Wednesday, December 2, 2020

JKS THOUGHTS

 


யோசிப்போமா? J K .SIVAN


இறைவன் தீர்ப்பு அற்புதமானது. ஏதோ ஒரு காரணத்தால் தான் ஒன்றுக்கு ஒன்று முரண் பாடான வஸ்துக்களை நமக்கு அளித்தி ருக் கிறான். இரவு x பகல், வெளிச்சம்x இருட்டு, அறிவுx அஞ்ஞானம், கோபம்x அன்பு, கருப்புx வெளுப்பு, திருப்திx பொறாமை, இனிப்புx காரம், மரணம்x வாழ்க்கை... இன்னும் எத்த னையோ சொல்லிக்கொண்டே போகலாம். யோசித்துப் பார்த்தால் ஒன்றில்லாவிட்டால் இன்னொன்று நம்மை அது இருப்பதின் அருமையை, பெருமையை தெரிந்து கொள்ளாமல் விட்டுவிடும். அனுபவிக்க முடியாமல் போய்விடும்.
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் என்ற ஒரு இளைஞர் இளவயதில் நம்மை விட்டு மறைவ தற்கு முன் அற்புத சிந்தனையாளராக மட்டும் அல்ல, அதிசய கவிஞராகவும் இருந்து அமரத் தன்மை வாய்ந்த பாடல்களை திரையுலகுக்கு அளித்து விட்டும் சென்றிருக்கிறார். ஒரே ஒரு பாட்டு சொல்கிறேன், அது எந்த சினிமா என்று அறிய வேண்டிய அவசியம் நமக்கில்லை:
''எல்லோரும் நம்பும்படி சொல்லும் திறனி ருந்தால் சொல்லிலே உண்மை இல்லை உள்ளதை உள்ளபடி சொல்லும் மனிதனிடம் உணர்ந்திடும் திறமையில்லை. உண்மையும், நம்பவைக்கும் திறனும், அமைந்திருந்தால் உலகம் அதை ஏற்பதில்லை
அது இருந்தால் இது இல்லை இது இருந்தால் அது இல்லை அதுவும் இதுவும் சேர்ந்திருந்தால் அவனுக்கிங்கே இடமில்லை
அங்கமதில் மங்கையர்க்கு அழகிருந்தால் அறிவில்லை, ஆராய்ந்து முடிவு செய்யும் அறிவிருந்தால் அழகில்லை. அழகும் அறிவும் அமைந்த பெண்கள் அதிசயமாய்ப் பிறந் தாலும் குறுகு மனம் கொண்டவர்கள் குலை க்காமல் விடுவதில்லை . பள்ளி செல்லும் மாணவர்க்குப் படிப்பு வந்தால் பணமில்லை, பணமிருந்தால் இளைஞருக்குப் படிப்பதிலே மனமில்லை; மனமிருந்து படிப்பு வந்து பரீட்சையிலும் தேறி விட்டால், பலபடிகள் ஏறி இறங்கிப் பார்த்தா லும் வேலையில்லை.
பொதுப்பணியில் செலவழிக்க நினைக்கும் போது பொருளில்லை, பொருளும் புகழும் சேர்ந்தபின்னே பொதுப்பணியில் நினைவில் லை. போதுமான பொருளும் வந்து பொதுப் பணி யில் நினைவும் வந்தால் போட்ட திட்டம் நிறைவேறக் கூட்டாளிகள் சரியில்லை''.
கல்யாணசுந்தரத்திற்கு அர்த்தம் தேவை யில்லை. இதே போல் கண்ணதாசன் ஒரு வாக்கியம் எழுதி இருந்தார் அதுவும் எனக்கு ரொம்ப பிடித்து நினைவில் வைத்தது:
''ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார், உள்ளத்தில் உள்ளது அமைதி. இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி...வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும், இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்'' எவ்வளவு அழகான உண்மை. தமிழுக்கு ஒரு தனி ருசி ஸார் .
என்னைப் போலவே உங்களுக்கும் சில கேள்விகளுக்கு விடை தெரியாது வியப் பூட்டும்: ஒரு சில உதாரணங்கள் தருகிறேன்.
வாடா மல்லிக்கு வண்ணம் உண்டு வாசமில்லை, வாசமுள்ள மல்லிகைக்கோ வயது குறைவு.ஏன்? வீரமுள்ள கீரிக்கு கொம்பில்லை, கொம்புள்ள மானுக்கோ வீரம் இல்லை. ஏன்? கருங்குயிலுக்குத் தோகையில்லை,தோகையுள்ள மயிலுக்கோ இனிய குரலில்லை.ஏன்? காற்றுக்கு உருவமில்லை, கதிரவனுக்கு நிழலில்லை, நீருக்கு நிறமில்லை, ⚡ நெருப்புக்கு ஈரமில்லை, ஒன்றைக் கொடுத்து ஒன்றை எடுத்த, ஒவ்வொன்றிற்கும் காரணம் வைத்த, எல்லாம் இருந்தும் எல்லாம் தெரிந்தும் ஏன் கல்லாய் நின்றான் . அவன் தான் நாம் போற்றும் இறைவன்.
கீதை இதைப்போல் எல்லாம் லக்ஷம் விஷயங் கள் சொல்கிறது. ஏன் படிக்கமாட்டேன் என்கிறார்கள்?
''எவர் வாழ்விலும் நிறைவில்லை, எவர் வாழ்வி லும் குறைவில்லை, புரிந்துகொள் மனிதனே. அமைதி கொள்.
தன்னை அறிந்தவன் ஆசைப் பட மாட்டான், உலகை அறிந்தவன் கோபப் பட மாட்டான். இந்த இரண்டையும் உணர்ந்தவன் துன்பப் பட மாட்டான்.
தோல்விக்கு இரண்டு காரணம்.
ஓன்று: யோசிக்காமல் செய்வது. இரண்டு: யோசித்த பின்னும் செய்யாமல் இருப்பது.
முடிப்பதற்கு முன் விவேகானந்தரின் சில பொன் மொழிகளையும் தருகிறேன்:
'' பொய் சொல்லி தப்பிக்காதே, உண்மையை சொல்லி மாட்டிக்கொள், -பொய் வாழ விடாது !உண்மை சாக விடாது. இதயம் சொல்வதை செய். வெற்றியோ தோல்வியோ அதைத் தாங்கும் சக்தி அதற்கு மட்டும் தான் உண்டு. ''
ஒரு ஏழையிடம் திடீர் என்று, ''யோவ் நீ வாங்கிய ஒரு ரூபாய் லாட்டரி சீட்டு க்கு ஐந்து லக்ஷ ரூபாய் லாட்டரி ப்ரைஸ் விழுந்தி ருக்கிறது '' என்று யாரோ சொல்ல, ''ஆஹா நான் லக்ஷாதிபதியா என்று ஹா என்று விழுந்துவிட்டான். அப்புறம் அவனை எரித்துவிட்டார்கள்.
நமது சிரிப்பு நடிகர் என்.எஸ். கிருஷ்ணன் சிரிப்பில் சிந்தனை இருக்கும். அதே போல் சார்லி சாப்ளின் என்ற பேசா படங்கள் மூலம் புரிய வைத்த ஹாஸ்ய நடிகன்: அவன் சொன்னதில் ஒன்று:
''பெண்கள் இல்லை என்றால் ஆண்களுக்கு ஆறுதல் சொல்ல ஆள் இல்லை. பெண்களே இல்லை என்றால் ஆறுதலே தேவை இல்லை.
ஆன்மீக கட்டுரை, கதைகளுக்கு இடையே இது போல் சில சில்லறை விஷயங்களும் உங்களுக்கு திருப்தியாக இருக்கிறதா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...