசிக்குப் பயணம் சென்று கொண்டிருந்தார். பெரியவா போகும் வழியில் மதன பள்ளி வந்து சேர்ந்தார். ''ஹர ஹர சங்கர ஜயஜய சங்கர'' முழக்கத்துடன் பாதசாரிகளாக பெரியவாளும் மற்றவர்களும் மதன பள்ளி வந்து இருக்கிறார்கள் என்று செய்தி அறிந்த கிருஷ்ணஸ்வாமி அய்யருக்கு பரம சந்தோஷம். மகா பெரியவா மேலே அளவு கடந்த பக்தி ஆச்சே மணி ஐயருக்கு.
மனைவி மருத்துவ மனையில் வாடிக்கொண்டிருக்கிறாளே. பகவானே , நம்மால் பெரியவாளைப் போய் தரிசனம் செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் மனதை நிரப்பி, மணி ஐயருக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. அவரால் கண்ணீர் மட்டுமே வடிக்க முடிந்தது.
”என்னோட கடைசி மூச்சு, இந்த படுக்கைலதான். பெரியவாளை மனசாலே வேண்டிக்கிறேன் ” என்று அரற்றினாள்
அவர் மனைவி.
”காலன் வரதுக்குள்ள, என் சங்கரனை [கால காலனை] பாத்துட்டேன்னா, அது ஓண்ணே போறும். எவ்வளவோ ஆறுதலா இருக்கும்….பாழும் உடம்பு, படுக்கையில் புரளக்கூட முடியாம இருக்கு. நான் குடுத்து வெச்சது அவ்வளவுதான்”
என்று அந்த உத்தமி வருந்தினாள்.
அங்கே பெரியவாளைச் சுற்றி ஏகப்பட்ட பக்தர்கள் கூட்டம் சூழ்ந்தது. மதனப்பள்ளி பூரா பெரியவா பற்றிய பேச்சு தான்.
அதிசயங்கள் எப்படி வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடப்பவை தானே.முன்னாலேயே ஏற்பாடு பண்ணி, சொல்லி வைத்துவிட்டு நடந்தால் அதன் பெயர் அதிசயம் இல்லையே ?
இதற்கிடையில், யாரோ ஒரு பக்தர் பெரியவாளை தரிசனம் பண்ணும்போது, ஒரு வார்த்தையை பெரியவா காதில் போட்டுவைத்தார்.
“பெரியவாகிட்ட ஒரு விண்ணப்பம்….திருப்புகழ் மணி ஐயரோட ஸம்ஸாரம் இங்க ஒரு ஆஸ்பத்ரில ரொம்ப ஸீரியஸ்ஸா இருக்கா…..TB….ரொம்ப அட்வான்ஸ் ஸ்டேஜ்என்று சொல்றா..
மடத்து அதிகாரி ஹாஸ்பிடல் அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெற்று மணி ஐயர் மனைவி படுத்திருந்த கட்டில் வரை, பல்லக்கிலேயே சென்று தர்ஶனம் கொடுத்தார் பெரியவா!!
இதுவரை எப்போதும் நடக்காத ஒரு அதிசய சம்பவம் இது. யாருக்குமே கிடைக்காத மஹா பெரிய பாக்யம்! பெரியவா தர்ஶனம் கிடைத்ததில் மணி ஐயர் மனைவிக்கு தான் காண்பது கனவா நனவா என்று புரியவே இல்லை. புளகாங்கிதம். அளவற்ற சந்தோஷம்.

பெரியவா கையை காட்டி பேச்சை நிறுத்தினார் ......
அருகிலே நின்ற ஒரு பாரிஷதரை ஜாடையாகக் கூப்பிட்டு, ” மணியோட பத்னி எந்த ஆஸ்பத்ரில இருக்கான்னு விஜாரி.. நான் பல்லாக்குலே ஆஸ்பத்திரி உள்ளே போயி அவளைப் பாக்கலாமா…ன்னு கேளு”
மடத்து பெரியவா எங்கும் எப்போதும் மருத்துவமனைக்கு எல்லாம் சென்று நோயாளிகளை பார்க்கும் ஸம்ப்ரதாயம் ஸ்ரீ மடத்தில் இல்லை. ஆனால் இது ஒரு அசாதாரண விஷயமாச்சே.!
திருப்புகழைத் தமிழ்நாட்டில் பட்டி தொட்டியெல்லாம் பரப்பிய முருக பக்தரின் தர்ம பத்னி, உயிருக்கு மன்றாடு கிறாளே. !
மடத்து அதிகாரி ஹாஸ்பிடல் அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெற்று மணி ஐயர் மனைவி படுத்திருந்த கட்டில் வரை, பல்லக்கிலேயே சென்று தர்ஶனம் கொடுத்தார் பெரியவா!!
இதுவரை எப்போதும் நடக்காத ஒரு அதிசய சம்பவம் இது. யாருக்குமே கிடைக்காத மஹா பெரிய பாக்யம்! பெரியவா தர்ஶனம் கிடைத்ததில் மணி ஐயர் மனைவிக்கு தான் காண்பது கனவா நனவா என்று புரியவே இல்லை. புளகாங்கிதம். அளவற்ற சந்தோஷம்.
“நான் கனவுல கூட இதை நெனச்சு பாக்கல….பெரியவாளே வந்தாளே! இந்த ஜன்மத்தை கரையேத்தி விட்டுட்டாளே! இனிமே நேக்கு எந்த பயமோ, கவலையோ இல்ல….ஶங்கரா….ஶங்கரா” என்று ஈனஸ்வரத்தில் சொல்லி சொல்லி கண்ணீர் வடித்தாள். தர்ஶனத்துக்கு முன் வரை மனம் சோர்ந்திருந்தவள், பின்னர் எப்போதும் மனத்தில் பூரண தெம்போடு இருந்தாள்..
சில நாட்களில் கைலாசத்திலிருந்து சிவ கணங்கள் மரியாதையோடு அவளை அழைத்து கைலாச பதவி அடைய செய்தார்கள்.

No comments:
Post a Comment