Sunday, December 27, 2020

ORU ARPUDHA GNANI


 


ஒரு அற்புத ஞானி   J K  SIVAN 

                         'பக்தி தந்த சக்தி ''


மஹா பெரியவரைப் பற்றியோ, சேஷாத்திரி ஸ்வாமிகளை பற்றியோ, ரமணரைப் பற்றியோ நிறைய சம்பவங்களை சொல்லும்போது ஒரு எண்ணம்   சிலர்  மனதில் தோன்றலாம். எதற்கு இந்த புருடா, கட்டுக் கதையெல்லாம். வேறு வேலை இல்லையோ? என்று.  உண்மை அதுவல்ல.

இதுவரை சொன்ன  எழுதிய விஷயங்கள்,  பக்தர்களின்  அனுபவங்கள், அவர்கள்  கண்டு அதிசயித்த அற்புதங்கள்.  இதில் எதுவுமே  என் சொந்த சரக்கு அல்ல. கற்பனைக்கு கொஞ்சமும் இங்கே இடமில்லை. குழுமணி நாராயணஸ்வாமி சாஸ்திரிகள் ஸ்வாமிகளோடு நெருங்கி இருந்தவர். சிஷ்யர். ஏதோ நமது பூர்வ  ஜென்ம புண்யத்தால்  அவர்  சேஷாத்திரி ஸ்வாமிகளை பற்றி  எழுதி வைத்தது எண்ணற்ற பக்தர்களை மகிழ்விக்கிறது.   அவரால் நமக்கு  ஸ்வாமிகளின் அற்புதங்கள் அதிசயங்கள்  படித்து ஆனந்திக்க முடிகிறது.   இது போல் எத்தனை ஸ்வாமிகள் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள், இருப்பார்கள். அவர்களை பற்றி வெளி உலகம் அறிய  எவராவது, ஏதாவது காரணம் இருந்தால்  தான் தெரியவரும். இல்லையேல் காலத்தின் போக்கில்  அறியாத  ரகசியமாக கரைந்து போய்விடுகிறது.  இது நமது பெரிய துர்பாக்கியம்.
 வெளியே வராத எத்தனையோ சங்கதிகள் தெரியாமலேயே மறைந்து போய்விட்டதை நினைக்கும்போது நெஞ்சு வெடிக்கிறது.  

என்றோ செய்த நற்பயன் வினையாக இதுவாவது நமக்கு கிடைத்திருக்கிறது என்று தான் நான் எண்ணுகிறேன். அதை உங்களோடு பகிர்ந்து மகிழ்கிறேன். நான் செய்வதெல்லாம் அந்த அனுபவங்களை சுருக்கி தேவைப்பட்ட இடத்தில் விளக்கி, எளிமையாக படிக்க உதவ முயல்கிறேன்.

நூறு இருநூறு வருஷங்களுக்கு முன்பு வியாதிகளை அதிகம் இனம் கண்டு கொள்ளும்  வழக்கமில்லை.  வியாதிகளை பற்றி அதிகம் தெரியாது.  அவற்றிற்கு  மருந்துகளும்  இல்லை.   இறைவன் மேல் பாரத்தை போட்டு நம்பிக்கையில் நம் முன்னோர் உயிர் வாழ்ந்திருந்தனர். மஹான்கள் சிலர் அதிசயமாக குணப்படுத்தினார்கள் . காரணம் காரியம் விளக்க வழியில்லை.

உதாரணமாக TB என்ற tuberculosis   காச நோயால்  அநேகர் உயிரிழந்தனர். காசநோய்க்கு மருந்து இல்லாத காலம். எலும்புருக்கி நோய் என்றும் சொல்வதுண்டு.

விஸ்வநாத முதலியார் மனைவி சாரதாம்பாள்   இருமி இருமி  காசநோயால் துடித்தாள். குளிர்காலத்தில் அதிகம் படுத்தும் நோய் அது. வருஷம் நான்கு ஐந்து மாதம் நரகவேதனை.   முதலியார் பாரி அண்ட் கம்பெனியில் வேலை செய்தார்.  வேலை  தொந்தரவில் இடைவெளி, லீவு  கிடையாது. இரவும் பகலும் வேலை செய்வதால் மனைவியை கவனிக்க நேரம் போதவில்லை.  கணவன் மனைவி இருவருக்குமே   சேஷாத்திரி சுவாமியிடம் பக்தி.  அவரை  நினைத்து  பிரார்த்தித்தாள் .  சுவாமி பக்தை சாரதாம்பாள்.   சுவாமி நீங்கள் தான்  எனக்கு  வியாதியிலிருந்து நிவாரணம் தரவேண்டும் என்று அழுதாள்.  சேஷாத்திரி ஸ்வாமிகள் எங்கே இருக்கிறார்,  எப்போ எங்கே   எதற்கு வருவார் என்று இறைவனுக்கே  கூட  தெரியாதே. ஒருநாள் திடீரென்று  முதலியார் வீட்டுக்குள்  நுழைந்தார்  ஸ்வாமிகள்.

