Thursday, December 10, 2020

MY ANCESTORS

 என் முன்னோர்கள்    J K   SIVAN 



                                                  5   கலைஞானமும்  கல்யாணமும் 

என் எழுத்துக்களில்  ஒருவரை  தாழ்த்தி அதன் மூலம் மற்றவரை உயர்த்தும்  எண்ணம்  பிரதிபலிக்காது. எல்லோரிடமும் உள்ள  சிறந்த குணத்தை, செயலை பாராட்டும் பழக்கம் மட்டுமே  உண்டு. ஒருவரோடு ஒருவரை COMPARE  ஒப்புமை பண்ணக்கூடாது. ஒவ்வொருவிதத்தில் ஒவொருவரும் தனித்வம்  கொண்ட சிறந்த  சிருஷ்டிகள்.  

 இந்த கட்டுரை  அனைத்து  அஷ்டஸஹஸ்ரர்களையும் சென்றடைய  வேண்டும். அனைவரும் ஒருவரோ டொருவர்  பழகி உறவு  நட்பு  பரவ வேண்டும். மகிழ்ச்சியை  ஒற்றுமையை  வளர்க்க வேண்டும். .

இனி என் தாத்தா முன்னோர்களைப் பின் தொடர்கிறேன்.  

என்  தாய்வழி பாட்டனார்கள்  ஆத்ரேய  கோத்ரத்தினர்.   ஆஸ்வலாயன சூத்ரம், ருக்வேதிகள்,   அதில்  ரெண்டு பேர்களிடமிருந்து இந்த  கட்டுரைஆரம்பிக்கிறது.  ஒருவர்    ராமஸ்வாமி  பாரதி,   மற்றவர் வைத்யநாத  பாரதி,  சகோதரர்கள்.   நகமும் சதையும் போல்  இருவரும்.  தம்பி  லக்ஷ்மணன்  என்ற  பேர்  பெறவில்லையே  தவிர  அண்ணன்  ''ராம'' சாமிக்கு  தாசானு தாசன். விஸ்வாசி, பக்தன். ராமனுஜன்  என்றே  பேர்  வைத்திருக்கலாமா என்றும்  தோன்றுகிறது. பொருத்தமாக  இருந்திருக்கும்.  

இவர்களை  ஆதர்த்தவர்  அரியலூருக்கு  அருகே உடையார்பாளயத்தில் ஜமீன்தாராக  இருந்த   யுவரங்க  பூபதி  என்றவர் .   தமிழ் என்றால்  உயிரையே  கொடுப்பவர்கள்  அக்காலத்து ராஜாக்கள், ஜமீன்தார்கள், பிரபுக்கள்,. கல்வியறிவு மிக்கவர்கள்   சில  ஜமீன்தார்கள்,   குறுநில  மிராசுகள்  ஆகியோர்.  ஆங்கிலம் பரவாத காலம், ஸமஸ்க்ரிதம் , தமிழ் மொழி களில் தேர்ச்சி, நல்ல அறிவும்  பாண்டித்யமும் பெற்றவர்களாக  இருந்ததால் கவிஞர்களை, பண்டிதர்களை வித்வான்களை  ஆதரித்தார்கள்.  

மேலே சொன்ன ரெண்டு  சகோதரர்களுக்கும்  சங்கீதம், வடமொழி, தென் மொழி,  மகா பாரதம்,  ராமாயணம்  ஜோதிடம்  எல்லாம்  கைவந்த  கலை.   எனவே  யுவரங்க பூபதிக்கு  கண்  போன்று  பெருமை பெற்றதில் ஆச்சர்யம் இல்லை. யுவரங்க  பூபதி ஒரு  சிறந்த  வள்ளல்.

 ஒரு சமயம்  ஜமிந்தார் பூபதியின்  அரண்மனையில்  சங்கீதத்   திறமையை  பல  புலவர்கள் காட்டிக் கொண்டிருந்தனர்.  சிறந்த புலமைக்கு  பரிசு  உண்டே.   ரெண்டு  சகோதரர்களும்  அதில்  கலந்து கொண்டி ருந்தனர்.  

சகோதரர்கள்  இருவருக்கும்   சரிகை  தலைப்பாகையை  பரிசாக  கொடுத்தார்  ஜமிந்தார்.   இதை  சந்தோஷமாக  தெரிவித்து ரெண்டு சகோதரர்களும்  மோகன  ராகத்தில்  ஒரு  பாடலை  அந்தக்  கணமே  பாடினார்கள்.

