Sunday, December 27, 2020

SAKKARAI AMMAL

 

சக்கரை அம்மாள் J K SIVAN

2. வைத்ய ஈஸ்வரன்

இது நிஜம். கதையல்ல. சில சமயம் தெய்வம் விண்ணுலகை விட மண்ணுலகு வெகு அற்புதம் என்று இங்கே வரும். வெள்ளைக்கோட்டு அணிந்து மக்களோடு மக்களாக பழகி அன்பை விதைக்கும்.

ஒரு விடிகாலை. மைலாப்பூர் இன்னும் சரியாக தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கவில்லை. சூரியன் இளம் சிவப்போடு கிழக்கே வங்காள விரிகுடாவில் குளித்துவிட்டு மேலே கிளம்பும் நேரம். வழக்கம்போல் பறவைகள் அவனை பாடி வரவேற்றன. மரங்கள் கிளைகளோடு ஆடி இலைகளை உதிர்த்து மலர்களை வாரி வீசி மலர்ப்பாயை தரையில் விரித்து வரவேற்றது.
ராதாகிருஷ்ணன் தெரு அப்போது இல்லை, எட்வர்ட் எலியட்ஸ் ரோடு அதற்கு பெயர். மௌப்ரெஸ் ரோடு சந்திப்பு அருகே வரிசையாக வித விதமான மனிதர்கள் அந்த குளிரில் நிற்கிறார்கள். சிலர் குழந்தைகளோடு, சில பெரிசுகள் ஆண் பெண் ரெண்டு வர்க்கமும் தலையில் துணி சுற்றி போர்த்திக்கொண்டு, சில குழந்தைகள் வீல் வீல். பையன்கள் பெண்கள். எல்லோரும் யாரோ ஒருவருக்க்காக அங்கே காத்திருக்கிறார்கள். அந்த வெள்ளைக்கோட்டு மனிதர் வந்தார். காலையில் வாக்கிங்க் போகும் நேரம். வரிசை மனிதர்கள் கும்பிடுகிறார்கள். வெள்ளைக்கோட்டு அவர்கள் அருகே நின்று ஒவ்வொருவராக தனது கழுத்தில் மாலையாக தொங்கும் ஒரு ஸ்டெதாஸ்கோப் புடன் அந்த பெரிய தெரு மௌப்ரெஸ் ரோடை சந்திக்கும் விளிம்பில் சாலையோரம் மர நிழலில் நின்றார்.
ஒவ்வொருவராக அவரை நெருங்கி வியாதி சரித்திரம் சொல்ல அவர்களை பரிசோதித்து சிலருக்கு மருந்து எழுதிக் கொடுக்கிறார், சிலருக்கு தனது பெரிய பையிலிருந்து மருந்து சீசாக்கள், மருந்து மாத்திரை வில்லைகள் தருகிறார், சிலருக்கு காசும் கொடுக்கிறார். சிலர் அவருக்கு காசு கொடுக்கிறார்கள். அது மற்ற சிலரை அடைகிறது. அரைமணி நேரம் ஒருமணிநேரமாக கூட ஆகிவிடும். சிலரை ஆஸ்பத்திரிக்கு அனுப்புகிறார். சிலரை மறுநாள் வந்து இங்கேயே பார் என்கிறார்.
வெள்ளைக்கோட்டின் பெயர் டாக்டர் நஞ்சுண்டராவ். சிலருக்கு வியாதி குணமானதை சொல்ல வந்தவர்களை தட்டிக்கொடுத்து அனுப்புகிறார். சில நிமிஷங்களில் நடந்து சென்றுவிடுகிறார்.கர்நாடக நஞ்சங்கூடு கிராமத்தை சேர்ந்தவர். இதெல்லாம் நூறு வருஷங்களுக்கு முன்பு.

பெங்களூரில் கல்லூரி படிப்பு முடிந்து சென்னை மருத்துவ கல்லூரியில் டாக்டருக்கு படித்து டாக்டரானவர். மைலாப்பூரில் கச்சேரி ரோட்டில் ஒரு சின்ன மருத்துவ நிலையம் அமைத்து எண்ணற்றவரை குணப்படுத்தியவர். இவரது புகழ் எங்கும் பரவியது. எளிமையான இனிமையான கைராசி டாக்டர் காசு எதிர்பார்க்காதவர். கேட்கவேண்டுமா?
மைசூர் மஹாராஜா எனது ஆஸ்தானத்துக்கு வா எங்களுக்கு டாக்டராக இரு என்று அழைத்தபோது ''மஹாராஜா, உங்களில் யாருக்கு உடம்பு சரியில்லை என்றால் ஓடிவருகிறேன், ஆனால் எனக்கு மருத்துவக் கல்வி போதித்து என்னை டாக்டராக்கிய மெட்ராஸுக்கு தான் முதல் மரியாதை என்று இங்கே தங்கியவர். அவரது மாளிகை மைலாப்பூரில் ''சசி விலாஸ்'' அதில் அவரது தேசிய நண்பர்கள் வ.வே.சு அய்யர், சரோஜினி நாயுடு, திலகர், பிபின் சந்திர பல், பாரதியார் ஆகியோர் வந்து தங்கி டாக்டரின் உபச்சாரம் பெற்றவர்கள். நான் சொன்ன பெயர்கள் ஆங்கில அரசின் பரம விரோதிகள். சுதந்திர தாகம் கொண்டவர்கள்.

