மன அமைதி J K SIVAN
''என்ன சிவன் ஸார் மனசு எதிலும் ஓடமாட்டேன் என்கிறதே. கொஞ்சம்கூட மனதில் நிம்மதியே இல்லாமல் வாட்டுகிறதே. ஏதாவது வழி சொல்லுங்களேன் ?''
''என்ன சுப்ரமணிய ராவ், ஏன் எதனால் என்று யோசித்து பார்த்தீர்களா?
''எப்பவும் வீட்டிலே பிரச்னை, நண்பர்களோடு விரோதம், பண விரயம், ஆபீஸ்லே எடுத்ததுக்கெல்லாம் ஏதாவது ஒரு வாக்குவாதம், நீ பெரியவனா நான் பெரியவனா ப்ராப்ளம் எங்கே பார்த்தாலும். சுள்ளுன்னு கோபம் தான் வருது. மோர் சாதத்தோடு தட்டை வீசுறேன். டிவி ரிமோட் உடைக்கிறேன் ''
சரி, இந்தாங்கோ ஜில்லுனு ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸ் குடியுங்கோ. அஞ்சு நிமிஷம் இந்த கேசட் நாம சங்கீர்த்தனம் கேளு ங்கோ. ஒரு ஐந்து பத்து நிமிஷத்தில் நான் சாப்பிட்டுட்டு வரேன். வந்து பேசறேன்.'' வேண்டுமென்றே அவருக்கு பத்து நிமிஷம் தனிமையை கொடுத்துவிட்டு தொடர்ந்தேன்
நிறைய பிரச்னை நாமாக உண்டாக்கிக்கொள்வது தான். மற்றவர் விஷயங்களில் தலையீட்டை குறைத்துக் கொள்ளவேண்டும். நாம் செய்வது, சொல்வது தான் சரி என்ற எண்ணத்தால் இதெல்லாம் விளைகிறது. நாம் சொல்வது படி, எவரும் கேட்கவேண்டிய அவசியமே இல்லை. ரெண்டு பேர் ஒரே விஷயத்தில் ஒரேமாதிரி
நினைப்பதில்லை. எல்லா கடிகாரமும் ஒரே நேரத்தை காட்டாது. பகவான் நன்றாக இதெல்லாம் யோசித்து தான் ஒவ்வொருவரையும் ஒவ்வொருமாதிரி படைத்திருக்கிறான். உன் வேலையை நீ பாரு தான் இங்கிலீஷ்லே MIND YOUR OWN BUSINESS.
தவறு செய்யாதவன் எவனும் கிடையாது. \\மறப்போம் மன்னிப்போம்'' சிறந்த நல்ல பயன் தரும் கொள்கை. அமைதியை ஒற்றுமையை தரும் மருந்து. இதனால் உடல்நலம் கெடாது, உள்ளம் கலங்காது. நட்பு வளரும்.
''சே! என்ன உலகம் இது. என்னை இன்னும் எவருமே சரியாக புரிந்துகொள்ளவில்லையே? என் மதிப்பு பெருமை, தெரியவில்லையே!
புரிந்து கொள் தம்பி, நீ சொல்லுவது போல் உலகமே சுயநல கும்பல். காரியவாதிகள். அப்படி இருக்கும் போது எதற்கு அவர்கள் மதிப்பும் மரியாதையும் உனக்கு? அவசியமில்லையே.
''அவன் என்னைவிட எந்த விதத்தில் உசத்தி. கெட்டிக்காரன். சம்பளம் என்னை விட கூட வாங்கறானே. நான் அப்படி இல்லையே''..... இது பாதி பேரின் நிம்மதியை தின்று விடுகிறது. சின்ன சின்ன விஷயங்களில் கூட மற்றவர்களோடு நம்மை கம்பேர் COMPARE பண்ணுவதால் வரும் தீமை.
நமக்காக சுற்று சூழ்நிலை மாறாது. நாம் தான் சந்தர்ப்பத்துக்கேற்ப அனுசரித்து மாறவேண்டும்.
நாம் வந்த வழி என்ன பண்ணுவது என்று வருவதை ஏற்றுக்கொள்ள மனம் பக்குவம் அடையவேண்டும். துன்பம் இன்பம் எல்லாம் மாறி மாறித்தான் வரும். இது தான் வாழ்க்கை என்று புரிபடவேண்டும். மனதில் தைர்யம் வளரும். தன்னம்பிக்கை சிதையாது. நம்மால் முடியாத காரியங்களை நெருங்க கூடாது. ஆணவம், கர்வம், அகம்பாவம் நம்மை தூண்டி துன்பப்படவைக்கிறது. சிக்கலற்ற மனம் ஆனந்தத்தை தரும்.
தியானம், கடவுளுக்கு நன்றி கூறுதல் அடிக்கடி பண்ணவேண்டும். மன அமைதிக்கு இன்றியமையாதது.
ஒருநாளைக்கு அரைமணி நேரமாவது இதைச் செயது பாருங்கள்.. அப்போது தான் நான் சொல்வது புரியும். அற்புதமான அனுபவம். அந்த அரைமணி நேரம் மற்ற இருபத்துமூன்றரை மணி நேரத்தை சுகமாக வைப்பது புரியும். சக்தி கூடும், அன்பு எல்லோரிடத்தும் பெருகும். நட்பு வட்டம் பெரிதாகும்.
மனம் ஒரு குரங்கு. அதை கட்டுப்பாட்டில் கண்காணிப்பில் வைத்துக் கொள்ளவேண்டும். கண்டபடி திரிய விடக்கூடாது. எங்கெல்லாமோ சுற்றி ப்ராப்ளம் PROBLEM கொண்டுவரும்.
சமூக சேவை, பிறருக்கு உதவுவதில் உள்ள இன்பம் வேறெதிலும் இல்லை. எனக்கு கிருஷ்ணனை நினைக் கவே நேரம் போதவில்லை.
சிலர் எதற்கும் இப்படி செய்யலாமா, அப்படி செய்யலாமா. எது நல்லது தப்பு என்பதிலேயே நேரம் கழித்து எதையும் செய்யாமல் கடைசியில் ஏதாவதை தப்பாக செய்பவர்கள். வருந்துவார்கள். வருந்துவதில் எந்த பயனுமில்லை. அது ஒரு அனுபவம். இனி, அடுத்தமுறை அதை செய்யாமல் கவனமாக இருக்கவேண்டும்.
வருந்துவது சிந்திய பால். அள்ள முடியாது..
''என்ன ராவ் நான் மேலே சொன்னதில் ஏதாவது சிலது உங்களுக்கு மன அமைதியை தரட்டும்'' என்றேன். தலையாட்டின ராவ், நான் கொடுத்த காப்பி சாப்பிட்டு விட்டு காபியில் கொஞ்சம் சர்க்கரை இல்லை என்று மட்டும் குறை சொல்லிவிட்டு போய்விட்டார்.
No comments:
Post a Comment