Thursday, December 31, 2020

JEYADEVAR

 

 
  கிருஷ்ணா, உன்னிலிருந்து துவங்குகிறேன்...J  K  SIVAN .

நாம்  ஒருவர் மீது   அளவு கடந்த, எல்லையில்லாத  அன்பு பிரேமை வைத்து விட்டால்  நமக்கே, நமக்கு  மட்டுமே  என்ற  சொந்தம் கொண்டாடும் எண்ணம் வந்து விடும். மற்றவர்கள் அவரிடம் பேசினாலோ, அவர் மற்றவர்களிடம் சிரித்துப்  பேசினாலோ வந்தது  விபரீதம்..  இந்த நிலை ராதைக்கு அதிகமாகவே வந்தது.   கிருஷ்ணன் மீது கண்மூடித்தனமாக  அன்பு, பிரேமை, காதல். அவன் எல்லோரிடமும் சிரித்துப்பேசி  விளையாடுபவன். சிறுவனுமல்ல, வாலிபனுமல்ல. ரெண்டும்  கெட்டான் வயசு.


மதுவனத்தில், பிருந்தாவனத்தில் தினமும் கிருஷ்ணன்   ராதா மற்ற கோபியர்கள் ஒன்று  விளையாடுவார்கள்.  அருகே யமுனைக்கரையிலிருந்து குளிர்ந்த காற்று வீச, நறுமணம்  கமழ் கமழ் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் மரங்கள் செடிகொடிகள் அநேகம் அங்கு உண்டு. 
 கண்ணன் மற்ற கோபியரோடு  விளையாடுவது கண்டு மனம் பொறுக்கவில்லை. தனது அந்தரங்கத்  தோழியிடம் முறையிடுகிறாள்.

விடுவிடுவென்று  அந்த இடத்தை விட்டு  சென்று தூரத்தில் மறைவாய்  இருந்த ஒரு  பெரிய   விருக்ஷத்தின் அடியில் உட்கார்ந்து  கொண்டாள் .

sañcarad-adhara-sudha-madhura-dhvani-mukharita-mohana-vamsham |
chalita-dg-añcala-chañcala-mauli-kapola-vilola-vatasam |
rase harim iha vihita-vilasam
smarati mano mama kruta-parihasam ||dhruva-pada||1||

பார்த்தாயா தோழி,  இல்லை கேட்டாயா தோழி அந்த கண்ணன் புல்லாங்குழல்  ஊதுவதை.  அவன்   பவழ உதடுகளில்  பதிந்து அந்த மூங்கில் குழாய்   என்னமாக  மனதைத் தொடும் விதத்தில்   அற்புத கீதம்  செவிக்கினிய  விருந்தாக  தருகிறது.  அவன் அலைபாயும் விழிகள்  என்னைத்  தேடுகிறதா? தலையை எப்படி அசைக்கிறான் பார்.அதில்  செருகியிருக்கும்  மயிலிறகு எவ்வளவு அழகாக ஆடி  அவன் இசைக்கு  தாளம் போடுகிறது .

chandraka-charu-mayura-sikhandaka-mandala-valayita-kesam |
pracura-purandara-dhanur-anurañjita-medura-mudira-suvesham (rase harim iha) ||2||

திரண்ட  கருமையான  உருண்ட  சுருண்ட  கேசங்களை  உடையவன் அல்லவா இந்த கேசவன்.  அதற்கு அழகு சேர்க்க  நீல நிற  மயிலிறகுகளை எப்படித்தான் சிரத்தை சூட  கண்டுபிடித்தானோ?  வெண்மையான பால்  நிலவில்  அவற்றின் அழகு கண்ணைப்பறிக்கிறதே.
கருமேக கூட்டத்தில்  வானவில் பளிச்சிடுவது போல் இல்லை?  கருத்துக்கும்  மஞ்சளுக்கும் நல்ல ஒற்றுமை என்று யார் முதலில் சொன்னது?  அவனுடை கருநிற தேகத்தில்  மஞ்சள் பீதாம்பரம்...

vipula-pulaka-bhuja-pallava-valayita, vallava-yuvati-sahasram |
kara-charano rasi mani-gana-bhushana, kirana-vibhinna-tamishram(rase harim iha) ||4||

அவன் ஓடிவந்து  எல்லோரையும் பாசத்தோடு அணைக்கும்போது  மயிர்கூச்செறிகிறது தோழி.
நெற்றித் திலகம் சந்தன மணம்  வீசுகிறது.  காது மடலில் தொங்கும்  மகர குண்டம் கன்னத்தில் அசைந்தாடுகிறதே. உள்ளம் கொள்ளை போகுதே. இதைக்காணத்தானே   காலம் காலமாக யோகிகள், முனிவர்கள், ரிஷிகள் தவம் செய்கிறார்கள்.

sri-jayadeva-bhanitam ati sundara, mohana-madhu-ripu-rupam |
hari-charanam-smaranam prati samprati, punyavatam anurupam (rase harim iha vihita-vilasam..) ||8||

ஸ்ரீ ஜெயதேவரின் இந்த  அஷ்டபதி கீத கோவிந்த கானம் படிப்பவர்களுக்கு கேட்பவர்களுக்கு  வரப்பிரசாதம். ஹரியின்  தாமரைப்பதங்களை நினைவூட்டும். பக்தியோடு அவனோடு சேர்க்கும்.

ஸ்ரீ பாலமுரளி கிருஷ்ணாவின் இந்த  ராகமாலிகை பாடல்  என் நெஞ்சை தொட்டு சங்கீத மறி யாத என்னையும் பாட  வைத்தது.  முயற்சித்தேன் 

 
https://youtu.be/a4QykDj2Q6M   

 

thiruvembavai

 


திருவெம்பாவை  J K   SIVAN 

                     16.  மணி மணியான  மணி வாசகம் 

16. முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவணமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்.

மணி வாசகரின்  இந்த தி  16வது திருவெம்பாவை  பாடல்  எவ்வளவு பொருள் செறிவு கொண்டு  அவறது  பரந்த  திறந்த  மனத்தை   வெளிப்படுத்தும் எளிய பாடலாக  பக்திச்சுவை  மிளிர  அமைந்திருக்கிறது பாருங்கள்.

''மேகமே! முதலில் இந்தக் கடல் நீரைக் குடி. நிறைய குடி. பிறகு எழுந்து எம்மையுடையாளாகிய அம்மையினது திருமேனி போல நீலநிறத்தோடு,  ( நாகப்பட்டினத்தில்  நீலாயதாக்ஷி நினைவிலிருக்கிறாளா ?) மேலே காட்சி தா. எம்மை அடிமையாக உடையவளது சிற்றிடை போல மின்னி  ஒளிவிட்டு, மின்னலாக பளிச்சிடு . எம்பிராட்டி திருவடிமேல் அணிந்த பொன்னினால் செய்யப்பட்ட சிலம்பு போல ஒலித்து, இடி இடித்து சப்தம் செய். அவளது திருப்புருவம் போல் வானவில் விட்டு, நம்மை அடிமையாக உடையாளாகிய அவ்வம்மையினின்றும் பிரிதல் இல்லாத, எங்கள் தலைவனாகிய அண்ணாமலையாரது   அடியார்களுக்கும், பெண்களாகிய நமக்கும், அவள் திருவுளம் கொண்டு முந்திச் சுரக்கின்ற இனிய அருளே போன்று தேன் மழையாக நிறைய விடாமல் பூமி குளிர பொழிவாயா?

நாம்  எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் இந்த உலகத்தில்.  நம்  ஒருவருக்குத்தான்  ஒரு பக்கம் ஆண்டாள் பாடல் மறுபக்கம் ஆண்டவன் பாடல் . மார்கழியே நீ உண்மையிலேயே சிறந்த மாதம் தான். சந்தேகமே இல்லை.  அதற்காகவே  உன் குளிரைப்  பொறுத்துக்கொள்ளலாம்.

 அழகு தமிழை, ஆர்வமுடன், அன்பும் பக்தியும் கலந்து அளித்தவர்கள் ஆழ்வார்களும் அடியார்களும் தான். இவற்றை ஒருவன் ஆழ்ந்து ருசித்து அறிந்தால் வேறெதுவும் கற்க தேவையில்லை. பன்னிரு ஆழ்வார்களும் நான்கு சைவ சமய குரவர்களும் பாடியதை அறிந்து கொண்டாலே வாழ்வின் பெரும்பகுதி பண்பட்டுவிடும்.

மார்கழி மாதம் முழுதும் இதை முடிந்தவரை அனுபவித்தோம். திருவெம்பாவையையும்  சேர்த்தேன்  அனுபவிக்கிறோம்.  திருப்பாவை  இன்னும்  13 நாள் காட்சி தருவாள் மணிவாசகர் ஏனோ 20 திருவெம்பாவை  மட்டும் தந்தாலும்  மீதி பத்து நாளும்  நான் அவரை விடமாட்டேன்.  மார்கழி முழுதும்  நாம் அவருடன் இருப்போம்.  எல்லாமே இறைவன் அருள். எதை எப்போது செய்யவேண்டும் என்பதெல்லாம் அவன் கட்டளை அல்லவா. 

உங்களில் எத்தனைபேருக்கு  திருவையாறு  சப்தஸ்தான  உற்சவங்கள் பற்றி தெரியும்?  திருவையாருடன் சேர்த்து  ஏழு  க்ஷேத்ரங்களில்  சிவன் பார்வதி ஊர்வலமாக  திருவையாறு வருவார்கள் அந்த அற்புதம் பற்றி இனி சொல்லலாம் என்று தோன்றியது. ஒவ்வொன்றாக சொல்கிறேன். 



margazhi virundhu

 மார்கழி விருந்து     J  K   SIVAN 


                17. கொழுந்தே குலவிளக்கே

ஆண்டாளுக்கு   நம்மைப்போல்  இந்த   ''ஹாப்பி நியூ இயர்''  விஷயம்  எல்லாம் தெரியாது
ஆங்கில புத்தாண்டு நாள அன்று ஒருவரை ஒருவர் போனில் கூப்பிட்டோ, வாட்சப்பில் பட்டாசு வெடித்தோ,எல்லா நலனும் பெற்று பரம சந்தோஷத்தோடு வாழுங்கள் என்று ராத்திரி பன்னிரண்டு மணிக்கு  தூக்கத்தில் எழுப்பி சொல்லத் தெரியாது  . ஏனென்றால் ஆண்டாள் காலத்தில்  இங்கிலீஷும்  ஜனவரியும்  இல்லை.  அவள் காலத்தில்  வெள்ளைக்காரனுக்கு  இந்தியாவே தெரியாதே.

வெள்ளைக்கார   பசுக்களும் வாய் திறந்து  ''அம்மா''  என்று தமிழில் தான் கூப்பிட்டன  . இந்த வருஷம் 2021   ஆங்கில புத்தாண்டு ஜனவரி 1 மார்கழி 17ம் நாள். ஒவ்வொரு வருஷமும் முக்கால்வாசி புது காலண்டரில் 1-16   1-17 மாதிரி நம்பர்கள் தான் கலரில், கருப்பில், கொட்டையாக  பெரிதாக மறுநாள் காலையில் கிழிக்க காத்திருக்கும்.

பார்த்தீர்களா,  காலண்டர்  பற்றி  பேசிக்கொண்டே ஆயர்பாடிக்கு வந்து விட்டோமே. மிகத் துணிச்சலானவள்  இந்த பெண் ஆண்டாள். நினைத்ததை சாதிப்பவள். ஆண்டாள் மற்ற பெண்களை அழைத்துக்கொண்டு நந்தகோபன் அரண்மனைக்குள் சென்றாளல்லவா? எல்லோரும் குதூகலத்தோடு நந்தகோபனை சந்தித்தனர். இந்த துயிலெழுப்பும் பாசுரம் நமது குட்டிக் கதையில் மார்கழி 17வது நாளன்று இடம் பெறுகிறது. உள்ளே சென்ற ஆண்டாளும் மற்ற சிறுமிகளும் நேராக நந்தகோபன் அறைக்கே சென்றார்கள்.

தனது சப்ரமஞ்ச கட்டிலில் சாய்ந்திருந்த நந்தகோபன் திடீரென்று சில பெண்கள் தன்னெதிரே வந்து நிற்பது எதற்கு என்று யோசித்தவாறு முதலில் நின்ற அழகிய பெண் ஆண்டாளை பார்க்க ஆண்டாள் அவரை வணங்கி நின்றாள் :

''என்ன விஷயமாக நீங்கள் இந்த அதிகாலையில் வந்திருக்கிறீர்கள்?''

''ஐயா,   மகானுபாவரே, நந்தகோப பிரபுவே, நீங்களல்லவோ எங்கள்அனைவருக்கும் எல்லா நன்மை களும் செய்பவர், உம்மாலல்லவோ நாங்கள் குடி நீர் பெறுகிறோம், உங்கள் தயவால் அல்லவோ எங்களுக்கு உடுக்க உடை கிடைக்கிறது. உலகில் வாழத் தேவையான அனைத்தும் எங்களுக்கு வாரி அளிக்கும் பெருந்தகையே! உங்களை துயிலெழுப்ப முகமன் பாட நாங்கள் பாக்கியம் செய்தவர்கள்.'' என்றாள் ஆண்டாள்.

நந்தகோபன் அருகில் இருந்து கொண்டு அவர்களை அன்பாக வரவேற்ற யசோதையைக் கண்டதும் ஆண்டாள் சும்மா இருப்பவளா?

