பெருமதிப்புக்குரிய சுத்தமான ஒரு தேசிய வாதி, பாரதி பக்தர் ரா.அ .பத்மநாபன் --- J.K. SIVAN
ஸ்ரீ ரா.அ .பத்மநாபன் (1917-2014) அவர்களுக்கு இருந்த ஒரே வியாதி. பாரதி பைத்தியம் என அறிகிறேன். ஒரு சிறந்த பத்ரிகாசிரியர். எழுத்தாளர். ஆனந்தவிகடன், தினமணி கதிர், ஹிந்து, ஹிந்துஸ்தான் பத்திரிகைகளில் மஹாகவி பாரதியாரை வெளிச்சம் போட்டு காட்டியவர். அகில இந்திய ரேடியோவில் , டில்லியில், நிகழ்ச்சிகள் வழங்கியவர். 2006ல் ''பாரதியார் அவார்ட் '' ஜனாதிபதி அப்துல்கலாம் கையால் பெற்றவர். அவரது ' சித்திர பாரதி'' மூன்றாம் பதிப்பை கலாம் அவர்களே வெளியிட்டார்.
பாரதியாரைப் போலவே தேசிய தாகம் கொண்டவர். சுதந்திர போராட்டத்தில் ஈடுபாடு. வெள்ளையனிடம் தடியடி பிரசாதம் வாங்கியவர். ஆனந்தவிகடன் உதவி ஆசிரியராக இருந்தவர். ஒரு தடவை விகடனில் புகைப்பட பிரிவிற்கு பொறுப்பாக இருந்த சமயம் அவரது நண்பரும் சர்வோதய சங்க தலைவருமான எஸ். ஆர். சுப்பிரமணியம் பாரதியாரின் அபூர்வ படம் ஒன்று கொண்டுவந்தார். ஆனந்த விகடன் ஆசிரியரும் நிறுவனருமான எஸ். எஸ். வாசன் கல்கி இருவரும் அந்த படத்தின் பிரதிகளை எல்லா பத்திரிகைகளுக்கும் அனுப்ப சம்மதித்தார்கள்.இதற்கு பரந்த மனப்பான்மை வேண்டுமே.
பத்மநாபனின் அரசியல் ஈடுபாட்டை கவனித்த வாசன், ''என்ன பத்மநாபா, ஒன்று நீ முழுமையாக பத்திரிகை உலகில் ஈடுபடு. அல்லது விலகி , முழு , தேச தொண்டனாக சேவை செய். உனது விருப்பம் எப்படியோ அப்படி. நான் உன்னை கட்டாயப்படுத்தவில்லை என்கிறார். மறுயோசனை இல்லாமல் ரா. அ .ப. ஆனந்தவிகடனை விட்டு வெளியேறுகிறார். கல்கிக்கு வருத்தம். கோபமும் கூட.
''பத்மநாபா, அவசர குடுக்கையாக இருக்கிறாயே. ராஜாஜியை சென்று பார்த்துப்பேசி முடிவெடு.'' என்கிறார் கல்கி.ராஜாஜி சாமர்த்திய சாலி ஆயிற்றே. ஒரு கடிதம் வாசனுக்கு எழுதி, பத்மநாபனை மீண்டும் விகடனில் பிணைத்து வைக்க சிபாரிசு கடிதம் எழுதி, அதை ரா.அ.ப. விடம் கொடுத்து ''இதை வாசனிடம் கொடு '' என்கிறார். பத்மநாபனுக்கு ராஜாஜியிடம் பேசியபோதே அவர் விகடனை விட்டு தான் வெளியேறியதை விரும்பவில்லை என்று புரிந்ததால் அந்த கடிதத்தை பிரித்து வீட்டில் படித்துவிட்டு அதை விகடனில் வாசனிடம் சேர்ப்பிக்கவே இல்லை.
ரா.அ .ப.வுக்கும் கல்கிக்கும் ஒரு போட்டி. ''பாரதியார் ஒரு மஹா கவியா ?'' என்று. ப. ஆமாம் சந்தேகம் இல்லாமல் என்பார்.
எப்படி ? இவரது படைப்புக்கள் காலத்தை கடந்து நிற்குமோ அவரைத்தான் மஹாகவி எனலாம். பாரதியாரின் படைப்புகள் அப்படிப்பட்ட என்றும் அழியாத கவிதைகள் இல்லையா? என்று ஒரு அழகான ஆராய்வுக் கட்டுரையை வெளியிட்டார் பத்மநாபன்.
'' ஹனுமான்'' என்ற ஒரு பத்திரிகை வெளிவந்து அதன் ஆசிரியராக அவரை நண்பர்கள் ராலி, ரா.பா. துமிலன் ஆகியோர் கேட்டும் நிராகரித்தார் பத்மநாபன். சிறந்த எழுத்தாளர் ஆசிரியர் எம்.எஸ். காமத் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் எப்படியோ பத்மநாபனை சேர வைத்துவிட்டார். காமத் ஒரு பாரதி பித்தர். இது ஒன்றே காரணம் பத்மநாபன் அதில் சேர. பாரதியரைப் பற்றி நாடு அறிந்துகொள்ள இந்த சேவை உதவியது.
"நான் புதுச்சேரிக்கு ஒரு ரோலி பிளெக்ஸ் புகைப்பட கருவியோடு எங்கெல்லாமோ சுற்றி பாரதியாரைப் பற்றிய தகவல்கள் சேகரித்தேன்'' என்றார் பத்மநாபன். ஹிந்துஸ்தான் பத்திரிகையில் மஹாகவியைப் பற்றிய செயதிகள், தகவல்கள், புகைப்படங்கள் நிறைய வெளியாயின. ( யாரிடமாவது ஏதாவது இருக்கிறதா? எனக்கு கொஞ்சம் அனுப்புங்களேன்- சிவன் )
1939ல் நான் பிறந்த வருஷம் பத்மநாபன் அ .இ.ரேடியோ, திருச்சியில் சேர்ந்தார். காங்கிரஸ் பற்றிய செய்திகளை வெள்ளைக்கார அரசு வானொலி அவர் விரும்பிய படி பிரசாரம் செய்ய பயப்பட்டது. சீ இந்த வேலை வேண்டாம் என்று உதறினார்.

இன்று எனது நண்பர் சூரியநாராயணன் வீட்டில் ஒரு பழைய ரா.அ .ப. தொகுத்த பாரதியார் தகவல்கள், பாரதியார் எழுத்துக்கள்
ஒரு வெளியிடப்படாத புத்தகமாக கிழிந்த நிலையில் கிடைத்து அதைப் படித்து
தினமும் கொஞ்சம் அதை உங்களுக்கு வழங்க ஒரு எண்ணம். அது தடையின்றி நிறைவேற
கிருஷ்ணன் அருளட்டும்.
No comments:
Post a Comment