அவரைப் பார்த்த  அதிர்வில்  கையும் காலும்  ஓடவில்லை சாரதாம்பாளுக்கு.  இருகை  கூப்பி வணங்கினார். அவளை  என்ற இறங்க பார்த்துவிட்டு  அங்கும் இங்கும்  வீட்டில்  நடந்தார்.  என்ன தோன்றியதோ  அவள் அருகே வந்தார்.  கையை நீட்டி அவள் முகத்தின் எதிரே.  

''பசு மோர் குடு.'' என்று கொஞ்சம் கேட்டு வாங்கி சாப்பிட்டார். 
 '' நீயும்  பசுமோர் குடி ''
தயிர் மோர் எல்லாம் சேர்த்துக் கொள்ளாமலே இருந்த சாரதாம்பாள்  அன்றிலிருந்து பசு மோர் சாப்பிட்டாள் . கொஞ்சம் கொஞ்சமாக வியாதி குறைந்து அவள் பூரண குணம் அந்த வருஷமே அடைந்தாள்.  காசநோய்க்கு பசு மோர்  மருந்தா என்று என்னை கேட்கவேண்டாம்.  ஒரு சிட்டிகை மண்ணை எடுத்து கையில் கொடுத்து சாப்பிடு என்றால்  கேன்சர்  எனும்  புற்று நோய்க்கூட  தீர்ந்துவிடும். அது சித்தர்களுக்கு மட்டும்  சாத்தியமானது. அது போல் தான்  பசு மோர்  விஷயம்.

+++

எச்சம்மாள் எனும் லட்சுமி அம்மாள் ஸ்வாமிகளின் தீவிர பக்தை. அடிமை என்று சொல்லலாம்.. பாவம். ஒரு மாத காலம் பித்த வாத ஜுரம். படுக்கையில் போட்டு விட்டது.   தனியாக இருப்பவள். உதவிக்கும்  யாரும் இல்லை.  எழுந்திருக்க முடியவில்லை.  அவள் வீட்டுக்கு அடிக்கடி  சேஷாத்திரி ஸ்வாமிகள் தினமும்  ஒருமுறையோ பலமுறையோ கூட வருவார்.  அவ்வளவு ஸ்வாதீனம் அவருக்கு எச்சம்மாள்  வீடு.   அப்படி இருந்தும்  ஏன்  கிட்டத்தட்ட  ஒரு மாசம்  ஆகிவிட்டது. இன்னும் ஒரு முறை கூட 
அந்த வீட்டுப்பக்கம்  ஸ்வாமிகள்  தலையே காட்டவில்லை. எச்சம்மாள் சுவாமி சுவாமி என்று பிதற்றினாள். அவள் பெண் செல்லம்மாள்  ஊரிலிருந்து  அம்மாவுக்கு உதவ வந்தாள்.  சேஷாத்திரி ஸ்வாமிகளைத்  தேடிக்கொண்டு  இருந்தாள் . அவரைப் பார்த்தல்  வீட்டுக்கு  அழைத்து வரவேண்டும் . அவள் அதிர்ஷ்டம்  ஒருநாள் பூத நாராயணன் கோவில் வாசலில்  ஸ்வாமிகளைப் பார்த்து விட்டாள் .  அவர்   காலில் விழுந்து 

''அப்பா ஏன் வீட்டுக்கு வரலே. என் அம்மாவுக்கு ஜுரம் நாரா தோலா ஆயிட்டாளே . உங்களேயே நினைச்சு பிரார்த்தனை பன்னறாளே... AA வாங்கோ'' என்றாள் .

''ஓஹோ...
 நாளைக்கு பார்ப்போம்'' 

அடுத்த நாள்   ஸ்வாமிகள் காலை 6 மணிக்கே எச்சம்மா வீட்டுக்கு  வந்து விட்டார். எச்சம்மாள் படுத்திருந்த கட்டில் ஓரத்தில் உட்கார்ந்தார்.  எச்சம்மாவிடமிருந்து அவள் மாவால் செல்லம்மாவுக்கும் விஷ ஜுரம் தொற்றிக் கொண்டது..

''எனக்கு தயிர் சாதம் குடு'' என்று   செல்லம்மாவைப்  பார்த்து  கேட்டார்.  என்ன இது., விடிகாலை  ஆறுமணிக்கு  சில்லென்று  குளிர் காலத்தில்  தயிர் சாதமா?   உடம்பு முடியாமல் செல்லம்மா எழுந்து போய்  சட்டியில் தயிர் எடுத்து பழைய சாதத்தில் கலந்து  பிசைந்து கொண்டு வந்து கொடுத்தாள் . ஒரு கவளம் சாப்பிட்டார்.


