ஆதி சங்கரர் J K SIVAN
॥ பகவான்மானஸ பூஜா - 2
slokam 4 to 10:
दशाङ्गं धूपं सद्वरद चरणाग्रेऽर्पितमिदं
मुखं दीपेनेन्दुप्रभ विरजसं देव कलये ।
इमौ पाणी वाणीपतिनुत सुकर्पूररजसा
विशोध्याग्रे दत्तं सलिलमिदमाचाम नृहरे ॥ ५ ॥
த³ஶாங்க³ம் தூ⁴பம் ஸத்³வரத³ சரணாக்³ரே(அ)ர்பிதமயே
முக²ம் தீ³பேனேந்து³ப்ரப⁴வரஜஸா தே³வ கலயே |
இமௌ பாணீ வாணீபதினுத ஸகர்பூரரஜஸா
விஶோத்⁴யாக்³ரே த³த்தம் ஸலிலமித³மாசாம ந்ருஹரே || 5 ||
என் மனதில் உன்னை முழுசாக நிறுத்தி, இருத்தி, உனக்கு பூஜை பண்ணுகிறேன். இதோ இருக்கிறதே, கமகமவென்று எட்டு ஊருக்கு நறுமணம் வீசுகிறதே இதன் பெயர் தசாங்கம். பத்து வித விதமான மூலிகைகளைக் கொண்டது. இதை பொசுக்கினால் நறுமணப் புகை கனமாக உன்னை சூழ்ந்து கொண்டு உன்னை நறுமண லோகத்தில் கொண்டு வைக்கிறது பார். கற்பூரம் ஏற்றி உனக்கு ஓங்கார வடிவத்தில் ஹாரத்தி காட்டுகிறேன். உன்முகம் கற்பூர ஜோதியில் பிரகாசிப்பதை காண எவ்வளவு என் மனதில் சந்தோஷம் தெரியுமா?. கோவில்களில் அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை நெய்வேத்தியம் ஸ்தோத்ரம் எல்லாம் முடிந்து இந்த கற்பூர ஹராத்திக்காக மணிக்கணக்காக காத்திருக்கும் ஹிந்துக்கள் புண்யசாலிகள் .சிருஷ்டி கர்த்தா ப்ரம்மா வணங்கும் பரந்தாமா, இதோ உனக்காக வாய் கொப்புளிக்க என் இரு கரங்கள் நிறைய பரிசுத்த ஜலம் , பச்சை கற்பூரம் போட்டு நீட்டுகிறேன் வாங்கி வாய் நிறைய கொப்புளித்து துப்பு. பொழுது விடிந்து விட்டதே..
सदा तृप्तान्नं षड्रसवदखिलव्यंजनयुतं
सुवर्णामत्रे गोघृतचषकयुक्ते स्थितमिदम् ।
यशोदासूनो तत् परमदययाऽशान सखिभिः
प्रसादं वाञ्छद्भिः सह तदनु नीरं पिब विभो ॥ ६ ॥
ஸதா³ ம்ருஷ்டான்னம் ஷட்³ரஸவத³கி²லவ்யஞ்ஜனயுதம்
ஸுவர்ணாமத்ரே கோ³க்⁴ருதசஷகயுக்தே ஸ்தி²தமித³ம் |
யஶோதா³ஸூனோ தத்பரமத³யயா(அ)ஶா ஸஸகி²பி⁴꞉
ப்ரஸாத³ம் வாஞ்ச²த்³பி⁴꞉ ஸஹ தத³னு நீரம் பிப³ விபோ⁴ || 6 ||
யசோத நந்தனா, வாசலில் பார் எத்தனை நண்பர்கள் விஷமக்காரர்கள் உனக்காக காத்துக் கொண்டு நிற்கிறார்கள். அவர்களோடு சேர்த்து இதோ கொண்டுவந்திருக்கிறேன் பதினாறு வகை சுசி ருசியான தின்பண்டங்கள். பண்டம் பதினாறு, ருசி அறுசுவை தான். உருக்கிய பசுநெய்க்கே தனி மணம் எப்போதும். ஒரு தங்கக்கிண்ணம் நிறைய அதை வைத்திருக் கிறேன். உணவில் வேண்டியமட்டும் கலந்து கொள் . நிறைய வாசமிகு குடிநீர் வேறு வைத்திருக்கிறேன்.