அதில்  பல்லவியில்   ''  ச   ரி  க  பா  கா   இச்சேரா  (சரிகா)''    என்று  வருமாறு  ஸ்வரம்  அமைத்திருந்தார்கள்.  இந்த ஸ்வரம்  மோகன  ராகத்தின்  ஆரோஹண   ஸ்வரம்.   அந்த  ஸ்வரத்தை  பாருங்கள்.  ''சரிக  பாக''   என்று  வருகிறதல்லவா.   ஜமிந்தார் ஜரிகை தலைப்பாகை  கொடுத்ததை  அழுத்தி  விஸ்தாரமாக   ஒரு  ஸ்வரம்.   ஜமிந்தாருக்கு  உச்சி  குளிர் ந்து  விட்டது.  ஜமிந்தார்   சங்கீத ஞானமும் உடையவர்.   ஆகவே  இடையே  குறுக்கிட்டு   ஸ்வர  ஆலாபனத்தைத்   தானே  தொடர்ந்து  பாடினார்.    

யுவரங்க  பூபதி   பாடும்போது   ''ஸா   தா  பா  கா  இச்சேரா''   என்று   மோகன  ராகத்தின்  அவரோகண   ஸ்வரத்தில் ''நான்    ஜரிகைப்பாகை எல்லாம்  ஒன்றும்  கொடுக்க வில்லை.  ''சாதா'' ரண தலைப்பாகை  தான்   கொடுத்தேன்''  என்று  ஹம்பிளாக   ஸ்வரமாக  பாடிச் சொன்னது  புரிகிறதா?  

அந்த காலத்தின்  சொல் வளமை , பொருள் வளமை   பிரபுக்களுக்கும்  இருந்தது புரிகிறதா  எனது  மனைவி  வழி  உறவினர்  மகா  மகோபாத்தியாய   ஸ்ரீ  உ . வே.  ஸ்வாமிநாதய்யர்   ""என் சரித'' த்தில்  இப்படிப்பட்ட  சில  நிகழ்ச்சிகளை  மிக அருமையாக  எழுதியிருக்கிறார்.  

ஒரு அஷ்டஸஹஸ்ர  சமயோசிதம் மிக்கவர் பற்றி  உ.வே. சா. தனது  ''என் சரிதம்''  ரெண்டாம் அத்தியாயத்தில் எழுதியதில் இருந்து ஒரு  சம்பவம் தருகிறேன்: 

ஒரு  பிராமணன்  ஒரு  குறுநில மன்னனிடம் சென்று   ''ஐயா  நான் பதினாயிரம்  10,000   பிராமணர்களுக்கு அன்னதானம் செய்ய எண்ணியிருக்கிறேன்; அதற்கு மகாராஜா உதவி செய்ய வேண்டும்’ என்று வேண்டிக்
கொண்டாராம்.  ராஜாவும்  '' நீ நல்ல காரியம் பண்ணுகிறாய், உனக்கு வேண்டிய பொருளுதவி செயகிறேன் என்று கேட்ட பணத்தை கொடுத்தார்.  குறிப்பிட்ட நாளில்  பிராமணர் அன்னதானம் செய்வதைக் கண்டறிய ராஜா ஒரு ஆளை அனுப்பினான்.  அஷ்டஸஹஸ்ரஹாரர் என்ன செய்தார்?  அன்னதானம் அன்று அவரது சிறிய  ஒட்டு வீட்டில்   ரெண்டே ரெண்டு  பிராமணர்களை மட்டும்  அழைத்து  அவர்களுக்கு  திருப்தியாக  சாப்பாடுபோட்டு  கையில் சில்லறையும் தக்ஷிணையாக  கொடுத்து அனுப்பினதாய்  அந்த ஆள்  ராஜாவிடம் சென்று சொன்னான். 

ராஜா அந்த  பிராமணரை அழைத்து  '' பதினாயிரம் பேருக்கு  அன்னதானம் பண்ணுவதாக சொன்னீர்கள்  உங்கள் சிறிய க்ரஹத்தில்  ரெண்டே ரெண்டு பேருக்குத்தானே சாப்பாடு போட்டீர்?” என்று கேட்டான்.