''எங்களின் தாய், அம்மா யசோதை! நீ அல்லவோ எங்கள் இல்லங்களின் ஒளி விளக்கு. எங்கள் பசுக்கூட்டம்,  அவற்றை கண்காணிக்கும் இந்த ஆயர் பாடி கோப கோபியர்கள் எல்லோருமே உங்கள் அன்பாலும் பாசத்தாலும் அன்றோ கட்டுண்டு இருக்கிறோம். துயில் எழுந்திரு தாயே. எங்களை ஆசிர்வதிப்பாயாக.''

நந்தகோபன் யசோதைக்கு நடுவில்  கிருஷ்ணனும் பலராமனும்  ஒரு அழகிய கட்டிலில் படுத்து இருப்பதை கண்டு ஆனந்தம் கொண்டாள் ஆண்டாள். கிருஷ்ணன் அரைத்  தூக்கத்தில் இருப்பது போல்   இருந்தான். ' யார் அவனை தூங்க விட்டார் தாலேலோ'' என்ற அழகான வரிகள் மனதில் ஓடுகிறது.

''எங்கள் உயிராய் விளங்கும் ''ஹே, கிருஷ்ணா, கடவுளுக்கெல்லாம் கடவுளே, தெய்வமே துயிலெழு. நீ உறங்கினால் உலகமே உறங்கிவிடுமே.! எங்கள் தலைவனின் சகோதரா அழகிய வீரா பலதேவா,   நீயும் உன் சகோதரனும் எழுந்திருங்கள்.எங்களை ஆசிர்வதியுங்கள். எங்கள் நோன்பு சிறக்க உங்கள் அருள் வேண்டும் ''

இவ்வாறு வேண்டி ஆண்டாளும் சிறுமிகளும் பல துதிப்பாடல்களைப் பாடினர். (அந்த பாடல்களின் பெயர்கள் எனக்கு மறந்து போய் விட்டது!!) இந்த நந்தகோபன் குமரன் கதையில் அந்த ஆயர்பாடிப் பெண்கள் போற்றிப்  பாடும் அந்த நாராயணனின் கலியுக தோற்றமாகிய திருப்பதி வெங்கடேசனுக்கு இந்த நன்னாளில் ஸஹஸ்ர கலசாபிஷேகம் விமரிசையாக நடைபெறும். ''கலியுக தெய்வமே, கண்கண்ட வரதா'' என நாமும் அவனை  இருந்த இடத்திலிருந்தே பணிவோம்.

ஆண்டாள் கண்ணனைக்   கண்ட ஆனந்தத்தில் கடல் மடை யென பாசுரம் ஒன்று பாடுகிறாள். இல்லை, இல்லை ,ஆண்டாள் உருவில் வில்லிப்புத்தூரில் இருந்த மற்றொரு இளம்பெண் கோதை ஆண்டாளாகி இதைப் புனைகிறாள். ஏட்டில் எழுத்தாணி விரைகிறது. வார்த்தைகள் மனசிலி ருந்து பொங்கி மதியை  நிரப்பி கண் வழியே கைக்குத் தாவி ஏட்டில் படைக்கப்பட்டது. பனை ஓலை ஏடு நிறைகிறது.

காலம் காலமாக அந்தக் காவியம் திருப்பாவையாக நமக்கு மகிழ்ச்சியூட்டி என்றும் நம் மனத்திலும் நிற்கச் செய்த ஆண்டாளே, கோதையே, சிறிய உருவில் வந்த பெரிய  தாயே,  உன்னை சாஷ்டாங்கமாக வணங்குகிறோம்.

வில்லிப்புத்தூர் வட பத்ர சாயீ கோவிலில் பட்டாச்சார்யர் தான் அந்த விடிகாலையில் மற்ற பக்தர்களுக்கு விஷ்ணுசித்தர் வீட்டிலிருந்து எழுதிக்கொண்டு வந்த கோதையின் அன்றைய பாசுரத்தை படித்துக்  காட்டிக் கொண்டிருந்தார்:  அவரால்  ஆண்டாள்  போல்  பாடமுடியாதே.  அவரைச்சுற்றி உள்ளூர் வைஷ்ணவர்கள் ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்தார்கள். இது தான் கோதை எழுதிய அந்த பாசுரம்.

''அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல குலவிளக்கே
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊட அறுத்து ஓங்கி உளகு அளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம் பொற் கழலடிச் செல்வா பலதே உம்பியும் நீயுன்
உறங்கேலோர் எம்பாவாய்''

அன்று நந்தவன ஆஸ்ரமத்தில் திண்ணையில் தூணில் சாய்ந்தவாறு விஷ்ணுசித்தர் இதுவரை இருபது தடவையாவது மேற்கண்ட பாசுரத்தை வாயாரச் சொல்லி மகிழ்ந்திருப்பார்.

இன்னும் அவருக்கு அந்த ஓலைச்சுவடியில் படித்த பாசுரத்தை மனதிலிருந்து நகர்த்த அவர் மனம் இடம் கொடுக்க வில்லை. எதிரே மலர்களைத் தொடுத்துக் கொண்டே அவரைப்பார்த்து பாசத் தோடு கோதை அமர்ந்திருக்கிறாள்.

'கோதையின் பாமாலையில் மகிழ்ந்த அரங்கா, உனக்கு இரட்டிப்பு  சந்தோஷம் இன்று, கோதை படைத்த பாமாலையோடு கோதை தொடுத்த பூமாலையும் இந்தா சூடிக்கொள்.''


newyear

 

        இன்னொரு  நம்பர்  2021.....  .J K SIVAN


'' அட,  திரும்பி பார்க்கறதுக்குள்ளே இன்னொரு வருஷமா?   இந்த வருஷம்  திரும்பி பார்க்கிறது கூட  வீட்டுக்குள்ளேயே தான்...    முக்கா வருஷத்துக்கு மேலே ஆயிட்டுது  வெளி உலகம் பார்த்து.. இன்னும் தான் இந்த  பெயில் இல்லாத ஜெயில்..  எங்கே  வெளியே போறது. கை  கொடுக்கிறது  எல்லாம்.  இனிமே  என் கை  யாருக்கும் கிடைக்காது...

.. நாளையிலிருந்து  ஒரு  புது வருஷம்........ அப்படின்னா  என்ன அர்த்தம்?   ஒரு நம்பர் கூட  2020+1  =  2021  அவ்வளவு தானே. ஒரு இன்கிரிமெண்ட் increment   எல்லோருக்கும் இலவசம்.  free . ஒரு  வயசு கூட என்று சொல்லிக்   கொள்ள வேண்டியது தான்..  இப்படி  புதுசுன்னு சொல்லிக்கிறதாலே  இனிமே கீழே சொன்னதெல்லாம்  நடக்கபோகிறதா?

எந்த கவர்மெண்ட்  ஆபிஸ்லேயும், ரிஜிஸ்டர் ஆபீஸ்லேயும்   காசு வாங்காம  காரியம் நடக்குமா? 
கொடுத்த காசுக்கெல்லாம்  ரஸீதா  கொடுக்கப்போகிறார்கள்?
ஓட்டுக்கு  காசு  உண்டா? கொடுக்கறது மட்டும் தான் தப்பா, வாங்கறது இல்லையா?
இனிமேல்  தங்கத்திலேருந்து தக்காளி  வரை  விலை  பாதிக்குமேல்  குறையப்போறதா?
அக்டொபர்  நவம்பர்லே  பெஞ்ச மழை  இனிமேல் மாசாமாசம்  பெய்யுமா?
ட்ரம்ப் ஸ்டம்ப்  ஆகலே, அவரு தான்  தல  ன்னு  அமேரிக்கா சொல்லுமா?
சுப்பிரமணியனை பிடிச்சு  செபாஸ்டியனா  மாத்தப்போறதில்லையா?
பேப்பர்லே  கொலை கொள்ளை, கற்பழிப்பு, லஞ்சம்  கோர்ட் கேஸ் எங்கேயும் நடக்காதா? அதனாலே   செயதிகள் சுட சுட  எதுவுமே வராதா, விநாயகர் அகவல்,  கந்த ஷஷ்டி கவசம் படங்களோடு  மட்டும்  தானா?
மாநில மத்திய  சட்ட சபைகளில்  முழு நேரமும் சண்டையே இல்லாமல் எல்லோரும் சமாதானமாக மரியாதையோடுஒத்துமையா  நாட்டுக்கு  சேவை செயது நல்ல பேர் எடுக்க போறாங்களோ?  அன்பா   பேசப்போகிறார்களா?
எல்லோரும் எதற்காக, ஏன்,   நம்மை  ஆளவேண்டும்  என்று  இப்படி  துடித்துக்கொண்டு   போட்டி போடுகிறார்கள்.  ஒருவேளை போட்டி போட்டுக்கொண்டு நமக்கு நல்லது செய்ய வா?  எல்லாருக்குமே  பொதுநல சேவை, உபகாரம் மட்டும் தான் குறிக்கோளா?  சுயநலமே இல்லாத இத்தனை பேரா நமது நாட்டில்???.  பரவாயில்லையே. இந்த வருஷம்  நிச்சயம் புது வருஷம் தான்.  
ஊழல் என்பதே யாரும்  இனிமேல்  செய்யப்போவதில்லையா?  அந்த வார்த்தையே  வழக்கில் இருக்காதோ? நமக்கு  ஊழலில் வழக்கில் மாட்டிக்கொண்டவர்களைத் தானே தெரியும்?
கோவில்கள் இனிமேல்  திறக்குமா? திறந்தால்  ஸ்பெஷல் டிக்கெட்டுகள் இருக்காதாமா ?
அக்ஷய திதி அன்று எல்லோரும் தகரத்தில் நகை செயது போட்டுக் கொள்வார்களோ?
எந்த காய்கறியும் கிலோ 20-30 ரூபாயாக குறையப்போகிறதா?
போர் வெல் எனும் குழாய் கிணறுகள் இனிமேல் மூடியே  இருந்து  குழந்தைகளை விழுங்காதா?
பெண்கள் தனியாக எங்கும் எப்போதும்  போய் வர முடியுமோ?


ஏன்  இப்படி என்னவெல்லாமோ கேட்க  ஏன்  தோணுகிறது?  
எதிர்பார்ப்பா? இதுவரை  இத்தனை வருஷங்களில்  எதிர்பார்த்தது  என்ன நடந்தது?.  எதிர்பாராதது  சினிமா தான் நன்றாக ஓடியது.
அப்புறம் என்ன புது வருஷம்.?  
என்ன புதுசா கிழிக்கப்போறோம்?  
வழக்கமா கிழிக்கிற காலண்டர் காகிதம் இனிமேல்  புது அட்டையில் கிழிக்கப்போறோம்.

அடப்பாவி,  என் சின்ன வயசிலே  எத்தனை வருஷங்கள்  வீணாக்கி இருக்கிறேன்? புது  வருஷம்  வரப்போகிறது  என்று  அக்டோபர்  நவம்பரில் இருந்தே   யார் யாரையோ அடிக்கடி தொந்தரவு பண்ணி கடை கடை யாக ஏறி காலண்டர் கேட்பேன்,  கட்டம்போட்டது, பன்னிரெண்டு காதிகம், ஆறு காகிதம்,  ஒரே காகிதம்,  சின்னது பெரிசு, அட்டை,   எது கொடுத்தாலும்  வேண்டாம் என்று சொன்னதேயில்லை. அதெல்லாம் என்ன ஆயிற்று?
எழுதாத போதே டயரி  பிச்சை எடுத்திருக்கிறேன்.   அதைக்  கொடுக்காமல் எத்தனைபேர் எனக்கு டிமிக்கி கொடுத்தார்கள். பிகு பண்ணி  அலைய விட்டார்கள்.  நான்  மட்டுமா  என்னைப்போல் பலர்......அந்த முகமெல்லாம்   இப்போது  என்னை விட்டு  எங்கே  போய்விட்டது?. 

செய்ததையே திரும்ப செய்யப்போகிறோம். இது பலகாலமாக நடந்துகொண்டு தான் இருக்கிறது. இதில் எதற்கு புது வருஷ  பாசாங்கு?

இதில் வேடிக்கை என்னவென்றால், ஏதோ நாம் கை கொடுத்து குலுக்கி ''ஹாப்பி நியூ இயர்'' சொன்னால் மேலே சொன்ன தெல்லாம் நடந்துவிட்டது போல ஓரு கனவு சந்தோஷம்.!

அடே , வெள்ளைக்காரா? போகும்போது உன் பாஷை, பழக்கம் வழக்கம் இந்த குருட்டு சப்ரதாயம் எல்லாம் ஏன் எடுத்துக்கொண்டு போக மறந்துவிட்டாய்? ஒரு வேளை இது எல்லாம்   பகுத்தறிவு இல்லையோ?  

ஐயா, தெரியாதைய்யா, புது வருஷம் என்றால் ஏதோ தீர்மானம் செய்து கொள்ளவேண்டும் என்று சிலர் நினைத்தால், சிலர் , என்ன பலரும் இதை கொஞ்சம் நினைக்கலாம். வித்தியாசமாக இருக்குமே.