सचूर्णं ताम्बूलं मुखशुचिकरं भक्षय हरे
फलं स्वादु प्रीत्या परिमलवदास्वादय चिरम् ।
सपर्यापर्याप्त्यै कनकमणिजातं स्थितमिदं
प्रदीपैरारार्तिं जलधितनयाश्लिष्ट रचये ॥ ७ ॥
ஸசூர்ண தாம்பூ³லம் முக²சுசிகரம் ப⁴க்ஷய ஹரே
ப²லம் ஸ்வாது³ ப்ரீத்யா பரிமளவதா³ஸ்வாத³ய சிரம் |
ஸபர்யாபர்யாப்த்யை கனகமணிஜாதம் ஸ்தி²தமித³ம்
ப்ரதீ³பைராரார்திம் ஜலதி⁴தனயாஶ்லிஷ்ட ருசயே || 7 ||
வயிறார திருப்தியாக அறுசுவை உண்டிக் கப்பு றம் என்ன கொடுப்பார்கள்? கல்யாணத்தில், பெரிய விழாக்களில், விருந்திற்கு பிறகு தட்டு நிறைய தாம்பூலம். ஹே . ஹரி நானும் உனக்கு வாசமிகு பழங்களைத் தோல் சீவி,துண்டாக்கி, வித விதமான ருசியுள்ளவைகளை ஒரு தங்கத்தட்டில் வைத்திருக்கிறேன் பார். அந்த தட்டில் தான் எத்தனை நவரத்ன மணிக் கற்கள் பளபளவென்று கண்ணைப் பறிக்கிறது பார். உன்னைச்சுற்றி சரம் சரமாக நெய் தீபங்கள் ஏற்றி அதில் அவை தரும் ஒளியில் எல்லாமே திவ்யமான காட்சி. நீ தீபாவளிக் காரன் ஆச்சே. உனக்கு தீபம் எவ்வளவு பிடிக்கும் என்று அறிவேன். சமுத்ரராஜன் தனயை எனும் ஸ்ரீ லட்சுமி பாற்கடலில் தோன்றியவள் பக்கத்தில் இருந்து உன்னை எவ்வளவு ஆசையோடு அணைக்கிறாள்!
विजातीयैः पुष्पैरतिसुरभिभिर्बिल्वतुलसी-
युतैश्चेमं पुष्पाञ्जलिमजित ते मूर्ध्नि निदधे ।
तव प्रादक्षिण्यक्रमणमघविद्ध्वंसि रचितं
चतुर्वारं विष्णो जनिपथगतिश्रान्तिद विभो ॥ ८ ॥
விஜாதீயை꞉ புஷ்பைரதிஸுரபி⁴பி⁴ர்பி³ல்வதுலஸீ
யுதைஶ்சேமம் புஷ்பாஞ்ஜலிமஜித தே மூர்த்⁴னி நித³தே⁴ |
தவ ப்ராத³க்ஷிண்யக்ரமணமக⁴வித்⁴வம்ஸி ரசிதம்
சதுர்வாரம் விஷ்ணோ ஜனிபத²க³திஶ்ராந்த விது³ஷாம் || 8 ||
எத்தனை வித மலர்கள் இருந்தாலும் உனக் கென்றே ஒரு தனி அபிமானம் எதற்கு என்று நான் நன்றாக அறிவேன். அதனால் தான் நிறைய பச்சை பசேலென்று புதிதாக பறித்த வாசமிகு துளசி, வில்வம் ரெண்டையும் கொண்டு வந்திருக்கிறேன். நீ ஹரிஹரன், அவற்றால் உன் சிரசை அலங்கரிக்கிறேன். எவராலும் வெல்ல முடியாத உன்னை என் மனதால் வென்று விட்டேன். ஆதி அந்தமில்லா அற்புதமே, ஆதிமூலமே, நான் உன்னை நான்கு முறை மனதால் ப்ரதக்ஷிணம் செய்கிறேன். என் சர்வ, சகல பாபங்களையும் நீக்குபவன் நீ ஒருவனே அல்லவா?
