Sunday, December 27, 2020

SAKKARAI AMMAL

 சர்க்கரை அம்மாள்    J K   SIVAN 


                   ஒரு லலிதா ஸஹஸ்ரநாம ஞானி 

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு விட்ட இடத்திலிருந்து ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் இனி தினமும் நிறைவு பெரும் வரை தொடரும் என்று ஒரு தீர்மானத்தை மனதில் உறுதிப்படுத்திக் கொண்டேன். உடல் ஒத்துழைப்பு கண்டிப்பாக இருக்க ஸ்ரீ அம்பாள் துணை செய்வாள்.
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் என்றாலே ஸ்ரீ சக்ரம் மனதில் எழுகிறது. அம்பாளுக்கும் சக்கரத்திற்கும் என்ன தொடர்பு?. சக்கரத்தோடு இன்னொரு பெயரும் சம்பந்தப்பட்டிருக்கிறது ஸ்ரீ சக்கரத்
தம்மாள்.  காலப்போக்கில் அவரை சர்க்கரை அம்மாள் என்று இனிப்பாக மாற்றிவிட்டார்கள் நிறைய பேருக்கு அவரைத் தெரியாது என்பதாலும் அவசியம் தெரிந்து கொள்ளப்பட வேண்டியவர் என்பதாலும் இந்த கட்டுரை:

சித்தர்கள் ஞானிகள் என்றால் தாடி மீசை காவி ஆண்கள் மட்டுமில்லை. பெண் சித்தர்களும் உண்டு.
தமிழ் நாட்டின் பல பாகங்களிலிலிருந்து வந்து சென்னையில் சமாதி கொண்ட பரம ஞானிகள், பட்டினத்தார், பாம்பன் ஸ்வாமிகள் போன்றவர்கள்.அவர்களில் ஒருவர் சக்கரத்தம்மாள். திருவண்ணாமலை போளூர் அருகில் தேவிகாபுரத்தில் ஏறக்குறைய 200 வருஷங்கள் முன்பு 1854ல் பிறந்தவர் அனந்தாம்பாள். சென்னை கோமளீஸ்வரன் பேட்டை கோமளீஸ்வரர் மடத்தின் அதிபதியான சாம்பசிவனுடன் அவளுடைய 8வது  வயதிலேயே கல்யாணம். சாம்பசிவனுக்கோ 23வயது அவன் முதல் மனைவி இறந்து போனாள் .   இது  இரண்டாவது திருமணம்.   அப்போது பால்ய விவாகம் சட்ட பூர்வமாக வழக்கத்தில் இருந்தது. கோமளீஸ்வரன் பேட்டைக்கு (இன்றைய காயலான் கடை புதுப்பேட்டைதான்!) வந்து சேர்ந்தார். அனந்தாம்பாள்  தேவிகா புரம் பெரிய நாயகி அம்மன் கோயிலில் அம்பாளைப்  பார்த்தபடி மணிக்கணக்கில் தியானம் செய்தவர்.     லலிதா சகஸ்ரநாமம், ஸ்ரீஸ்துதி போன்றவற்றை தந்தை யிடமிருந்து கற்றுக்கொண்டு தினமும் ஓதி வந்தாள் சிறுமி அனந்தாம்பாள். கோயிலின் மேல்நிலைக்குச் சென்று தனியாக அமர்ந்து தியானம் செய்வது அவளுக்கு மிகவும் விருப்பமான ஒன்று.

இளம் வயதிலேயே விதவையாகிவிட்டாள்  அனந்தாம்பாள்.    அப்பா  தேவிகாபுரம் பெரியநாயகி  கோவில் அர்ச்சகர். அம்மா ஒரு சிவ பக்தை. கேட்கவேண்டுமா அனந்தாம்பாளின் பக்திக்கு.

போளூர் அருகிலேயே வில்வாரணியம் என்ற இடத்தில் ஒரு சிறு குன்றில் இருந்த யாரும் வராத ஒரு பாழ் மண்டபத்தில் தன்னந் தனியே குணாம்பா என்ற சந்நியாசினி அந்த காலத்தில் இருந்தார். அவரிடம் சென்ற அனந்தாம்பா, ஸ்ரீ சக்ர உபாசனை மார்க்கத்தை அடையும் உபதேசம் பெற்றார்.    சிறு பெண்ணான அனந்தம்பாவால் அடிக்கடி வந்து தரிசிக்க முடியாது என்று குரு குணாம்பா, உடம்பை லேசாகப்   பண்ணிக்கொண்டு பறவைகள் போல் பறக்கும் சக்தியை (இதற்கு லஹிமா சித்து என்று பெயர் ) அளித்தார்.