''பிரபு , நான் தங்களிடம் சொன்னது போல்   பதினாயிரம் பேருக்கு  அல்ல,   ஆயிரம் பேர்  கூடவே  சேர்த்து  பதினொன்றாயிரம் பேருக்கு அல்லவோ  போஜனம் செய்வித்தேன்?

''என்னய்யா  சொல்கிறீர் நீங்கள்?  ரெண்டே ரெண்டு  பேருக்கு மட்டும் உணவளித்து விட்டு பட்டப்பகலில்  இப்படிப் பொய்  சொல்கிறீரே ? பதினாறாயிரம் பேர் முதலில் உம்முடைய வீடு தாங்குமா? ஊரே அக்ராஹாரமே  தாங்காதே. ரெண்டு பேர் அல்லவோ உமது வீட்டில் போஜனம் சாப்பிட்டவர்கள்?

''பிரபு  நான் சொன்னபடியே தான் செய்தவன்.   “நான் போஜனம் செய்வித்தவர்களில் ஒருவர் 
அஷ்டஸஹஸ்ரம்   எண்ணாயிரத்தார்.  மற்றொருவர் சிதம்பரம் தில்லை மூவாயிரத்தார்.  8000+3000 =11000.  இருவரும் சேர்ந்து  பதினொன்றாயிரம் இல்லையா?.   அஷ்ட ஸகஸ்ரப் பிராமணர் ஒருவரும், சிதம்பர தீக்ஷிதர் ஒருவரும்  அவர் வீட்டில் உணவருந்தினார்களென்றும், எண்ணாயிரவரும், தில்லை
மூவாயிரவரும்  போஜனம் அருந்தியதை  சாதுரியமாக அவர் விளக்கி  ராஜாவிடம் இன்னும் கொஞ்சம் பொருளுதவியும் பரிசாக பெற்றார்.

அந்தக்காலத்தில்  சிறுவயதிலேயே கல்யாணம் நடைபெறும் என்றேன் அல்லவா. எங்கள் தாத்தா  வசிஷ்ட பாரதியார்  குடும்பத்தில்  அவர்கள் பெயரோடு பாரதி என்ற பட்டமும் சேர்ந்து தான் எல்லோருக்கும் உண்டு. 
பாரதி என்பது வாக் தேவி ஸரஸ்வதி.    ஸரஸ்வதி  கடாக்ஷ அனுக்ரஹம்  பெற்றவர்கள். 

 மீண்டும் நாம் கஷ்டமே படாமல்  300-350 வருஷங்கள்   பின்னோக்கி  அப்போதைய  சோலையும்  வாவியுமான  உடையார் பாளையம்  போவோம்.  அப்போது தான்  ராமஸ்வாமி  பாரதியையும்  அவர்  தம்பி  வைத்யநாத  பாரதியையும்  பார்க்க முடியும்.  

 யுவரங்க  பூபதி ஜமிந்தார் ஆதரவில்  வாழ்ந்த அந்த சகோதரர்களுக்கு  வரன்  தேடியதில்  திருக்குன்னம்  ராமு அய்யர் பெண் ஞானம்மா  ராமசாமி பாரதியையும்,  திருத்திமலை சுப்பையர் பெண்  ஜானகி  வைத்யநாத பாரதியையும்  மணந்தார்கள்.  

ஜானகிக்கு  ஸ்ரீதனமாக ஒரு வீடும்  நிலமும்  கிடைத்தது. தஞ்சை  ஜில்லாவில்     ஒரு  சாத்தனூர்  கிராமம்  இருக்கிறது.  அங்கே  போய்  வைத்யநாத பாரதியும்  அண்ணா ராமஸ்வாமி பாரதியும்  குடியேறினார்கள்.

காவிரிக்கரையில் வடக்கே  இந்த  கிராமம்   பூலோக  கைலாசம் என  பெருமை வாய்ந்த  திருவையாறுக்கும்  சப்தஸ்தான   க்ஷேத்ரமான திருநெய்த்தானத்துக்கும் இடையே  உள்ளது.   திருநெய்த்தானத்தை  தில்லை ஸ்தானம் என்றும்  அழைப்பதுண்டு.  இனி  பொதுவிஷயங்களிலிருந்து குடும்ப விஷயங்களில் பிரவேசிப்போம்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...