''மனசு பகவானின் இடம். அதைக் குப்பைத் தொட்டியாக்கி இருக்கிறோம். அதைச் சுத்தப்படுத்தி மெழுகி, பகவானை அமர வைத்து, நாமும் அமைதியாக அமர்ந்து விட வேண்டும். தினமும் ஒரு ஐந்து நிமிடங் களாவது தியானம் செய்யவேண்டும். லோகமே மூழ்கிப்போனாலும் நிற்காமல் நடக்க வேண்டிய காரியம் இது. ஏனெனில் லோகம் மூழ்கும்போது நமக்குக் கை கொடுப்பது இதுதான்.
பணத்தைக் கொண்டு பகவானுக் காகவும் ஏழைகளுக்காகவும் பலவிதங்களில் தர்மம்செய்து புண்ணியம் சேர்க்க வேண்டும்
.பாபத்துக்கு இரண்டு சக்திகள்.
ஒன்று இன்று, இப்போது, நம்மைத் தவறில் ஈடுபடுத்துவது.
இரண்டாவது, நாளைக்கும் நாம் இதே தவற்றைச் திரும்பச் செய்ய தூண்டுவது. 
இதுதான் பழக்க வாசனை என்பது. இந்த வாசனையை மங்க வைத்து, புண்ணியங் களைச் செய்து  புண்ணிய வாசனை யை ஏற்றவேண்டும். வாசனை தான் மீண்டும் மீண்டும் பாவத்தில் நம்மை இழுக்கிறது. அதற்காக பயம் வேண்டாம். நம்மைப் போல் இருந்தவர்கள் நம்மை விடவே  மோசமாணவர்கள்  கூட பக்தர்களாகவும் ,ஞானிகளாகவும் ஆகியிருக்கிறார்கள்.பாபிகளை ரட்சிக்கா விட்டால்   பகவானுக்குத்தான் என்ன பெருமை? .
நாம் பாவியாக இருப்பதாலே தான் அவனுக்குப் பதித பாவனன் என்ற பெயர். அவனுக்கு அந்த பெருமையை நாம் தான் கொடுக்கிறோம்.
“என்னை மட்டும் சரணடைந்துவிடு. நான் உன்னை எல்லா பாபங்களிலிருந்தும் விடுவிக்கிறேன். '' ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச''. பயப்படாதே” என்று தீர்மானமாக அபய வாக்குத் தருகிறார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா.
நாம் தைரியமாக இருப்போம். எத்தனை சுற்றுச் சுற்றினாலும் அத்தனையையும் திருப்பிச் சுற்றினால் தான் கட்டு கழளும். பாப வாசனை அவ்வளவும் தீர அத்தனை அளவு புண்ணிய வாசனை உண்டாக வேண்டும். அப்படிச் செய்தால் சுற்று முடிச்சு அவிழ்ந்து விடும். 
பொறுமை
யாக பகவானை நம்பி நம்தர்மத்தைச் செய்தால் நிச்சயம் கை கொடுப்பான்.

நாம்  இனிமேல்  யாருக்கும்  கை  கொடுக்கப்போவதில்லை.  வணக்கம், நமஸ்காரம், நமஸ்தே தான்.  மூன்றடி தள்ளி நின்று.....  முகத்தில் இனி மாஸ்க்  ஒரு  ஆபரணமாகப்போகிறது நிதர்சனம். 
கூடுமானவரை  கூட்டங்களை தவிர்ப்போம், வெளியே  சாப்பிடுவதை குறைப்போம்,  வெளியிலிருந்து வந்தால் குளிப்போம், கைகால்களை நன்றாக கழுவுவோம்.  வெந்நீர் குடிப்போம்.

கொரோனா  ஒரு சில நல்ல மறந்து போன  பழக்கங்களையே  திரும்ப கொடுத்ததற்கு நன்றி. அதற்காக அது மீண்டும் வரவேண்டாம். வரவேற்க யாரும்  தயாரில்லை.



sakkarai ammal

 



சக்கரை அம்மாள்   J K  SIVAN 

           3.  ப்ரம்மஞானி  ஸ்வாமினி 

சக்கரை அம்மாளுக்கு  அப்பா அம்மா வைத்த பெயர்  அனந்தாம்பாள் . வந்தவாசி போளூர் பக்கம்  இருக்கும்  தேவிகாபுரம் பிறந்த  ஊர். அப்பா  உள்ளூர்  பெரிய நாயகி அம்மன் கோவில்  அர்ச்சகர்.   சின்ன வயதிலேயே  அம்மா போய்ட்டாள்.  சித்தியின்  வளர்ப்பு. .அனந்தம்பாளை  எப்போதும்  பெரியநாயகி கோவிலில் பார்க்கலாம்.  கற்பகிரஹத்தையே  உற்றுப் பார்த்து க்

கொண்டு  நேரம் போவது தெரியாமலே  உட்கார்ந்து இருப்பாள். 

அப்பா அர்ச்சகராக  இருந்த  பெரியநாயகி கோவில்  வீட்டுக்கு பக்கத்திலேயே இருந்தது.  ஆகவே   கேட்கவேண்டுமா?. எப்போது வேண்டுமானாலும்  ஓடுவாள்.   அம்பாளையே  உற்றுபார்ப்பது ஒரு பழக்கமாகி விட்டது.  அப்பா  சொல்லிக்கொடுத்த   ஸ்லோகங்களை சொல்லிக்கொண்டே இருப்பாள்.   பால்ய  விவாகம். 8 வயதிலேயே நடந்து 20 வயதில் கணவனை  இழந்த  இளம் விதவையாகி விட்டாள் .  கோமளீஸ்வரன்பேட்டையில் கணவன் வீட்டில்  வாசம்.  தலை மொட்டையடிக்கப்பட்டு  காவிஉடை .கோமளீஸ்வரன் கோவிலே கதி.  இனி அவள் தேவையில்லை என்று  கணவன் வீட்டார்  அவளை தேவிகாபுரத்துக்கு பெற்றோர் வீட்டுக்கு  அனுப்பி விட்டார்கள்.   

 அருகே  ஒரு சின்ன  மலை.  நக்ஷத்ர மலை என்று பெயர். அதில் ஒரு  ஸ்வாமினி எப்போதும் சக்தி உபாசகியாக வாழ்ந்து வந்தாள் .  நக்ஷத்ர குணாம்பாள் என்பார்கள்.  நெருப்போடு பஞ்சு சேர்ந்து விட்டது.    குணாம்பாள் சிஷ்யையாகி, அம்பாள் உபாசனை பெற்றுக்கொண்டாள் .   அனந்தாம்பாளுக்கு குணாம்பாளிடம் தனி ஈடுபாடு ஏற்பட்டது, அதே போல் குணாம்பாளுக்கும் அனந்தாம்பாளிடம் தனி ஈடுபாடு ஏற்பட்டது. அவளைத் தன்   குழந்தையைப் போல் நடத்தினாள். தான் மீண்டும் சென்னைக்கு செல்ல வேண்டி வந்தபோது, இனி நான் எப்படி உங்களை நினைத்த போதெல்லாம் சந்திக்க முடியும்என்று ஏக்கத்துடன் அனந்தாம்பாள்  அழுதுகொண்டே  கூறினாள்  

''நீ  கவலையே  பட  வேண்டாம் பெண்ணே,   நீ எப்போதெல்லாம்  விரும்புகிறாயோ அப்போதெல் லாம்  வந்து  என்னைக் காணலாம், நீ  வேறு   யாரைக் காண விரும்பினாலும்  பறந்து சென்று  காணலாம்''

அஷ்டமா சித்திகளில்  ஒன்றான 'லஹி மா' வால்   உடலை  லகுவாக்கி கொண்டு வானில் பறவை போல் பறக்க முடியும்.    அதை   அனந்தாம்பாளுக்கு  குரு  குணாம்பாள்  அருளினாள் .

குணாம்பாளுக்கு  தனது இறுதி   உறுதியாகிவிட்டது  என  தெரிந்ததும்  சமாதி அடையும் முன் அனந்தாம்பாளின்  பக்தியை மெச்சி தன் ஆன்மீக ஆற்றல் முழுவதையும் அவளுக்கு செலுத்திவிட்ட பின்பே   சமாதி அடைந்தாள். 

 பின்னொரு காலத்தில்  அனந்தாம்பாள்   ''நான் தான் நட்சத்திர குணாம்பாள்''  என்று வெளிப்ப டுத்தி இருக்கிறார்.    ஸ்ரீ சக்ர  உபாசனையும்  உபதேசம் செய்தாள்.

அப்போது  போளூர் பக்கம்  விடோபா ஸ்வாமிகள் வாழ்ந்து வந்தார். இவரைப் பற்றி என்னுடைய  ''ஒரு அற்புத  ஞானி'' புத்தகத்தில் விவவரமாக எழுதியிருக்கிறேன்.  அவரை தரிசித்து  ஆசி பெற்றாள் அனந்தாம்பாள்.   அவளுக்கு  கிடைத்த  இன்னொரு பாக்யம்  ஜீவன்முக்தர்  அடிமுடி சித்தரின் சந்திப்பு.   அவரை உபசரித்து  ஆசி பெற்றவர்.  இந்த  அடிமுடி சித்தர்  திருவண்ணா மலையில் நாம்  வழிபடும்  கிரிவலப்பாதை அமைத்தவர். அவரைப்பற்றி ஆச்சர்யமான  விஷயங்கள் இருக்கிறது. ஒரு தனிக்கட்டுரை எழுதி இருக்கிறேன்..

அனந்தாம்பாள் பறவை போல் வானில் பறந்து செல்வதைப் பலரும் பார்த்துள்ளனர். அவர்களுள் தமிழறிஞரும் தேசபக்தருமான தமிழ்த்தென்றல் திரு. வி. கலியாணசுந்தரனார் 'உள்ளொளி' என்ற தலைப்பில் தமது நூல் ஒன்றில்  எழுதியது:

''சென்னை கோமளீச்சுவரன் பேட்டையில் ஒரு மாது இருந்தார்கள். அவர் காலம் சென்ற மருத்துவர் நஞ்சுண்டராவின் குரு என்று உலகம் சொல்லும். அவ்வம்மையார் பறவையைப் போல் வானத்தில் பறப்பார். ஒருமுறை யான் வசித்த கல்லூரியின் (இராயப்பேட்டை வெஸ்லி கல்லூரி) மாடியில் பறந்து வந்து நின்றார். மானுடம் பறக்கின்றது என்றால் விந்தையல்லவா? அக்காலத்தில் சென்னையில் வசித்த விஞ்ஞானிகள் பலர் சூழ்ந்து கொண்டு அம்மையார் நிலையை ஆராய்ந்தனர். அப்போது சென்னை மியூசியத் தலைவராக இருந்த ஓர் ஐரோப்பியரால் (எட்கர் தர்சுடன்) பறவையார் நிலை பெரிதும் ஆராயப்பட்டது. அம்மையார் பறவை இனத்தில் சேர்ந்தவர் என்றும், அவரிடம பறவைக்குரிய கருவி காரண அமைப்புகள் சில உள்ளன என்றும், கூர்தல் அறப்படி (evolution) அத்தகைய பிறவி இயற்கையில் அமைதல் கூடும் என்று அவரால் விளக்கப்பட்டது.

Dr  Edgar Thurston:  after examining the facts connected with the flying ability of  Sakkarai Ammal  gave his opinion as follows: 
''... some humans rarely possess inbuilt mechanism of wings and Sri Sakkarai Amma was one bestowed with that kind of mechanism!.....

அவர் விளக்கம் மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. நான் தேசபக்தன் ஆசிரியராக இருந்தபோது நஞ்சுண்ட ராவுடன் நெருங்கிப் பழகுதல் நேர்ந்தது. அமரர் ராவ் அவர்கள், அம்மா சித்தர் இனத்தைச் சேர்ந்தவர் என்று சொன்னார். 

சமீபத்தில்  வாட்ஸாப்பில்   சிலர்  ஒரு வீடியோக்களை வெளியிட்டிருந்தார்கள்.  யாரோ  கருப்பாக  ஒரு  உருவம்  திருவண்ணாமலையில் ஒரு  அமர்ந்திருக்கிறது...  திடீரென்று அந்த உருவம் பறந்து சென்று மறைகிறது.....  இன்னொரு  வீடியோவில் ஒரு துறவி  அமர்ந்து, அசையாமல் தியானம் செய்த்துக்கொண்டிருக்கிறார்.... அடுத்த சில வினாடிகளில் பறந்து மறைகிறார்... அவர் இருந்த சுவடே தெரியவில்லை....  நமக்கு தெரியாததால், நாம்  அறியாததால் சில உண்மைகளை அப்பட்டமான பொய்,  ஜிகினா வித்தை என்று சொல்லிவிட முடியாது.

போளூரிலிருந்து கோமளீச்சுவரன் பேட்டைக்கு திரும்பியதும் அனந்தாம்பாள் தன் வீட்டு மொட்டை மாடித் திண்ணையில்   விடாது முன்னினும் அதிகமாக  தியானத்தில்  ஈடுபட்டாள் . தன் உலகக் கடமைகளை எல்லாம் மறந்தாள், நீரும் உண்டியும் கொள்வது கூட  எப்போவாவது தான்.  ''பாவம் இளம் வயதிலேயே  கணவனை இழந்ததால்  பிச்சியாகி விட்டாள்'' என்றனர் . மாடியில் உள்ள சிறிய அறையில் அவளுக்காக சிறிது நீரும் சோறும் வைத்துவிடுவார்கள் அவ்வளவே.