ஸ்ரீ சக்ர உபாசனையில் சதா சர்வ காலமும் ஈடுபட்டதால் அனந்தாம்பா ஊரில் எல்லோருக்கும் சக்கரத்தம்மா ஆகிவிட்டார். வருஷங்கள் நூறுக்கு மேல் ஓடிவிட்டதே திருவல்லிக்கேணி ட்ரிப்ளிகேன் ஆனது போல் சக்கரத்தம்மாவை இப்போது சர்க்கரை அம்மாள் என்றால் தான் தெரியும்.  

கல்வியற்ற 20 வயது இளம் விதவை தலை மொட்டை அடிக்கப்பட்டு, காவி உடுத்தி அனந்தாம்பா சென்னை கோமளீஸ்வரன் கோயில் வாசலில் அமர்ந்து தனக்குள் ஆத்ம ஞானத்தில் ஆழ்ந்து சிரிப்பார், அழுவார், பேசுவார்... ’யான் எனதென்பது அறியேன், பகலிரவாவது அறியேன் '' என்ற ப்ரம்ம ஞான நிலை. ஆகவே இலவசமாக பைத்தியம் பட்டம் கிடைத்தது.

 நான்  கோமளீஸ்வரன்பேட்டை யில் ஒரு சில வருஷங்கள் வசித்தபோது அந்த கோவிலுக்கும் தினமும் காலை செல்வேன். என் வீட்டிற்கு வெகு அருகே  சில வீடுகள் தள்ளி. கோமளீஸ்வரன் கோவில் அருமையான ஒரு ஆலயம்.

ஒருநாள் மைலாப்பூரிலிருந்து ஒரு பெரிய டாக்டர் எம். சி. நஞ்சுண்ட ராவ் கோமளீஸ்வரன் பேட்டை கோவிலில் சக்கரத்தம்மாவைப்   பார்க்கிறார். அவரை அத்வைத ஞானி என்று உணர்கிறார்.  தமது குருவாக ஏற்கிறார்.   சென்னைக்கு விவேகானந்தர் வந்த போது,   உலக பிரபலம் ஆகும் முன்பே  டாக்டருக்கு அறிமுகமாகி  விவேகானந்தருக்கு ஆதரவளித்தவர்
28.2.1901 அன்று சக்கரத்தம்மாள் தேக வியோகம் அடைந்தார்.

டாக்டர் நஞ்சுண்டராவ் அவருக்கு திருவான்மியூரில் சமாதி எழுப்பினார். அது  இன்றும் இருக்கிறது. கலாட்சேத்திரா சாலையும் காமராஜர் சாலையும் சந்திக்கும் இடத்தில் உள்ளது. அவசியம் சென்று தியான மண்டபத்தில் கண்ணைமூடி அவரை வேண்ட வேண்டும்.

கணவன் அயோக்கியன் என்று தெரிந்தும்,கொடுமைப்படுத்தினாலும் தனது கடமையில் சக்கரத்தம்மாள் தவறவில்லை. ஆன்மீக நாட்டம் நாளுக்கு நாள் வளர்ந்த வண்ணம் இருந்தது. தினந்தோறும் அருகில் உள்ள கோமளீஸ்வரர் கோயிலுக்குச் செல்வார். தியானத்தில் ஈடுபடுவார். லலிதா சகஸ்ரநாமம் சொல்லுவார். இறைவனை வேண்டி, உளம் உருக வழிபட்டு வருவார்.
சக்கரத்தம்மாள் ஒரு ’ஞான சொருபிணி’ ’பிரம்ம யோகினி’ என்பதை கொஞ்சம் கொஞ்சமாக உலகம் அறிந்தது. சண்முக முதலியார் என்பவர் முதல் சீடரானார். தொடர்ந்து பலரும் அம்மாவை நாடி வந்து வணங்க ஆரம்பித்தனர். அவர்களுள் முக்கியமானவர் தான் டாக்டர் நஞ்சுண்டராவ்
.
விவேகானந்தர், அமெரிக்காவிலிருந்து ஒரு கடிதத்தில் “எனக்கு சென்னையைப் பற்றி மிகப் பெரிய நம்பிக்கை உள்ளது. சென்னையிலிருந்து ஒரு மிகப்பெரிய ஆன்மீக அலை உருவாகப் போகிறது. அது இந்தியாவெங்கும் பரவி ஒளி வீசப் போகிறது. இதில் எனக்கு பெருத்த நம்பிக்கை இருக்கிறது” என்று டாக்டர் நஞ்சுண்டராவுக்கு எழுதியதை  நான் படித்திருக்கிறேன்.