 ''இந்தா, எனக்கு போறும்.  இதை எச்சம்மாவுக்கு கொடு. நீயம் சாப்பிடு மீதியை...' என்று அவள் வாய்க்கு அருகே நீட்டினார். செல்லம்மாள் கொஞ்சம் கொஞ்சமாக அதை எச்சம்மாவுக்கு ஊட்டினாள். தானும் சாப்பிட்டாள். அன்று சாயந்திரம் எச்சம்மா எழுந்து உட்கார்ந்தாள். செல்லம்மாள் மறுநாள் காலை மாட்டை   விடிகாலையிலேயே  குளக்கரையில்  குளிப்பாட்டி கொண்டிருந்தாள்.

++

எச்சம்மாவுக்கு ரமணன் என்ற  ஒரு  ரன். ஒரு தரம் அவன் கீழே விழுந்து கால்  எலும்பு உள்ளே முறிந்திருந்தது தெரியாமல்   சுளுக்கிக் கொண்டு வீக்கம். நடக்க முடியவில்லை என்று நினைத்தாள் . எக்ஸ்ரே XRAY  இல்லாத  காலம்.

 அந்த காலத்தில் எலும்பு முறிவைக் கூட சுளுக்காக பாவித்து மந்திரித்து உருவுவார்கள்.. வலி அதிகமாகவே,  குழந்தை  அழுதான். குழந்தையை த்தூக்கி கொண்டு ஆஸ்பத்திரிக்கு நடந்தாள் எச்சம்மா. போகும் வழியில் சேஷாத்திரி ஸ்வாமிகளை எதிரே பார்த்துவிட்டாள் . ரமணனைக்  இறக்கி விட்டு வணங்கினாள்.

''எங்கே போறே ?''
''சுவாமி  பேரனுக்கு  கீழே விழுந்து  கால் சுளுக்கு  வலி தாங்கமுடியாம கத்தறான் ''
''அதுக்கு?''
''கை  வைத்தியம்  குணமாகள்ளே ரெண்டு மூணு நாள்   ஆயிட்டுது.  வெள்ளக்கார டாக்டர் இருக்கிற ஆஸ்பத்திரிக்கு  போறேன்''

''ஓஹோ ஆஸ்பத்திரிக்கு போறியோ . போ போ''  அதுக்கு முன்னாலே  இதை  பூசிண்டு போ;;என்று சிரித்தவாறு சொல்லிவிட்டு ரெண்டு கை மண்ணை வாரி எடுத்து ரமணன் உடம்பு கை கால் பூரா தானே பூசிவிட்டு, துளி மண்ணை அவன் வாயிலும் போட்டு சாப்பிடுறா '' என்கிறார். 

ரமணனைத் தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரி போனதும், வெள்ளைக் கார டாக்டர் ரமணனை '
' இறக்கி நடக்க வை'' என்கிறான். ரமணன் ஜோராக நடக்கிறான். வலி எங்கே போனது?

''கையைப் பிடித்துக் கொண்டு  பையனை என் கிட்டே அழைத்து வா''' என்கிறான் டாக்டர். 

''வரமாட்டேன்''  ரமணன் தலையைஆட்டிவிட்டு படு வேகமாக ஆஸ்பத்திரி வாசலை நோக்கி ஓடுகிறான்!!! 

''காலில் தான் ஒன்றுமே ப்ராப்ளம் இல்லையே. எதற்கு வந்தாய்?'' என்று எச்சம்மாவை கோபிக்கிறான் வெள்ளைக்கார டாக்டர்.

++
இதே எச்சம்மாவுக்கு முன்பு ஒரு முறை பித்த ஜுரம் கண்டபோது மூன்று நாள் வாட்டியது. திடீரென்று  ஸ்வாமிகள் வீட்டுக்கு  வந்து விட்டார்  ஸ்வாமிகள்.  
''என்ன உனக்கு'' 
அவள்  ஜுரமாக படுத்திருப்பதை அறிந்து தலையை ஆட்டுகிறார்.
''ஓஹோ  அதுக்கென்ன.   விளாம்பழம் சக்கரை போட்டு சாப்பிடு . தித்திப்பாக இருக்கும்'

நம்மைப் போல்  எச்சம்மா  ஸ்வாமிகளை பைத்தியம் என்று கருதாதவள் அல்லவா. சுவாமி சொன்னால் அதில் ஏதோ ரஹஸ்ய அர்த்தம் இருக்கும் என்று புரிந்தவள்.   கோபால் முதலியார் வீட்டில்  விளா மரத்தில் நிறைய  பழம் காய்த்திருந்தது தெரியும்.  பெண்ணை விட்டு  ரெண்டு பழம் கேட்டு வாங்கி வந்து சர்க்கரை சேர்த்து சாப்பிட்டாள் . அப்புறம் என்ன பூரண குணம்.  .

என்ன காரணம் சொல்வது இதற்கெல்லாம்?? மந்திரமா, மாயமா? அதிசயமா? தெய்வ சக்தியா? நிச்சயம் பக்தி தந்த தெய்வ சக்தியே.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...