பத்தாண்டுகள் இடைவிடாத ஸ்ரீ சக்ர வழிபாட்டினால் நட்சத்திர குணாம்பாள் சொல்லி இருந்தபடி ஆனந்தம் எய்தும் அந்த நாள் வந்தது. திடீரென்று, அவள் கண்கள் கூசும்படி ஒள்ளிய ஒளி வட்டத்தின் கதிர்களால் அனந்தாம்பாள் சூழப்பட்டாள். தானே எரிந்து ஒளிர்வதைப் போன்ற உணர்வை இது  அவளுக்கு தந்தது.  பேரின்பப் பெருவெளியில் மிதந்து  சதா  களிப்பான  நிலையில் காணப்பட்டாள். மகிழ்ச்சியில் வாய்விட்டு கட்டுக்கடங்காமல்   ''ஹா ஹா''  எனசிரிப்பாள்.   சிரிப்பது  அவளது  பண்பாகிப் போனது. இதைப் பார்க்கும் மடத்து மக்களும் உறவினரும் அவளை ஒரு பிச்சி என்று  கருதினர். இதன் பின் பல சித்திகளை அனந்தாம்பாள் அடைந்தாள். இனி அவள்  அனந்தாம்பாள் இல்லை.  ஸ்ரீ சக்ர  உபாசகி ஞானி ஸ்வாமினி சக்கரத்தம்மாள், ஆனால்  பின்னர் காலப்போக்கில்  சக்கரை அம்மாள் ஆனவள். 

போளூரில் இருந்து கோமளீஸ்வரன் பேட்டைக்கு திரும்பிவரும் போது அனந்தாம்பாளின் உடன்பிறப்பான அருணாசலமும் உடன்வந்தார். 

கோமளீஸ்வரன் பேட்டை  எண்ணற்ற  மோட்டார் வாகன உதிரி பொருள்கள்  விற்கும்  காயலாங்கடை என்ற பெயரோடு தெருவின் இரு மருங்கும்  சிறு  சிறு  முஸ்லீம் வியாபாரிகளின் கடைகளுக்கு இடையே  மறைந்திருக்கும் பழம் பெரும் புனித ஸ்தலம்.  நான் அங்கே  சில வருஷங்கள் வாழ்ந்த பாக்கியசாலி. தினமும் சந்த்ரபானு தெரு மூக்கில்  ராமர்  கோவில் இருந்தது  அதற்கும்  கோமளீஸ்வரன் ஆலயத்துக்கும் செல்வேன்.  என் தெரு அருகே   மங்களூர்க்கார  (ஒருவேளை  நஞ்சுண்டராவ்  வம்சாவழியினரோ?)  பய்  PAI   என்று ஒருவர்  நடத்திய  டிஸ்பென்சரிக்கு சென்று இருக்கிறேன்.  அப்போதுஎனக்கு   சக்கரை அம்மாளை பற்றி தெரியாது. 

அருணாச்சலம் என்ற  சக்கரை அம்மாள் உறவினர் தக்க வாரிசு இல்லாமையால் அவரே மடத்திற்கு தலைவராகி ஆண்டுகள் உருண்டோடின. அருணாசலத்திற்கு உடல்நலம் குன்றியதால் மருத்துவர் திரு M.C. நஞ்சுண்டராவ் அவருக்கு மருத்துவம் பார்க்க மடத்திற்கு வந்து போய்க் கொண்டிருந்தார். ஒருமுறை அவர் மருத்துவம் பார்க்க வந்திருந்த போது 

''மாடியில் இருந்து  தொடர்ந்து  யாரோ  உரக்க  சிரிக்கிறார்களே  யார்?''  என்கிறார்.
''பித்துபிடித்த பெண் ஒருத்தி  மாடியில் இருக்கிறாள். வேளை கெட்ட வேளையில்
 அர்த்தமில்லாமல்  கடுஒலியுடன் சிரிக்கிறாள்  என்ன பண்ணுவது?'' என்று  அந்த உறவினர் சொன்னார்.

டாக்டர்  நஞ்சுண்டராவ் ஒரு தேசபக்தர் மட்டுமல்ல, ஆன்மீக  ஈடுபாடு கொண்டவர், சமூக னால பிரியர்.  ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவம் செய்பவர். சக்கரை அம்மாள் மேல்  பரிதாபமும், பரிவும் கொண்டு   சக்கரை அம்மாளை  கவனிக்க தொடங்கினார்.  

 ஒரு சமயம் ஒருபோது ஆனந்தாம்பாள் கோமளீச்சுவரன் கோவில் வாயிலில் தரையில் அமர்ந்து கொண்டு வருவோரை எல்லாம் பார்த்து  சக்கரை அம்மாள்   சிரித்து கொண்டிருந்தார்.  டாக்டர் ராவ்  அவரை அணுகி மெல்லிய குரலில் 

''ஏன்? இப்படி சிரித்துக் கொண்டே இருக்கிறீர்கள்?''என கேட்டார். 

சிரிப்பை உடனே நிறுத்திய ஆனந்தாம்பாள், 'மகனே! ஆன்மாவிற்கு எந்நேரமும் ஆனந்தமாய் இருப்பதுவே அதன் இயல்பு. இன்பமும் துன்பமும் பரு உடலையும் நுண் உடலையும் பாதிக்கு மேயன்றி ஆன்மாவைப் பாதிப்பதில்லை. நீ உடம்பு அல்ல, நீ உடலுக்குள் இருக்கின்றாய். இதுவே உண்மை. உடலுக்கு எது நடந்தாலும் அது தற்காலிகமானதே. அதுவே ஆன்மா என்று உன்னை உன் உடலோடு தொடர்பு படுத்திக் கொள்ளாதே. ஆன்மா எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருக்கும். இதை உணராமல் இன்ப துன்பத்தில் உழன்று சலிப்புறும் மனிதர்களைப் பார்த்துத் தான் சிரிக்கின்றேன்' என்றார்.

இவர்  பைத்தியம் இல்லை. எழுத்தறிவில்லாவிட்டாலும்  அவர்   ப்ரம்ம  ஞானி  என்பதை நஞ்சுண்ட ராவ் புரிந்துகொண்டார்.  அம்மாவுடன் பேசியதில் அவர்  உயர்ந்த நிலை  ஸ்ரீ சக்ர உபாசனை பெற்று பக்குவம் அடைந்தவர் என்பதையும் தெரிந்து கொண்டார்.   வெகு சீக்கிரம் டாக்டர்  சக்கரை அம்மா . சக்கரம்மா என்று  எல்லோரும் அவளை   அழைத்தார்கள்.  டாக்டரும் அப்படியே  கூப்பிடுவார்.  மிகப் பிரபலமான  டாக்டர் நஞ்சுண்டராவ்   சக்கரம்மா  என்று   அழைக்க ஆரம்பித்ததும் அனைவருக்கும்  அவள்  நாலாவட்டத்தில்   சக்கரை அம்மாள் ஆனாள் .   எண்ணற்றோர்  அவள் பக்தர்களானார்கள்.   சுவாமி விவேகானந்தர், சேஷாத்ரி  சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், அடிமுடிப் பரதேசி, விட்டோபா ஆகியோரை சக்கரை அம்மா கண்டு வணங்கியுள்ளார்.

டாக்டர்  நஞ்சுண்ட ராவ் சக்ர அம்மாவை காசி உள்ளிட்ட பல திருத்தலங்களுக்கு தம்மோடு அழைத்துச் சென்றுள்ளார். திருவண்ணாமலைக்கு  அழைத்துக் கொண்டு போன போது கந்தாசிரமத்தில் சக்கரை அம்மா ரமணரை சந்தித்து வணங்கினார். சக்கரை அம்மாவை பற்றி பின்பு உயர்வாக தமது  பக்தர்களிடம்  பகவான்  ரமணர் பேசியதை திரு. ஏ. தேவராஜ
 முதலியார் எனும்  பக்தர் ''அனுதினமும் ரமணருடன்''  என்ற தனது  நூலில் சில சித்திகளைப் பெற்ற சக்கரை அம்மா டாக்டர்  நஞ்சுண்டராவுடன் ரமணரை விருபாக்ஷி  குகையில் சந்தித்ததை   எழுதியுள்ளார்.

சக்கரை அம்மா 1901ல் திருவான்மீயூர் மருந்தீசுவரர் கோவிலில் சிவனை வணங்கிவிட்டு திரிபுரசுந்தரி சன்னதிக்கு வந்தார்.  அம்பாளிடம்  பக்தர்களை  கை  காட்டி  ''அம்மா என்னுடைய இந்த குழந்தைகளை இனிமேல்   உன்னிடம் ஒப்படைக்கிறேன் அவர்களுக்கு நீ முக்தி கொடுக்க வேண்டும்'' என்று வேண்டினார். டாக்டரோடு  திரும்பி  வரும் வழியில்   ஒரு  சவுக்கு மரத்தோப்பு கண்ணில் பட்டது.  ''நீ  இதை வாங்கு.  இந்த தோப்பில்  என்னை அடக்கம் செய். விரைவில் இங்கே ஒரு சமாதி எழுப்பு.  இங்கிருந்துகொண்டே  எல்லோரையும் நான்  காப்பேன்'' 

அதற்கு பிறகு  பத்தே நாள்  1901 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று மாலை 3.30 மணிக்கு தமது 47 ஆம் வயதில்  கோமளீச்சுவரன் பேட்டை மடத்தில் சக்கரை அம்மா பூவுடலை நீத்தார்.   அவரது உடல் அங்கிருந்து  டாக்டர்  நஞ்சுண்டரா வினால்  திருவான்மியூருக்கு கொண்டு வரப்பட்டு அவர் சுட்டிக் காட்டிய   நஞ்சுண்டராவால் விலைக்கு  வாங்கப்பட்ட  சவுக்கு தோப்பில்   நல்லடக்கம்  செய்யப்பட்டு சமாதி உருவாகியது.   அதற்கு மேல் ஒரு சிறிய  கோவில்.  2001 ல் மீண்டும் கோவில் புனருத்தாரணம்  2002 கும்பாபிஷேகம் நடந்து  எண்ணற்ற பக்தர்கள்  ஸ்ரீ  சக்ரம்மாவை தரிசித்து   அருள் பெறுகிறார்கள்.  

டாக்டர்  நஞ்சுண்டராவ்  தமது டயரியில்  சக்ரம்மாவின்  அபூர்வ  ஞானம், சக்தி, சித்திகள் மஹிமை பற்றி எல்லாம்  எழுதி உள்ளார்.  டாக்டர் ராவ்,  விவேகானந்தர், மஹாகவி பாரதியார், அன்னி  பெசன்ட், ராஜாஜி,  வவேசு ஐயர் ,  சி.பி. இராமசாமி ஐயர் ஆகியோரின் நண்பர். அவர் இறந்த பின் சக்ர  அம்மா சமாதிக்கு அருகே அவரது  சமாதியும்  வைத்தார்கள்.

காஞ்சி மஹா பெரியவா 1948 ஆம் ஆண்டு  ஜனவரியில்  ஐந்து நாள்கள் சக்கரை அம்மா சமாதியில் உட்கார்ந்து  த்யானம் செய்திருக்கிறார்.    டாக்டர்  நஞ்சுண்டராவிடம்  மஹாபெரியவா  ஒருமுறை '' சக்ரத்தம்மா சமாதி ஆலயம் ஒரு மகத்தான சக்தி பீடம். நீங்களும் எல்லோரும் அங்கே தவறாமல் பூஜைகள் செய்யவேண்டும்.'' என்று கூறி இருக்கிறார்.

சக்ரத்தம்மா  சமாதி சென்னை திருவான்மியூரில் கலாக்ஷேத்ரா ரோடு,   no  75,  காமராஜ் சாலை ர் சாலை கூடும் இடத்தில் உள்ளது. காலை 6 - 10 மணி வரையும் மாலை 4 - 8 மணி வரையும் திறந்திருக்கும்.





Wednesday, December 30, 2020

MARGAZHI VIRUNDHU

 மார்கழி விருந்து   J K   SIVAN 


                         
                                        16.  மணிக் கதவம் தாள் திறவாய்


வெயில் எவ்வளவு வேண்டுமானாலும் தாங்கி விடலாம். சட்டையைக் கழட்டிவிட்டு வாசல் 
 திண்ணையில் அமர்ந்து   பனை ஓலை விசிறியால்  விசிறிக்கொண்டு ஒருகாலத்தில்  குளிர்ச்சியை பெற்றோம். பிறகு  FAN இல்லாத வீடே கிடையாது.  இப்போது அநேகமாக எல்லா வீடுகளிலும்  AC . 

மழைக்காலத்தில்  விஷயம் வேறு.  அதுவும் இந்த மார்கழி  பனியில்  அடேயப்பா,  இந்த குளிர்  பொல்லாதது. துளிக் கூட நிம்மதியாக இருக்க விடுவதில்லை. குளிரும் பனியும் பெரிசுகளுக்கு பரம வைரி. வெட வெட வென்று நடுங்கிக் கொண்டு கம்பளிகளுக்குள்ளே மறைந்து கண் மட்டும் ரெண்டு வெளியே தெரியும். இந்த வருஷம் கொஞ்சம் அதிகமாகவே குளிர் நடுங்க வைக்கிறது.

ஆனால் ஆயர்பாடியில் நிலைமையே வேறு. சில்லென்று வீசும் இனிய குளிர் காற்றில் சுகமாக ஆடிக் கொண்டும் பாடிக்கொண்டும் தன் சினேகிதிகளோடு ஆண்டாள் பேசிக்கொண்டே போகின்றாள்.

மற்ற பெண்களையும் எழுப்பி நீராட வைக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறதே.

இன்று மார்கழி 16 நாள் ஆகிவிட்டதே இதுவரை விடாது அந்த பெண்கள் அன்றாடம் யமுனையில் நீராடி விரதமிருந்து,  உள்ளும்  புறமும் தூய்மையோடு கிருஷ்ணனையும் நாராயணனையும் அருள் தா என்று வேண்டுகிறார்கள். சொட்ட சொட்ட  ஈர ஆடையை பிழிந்து சுற்றிக்கொண்டு அந்தப் பெண்கள் இதோ யமுனைக் கரையில் இருக்கிறார்கள். அவர்கள் நீராடி நோன்பிருந்து கூட்டமாக நின்று கொண்டிருக் கிறார்கள்.

