கிருஷ்ணா, உன்னிலிருந்து துவங்குகிறேன்...J K SIVAN .
நாம் ஒருவர் மீது அளவு கடந்த, எல்லையில்லாத அன்பு பிரேமை வைத்து விட்டால் நமக்கே, நமக்கு மட்டுமே என்ற சொந்தம் கொண்டாடும் எண்ணம் வந்து விடும். மற்றவர்கள் அவரிடம் பேசினாலோ, அவர் மற்றவர்களிடம் சிரித்துப் பேசினாலோ வந்தது விபரீதம்.. இந்த நிலை ராதைக்கு அதிகமாகவே வந்தது. கிருஷ்ணன் மீது கண்மூடித்தனமாக அன்பு, பிரேமை, காதல். அவன் எல்லோரிடமும் சிரித்துப்பேசி விளையாடுபவன். சிறுவனுமல்ல, வாலிபனுமல்ல. ரெண்டும் கெட்டான் வயசு.
மதுவனத்தில், பிருந்தாவனத்தில் தினமும் கிருஷ்ணன் ராதா மற்ற கோபியர்கள் ஒன்று விளையாடுவார்கள். அருகே யமுனைக்கரையிலிருந்து குளிர்ந்த காற்று வீச, நறுமணம் கமழ் கமழ் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் மரங்கள் செடிகொடிகள் அநேகம் அங்கு உண்டு.
கண்ணன் மற்ற கோபியரோடு விளையாடுவது கண்டு மனம் பொறுக்கவில்லை. தனது அந்தரங்கத் தோழியிடம் முறையிடுகிறாள்.
விடுவிடுவென்று அந்த இடத்தை விட்டு சென்று தூரத்தில் மறைவாய் இருந்த ஒரு பெரிய விருக்ஷத்தின் அடியில் உட்கார்ந்து கொண்டாள் .
sañcarad-adhara-sudha-madhura-
chalita-dg-añcala-chañcala-
rase harim iha vihita-vilasam
smarati mano mama kruta-parihasam ||dhruva-pada||1||
பார்த்தாயா தோழி, இல்லை கேட்டாயா தோழி அந்த கண்ணன் புல்லாங்குழல் ஊதுவதை. அவன் பவழ உதடுகளில் பதிந்து அந்த மூங்கில் குழாய் என்னமாக மனதைத் தொடும் விதத்தில் அற்புத கீதம் செவிக்கினிய விருந்தாக தருகிறது. அவன் அலைபாயும் விழிகள் என்னைத் தேடுகிறதா? தலையை எப்படி அசைக்கிறான் பார்.அதில் செருகியிருக்கும் மயிலிறகு எவ்வளவு அழகாக ஆடி அவன் இசைக்கு தாளம் போடுகிறது .
chandraka-charu-mayura- sikhandaka-mandala-valayita- kesam |
pracura-purandara-dhanur- anurañjita-medura-mudira- suvesham (rase harim iha) ||2||
திரண்ட கருமையான உருண்ட சுருண்ட கேசங்களை உடையவன் அல்லவா இந்த கேசவன். அதற்கு அழகு சேர்க்க நீல நிற மயிலிறகுகளை எப்படித்தான் சிரத்தை சூட கண்டுபிடித்தானோ? வெண்மையான பால் நிலவில் அவற்றின் அழகு கண்ணைப்பறிக்கிறதே.
pracura-purandara-dhanur-
திரண்ட கருமையான உருண்ட சுருண்ட கேசங்களை உடையவன் அல்லவா இந்த கேசவன். அதற்கு அழகு சேர்க்க நீல நிற மயிலிறகுகளை எப்படித்தான் சிரத்தை சூட கண்டுபிடித்தானோ? வெண்மையான பால் நிலவில் அவற்றின் அழகு கண்ணைப்பறிக்கிறதே.
கருமேக கூட்டத்தில் வானவில் பளிச்சிடுவது போல் இல்லை? கருத்துக்கும் மஞ்சளுக்கும் நல்ல ஒற்றுமை என்று யார் முதலில் சொன்னது? அவனுடை கருநிற தேகத்தில் மஞ்சள் பீதாம்பரம்...
vipula-pulaka-bhuja-pallava- valayita, vallava-yuvati-sahasram |
kara-charano rasi mani-gana-bhushana, kirana-vibhinna-tamishram(rase harim iha) ||4||
அவன் ஓடிவந்து எல்லோரையும் பாசத்தோடு அணைக்கும்போது மயிர்கூச்செறிகிறது தோழி.
நெற்றித் திலகம் சந்தன மணம் வீசுகிறது. காது மடலில் தொங்கும் மகர குண்டம் கன்னத்தில் அசைந்தாடுகிறதே. உள்ளம் கொள்ளை போகுதே. இதைக்காணத்தானே காலம் காலமாக யோகிகள், முனிவர்கள், ரிஷிகள் தவம் செய்கிறார்கள்.
நெற்றித் திலகம் சந்தன மணம் வீசுகிறது. காது மடலில் தொங்கும் மகர குண்டம் கன்னத்தில் அசைந்தாடுகிறதே. உள்ளம் கொள்ளை போகுதே. இதைக்காணத்தானே காலம் காலமாக யோகிகள், முனிவர்கள், ரிஷிகள் தவம் செய்கிறார்கள்.
sri-jayadeva-bhanitam ati sundara, mohana-madhu-ripu-rupam |
hari-charanam-smaranam prati samprati, punyavatam anurupam (rase harim iha vihita-vilasam..) ||8||
ஸ்ரீ ஜெயதேவரின் இந்த அஷ்டபதி கீத கோவிந்த கானம் படிப்பவர்களுக்கு கேட்பவர்களுக்கு வரப்பிரசாதம். ஹரியின் தாமரைப்பதங்களை நினைவூட்டும். பக்தியோடு அவனோடு சேர்க்கும்.
ஸ்ரீ ஜெயதேவரின் இந்த அஷ்டபதி கீத கோவிந்த கானம் படிப்பவர்களுக்கு கேட்பவர்களுக்கு வரப்பிரசாதம். ஹரியின் தாமரைப்பதங்களை நினைவூட்டும். பக்தியோடு அவனோடு சேர்க்கும்.
ஸ்ரீ பாலமுரளி கிருஷ்ணாவின் இந்த ராகமாலிகை பாடல் என் நெஞ்சை தொட்டு சங்கீத மறி யாத என்னையும் பாட வைத்தது. முயற்சித்தேன்
https://youtu.be/a4QykDj2Q6M
https://youtu.be/a4QykDj2Q6M
No comments:
Post a Comment