தன் வீட்டுக்கு பின்னால் ஒரு விருந்தினர் மண்டபம் ''கிரேஸ் லாட்ஜ்'' GRACE LODGE என்று அமைத்து விருந்தினர்களை அங்கே தங்க வைத்தவர். கட்டிடம் கட்டுவதில் விருப்பம்., நிறைய ஒரே மாதிரி கட்டிடங்கள் சிவப்பு நிறத்தில் காட்டியதால் பார்ப்பவர்கள் ''ஓஹோ இது டாக்டர் நஞ்சுண்ட ராவ் கட்டிடமா'' என்று கேட்பார்கள்.

டாக்டர் ராவ் ஆன்மீக வாதியும் கூட. விவேகா னந்தரின் நண்பர். 1893ல் சென்னை வந்தபோது விவேகானந்தன் டாக்டர் ராவின் உபச்சாரம் பெற்றவர். சென்னையில் ராமக்ருஷ் ணா மடம் கட்ட ராவின் உதவியை பெற்றார்.

இப்போது அண்ணாசாலை, அப்போது மவுண்ட் ரோடு, அது கூவம் கரையை ஒட்டி கோமளீஸ் வரன் பேட்டை திரும்பி எழும்பூர் செல்லும் தெருக்களை இணைக்கும் கோமளீஸ்வரன் பேட்டையில் ஒரு பழைய சிவன் கோவில். அங்கே அருணாச்சலம் என்பவர் டாக்டரின் நோயாளி. அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க டாக்டர் மைலாப்பூரிலிருந்து அடிக்கடி வருவார். அருணாச்சலம் சக்கரை அம்மாள் எனும் தெய்வீக பெண்மணியின் சகோதரர். அருணாச் சலம் வீட்டு மாடியில் அவள் கலகலவென்று உரக்க சிரிக்கும் சப்தம் கேட்கும். தனக்குத் தானே பேசுகிறவள். எல்லோரும் அது ஒரு பைத்தியம். யாருடனும் பேசாது என்பார்கள். முதலில் அவளை ஒரு நோயாளியாக பார்த்த டாக்டர் ராவ் ஆவலுடன் பேசியபிறகு தான் அந்த அம்மாள் பைத்தியம் அல்ல, ஒரு தெய்வீக பெண், உயர்ந்த வேதாந்த தத்துவ ஞானி , அம்பாள் அருள் பெற்றவள் என்று புரிந்து கொண்டார். சக்கரை அம்மாளின் சிஷ்யர் ஆகிவிட்டார். ஸ்ரீ சக்ர உபாசனை செய்பவர் என்பதால் அவளை சக்கரத்தம்மா என்பார்கள் . நாளடைவில் சக்கரத்தம்மா சக்கரை அம்மாஆகிவிட்டது.
டாக்டரும் அந்த அம்பாள் உபாசகியை சக்கரை அம்மாள் என்றே அழைத்தார். ஒருநாள் ''நான் என் இந்த உடலை சீக்கிரம் விட்டு விடப்போகிறேன்'' என்றபோது டாக்டர் அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவி




ல்லை.
''சக்கரை அம்மா நீங்கள் எப்படி எங்களை விட்டுவிட்டு போகமுடியும்'' என்பார்.1901 பிப்ரவரி மாசம் சக்கரை அம்மாள் சொன்னது போலவே திடீரென்று சமாதி அடைந்துவிட்டாள். ஒரு நோயும் இல்லாதவள். டாக்டர் அதிர்ந்து போனார்.
திருவான்மியூரில் ஒரு இடம் வாங்கி இருந்தார். எல்லோரையும் அழைத்து தக்க மரியாதை களோடு சக்கரை அம்மாளின் உடலை ஊர்வலமாக எடுத்துக் கொண்டு திருவான் மியூரில் அந்த இடத்துக்கு எடுத்து சென்று அங்கே அடக்கம் செயது ஒரு கோவில் கட்டினார். அந்த கோவில் பராமரிப்புக்காக ஒரு டிரஸ்ட் நிறுவி னார்.டாக்டரின் தொழில் அவரை நெரு்க் கியது. வயதாக ஆக அவருக்கு ரத்தக் கொதிப்பு ஏற்பட்டு 4.1.1921 ஆண்டு 59 வயதில் டாக்டர் M .C . நஞ்சுண்டராவ் காலமானார். அவரை நான் பார்த்ததில்லை. நான் பிறப்பதற்கு 18 ஆண்டு களுக்கு முன்பே மறைந்துவிட்டாரே. மக்கள் நலனுக்காக தன் உடல் பொருள் ஆவியை அர்ப்பணித்த சிறந்த வாழ்க்கை வாழ்ந்த மனித தெய்வத்தை நான் பார்க்க கொடுத்து வைக்க வில்லை.

இதில் ஒரு சிறு சந்தோஷம் நமக்கெல்லாம் நிம்மதி என்ன தெரியுமா. தனது குரு சக்கரை அம்மாளின் சமாதி கோவில், அதிஷ்டானத்தில் ஒரு இடத்தில் டாக்டர் நஞ்சுண்டராவ் சமாதி அடைந்தார்.

அந்த கோவிலுக்கு செல்லும்போது அவரையும் வணங்கலாம்.

I have attached a rare photo in which Swami Vivekananda is seated with Dr Nanjundarao squatting on the floor in the front row at extreme right wearing his suit.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...