'ஆண்டாள் இப்போ எங்கேடி போறோம்?''

'நந்தகோபனது அரண்மனை போன்ற பெரிய வீட்டுக்கு. இன்று என்ன விசேஷம் தெரியுமா?

இந்த பதினைந்து நாட்களாக எல்லோர் வீட்டிலேயும் சென்று பெண்களை துயில் எழுப்பிய ஆண்டாள் இன்று காலை யார் வீட்டுக்கு சென்றாள் தெரியுமா?

ஆயர்பாடியில் கண்ணன் வசிக்கும் அவன் தகப்பன் நந்தகோபன் அரண்மனைக்கே. எளிதில் உள்ளே போக முடியுமா? வாசலில் நந்தகோபனின் வாயில் காவலாளி கொடிய கூர்மையான வேல் ஈட்டி போன்ற ஆயுதங் களோடு காவல் காத்துக் கொண்டிருக்கிறான். யாரும் உள்ளே நெருங்க முடியாது. கண்ணனைக் கண் போல் பாதுகாக்கிறான் நந்தகோபன். 
ஏன்? 
நாளொரு அரக்கனும் பொழுதொரு ஆபத்தும் தான் அந்தச் சிறுவனைக் கொல்ல கம்சனால் அனுப்பப்படும் ராக்ஷஸர்கள் மூலம் எந்த உருவில் வேண்டுமானாலும் வரலாமே? சொல்லிவிட்டா வருவார்கள்? நாம் தான் ஜாக்கிரதையாக குட்டி கிருஷ்ணனை காப்பாற்றவேண்டும்!! என்ற நினைப்பு அந்த வாயில் காப்பானுக்கு. அவனைக் காப்பதே அந்த கண்ணன் தான் என்று அவன் எப்படி அறிவான். அறிந்தால் ஏன் ஈட்டியையும்  வேலையும் பிடித்துக்கொண்டு வாசலில் நிற்கிறான்?

'சிறுமிகளா , யார் நீங்கள் எல்லாம் ? அதுவும் இந்த அதிகாலை வேளையிலே இந்நேரத்தில் இங்கு என்ன வேலை உங்களுக்கு.?''

''ஐயா,  வாயில் காப்போனே, இந்த உயர்ந்த மணிகள் பொருத்திய பெரிய உங்களது கோட்டை மணிக்கதவைக் கொஞ்சம் திறவுங்கள் எங்களை கொஞ்சம் உள்ளே விடுங்கள்'' என்கிறாள் ஆண்டாள்.

'' சிறு பெண்களே,   யார் நீங்கள், எதற்கு உள்ளே போகவேண்டும்?''

''இந்த தெய்வீக மாதத்தில் விடியலில் நீராடி பாவை நோன்பு நூற்று எங்கள் தெய்வத்தை அந்த கிருஷ்ணனை தரிசிப்பதுடன் அவனைத் துயில் எழுப்பவும் வந்துள்ளோம். உள்ளே இருக்கும் உங்கள் தலைவன், எங்கள் மனம் நிறைந்த அந்த கண்ணன் நேற்று எங்களை இங்கே வரச்சொல்லி அனுமதி கொடுத்ததால் அவனை தரிசனம் செய்து அருள் ஆசி பெற வந்துள்ளோம். இது அவன் நேரம்.   அவன் மாதம். . நாங்கள் உள்ளே சென்று அவன் ஆயிர நாமங்களைச்  சொல்லி அவனை துயிலெழுப்ப விழைகிறோம். எங்களைக் தடுக்காமல் குறுக்கிடாமல் தயவு செய்து கதவை மட்டும் திறவுங்களேன்?''

''விசாரிக்காமல் நான் யாரையும் உள்ளே விடமுடியாது.''

''நாங்களோ சிறு பெண்கள் எங்களால் என்ன துன்பம் உங்களுக்கோ,அந்த மாயக் கண்ண
னுக்கோ நேரும்?"

''சூர்பனகை, பூதகி ஆகியோரும் பெண் தானே?'' என சிரித்தான் காவலாளி.

''அவர்கள் வெளியே இருந்து இங்கே வந்தவர்கள்.  ராக்ஷஸிகள்.   நாங்கள் இதே ஊரில் கிருஷ்ணனுடன் பிறந்து வளர்ந்தவர்கள். கோபியர் குடும்பப்பெண்கள். மேலும் நாங்கள் கொல்ல வந்தவர்கள் இல்லை. எங்கள் மனத்தை அவன் வெல்ல வந்தவர்கள்.புரிகிறதா?'' என்றாள் ஆண்டாள்.

''நான் கிருஷ்ணனையே நேரில் கேட்டு அனுமதி தருகிறானா என்று தெரிந்த பிறகு  தான் உங்களை உள்ளே விடமுடியும். அதுவரை வெளியே நில்லுங்கள்'' என்றான் வாயில் காப்போன். அவர்கள் அங்கேயே பாடிக் கொண்டு நின்றார்கள். உள்ளே சென்று வந்த அந்த காவலாளி அந்தப் பெண்களை உள்ளே அனுமதித்தான். ஆண்டாள் எதையும் சாதிப்பவளாச்சே.

வில்லிபுத்தூரில் அப்போது---

ஆண்டாளும் ஆயர்பாடிச் சிறுமிகளும் கண்ணனின் அரண்மனையில் உள்ளே போகும் நேரம் தான் அந்த ஆஸ்ரம வாயிற் கதவைத்  திறந்து வெளியே சென்று அழகிய பெரிய கோலம் போட்டுக் கொண்டிருந்த கோதை ஆஸ்ரமத்தில் நுழைந்தாள். அவள் எதிரே அந்த அழகிய அரங்கனின் உருவச்சிலை அவளையே பார்த்துக் கொண்டிருக்க அன்று எழுதிய பாசுரத்தை மனதிலிருந்து வாய்க்கு மாற்றிக்கொண்டு வந்து பாடினாள். மேலே ஆயர்பாடியில் நாம் கண்ட காட்சி அவள் செய்த அந்த அற்புதக் கற்பனை,  தீஞ்சுவைத் தமிழில் ஈடில்லாப்  பாசுரமாக பக்தி சொட்ட வெளிப் பட்டது.

'கோயில் காப்பானே. கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே. மணிக் கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா. நீ
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்

‘’'அம்மா கோதை, நீ இந்த 16 நாட்களாக என்னை வைகுண்டத்தில் ஆழ்த்தி விட்டாய் தாயே. நீ சாதாரண கவிதையாக சொல்லலங்காரமாக இதை இயற்ற வில்லை. ஒரு தத்துவத்தையே புகட்டி விட்டாய்.''

''அப்படி என்னப்பா எழுதினேன்?''     சிரித்தாள் கோதை.

சொல்கிறேன் கேள். முதல் 15 நாட்களாக ஆண்டாளும் சிறுமிகளும் யாரை வேண்டி நோன்பிருந்தார்களோ', அவனை , ஏன் 16வது நாளன்று பார்க்க நேரிட்டது?'' யோசித்து பதில் சொல்?

''தெரியவில்லையே அப்பா? நீங்களே சொல்லுங்களேன்?'' சிரித்துக்கொண்டே கேட்டாள் கோதை.

''கிருஷ்ணனை வேண்டித்தானே இந்த மார்கழி முப்பது நாளும் அவர்கள் நோன்பிருந்தார்கள். பாதி மாதம் ஆகிவிட்டதே. மீதியை அவர்கள் அவனைத் தேடி போகவேண்டாம் என்பதால் தான்.

''ஏன்  பா  அவர்கள் கிருஷ்ணனைத் தேடி போகவேண்டாம்  என்கிறீர்கள்?''

பக்தன் பாதி வழி கிருஷ்ணனை நோக்கி நடந்தால் மீதி பாதி வழியை கிருஷ்ணனே நடந்து வந்து அவனை எதிர்கொள்ளுவானே  அம்மா..... என்று சொல்லாமல் சொல்லி   விட்டாய் அம்மா. எனக்கு இப்படித்தான் படுகிறது ''என்றார் விஷ்ணு சித்தர்.

.

THIRUVEMBAVAI



 



திருவெம்பாவை     J K   SIVAN   


                  15   வினா விடைகள்   

''ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே
நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்
சித்தம் களிகூர நீரொருகால் ஓவா
நெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து
அணையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்''

ஆஹா இந்த  புனித  திருவண்ணாமலையை சேர்ந்த  அழகிய பெண்களே!    இதோ இந்த  அதிசய பெண்ணை  பாருங்கள்.... பித்தா பிறை சூடி  பெம்மானே, என்று சதா   ஆடிப் பாடி  ஒவ்வொரு சமயத்தில், எம்பெருமான்,   என் பெருமான்  என்று சொல்லி வந்து இப்பொழுது நம்மிறைவனது பெருமையை ஒருகாலும் வாயினால்  உச்சரிப்பதை  விடாதவளாக மன மகிழ்ச்சிகொண்டவளாக இருக்கிறாள்.    அவளது  விழிகளினின்றும்,   அவனை  ஒருபொழுதும் நீக்காதவளாக,   பொய்கையில்  நீராடிய  நீர்  உடலில் சொட்ட,  அதைவிட  கண்களில் பக்தியால்  கண்ணீர் பிரவாகமாக  நீண்ட தாரை தாரையாக ஒழுக,  பூமியின்மேல்  வீழ்ந்து  பரம சிவனை    வணங்குகிறாள்.  என் சிவனே போதும் வேறொன்றும் நான் அறியேன் பராபரமே  என்கிறாள். 

பெரிய தலைவனாகிய இறைவன் பொருட்டு ஒருவர் பித்தராக  மாறுவது இப்படித்தானோ ?  நான்  ஏன்  நீர் சொட்ட  குளித்துவிட்டு  நிற்கிறேன். அதோ என் சிவன் சிரத்தில் கங்கை ஆறாக பெருகி அவன் உடல் வழியாக ஓடுவது தெரியவில்லையா.  அவன் மீது வைத்த அன்பினால் தானே  ''அன்பே சிவமாக  அமர்ந்திருக்கிறேன்'' .   பிறரை அடிமை கொள்ளும் ஞான உருவினர் யார் ஒருவரோ, அவருடைய திருவடியை நாம் வாயாரப் புகழ்ந்து பாடி, அழகிய தோற்றமுடைய மலர்கள் நிறைந்த நீரில்  குதித்து   ஆனந்தமாக  நீராடுவோம்  வாருங்கள்.

சிவபெருமான்,எம்  பரமேஸ்வரன்  எப்படி   தடுத்தாட்கொள்பவர்,  எப்படி கருணை உள்ளம் கொண்டவர் என்று  சுந்தரரைக்  கேளுங்கள் கதை கதையாக  சொல்வார்.  சேக்கிழார்  தான் அதையெல்லாம்  கேட்டு  பெரிய  புஸ்தகமாக  பெரிய  புராணமாக   எழுதி வைத்திருக்கிறாரே.

மணிவாசகரின்  அழகு தமிழில் அற்புத  பாடலை ர் ரசிக்கிறோமே . நமக்கு இப்படிப்பட்ட அரிய  அழகு தமிழை, ஆர்வமுடன், அன்பும் பக்தியும் கலந்து அளித்தவர்கள் ஆழ்வார்களும் சைவ சமய சிவனடியார்களும் தான். இவற்றை ஒருவன் ஆழ்ந்து ருசித்து அறிந்தால் வேறெதுவும் கற்க தேவையில்லை. பன்னிரு ஆழ்வார்களும் நான்கு சைவ சமய குரவர்களும் பாடியதை அறிந்து கொண்டாலே வாழ்வின் பெரும்பகுதி பண்பட்டுவிடும் . வேறொன்றும் கற்க தேவை யில்லை எனலாம். முதலாவது  நமது  வாழ்வின்  நீளம் இதெல்லாம் முழுதும் கற்க  
போதுமா
 என்பது தான் கேள்வி. 

இறைவன்  அருளால்  எதுவும்  நிகழும்  என்பதை  ஆழ்வார்களும்  சிவனடியார்களும்  வாழ்வில் அனுபவித்துணர்ந்ததைப் பற்றி நாம் நிறைய  கேள்விப்பட்டிருக்கிறோம், படித்திருக்கிறோம்.   பரமேஸ்வரன் அடியார்களுக்கு இவ்வாறு அருள் புரிந்ததை  திருவிளையாடல் என்போம்.    மணிவாசகர் வாழ்வில் நடந்த  ஒரே  ஒரு  அற்புத சம்பவத்தை மட்டும் சொல்லி நிறுத்திக் கொள்கிறேன்.   இந்த அதிசயம் நடந்தது சிதம்பரத்தில். 
 
மணி வாசகர் வாழ்ந்த காலத்தில் சோழநாடு பாண்டியநாட்டில் எல்லாம் சைவமதம் தக்க ஆதரவு பெறாமல் தவிக்க நேர்ந்தது. ஈழத்தில் இருந்து பௌத்தர்கள் இங்கே வந்து அவர்கள் மதத்தை பரப்பி சைவமதத்தை இழிவாக பேசினார்கள்.  தமிழ் அரசர்கள் சிலரும்   அவர்களை  ஆதரித்தார்கள். ஈழத்தில்  பௌத்தமதத்தின்  கை  ஓங்கி இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக  தென்னகத்தில் பரவ ஆரம்பித்தது.   பௌத்த மத  குருமார்கள்  சோழ தேசம் வந்து  அரசனை மற்றவர்களை பௌத்தர்களாக்க  வரப்போகிறார்கள். சைவ மதத்திற்கு  அழிவு நிச்சயம்.

