Sunday, October 6, 2019

COMMON PRAYER




                                                  
        நலம் பெற பிரார்த்திப்போம்.   J K  SIVAN 
 

மனித வாழ்க்கை எவ்வளவு நிரந்தரமற்றது, நமது எண்ணங்கள் கனவுகள் எப்படி ஏமாற்றத்தை விளைவித்து துன்பத்தை சேர்க்கும் என்பதற்கு ஒரு உதாரணம் ஸ்ரீ மதி மஹாலக்ஷ்மி கிருஷ்ணன் வாழ்க்கை. சுறுசுறுப்பாக  ஒரு மதியம பிராமண ஸ்மார்த்த குடும்ப பெண்மணி, படித்தவர், நல்ல ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்து அதேபோல் மற்றொரு குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு குழந்தை குட்டியோடு வாழ்க்கை நடந்துவந்தது  மூன்று வருஷங்களுக்கு முன்பு வரை. 

அப்புறம் காரணமே தெரியாமல் ஒரு கட்டி  TUMOUR  ( IN COLLAR BONE  C3 & C4)  மூளைக்கும் முதுகெலும்புக்கும்  செல்லும் ஒரு ரத்தக்குழாயில் பிறந்து வலியே இல்லாமல் சுகமாக அது இருந்தாலும், மூளையிலிருந்து முதுகெலும்பு நரம்புகளை பாதித்தது. பாவம் மஹாலக்ஷ்மி ரத்த ஓட்டம் சரியில்லாமல் அடிக்கடி வீட்டுக்குள்ளேயே துவண்டு விழ ஆரம்பித்தார். இடது கை பலஹீனம், முன்பு போல் குடும்பத்தில் தலைவிக்கான வேலைகளில்  ஈடுபட இயலவில்லை.  கோயில் குளம் செல்லமுடியவில்லை .வயதான கணவர் உதவியுடன் அன்றாட சாப்பாடு குடும்பத்திற்கு. மகன், மருமகள் உதவி இருந்தாலும் எந்த மருந்தும் இதற்கு இல்லை.  ஆபரேஷன் செய்து கட்டியை அகற்றியும் மருந்துகள் எதுவும் கிடையாதாம். உடல் பயிற்சி மூலம் நரம்புகளுக்கு பலம் ஊட்டவேண்டும். ஏதோ முடிந்தவரை வீட்டில் இயங்குகிறார். 

மஹாலக்ஷ்மி கிருஷ்ணன் நமது முகநூல் சகோதரி. அறுபதுக்கு மேல் வயதானவர். என்னை சதாபிஷேகம் அன்று பார்த்து ஆசி பெற விருப்பம். உடல்நிலை இடம் கொடுக்காதே.  அவர் கணவராலும்  அவரை தனியாக விட்டு வரமுடியவில்லை. எனக்கு விஷயம் சொல்லி  தொலைபேசியில் பேசினோம். நானே  வருகிறேன்  என்றேன். 

நங்கநல்லூரிலேயே இருப்பதால் நேரில் சென்றேன்.  அவர் கணவர் மெதுவாக அவரை அணைத்து பிடித்து ஹாலுக்கு அழைத்து வந்தார். அவரை சந்தித்தேன். முகத்தில் ஆயிரம் வாட் வெளிச்சம்.  SKST  முகநூல் குழு ஒரு குடும்பம் என்று புரிகிறது.

நமது முகநூல் நண்பர்கள் அனைவருடனும்  சேர்ந்து நானும் உங்கள் உடல் நிலை மீண்டும் சீர் பெற  காக்கும் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணனை பிரார்த்திக்கிறோம் என்று  ஆறுதல் சொல்லி  தம்பதியர் வணங்க அவர்களை வாழ்த்தினேன்.  ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் டிரஸ்ட்  புஸ்தகங்கள் சிலவற்றை அளித்தேன்.  சந்தோஷமாக பெற்றுக் கொண்டார். என் எழுத்து பிடிக்குமாம்.

நாம் அனைவரும் ஸ்ரீமதி மஹாலக்ஷ்மி கிருஷ்ணன் நன்றாக உடல்  தேறி, பழையபடி நலம் பெற  பிரார்த்திப்போம்.

அவருடன்  ஆறுதலாக  பேச விரும்பினால்:  அவர் எண் : 9176260914

ஸ்ரீ கிருஷ்ணன் தம்பதியர்  அவர்கள் வீட்டில் இன்று காலை நான் சென்றபோது என்னோடு ஒரு போட்டோ எடுத்துக் கொண்டார்கள்.  ஸ்ரீ கிருஷ்ணன் நன்றாக  SELFY  எடுக்கிறார்.  



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...