U.S.A.,
30th November, 1894.

DEAR AND BELOVED, (Dr. Nanjunda Rao.)

Your beautiful letter just came to hand. I am so glad that you have come to know Shri Ramakrishna. I am very glad at the strength of your Vairâgya. It is the one primary necessity in reaching God. I had always great hopes for Madras, and still I have the firm belief that from Madras will come the spiritual wave that will deluge India. I can only say Godspeed to your good intentions; but here, my son, are the difficulties. In the first place, no man ought to take a hasty step. In the second place, you must have some respect for the feelings of your mother and wife. True, you may say that we, the disciples of Ramakrishna, had not always shown great deference to the opinions of our parents. I know, and know for sure, that great things are done only by great sacrifices. I know for certain that India requires the sacrifice of her highest and best, and I sincerely hope that it will be your good fortune to be one of them.

Throughout the history of the world you find great men make great sacrifices and the mass of mankind enjoy the benefit. If you want to give up everything for your own salvation, it is nothing. Do you want to forgo even your own salvation for the good of the world? You are God, think of that. My advice to you is to live the life of a Brahmacharin, i.e. giving up all sexual enjoyments for a certain time live in the house of your father; this is the “Kutichaka” stage. Try to bring your wife to consent to your great sacrifice for the good of the world. And if you have burning faith and all-conquering love and almighty purity, I do not doubt that you will shortly succeed. Give yourself body and soul to the work of spreading the teachings of Shri Ramakrishna, for work (Karma) is the first stage. Study Sanskrit diligently as well as practice devotion. For you are to be a great teacher of mankind, and my Guru Maharaja used to say, “A penknife is sufficient to commit suicide with, but to kill others one requires guns and swords.” And in the fullness of time it will be given unto you when to go forth out of the world and preach His sacred name. Your determination is holy and good. Godspeed to you, but do not take any hasty step. First purify yourself by work and devotion India has suffered long, the Religion Eternal has suffered long. But the Lord is merciful. Once more He has come to help His children, once more the opportunity is given to rise to fallen India. India can only rise by sitting at the feet of Shri Ramakrishna. His life and his teachings are to be spread far and wide, are to be made to penetrate every pore of Hindu society. Who will do it? Who are to take up the flag of Ramakrishna and march for the salvation of the world? Who are to stem the tide of degeneration at the sacrifice of name and fame, wealth and enjoyment — nay of every hope of this or other worlds? A few young men have jumped in the breach, have sacrificed themselves. They are a few; we want a few thousands of such as they, and they will come. I am glad that our Lord has put it in your mind to be one of them Glory unto him on whom falls the Lord’s choice. Your determination is good, your hopes are high, your aim is the noblest in the world — to bring millions sunk in darkness to the light of the Lord.

But, my son, here are the drawbacks. Nothing shall be done in haste. Purity, patience, and perseverance are the three essentials to success and, above all, love. All time is yours, there is no indecent haste. Everything will come right if you are pure and sincere. We want hundreds like you bursting upon society and bringing new life and vigour of the Spirit wherever they go. Godspeed to you.
Yours with all blessings,
VIVEKANANDA.
.....                                   

நஞ்சுண்டராவ் சக்கரத்தம்மாளோடு திருவண்ணாமலை சென்று விருபாக்ஷி குகையில் தங்கியி ருந்த பகவான் ரமணரையும் தரிசித்தார். ஆசி பெற்றார். நீண்ட நேரம் சமாதி நிலையில் இருப்பார் சக்கரத்தம்மாள். ஆழ்ந்த பரிபூரண ஞானநிலை. ஒரு சமயம் கண்ணைத்திறந்து ''நான் இப்போது திருவண்ணாமலை சென்று ரமண மகரிஷிளோடு உரையாடி விட்டு வந்ததாகவும், சேஷாத்ரி சுவாமிகளை தரிசனம் செய்து விட்டு வந்தேன் '' என்பார். நாம்  அங்கு  இருந்தால்  அந்தப்பக்கம் கேலியாக திரும்பி  கூசாமல்  ''இது  ஒரு முழு லூசு, பைத்யம்'' என்போம்,  நாம் தான் பைத்தியம் என்று  அறியாமலேயே.

தொடரும் 



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...