உயிரோடோ பிணமாகவோ கொண்டுவா...
J K SIVAN
''யாரும் சப்பை கட்டு கட்டவேண்டாம். இது முகலாய சாம்ராஜ்யத்துக்கு பெருத்த அவமானம். கேவலம் ஒரு வழிப்பறி கொள்ளைக்காரன், சில குதிரை வீரர்களை மட்டும் கொண்டவன் நமக்கு சவால் விடுவதா?. பீஜப்பூர் சுல்தான் என்ன செயகிறான்? . உடனே அவனுக்கு செய்தி அனுப்பி இன்னும் ஒரு மாதத்துக்குள் சிவாஜி என்பவன் தலை என் காலடியில் கிடக்க வேண்டும்'' அவுரங்கசீப் கத்தினான். கண்களில் தீப்பொறி.
கடிதம் பீஜப்பூர் சுல்தான் அடில் ஷாவிடம் சேர்ப்பிக்கப்பட்டது.
''சக்ரவர்த்தி என்ன எழுதி இருக்கிறார் படி'' என்றான் அடில் ஷா. அவையில் எல்லோரும் டில்லி சக்ரவர்த்தி என்ன சேதி அனுப்பியிரு
க்கிறார் என்று அறிய ஆவலாக இருந்தனர். கொஞ்ச நாளாகவே டில்லி சக்ரவர்த்தி எல்லோர் மேலும் கடு கடுவென எரிந்து விழுகிறார். சில தலைகள் உருண்ட செய்தி பீஜப்பூர் வந்திரு
ந்தது.
சுல்தானின் மந்திரி படித்தான். சுல்தான் முகம் வியர்த்தது. ஆம் சிவாஜி ஒரு தீய சக்தி. அவனை எப்படியாவது உயிரோடு அல்லது பிணமாக பிடித்தால் தான் முகலாய சாம்ராஜ்யம் நிம்மதி அடையும். ''சக்ரவர்த்தி ஆணை அல்லாவின் கருணையால் நிறைவேற்றப்படும் என்று பதில் அனுப்புங்கள்'' என்ற சுல்தான்
சிறிது நேரத்தில் தனது அந்தரங்க அறையில் நுழைந்தான். அவன் சொல்லி அனுப்பிய அப்ஸல் கான் அங்கே காத்திருந்தான்.
''சுல்தான் எதற்கு முக வாட்டம்?'' நாங்கள் எங்கள் உயிரையும் உங்களுக்கு கொடுக்க தயங்கமாட்டோம்.''
''அப்ஸல் , மறுபடியும் சக்ரவர்த்தி அந்த பயல் சிவாஜி பற்றி சேதி அனுப்பி கட்டளையும் இட்டிருக்கிறார். ஒருமாதம் கெடு . அதற்குள் அந்த மலை எலியை பிடிக்கவேண்டும் அல்லது கொன்று தலையை கொண்டுவரவேண்டும்.. நீ தான் பீஜப்பூரில் பலசாலி, சாமர்த்தியமான தளபதி. என்ன சொல்கிறாய்.? உன்னால் சிவாஜியை கொண்டுவரமுடியுமா?''
''ஹுசூர், சிவாஜியை அந்த மலைப் பிரதேச த்தில் பிடிப்பது கடினம். சாமர்த்தியமாக எங்காவது கிளம்பி வர செய்து பிடிக்க என் மனதில் திட்டம் ஏற்கனவே தயார்.''
''என்ன திட்டம் அது சொல் அப்ஸல் ''
'' முகலாய சக்ரவர்த்தி அவுரங்க சீப் உன் வீரத்தை பாராட்டி, உனக்கு மன்னிப்பு வழங்க முன் வந்திருக்கிறார். நீ உடனே பீஜப்பூர் சுல்தானிடம் சரணடைந்தால் உன் உயிர் தப்பும். கப்பம் கட்டி நீ உன் சிறு குறுநிலத்தில் ஆண்டு கொண்டு நிம்மதியாக இருக்காலாம் என்று சிவாஜிக்கு நான் தூது அனுப்புகிறேன். நாம் இருவர் மட்டுமே சந்திப்போம்.''
ஒரு தனி இடத்தில் வரவழைத்து நானே அவனை கொல்கிறேன். அவனை சுற்றி வளைக்க குதிரைவீரர்கள், ஆயுதம் தாங்கிகள் என் அருகில் மறைந்து தயாராக இருப்பார்கள்.
''அப்ஸல், உன் முயற்சி வெற்றிபெற்றால் உனக்கு இந்த ராஜ்யத்தில் என்னவெல்லாம் கிடைக்கப்போகிறது என்று நீயே ஆச்சர்யப்படப்போகிறாய். போய் வா, வெற்றியுடன் திரும்பி வா. நல்ல சேதியோடு வா.'' அடில் ஷா அப்ஸல் கானை அனுப்பினான்.
செப்டம்பர் 1659ல் அப்ஸல் கான் 'சிவாஜி வேட்டைக்கு' கிளம்பினான். அவனோடு சென்ற படை வீரர்கள், துளஜாப்பூர் வரை நடந்தார்கள். துளஜாப்பூர் பவானி அம்மன் சக்தி வாய்ந்தவள். பல்லாயிரம் ஹிந்துக்களின் தெய்வம். போஸ்லே மராத்தி ராஜ குடும்பத்தின் தெய்வம். பவானி அம்மன் சிவாஜியின் இஷ்ட தெய்வம். அவர் வழிபடும் சக்தி தேவி.