नमस्कारोऽष्टाङ्गस्सकलदुरितध्वं सनपटुः
कृतं नृत्यं गीतं स्तुतिरपि रमाकान्त सततं ।
तव प्रीत्यै भूयादहमपि च दासस्तव विभो
कृतं छिद्रं पूर्णं कुरु कुरु नमस्तेऽस्तु भगवन् ॥ ९ ॥
நமஸ்காரோ(அ)ஷ்டாங்க³꞉ ஸகலது³ரிதத்⁴வம்ஸனபடு꞉
க்ருதம் ந்ருத்யம் கீ³தம் ஸ்துதிரபி ரமாகாந்த த இத³ம் |
தவ ப்ரீத்யை பூ⁴யாத³ஹமபி ச தா³ஸஸ்தவ விபோ⁴
க்ருதம் சி²த்³ரம் பூர்ணம் குரு குரு நமஸ்தே(அ)ஸ்து ப⁴க³வன் || 9 ||
ஆணானவன் ஆணவம் போக அஷ்ட அங்கங் ககள், எட்டு பாகங்கள் உடலில் பூமியில் பதியுமாறு நமஸ்காரம் பண்ணவேண்டும். எல்லா துன்பங்களிலிருந்து விடுதலை. லக்ஷ்மிபதே, லக்ஷ்மிநாராயணா, உன்னை போற்றுகிறேன், பாடுகிறேன், ஆடுகிறேன், நான் உன் அடிமை, ஒரு விளையாட்டு பொம்மை அல்லவா? நான் என்ன தப்பு தவறுகள் செய்கி றேன் என்று எனக்கே தெரியாது. அவற்றை பொறுத்து என்னை ஆட்கொள்ளவேண்டியது உன் பொறுப்பு.
सदा सेव्यः कृष्णस्सजलघननीलः करतले
दधानो दध्यन्नं तदनु नवनीतं मुरलिकाम् ।
कदाचित् कान्तानां कुचकलशपत्रालिरचना-
समासक्तः स्निग्द्धैस्सह शिशुविहारं विरचयन् ॥ १० ॥
ஸதா³ ஸேவ்ய꞉ க்ருஷ்ண꞉ ஸஜலக⁴னநீல꞉ கரதலே
த³தா⁴னோ த³த்⁴யன்னம் தத³னு நவனீதம் முரளிகம் |
கதா³சித்காந்தானாம் குசகலஶபத்ராளிரசனா
ஸமாஸக்த꞉ ஸ்னிக்³தை⁴꞉ ஸஹ ஶிஶுவிஹாரம் விரசயன் || 10 ||
எனக்கு பொழுது விடிந்தால் மீண்டும் பொழுது மறையும் வரை கிருஷ்ணா, கார்மேக வண்ணா, கைகளில் நிறைய வெண்ணை, தயிர், ஓரத்தில் புல்லாங்குழல் கொண்ட மன்னா, உன் நினைப்பு ஒன்று தான். உனக்கு சேவை செய்வதே என் விருப்பம். விஷமம் விளையாட்டில் உன் சகாக் களோடு உனக்கு நிகர் எவர்?
मणिकर्णीच्छया जातमिदं मानसपूजनम् ।
यः कुर्वीतोषसि प्राज्ञः तस्य कृष्णः प्रसीदति ॥ ११ ॥
மணிகர்ணேச்ச²யா ஜாதமித³ம் மானஸபூஜனம் |
ய꞉ குர்வீதோஷஸி ப்ராஜ்ஞஸ்தஸ்ய க்ருஷ்ண꞉ ப்ரஸீத³தி ||
ஹரி கிருஷ்ணா, உன்னை த்யானம் செயகிறேன். உபேந்திரா, ஆசமனம் செய்வதற்கு நிறைய ஜில்லென்று கங்காஜலம் கொண்டு வந்திருக் கிறேன். பக்தர்களின் பாபங்களை நீக்கும் பரந்தாமா, பஞ்சாமிர்தம் கொண்டு வந்திருக் கிறேன். ஆகாச கங்கை புனித ஜலம் இதோ. ஸ்பெஷலாக இந்த குடத்தில் உனக்கு பிடித்த யமுனா தீர்த்தம் ஆனந்தமாக அபிஷேகம் செய்யப்போகிறேன்.
No comments:
Post a Comment