இந்த  பௌத்த   மதம் பரவாமல் தடுக்க  பௌத்தர்களை வாதத்தில் வெல்வது தான் அப்போதைய நடைமுறை. இதை சிறப்பாக நடத்த  தக்க சைவமத தலைவர் எவருள்ளார்  என்று  தேடும் நேரத்தில் தான்  மணி வாசகர்  சிதம்பரத்திற்கு நடராஜனை தரிசிக்க வந்தார்.

 தில்லை மூவாயிரவ தீட்சிதர்கள்  ''சோழ  ராஜா, சிறந்த சிவ பக்தர்  மாணிக்க வாசகர் என்பவர்  நமது சிதம்பரம் வந்திருக்கிறார். தவச்சாலையில் தங்கி இருக்கிறார். அவரால் பௌத்தர்களை வாதத்தில் வெல்ல முடியும் என அரசனிடம் உணர்த்தி அவரை அழைக்க சொல்கிறார்கள்.  அவரை என் ஆணையால் அழையுங்கள்  என்ரான்  சோழன்.  தீட்சிதர்கள் மணிவாசகரை அணுகுகிறார்கள்.  மணிவாசகரிடம்  விஷயம் சொல்கிறார்கள்.

''என்ன, சோழ ராஜா, என்னை ஈழத்திலிருந்து வந்திருக்கும் பௌத்த குருவோடு வாதத்தில் ஈடுபட அழைக்கிறாரா, என் இறைவனுக்கு நான் செய்யும் ஒரு தொண்டாக மன்னன் அழைப்பை மதித்து தில்லை நடராஜன் அருளோடு வருகிறேன்'' 

தில்லையில் ஒரு மண்டபத்தில் ஏராளமான பக்தர்கள், புலவர்கள், பண்டிதர்கள் சபையில் கூடி விட்டார்கள். பௌத்த குரு   படாடோபமாக தன்னுடைய சீடர்களோடு ஏராளமான ஓலைகள், , சுவடிகள் சகிதம் வந்து அமர்ந்துவிட்டான். வாதத்தில் சைவத்தை தவிடு பொடியாக்கி விடுவோம் என்கிற நம்பிக்கை அவன் முகத்தில் ஆணவமாக தெரிந்தது. 

எதிரே  ஒடிசலாக  காவி உடை அணிந்த  ஒரு ஒற்றை மனிதன் மட்டும்  வந்து உட்கார்ந்திருப்பதை பார்த்த பௌத்த குரு  ஏளனமாக  சிரித்தான்.

''ஹெஹெஹெ   .... இந்த பரதேசியா என்னை எதிர்ப்பவன்? சோழன் பைத்தியம்  போலும்?எந்த  நம்பிக்கையோடு வாதவூரன்   என்கிற இவன்  என்னை வாதத்தில் வெல்வான்  என்ற  நம்பிக்கை..  இந்த  பரதேசி ஒன்றுமே  அறியாத அன்றாடங்காய்ச்சியாக தெரிகிறானே !''  இவனை ஒரே கேள்வியில் ஊதித்தள்ளி சிறையிலடைக்கச் செய்கிறேன்''

''தீயாரைக் காண்பதுவும் தீது'' என்று தீர்மானித்த மணிவாசகர்   ''சோழ மன்னா நான் இந்த  பௌத்தகுருவை  நேரில் பார்த்து  வாதாட விரும்பவில்லை..  ஆகவே  எனக்கும் இவருக்கும் இடையே ஒரு திரை போடுங்கள்   எங்கள் வாதம் தொடரட்டும்''

பௌத்தகுருவின் கேள்விகள் பிறகு தொடர  திரையின் பின்னாலிருந்து  சைவ மத பண்பாடு, சிறப்புகளை  பதிலாக  மேற்கோள்களோடு  விளக்குகிறார்  மணிவாசகர். சபையில் அரசன் உட்பட அனைவரும்  அமைதியாக கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.  

இவ்வளவு பெரிய  ஞானியா  இவன்  என்று  பௌத்த குரு  திணறினான்.   வாதத்தில் சைவத்தின் கோட்பாடுகளை  எதிர்க்க இயலாது என்று புரிந்ததும் சிவபெருமானை தூஷணையாக, இகழ்ந்து பேச ஆரம்பித்து விட்டான். மணிவாசகர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவன் வாதத்தை முறையாக தொடராமல் இப்படியே இழிவாக பேசிக்கொண்டிருக்கவே மனம் நெகிழ்ந்த மணிவாசகர் மனதால் கலைவாணியாகிய  ஸரஸ்வதியை தியானித்தார்.

'அம்மா   கலைவாணியே , நாவுக்கரசியே, நாமகளே , இந்த பாதகன் எம்பிரானை இழிவாக பேசுவது என் காதில் நாராசமாக இடிபோல் விழுந்து என்னை வாட்டுகிறதே. அவன்  நாவிலும் 
உறையும் நீ எப்படி அம்மா இப்படி அவன் பேசுவதை அனுமதிக்க இயலும். என் ஈசன் மீது ஆணை, நீ அவன் நாவில் இதை சகித்துக்கொண்டு இந்த பாதகர்கள் நாவில் உறைவது இனியும் தகாது  அன்றோ?

என்ன ஆச்சர்யம்!   அடுத்த கணமே பௌத்த குரு மட்டுமல்ல, அவனுடன் வந்த அனைத்து சீடர்களும் வாய் பேசமுடியாமல் ஊமையாகி விடுகிறார்கள். அதிர்ச்சி அடைந்த அவர்கள் வாதவூரர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்கள். அவரது தெய்வ சக்தியை உணர்கிறார்கள். எங்களை மன்னித்து, எங்கள் தவறைப்  பொருட்படுத்தாது மீண்டும் பேசும் சக்தியைத்தந்து  அருளவேண்டும். எங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு சைவ மதத்தில் இணைகிறோம் அதை ஆதரிக்கிறோம்'' என்று  பேசமுடியாமல்  ஜாடையாக காட்டி  கதறுகிறார்கள்.

''சிதம்பரேசா,  நாவுக்கரசியே,  இந்த  பாதகர்கள்  தவறை உணர்ந்து  திருந்தி விட்டார்கள் என்பதால்  தயை கூர்ந்து மன்னித்தருளவேண்டும். ''

மணிவாசகரின் வேண்டுகோளுக்கு  செவிசாய்க்க  நாமகள்  அருளால் பௌத்தர்கள் பேசும்  சக்தியை மீண்டும் பெற்று அங்கேயே சைவமதத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். 

ஈழத்தை  ஆண்ட  பௌத்த ராஜா  தனது  மதத்தை தமிழ்நாட்டில் ஸ்தாபிக்க  தான் அனுப்பிய   குருவும் சிஷ்யர்களும் தோற்று, ஊமையாகி பின்னர் மணிவாசகர்  என்ற சிவனடியார் அருளால் பேசும் சக்தி  பிறகு திரும்பப்பெற்று  சைவர்களானதை  அறிகிறான்.  அவனுக்கு ஒரே மகள். பிறவி ஊமை.  அவளையும்  மணிவாசகர் பேச வைத்தால் தானும் தனது நாடும் சைவத்தில் இணையும்'' என்று  அறிவிக்கிறான்.

''அழைத்து கொண்டுவாருங்கள் அந்த பெண்ணை ''என்கிறார் மணிவாசகர்.
தில்லை நடராஜன் சந்நிதியில் மீண்டும் பெருங்கூட்டம்.  

அன்போடும் பாசத்தோடும் அந்த சிறிய   ஈழப் பெண்ணைப்பார்க்கிறார்.
  ''வா குழந்தாய்  வந்து என் அருகில் உட்கார் ''.
   அவள்  மெளனமாக அவர் அருகே  உட்காருகிறாள்.
எதிரே ஈழ ராஜா,  சோழ ராஜா,  பௌத்தகுருமார்கள்,மற்றவர்கள்.  பௌத்தகுருவை அழைக்கிறார்.  ''நீங்கள்  என்னைக் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் இந்த சிறிய பெண்ணே பதில் சொல்வாள். கேளுங்கள் '' என்கிறார்.
 தானே பௌத்தகுரு கேட்ட கேள்விகளை அந்த பெண்ணிடம் கேட்கிறார். 
கணீரென்ற குரலில் இதுவரை பேசாமடந்தையாக இருந்தவள் பட் பட்டென்று பௌத்த குருவின் கேள்விகளுக்கு சைவமதத்தின் பெருமையை கூறி வாதிடுகிறாள். வெல்கிறாள். அப்புறம் என்ன ஈழ மன்னனும் மக்களும் சைவத்தை தழுவினான் .  இது என் கட்டுக்கதை அல்ல.  சரித்திரம் இதை சொல்கிறது. பண்டைய நூல்கள் பொய்  சொல்லவேண்டிய  அவசியம் இல்லை.

மணி வாசகர் கேட்ட  கேள்விகள்  என்ன?  அந்த பெண் கூறிய  பதில் என்ன ?  திருவாசகத்தில்  மணிவாசகரின் திருச்சாழல் பதிகங்கள்  தான்  இந்த  வினா விடையாக காட்டுகிறது.  கொஞ்சம்  சாவகாசமாக  அதை முடிந்தால் எழுதுகிறேன்.


 

BAGAVAN RAMANA

 


 பகவான் ரமணர் 



                        சிறுத்தை விஜயம்.      - J K SIVAN

இன்று  பகவான்  ரமண மஹரிஷியின்  141வது  ஜெயந்தி.  டிசம்பர் 30  1879 ல்  திருச்சுழியில் பிறந்த மஹான்.  மகரிஷி ரமணர் எல்லா உயிர்களிடத்தும் ஒரே மாதிரி அன்புடையவர். அவருக்கு ஆண் பெண், ஜாதி, வயது, சமூக அந்தஸ்து வித்யாசங்கள் கிடையாது. பறவைகள் மனிதர்கள் எல்லாமே ஒன்று தான்.  அவரைப்பற்றிய  ஒரு சிறிய சங்கதி ஒன்றை மட்டும்  சொல்லி இந்த  ஜெயந்தியை அவருக்கு நமது சாஷ்டங்கள் நமஸ்காரத்தை  செலுத்துவோம்.

அவரைப் பார்க்க ஒரு வியாபாரி,சென்னை, என்கிற அப்போதைய  மெட்ராஸிலிருந்து   ரயிலில் வந்தார். அவர்  பெயர்   ரங்கசாமி அய்யங்கார்.  ரமணர் ஜாதி, மதம், மொழி,  இதற்கெல்லாம் அப்பாற்பட்ட மகரிஷி.  பரம  ஞானி அல்லவா. 

 1906ல் பச்சையம்மன் கோயிலில் திருவண்ணாமலையில்  அப்போது   பகவான்  வாசம் செய்து கொண்டிருந்தார்.  அப்போதிலிருந்து ஐயங்காருக்கு பகவானுடன்  ஒரு பிடிப்பு,  தொடர்பு. அடிக்கடி திருவண்ணாமலை வருவார்.  தரிசனம் செய்து விட்டு  போய்விடுவார் சிலநாட்கள் பேசக்கூட மாட்டார் மகரிஷி.

அக்கால கட்டத்தில் தமிழகத்தில் பல பகுதிகளில் பிளேக் PLAGUE எனும் கொள்ளை நோய் பல உயிர்களை பலி கொண்டது. இப்போது கொரோனா மாதிரி. திருவண்ணாமலை அதற்கு தப்ப வில்லை. ரங்கசாமி அய்யங்கார் ரயிலிலிருந்து திருவண்ணாமலையில் இறங்கும் போது
 நல்ல உச்சி வெய்யில். நெருப்பாக கொதித்தது. நடந்து வந்து சேர்ந்தார். பகவான் ரமணர் அவரை மலர்ந்த முகத்தோடு வரவேற்றார்.

ஆஸ்ரமத்தில் அவரை ''ஐயங்கார்வாள் சீக்கிரம் போய் ஸ்னானம் பண்ணிட்டு வாங்கோ நல்ல பசியோடு வந்திருப்பீர்கள். பக்கத்திலேயே ஒரு குளம் இருக்கு. சுகமாக சில்லென்று ஸ்னானம் பண்ணிட்டு வாங்கோ. போஜனம் ரெடியாக இருக்கு''  என்று  ஆஸ்ரமத்தில் உள்ளவர்கள்  உபச்சாரம் பண்ணினார்கள்.   அவர் தான் வழக்மாக வரும்  பக்தர் ஆயிற்றே.  குளம் பச்சையம்
மன்   கோவில் வாசலிலேயே இருந்தது. சுற்றிலும் மரங்கள், ஒரு காடு மாதிரி. மனித நடமாட்டம் அதிகம் கிடையாது.

திடீரென்று கோயிலில் அமர்ந்திருந்த பகவான் விருட்டென்று எழுந்தார். கோயிலை நோக்கி நடந்தார். அதன் பக்கமாக இருந்த குளக்கரை சென்றார். எதற்கு பகவான் இப்படி கிளம்பி போகிறார்? எல்லோருக்கும் ஆச்சர்யம். காரணம் தெரியவில்லை.  ஒருவேளை 
அவர் இயற்கை உபாதைக்காக ஒதுங்க  எழுந்து போகிறாரோ?   இதோ  விடுவிடுவென்று  பகவான் குளக்கரை வந்துவிட்டார். அவர் வந்த நேரத்தில் ஒரு பெரிய சிறுத்தைப்புலி காட்டிலிருந்து தாகத்திற்கு தண்ணீர் குடிக்க குளத்திற்கு வந்தது.