''அது என்ன கோவில் அங்கே தெரிகிறது ?''
நவாப், அது ஹிந்துக்கள் கொண்டாடும் பவானி அம்மன் ஆலயம். இந்த ஊர் துளஜாப்பூர் .
''ஓஹோ, அது இனிமேல் கிடையாது. தெரிகிறதா? உடனே அழித்து விடுங்கள் இந்த ஆலயத்தை. எனக்கு சிவாஜி மேல் இருக்கும் கோவம் இதன்மேல் வெளிப்படட்டும் . தடுப்பவர்களை அங்கேயே கொல்லுங்கள்'' .
காற்று மார்கத்தில் பீஜப்பூர் சுல்தானின்
தளபதி துளஜாப்பூர் நோக்கி படையோடு வருகிறான் என்ற விஷயம் முன்னாடியே கோவில் அர்ச்சகர்களுக்கு தெரிந்து விட்டது. எங்கும் பயம் கண்களில் ஹெரிந்தது. எத்தனை ஹிந்துக்கள் மரணமடையப் போகிறார்களோ? கோவில்கள் வீடுகள் சூறையாடப்படுமே, பெண்கள் கற்பிழந்து உயிர்விடுவார்களே.... பகவானே , அம்பா, துளஜா பவானி ...... அம்மனுக்கு எந்த குறைபாடும் நேரக்கூடாது என்று அம்பாளை அப்புறப்படுத்தி ஒளி த்து வைத்துவிட்டார்கள்.
''எங்கே அந்த கடவுள் ?'' அப்ஸல் கான் துளஜாப்பூர் ஆலயத்தின் வாசலில் கர்ஜித்தான்
''அதை காணோம். யாரும் வழி படுவதில்லை போல் இருக்கிறது. எங்கோ அவர்களே தூக்கி எறிந்து விட்டார்கள் ''
ஒரு கணம் யோசித்த அப்ஸல் கான் ''சரி அதோ தெரிகிறதே இந்த கோவிலின் பசுக்கள் அவற்றை வெட்டி அதன் ரத்தத்தை எங்கும் தெளியுங்கள். இனி அவர்களுக்கு இந்த ஆலயத்தில் புனிதம் கிடையாது '' ஹா ஹா ''என்று சிரித்தான் அப்சல்கான்
இந்த அக்கிரமம் நடந்ததை ஒற்றர்கள் சத்ரபதி சிவாஜியிடம் அறிவித்தார்கள். அப்போது அவர் வீரர்களுடன் ராய்காட் என்னும் ஊரிலிருந்து ஜாவொலி என்ற ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
''இப்போது அப்ஸல் கான் எங்கே இருக் கிறான்?'' கோபத்தோடு வினவினார் சிவாஜி. கோபத்தில் கண்கள் சிவந்தது.
''மஹாராஜ், அவனும் அவன் வீரர்களும் தென் மேற்காக பயணம் செய்து, பந்தர்பூர் செல்கிறார்கள்.'' '
'அவனைக் கண்காணித்து ஒவ்வொரு மணி நேரமும் எனக்கு செய்தி வரவேண்டும்.''
'' பாண்டுரங்கனோடு விளையாடி விட்டான். அதன் பலனை அனுபவிக்க போகிறான்'' என்று பண்டரிபுரத்தில் வயதான ஒரு பாண்டுரங்க பக்தர் சாபம் கொடுத்தார். அப்ஸல்கானின் வீரர்களும் குதிரை, யானைப் படைகள் பீமா நதியின் புனிதத்தை பாழ் படுத்திக் கொண்டிருந்தன. பந்தர்பூர் பெயர் வரக்காரணமான புண்டலீகன் சிலையை பாழ்படுத்தி பீமா நதியில் வீசி எறிந்தான் நவாப்.
முகலாயர் ஆட்சியில் ஹிந்து கோவில்கள் எண்ணற்றவை அழிந்தன. கணக்கில்லாமல் ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர். உயிருக்கு பயந்து மதம் மாறினார்கள். பெண்கள் கற்பு சூறையாடப்பட்டது. குழந்தைகள் கொல்லப் பட்டன. ஹிந்துக்கள் பயத்தில், பீதியில் வாழ்ந்தனர். முகலாய வீரர்கள் படைகள் நடமாட்டத்தை அர்ச்சக, கோவில் நிர்வாக பிராமணர்கள் முன்கூட்டியே அறிந்து தக்க நேரத்தில் விக்ரஹங்களை ஜாக்கிரதையாக தாய் குழந்தையை காப்பது போல் பாதுகாத் தனர்.
இடுப்பில் கைகளை ஊன்றி செங்கல் மேல் நிற்கும் கிருஷ்ணனாகிய பந்தர்பூர் பாண்டுரங்கன் ஆகவே முன்கூட்டியே எங்கோ எடுத்து செல்லப்பட்டிருந்தான். நாச வேலையை முடித்து அப்ஸல் கான் படை ரஹீமத் பூர் சென்று அதன் வழியாக வாய் என்கிற ஊர் அடைந்து அங்கே தங்கியது. அங்கே தான் அப்சல்கானுக்கு ஒரு வினோத எண்ணம் தோன்றியது. அந்த ஊரில் இரும்பு வேலை செய்பவர்களை கூப்பிட்டு ஒரு ஆள் உயர இரும்பு கூண்டு தயார் பண்ண உத்தரவிட்டான். எதற்கு? சிவாஜியை பிடித்து கூண்டில் அடைத்து டில்லிக்கு அனுப்பவேண்டாமா?.
No comments:
Post a Comment