''சீக்கிரம் தாகம் தீர்த்துக்கொண்டு போய்விடு. அப்புறம் நிதானமாக வா. ஐயங்கார் உன்னை பார்க்கவில்லை. வடக்கு பக்கம் குளிக்கிறார். பயப்படுவார்''

சிறுத்தைப் புலி  எதிரே நின்ற  பகவானை பார்த்ததும் நின்றது. பிறகு  மெதுவாக அவரைக் கடந்து  குளத்துப்பக்கம் சென்று  நீர் பருகிவிட்டு பூனைக்குட்டி மாதிரி சிறுத்தை   வந்தவழியாகவே  காட்டிற்குள் சென்றுவிட்டது.  அது  செல்லும் வரை பகவான் பார்த்துக் கொண்டிருந்தார். 

பிறகு  குளத்தங்கரையில்  ஐயங்கார்குளித்துக் கொண்டிருந்த பக்கம் சென்று  அவரை அழைத்துக்கொண்டு கோயி லுக்குத்  திரும்பினார்.

''இங்கே வனவிலங்குகள் நடமாட்டம் உண்டு. சிலது வெயிலுக்கு நீர் பருக வருவது வழக்கம். வாருங்கள் போகலாம்'' என்று  மட்டும்  அய்யங்காரிடம் சொன்னாரே தவிர,  இதை நான் எழுதும்வரையில்  அய்யங்காருக்கு  சிறுத்தை  அவர் அருகே வந்து தண்ணீர் குடித்துவிட்டு சென்ற சமாச்சாரம் தெரியாது.   தெரிந்திருந்தால்  புலியை  விட கிலியே  அவரைக் கொன்றிருக்கும்.

SAKKARAI AMMAL

 


சக்கரை அம்மாள்   J K  SIVAN  

                               அடிமுடி சித்தர்  

திருவண்ணாமலை  ஒரு    ரஹஸ்ய சுரங்கம்.  எண்ணற்ற  சித்தர்கள் இன்னும்  அங்கே  நம்  கண்களுக்கு புலப்படாமல்  வாழ்கிறார்கள்  என்று  பக்தர்கள் நம்புகிறார்கள். மற்றவரைப் பற்றி நமக்கு கவலை இல்லை. நமக்கு தெரிந்தது சில சித்தர்கள் பெயர்கள் தான்.  எண்ணற்றவர்கள் பெயர்கள் வெளியே தெரியாமலேயே  மறைந்திருக்கிறது.   அப்படி  அதிகம் தெரியாமல் வாழ்ந்த ஒரு சித்தர்  தான் அடிமுடி சித்தர் .
 

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஒரு துறவி ஒரு சிறு  குடிசை   தானே வேய்ந்து வசித்து, சில சீடர்களுக்கு ஞானம் அளித்து வந்தார்.  மற்றநேரங்களில் தியானம்.  அவரது சீடர்களில் ஒருவர் பெயர் அடி முடி சித்தர்.  எளிமையான தோற்றம் கொண்டவர், சிவனடியார்களுக்கு
உதவுவதையே  விரும்பியவர்.  அவரைத் தான்   சக்கரை அம்மாள் என்று  பின்னர்   அழைக்கப்பட்ட    அனந்தாம்பாள்  தனது  இல்லத்திற்கு அழைத்து பிக்ஷை அளிக்க விரும்பினாள் . அழைத்தாள் . வருகிறேன் என்கிறார். 


ஒரு நாள் அடிமுடி சித்தர் போளூர் வழியாகத் திருவண்ணாமலைக்கு  நடந்து வருவதை அறிந்தாள் . அவருக்காக   உணவு சமையல் செய்து விட்டு பலமணி நேரம் வீட்டு வாயிலில் காத்து இருந்தாள் .  அடிமுடி சித்தரைக் காணோம்.  அந்த நேரம்  அனந்தாம்பாள் உறவினர்  ஒருவர் அவள் வீட்டுக்கு வந்து நிலைமை அறிந்தார்.  

''ஏம்மா  நீ இன்னும்  சாப்பிடலியா?''

''அடிமுடி சித்தர் வருகிறேன் என்று  சொல்லி இருக்கிறார்.  அந்த மஹானுக்கு பிக்ஷை அளித்து விட்டு பிறகு சாப்பிடுகிறேன்''

''முட்டாள். ஏன்  இப்படி  சாப்பிடாமல் பல மணி நேரம் கண்ட கழுதைக்கெல்லாம் காத்திருக் கிறாய்'? என்று    உறவினர் கோபித்தார்.  அவள்  பொருட்படுத்தவில்லை. 

சற்று நேரத்தில்  அடிமுடி சித்தர் வந்தார்.   அவரை உபசரித்து உள்ளே அழைத்தாள் அனந்தாம்
பாள்.

'' உனக்கு கம்பங்கூழ்  பண்ண தெரியுமா?''

''தெரியாதே சுவாமி. பண்ணதில்லை. வேண்டுமானால் உடனே பண்ணுகிறேன்''

''சரி  சரி  யாராவது   பக்கத்திலே  இங்கே  ஒரு வண்ணான் வீட்டிலே போய்   கூழ் சாப்பிட்டு விட்டு பிறகு உங்க வீட்டிலே சாப்பிட வரேன்''

போய் விட்டார் அடிமுடி சித்தர் 

என்ன அர்த்தம்?

கழுதை எங்கு யாரிடத்தில் இருக்கும்.  வண்ணார் வீட்டில் தானே?.  ஓஹோ  ''கண்ட கண்ட  கழுதை.....''என்று  அண்ணா சொன்னது அவருக்கு  எப்படி  தெரிந்தது?    முதலில் வண்ணார் வீட்டில்  கூழ் குடித்துவிட்டு பிறகு உன் வீட்டுக்கு வருகிறேன் என்ற வார்த்தை  அவரை கழுதை  என்று  சொன்னதை  உணர்த்துகிறதா....!!?

 அடிமுடி சித்தர் தான் முதலில்  திருவண்ணாமலையில் மலையை ச்சுற்றி  நடக்கும் கிரிவலப்  பாதை அமைத்தவர்.  அவரது குரு  கௌதம முனிவர்.  திவண்ணாமலை  சுற்றும்  பாதையில்  ஒரு பெரிய  பாறை  வழியை அடைத்துக்  கொண்டிருந்தது.  தனது  தலை ஜடாமுடியால் பாறையை  இழுத்து  அகற்றிய சித்தர். இந்த  சித்தரின் தொண்டை கவனித்த அடியார்கள்  சிலர்  அவரோடு தாமும் உழைத்து  கிரிவலப்பாதையை நடைபாதையாக மாற்றியவர்கள். அவர்களுக்கு  அவர்  தமது இருக்கரத்தாலும்  கீழே கிடக்கும்  குப்பையை வாரி கையில் திணிப்பார்.  அவர்கள் கை  திறந்து பார்த்தால்  அத்தனையும் காசுகளாக  மாறி இருக்கும்.  

 இந்த சித்தர்  தான்  சக்கரை அம்மாளுக்கு முக்தி ஞானம்  அளித்தவர். நாம் எல்லோரும் பகவானை நினைத்து  நேரம் செலவழிப்பது  கொஞ்சம் கொஞ்சமாக  ஞானம் பெற வழி. சித்தர்கள் என்றாலே  பல மூலிகைகளை அறிந்தவர்கள் என்று சொல்லலாம். இந்த அடிமுடி சித்தரும் திருவண்ணாமலையில் உள்ள பல  மூலிகைகளை அறிந்து பலரது வியாதிகளை குணப்படுத்தியவர். 

தனது பூலோக வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என்று  அடிமுடி சித்தருக்கு தெரிந்ததும்  தனது சிஷ்யர்களை அழைத்தார்.

 "நான் இப்போது  நீண்ட நேரம்  தியானம் செய்யப்போகிறேன்.  அப்போது என் உடலைத் தொடாமல்  என் கால்களின் கட்டைவிரல் ரெண்டிலும்,   வைக்கோல் பிறியைத் திரித்து கயிறாக செய்து,  அவற்றில் கட்டி  இழுத்துச் செல்லுங்கள்.  ஒரு இடத்தில் வைக்கோல் பிறி  அறுந்துவிடும். அந்த இடத்தில்  என் உடலை அடக்கம் செய்யுங்கள். 

சிஷ்யர்கள் அவ்வாறே செய்தார்கள்.  அடி அண்ணாமலை அருகே  அவரது குரு கௌதம
 ரிஷியின்  ஆஸ்ரமம் எதிரே  அடிமுடி  சித்தரை இழுத்துக் கொண்டு   வந்த போது ''டப்'' என்று  வைக்கோல் பிறி  கயிறு  அறுந்து விழுந்தது.  அங்கேயே  அடக்கம் செய்தவர்கள் பல நூறு ஆண்டுகள்  அடிமுடி சித்தரின்  ஜீவசமாதி கவனிப்பாரற்று  மண்மூடி  பாம்பு புற்றாகி விட்டது. 

என்றோ ஒருநாள்  யாரோ ஒரு  சிவனடியார்  கிரிவலம் செய்யும்போது  அந்த இடத்தில்  ''பளிச்சென்று'' அவர் கண்ணுக்கு  ஒரு  ஜோதி  ஒளிப்பிழம்பு  தெரிந்தது.   ஆச்சர்யத்தோடு அருகே சென்றார். அங்கே  புற்று ஒன்றில் இருந்து  மிகப்பெரிய நாகம் ஒன்று  படமெடுத்து  நிற்பதை கண்டார்.   அங்கிருந்து வந்தவர் பலரிடம் கேட்டறிந்து  அடிமுடி சித்தர் அங்கே ஜீவசமாதி மேற்கொண்டதை அறிந்தார்.  சித்தரின்  ஜீவசமாதியை எப்படி  அறிவது, எப்படி அவருக்கு 
 தனது இறைப்பணியை செய்வது?   

ஆச்சர்யமாக  இதுவரை பெய்யாத மழை திடீரென்று  சில நாட்கள் கழித்து விடாமல் பெய்து
அந்த இடத்தில் இருந்த பெரிய  புற்று கரைந்து விட்டது.  அந்த  புற்று இருந்த இடத்தில் ஒரு  ஸ்வயம்பு லிங்கம்  தோன்றிய  பாம்புகள் அங்கிருந்து அகன்றுவிட்டன.  அங்கே  ஒரு சிரிய  அடிமுடிச்சித்தர்   ஜீவ சமாதி கோவில் உருவாகியது.  அவர்  ஜீவசமாதி கிரிவலப்பாதையில் உள்ள சூரிய லிங்கத்திற்கு மிக அருகே கௌதம மகரிஷி கோவிலுக்கு எதிரே இருக்கிறது. 

ஒரு  கூடுதல் விஷயம்.  ஒற்றை தலைவலி  migrain என்று அவஸ்தைப்படுபவர்கள் இந்த சித்தர்  சமாதியை மூன்று முறை சுற்றி வந்து உள்ளே  சுவற்றில் மெதுவாக தலையை லேசாக சுவற்றில்  இடித்தால்  கைமேல் என்று சொல்லாமல்  ''தலைமேல்'' பலன் கிடைக்கும், மூன்று சுற்றுக்கு மூன்று முறை  இவ்வாறு செய்யவேண்டுமாம்.   

நாம் தவம் ஜபம் செய்யாதவர்கள்.  பகவானை நினைத்தும் சிந்தித்தும்  முன்னேறலாம்.  நான் சிந்தித்து  எழுதுகிறேன். நீங்கள் அவனைபற்றி படித்து சிந்திக்கிறீர்கள். விடாமல் எழுதுகிறேன். விடாமல் படிக்கிறீர்கள். நாம் இருவருமே  என்றோ ஒரு நாள்  முக்தி அடைவோம்  இல்லையா? இதற்கிடையே நேரம் கிடைத்தபோதெல்லாம் அடிமுடி சித்தர்  போன்ற மஹான்கள் ஆசிரமங்
கள், ஜீவசமாதிகள், அதிஷ்டானங்கள் எல்லாம் சென்று சற்று நேரம் கண்மூடி மௌனமாக
தியானம் செய்வோம். அது போதும்.



Tuesday, December 29, 2020

NEW YEAR WISH

 


              NEW YEAR WISH FOR A HAPPY LIFE  --   J K  SIVAN 

Minding one's own business without interfering in others' matters or offering opinion is a good sign for happiness  in life.  I say this because of my experience and knowledge that many of us suffer from problems created by our ownselves, interfering too much in 
others' affairs, either knowingly or unknowingly.  Such interference  is encouraged  because  we are  convinced that our way is the best way, our logic is the perfect  solution,  and others who dont contribute, follow  or share our view, or  thinking must be fools not knowing the right  direction.  Thus we forget and are ignorant that  there is  existence of individuality and consequently the existence of God, for God has created each one of us in a unique way. No two  persons  can think or act  alike.  All are acting in  the way they opt,  prompted and guided by the Divine force  within.  God watches and looks after everything. Why are we  bothered? Minding our own business will bring  immense peace to which we missed otherwise..


We have a tendency to harbour ill feeling inside our heart for the person who  we think  has  insulted or  harmed us.  It is our wrong feeling.  We foster grievances, which gifts us with sleeplessness, stomach ulcer, high BP  if not any other ailments gnawing us  from within.

Of course  whatever insult or injury we suffered  was once,let it be,  but  nourishing and fostering the grievance is  aggravating the situation and wound is prevented from healing by itself.   Let us  develop and practice the art of forgiving and forgetting. Believe in the justice of God and the doctrine of Karma. Let Him judge the act of  everyone.   Our Life on earth is too short to  miss the chance of enjoying the happiness offered everymoment  by Nature  for us.

If  I  imagine and  feel I am a great  writer and that everyone in the world should compulsorily read  whatever I  scribble,  appreciate and  stand  applauding  my writing.  Why, they dont do it?  Everyone  is  selfish and praises  anyone  only with  selfish motive. Each person is a mortal with a bundle of defects in them. No one individual is picture perfect. Then why do you value the words of praise of another mortal like you? Why do you crave for such false recognition and lose your peace of mind. 
Let us  believe in ourselves. People's praises do not last long and are not worth it. Doing our  duties ethically and sincerely and leaving the rest to God is the best way.  I believe in it and doing so.

There is another thing known as  Jealousy  which can rob us of our peace of mind.  We sometimes  feel that despite our working  very hard  and sincerely,  some of our colleagues in the office do,  get promotions, and increments in salary  unjustified.
Supposing we  started a business several years ago but we  are disappointed that  we are not  successful as  our competititors  who started later the same line of business but very lucky.   There  are many examples like this in  every walk of life. Is there any need to be jealous?  No, remember everybody's life is shaped by his previous Karma, which is his destiny. If we are  destined to be rich, none in the  world can stop us.   If  not so destined  no one can help as well. What do we gain by blaming others and being jealous of them.? It gets us no where except  gifting us with  restlessness and uneasiness.

There was a time  when street vendors  thrived bringing us  all our requirements  in carts  right in front of our doors on the streets.  But change in  the environment has brought now many departmental stores in huge complexes close to our residence, where can get anything we want at a stretch.  Who will now wait for the cart to bring only limited things of what we desire? We  need to grow friendly  and adapt ourselves to changing environment.

What cannot be cured must be endured is a best principle. It would turn every disadvantage into an advantageous situation.
How many inconveniences, ailments, irritations and accidents  we face every day which are beyond our control.  We must learn to put up with these and accept them as part of life.  "If God wilsl it so, so be it" should be our  watchword.  We will gain patience, and tolerance  which will strengthen us .

Some of us  have the tendency to invite and take upon themselves more responsibilities than  they are really capable of carrying out.  This is due to some ego.  Everyone should know his limitations.   Additional loads can only bring worries and affect our health and mind.   if we have a free time  let us  spend it  to develop our inward life of prayer, introspection and meditation. This will reduce restlessness and bring peace.   Fewer  the thoughts, greater is the peace of mind.

Meditation for atleast  thirty minutes is enough to gain peace and inner strength whch can take care of the other twenty three and half hours of our life in a day.   Gradually we can practice and increase the duration of our meditation to gain more benefits.  Our efficiency and power of decision making would increase.

Do you know that an idle mind is devil's workshop? 
All eveil thoughts and deeds are born in the idle  mind.  We must  therefore  Keep our mind occupied in something positive, beneficial to others and do  something worthwhile.  Social work, temple visits, cleaning the environment, and service to the poor   and reading of  good books keeps our mind  occupied . Chanting of God's name when free is possible for a few only.

Wasting precious time is unpardonable  leading to self destruction.   Planning  perfectly anything is  impossible because  we cannot   anticipate or foresee  all future happenings.  That is why we say  ''Man proposes but God disposes ''. If any of our plan fails it is to be accepted in good faith that rectification and correction of earlier mistakes  would lead to final success. Sitting back and worrying  has no purpose. Man is imperfect and can  learn from  his own  mistakes and should not  brood over the past or regret for anything.  Whatever happened was destined to happen only that way. It is the Will of God.   No one has the power to alter His course of will. No need to cry over spilled milk.

THIRUVEMBAVAI

 


திருவெம்பாவை  J K  SIVAN  





        14.  அருமை மணிவாசகரும் ஆவுடையாரும் 

14.   காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆட
சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்ந்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.

திருவண்ணாமலையில் இன்று  கோலாகலம்.  அண்ணாமலையானை  தரிசிக்க திரள் திரளான பக்தர் கூட்டம்.  முதலில்  கூட்டத்தில் நிற்பவர்  மணி வாசகர்.  அவர் கண்களில் என்ன காட்சி தென்படுகிறது.  ஒரு சில  இளம்பெண்கள்  ஒன்று சேர்ந்து மற்ற பெண்களையும் கூட்டு சேர்த்துக்கொண்டு  தூங்குபவர்களை எழுப்பி  ஒன்றாக  அண்ணாமலையான்  தரிசனத்துக்கு வருகிறார்கள்.

அவர்கள் பேசுவது அங்கு நடப்பது எல்லாம்  அவருக்கு ஸ்பஷ்டமாக  கேட்கிறது தெரிகிறது. அவர்மூலம் நாமும்  எத்தனையோ  நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்ததை இன்று  இப்போது நடப்பது போல்  அனுபவிக்கிறோம்.

எல்லா பெண்களும் அழகிய  பொன்னாலான தோடுகளை, குழைகளை  காதுகளில் அணிந்து பளிச் பளிச்சென்று  மினுக்க ஆடுகிறார்கள்.  பாடுகிறார்கள்.  தோடு அவனுக்கு  பிடிக்கும்.  அவன்  தோடுடைய செவியன் அல்லவா. பூமாலை அந்த பெண்கள்  கூந்தலில் இருந்து அசையவும் மாலையில் உள்ள  பூக்களின் தேனுக்காக  சுற்றும் வண்டின் கூட்டம் அசையவும், குளிர்ச்சியாகிய நீரில் மூழ்கித் தில்லைச் சிற்றம்பலத்தைப் புகழ்ந்து அந்த பெண்கள்  பாடுவதை கேட்க எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது.   வேதப் பொருளாகிய சிவபிரானைப் பாடி, அப்பொருள் நமக்கு மனதில் குடிபுகும்  வண்ணம் பாடிப் பரஞ்சோதியின் தன்மையைப் போற்றுகிறார்கள்.  அவன் எப்படிப்பட்டவன்  நினைவிருக்கிறதா. 

 ''நான்  அசந்தால் அசையும்  அகிலமெல்லாமே''  ஞாபகம் வருகிறதா. ஞான மயன்,  ஜோதி மயன்,  கொன்றை மலர்  சூடியவன்.  கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கும் முன் தோன்றிய மூத்தவன்.  அசையாது  மோனத்தில்  தியானிக்கும்  தியாகச் செல்வனும் அவனே.  மானாட  மழுவாட,  சிவகாமியாட எல்லா அசைவுகளுக்கும்  காரணனும்  அவனே. அந்தச் சிவனே.  அவனை ஊக்குவிக்கும்  சக்தியை,  ஆட்டுவிக்கும்  அர்த்தநாரியை, ஓம்   என  ஒலிக்கும்  வளையலை  உடைய உமாதேவியின் திருவடியின் மேன்மையை, பெண்களே   பாடுங்கள். ஆடுங்கள்''.

ஆண்டவனுடைய மலர்ப்பாதம் தேவர்களால் துதிப்பதற்கு அடங்காமல் அவர்களுடைய வாயைக் கூசச் செய்கிறது. நாமாக முயன்று அந்தப் பாதத்தைப் பற்றிவிட முடியாது.   அவனருளால் தான்  அவன் தாளை வணங்க முடியும். அவன்  தேவதேவன்.  தெய்விக தேஜஸ் உடையவன். ஒளிச் சுடர். சிவலோக நாதன். அடியார்க்கு அடியான்.  சிதம்பரேசன்.  

மாணிக்க வாசகர் அநேக சிவாலயங்கள் சென்று பாடல்கள் பாடியவர். இருப்பினும் முக்கியமாக அவரோடு சம்பந்தப்பட்ட இரு ஆலயங்கள் திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோவிலும் சிதம்பரமும் என்று சொல்லலாம். இன்று ஆவுடையார் பற்றி சொல்கிறேன்.

ஆவுடையார் ஆலயத்தில் சிவன் பெயர் ஆத்ம நாதர். அம்பாள் யோகேஸ்வரி.  யோகாம்பாள். மூர்த்தி மாணிக்கவாசகர். இங்கு, சிவதீர்த்தம், அக்கினி தீர்த்தம், தேவதீர்த்தம், முனிவர் தீர்த்தம், அசுர தீர்த்தம், வாயு தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், நாராயண தீர்த்தம், பிரம தீர்த்தம், அறுபத்து நான்கு கோடித் தீர்த்தம், வெள்ளாறு, திருத்தொட்டித் தீர்த்தம் போன்றவையாகும். காமதேனு வழிபட்ட மகிழமரம் தலவிருட்சம் .

மற்ற சிவாலயங்களில் இருப்பதை போல் இங்கே இராஜகோபுரத்தை அடுத்து பலிபீடம், நந்தி, கொடிமரம்  என்று  எதுவும்   கிடையாது. நாதசுரம், மேளம், பேரிகை, சுத்தமத்தளம் முதலிய வாத்தியங்கள் வாசிப்பதில்லை. இங்கு ஒலிப்பது திருச்சின்னம், சங்கு, மணி முதலியவற்றின் ஒலிகள் மட்டுமே..

ஆத்மநாதர் அரூபமாகவும், அருவுருவமாக குருந்தமர வடிவிலும், (தலவிருட்சமாக) உருவமாக மாணிக்க வாசகராகவும் காட்சி தரும்  க்ஷேத்ரம்.   குருந்தமரம்  தான்  இங்கே சிவன்.  மரத்தின் முன்பாக நூற்றியெட்டு சங்காபிஷேகம் நடக்கிறது. மூலஸ்தானத்தில் சதுர வடிவ ஆவுடையார் மட்டுமே இருக்கிறார். இதன்மீது ஒரு குவளை சார்த்தப்பட்டிருக்கிறது. குவளை உடலாகவும், குவளையினுள் இருப்பது ஆத்மாவாகவும் கருதப்படுகிறது. ஆத்மாக்களை காத்தருள்பவர் என்பதால் “ஆத்மநாதர்” என்ற பெயர்.

ஆறு கால பூஜையின்போதும், இவருக்கு நூற்றியெட்டு மூலிகைகள் கலந்த தைல முழுக்கு நடப்பது மிகச் சிறப்பு. தட்சனின் யாகத்திற்கு சிவனை மீறிச் சென்றதற்கு மன்னிப்பு பெறுவதற்காக, அம்பாள் இத்தலத்தில் அரூப வடிவில் தவம் செய்தாள். எனவே, இங்கு அம்பாளுக்கும் விக்ரகம் இல்லை. அவள் தவம் செய்த போது, இப்பதியில் பதிந்த பாதத்திற்கு மட்டுமே பூஜை நடக்கிறது. இந்த பாதத்தைப் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக, கண்ணாடியில் பாதம் பிரதிபலிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

அம்பாள் சன்னதி எப்போதும் அடைத்தே இருக்கும் என்பதால், சன்னதி முன்புள்ள ஜன்னல் துவாரம் வழியாகத்தான் பாதத்தை தரிசிக்க முடியும். ஆவுடையார் கோயிலில் நவக்கிரக சன்னதி இல்லை. ஆனால், நவக்கிரகத் தூண்கள் வைக்கப்பட்டுள்ளன. சூரிய, சந்திர கிரகணங்களின்போது எல்லாக் கோயில்களிலும் பூஜை செய்யமாட்டர்கள். ஆனால், இந்த ஆவுடையார் கோயிலில் கிரகண நாளிலும் ஆறு கால பூஜை நடக்கிறது.

ஆவுடையார் கோவிலில்தான் மாணிக்கவாசகர் திருவாசகம் எழுதினார். இங்குள்ள தேர் தமிழகத் திலுள்ள பெரிய தேர்ககளுள் ஒன்றாகும். திருவில்லிப்புத்தூர்,  திருநெல்வேலி, திருவாரூர் ஆவுடையார்கோயில் ஆகிய ஊர்களில் உள்ள தேர்கள்தான் தமிழகத்தில் உள்ள கோயில்களின் பெரிய தேர்கள்.  ஆவுடையார்கோயில் தேரை இழுக்க சுமார் ஐயாயிரம் பேர் கூடினால்தான் இழுக்க முடியும்,தேர்  திருவிழாவுக்கு  இதற்கென்றே  எங்கிருந்தெல்லாமோ பக்தர்கள் கூட்டம்  திரண்டுவிடும் .

இங்கே உள்ள சிற்ப அதிசயங்கள்: டுண்டி விநாயகர், உடும்பும் குரங்கும், கற்சங்கிலிகள், சங்கிலியின் நுனியில் பாம்பு ஒன்று பின்னிக்கொண்டு தலையினைக் காட்டுவது. இரண்டே தூண்களில் ஓராயிரம் கால்கள். ஆயிரத்தெட்டு சிவாலயங்களில் உள்ள இறைவன் இறைவியர் திருவுருவங்கள். பலநாட்டுக் குதிரையின் சிற்பங்கள். அனைத்து நட்சத்திர உருவச் சிற்பங்கள். நடனக்கலை முத்திரை பேதங்கள்.

சப்தஸ்வரக் கற்தூண்கள். கூடல்வாய் நிழல் விழும் பகுதி பசுமாட்டின் கழுத்து போன்று காணப்படுபவை.

 



GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...