வாய்விட்டு சிரிங்க . J K SIVAN
சிரிக்க முடிந்த, சிரிப்பினால் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடிந்த ஒரே இனம் மனித இனம்.
சிரிப்பதற்கு எத்தனையோ காரணங்கள். சிலர் காரணமில்லாமலேயே கூட சிரிப்பார்கள். KR விஜயா, பழைய கேரள முதல்வர் கருணாகரன் போன்றவர் கள் துக்க சமாச்சாரங் களுக்கு போனால் கூட பல்லைக் காட்டாமல் இருக்க முடியாது போல் தோன்றுகிறது. இவர்கள் இயற்கை
யா கவே ''சிரிப்பாய் சிரிப்பவர் களோ!''
சிலர் தனக்குத் தானே சிரித்துக் கொள்வார் கள். அவர்களிடம் கொஞ்சம் ஜாக்ரதை யாகவே நாம் தள்ளி நிற்கவேண்டும்.
எதற்கெடுத்தாலும் சிரிப்பவர்கள் உண்டு. ஒரு நண்பனை ''டேய் சுந்து, நீ சிரிக்கும் போது அழகாக இருக்கிறாய் என்று சொல்லி அவன் ஆபிசில் எப்போதும் சிரித்துக்கொண்டே இருந்து, பொறுப் பற்றவன் என பட்டம் வாங்கி சென்னை ஆபிசிலிருந்து ஒரு ஆளில்லாத பனங்காட் டுக்கு மாற்றப்பட்டான். பழையகால பழமொழி ஒன்று ''புகையிலை விரிச்சாப் போச்சு பொம்பளை சிரிச்சாப் போச்சு'' என்பதை யாரும் இப்போது கடைபிடிப்ப தில்லை.
தமிழ் சினிமாவில் சிரிப்பதற்காக எதை வேண்டுமானாலும் செயகிறார்கள். குள்ளமாக, நெட்டையாக, குண்டாக, கண் பார்வை நேராக இல்லாதவன், வழுக்கைக் கு நடுவே ரெண்டு மூன்று சிண்டு இருப்ப வன், கோணங்கித்தனம் பண்ணுபவன், எல்லாம் சிரிப்பு நடிகர்கள் என்று ஆகிவிட்ட து. அவர்களை ஒருவன் அடிப்பது, திட்டு வது, அவன் தவிப்பது ஹாஸ்ய ரசனை என்று ஆகியது அநியாயம்.
சிரிக்காமலேயே உர்ர் என்று நரசிம்ம ராவோ, மன்மோகன் சிங் போலவோ இருப்பதும் ரொம்ப கஷ்டம். அந்த ஆசாமிகளிடம் காலம் தள்ளுவதோ சிறிது நேரம் சமாளிப்பதோ கூட சங்கடமாகத் தான் இருக்கும். திலீப்குமார் படங்களில் அவர் சிரிப்பது வயிற்று வலியோடு சிரிப்பது போல் இருக்கும்.
சிரிப்பதைப் பற்றி ஒரு பத்து நல்ல விஷயம் சொல்ட்டுமா?
1. சிரிப்பவர்களிட்ம் தான் நாம் பழக முடியும். சிரிப்பு எளிதில் எல்லோரையும் கவரும் ஒரு சாதனம். சிரிக்கும்போது நீ அழகாய் இருக்கி றாய் என்றுமட்டும் யாரிடமும் சொல்லாதீர் கள் சிரித்தே கொன்று விடுவார்கள். சிரிப்ப வர்களிடம் பழகினால் அவர்கள் எவ்வளவு சந்தோஷ மாகஇருக்கிறார்கள் என்பது புரியும். கவலைக்கு எதிர் நிலை சிரிப்புடன் கிடைக் கும் சந்தோஷம். வள்ளென்று விழுபவனிடம் எவனும் நெருங்க மாட்டான்.என் நண்பர் ஒருவர் என்ன விஷயமானாலும் முக்கி முனகிக் கொண்டே தான் சொல்வார். முக்கலும் முனகலும் சந்தோஷத்தின் எதிரிகள்.
2. புன்னகை ஒரு காந்தம். கவர்ச்சி சாதனம். நமது மனோநிலையைக் காட்டும் கண்ணாடி.. எப்போவாவது அடுத்த முறை ஒரு கஷ்டம் வரும்போது கொஞ்சம் சிரிப்போடு அதை அணுகிப் பாருங்களேன் .அப்போது தெரியும். அதனால் தான் வள்ளு வரோ வேறு யாரோ ''துன்பம் வந்தால் நகுக'' என்று சொல்லியிருக் கிறார். இதற் காக நண்பர் ஒருவர் அவரது நெருங்கிய உறவினர் மரணமடைந்தபோது அவர் வீட்டில் போய் ''துன்பம் வந்தால் நகுக;; என்று சொல்லவேண்டாம். நீங்களும் ''நகுக்காதீர் கள். வேண்டாம். விளைவு விபரீதமாகும். துன்பம் என்றால் இந்த இடத்தில் ஒரு வேதனை, சோதனை என்று அர்த்தமாகக் கொண்டாலே போதுமானது.
3. சிரிப்பு ஒரு ஒட்டுவாரொட்டி - ஒருவரிடமி ருந்து மற்றவருக்கு எளிதில் பரவும் நல்ல தொத்து ''வியாதி'' . ஒருவன் ஒரு அறை யில் பல பேரோடு சிரித்துப் பேசிக் கொண் டிருந் தால் அந்த இடமே பிரகாசமாகி விடுகிறது. எங்கிருந்தோ வேறு சிலர் அந்த அறைக்குள் அல்லது அந்த கும்ப லில் தாங்களே வந்து கலந்து கொள்வார்கள் இது எனக்கு நீண்ட கால பழக்கம். கொல் லென்று சிரிப்பு அனைவ ரையும் கவரும். பல தலைகள் சந்தோஷத் தோடு இங்கே யே கவனமாக இருக்கும். சிரிப்பதால் உடல் அயர்ச்சி நீங்கும்.
4. சிலர் கண்ணாடி முன் நின்று சிரிப்ப தை தேக ஆரோக்ய உடல் பயிற்சி யாக செய்கி றார்கள். சிரிப்பதற்கு ஒரு கிளப், சங்கம் கூட இருக்கிறது. ''கார சாரமாக'' எதையும் விவாதிப் பார்களோ ?
5 அல்ப வியாதிகளான ஃப்ளு ஜுரம், சளி, ஜலதோஷம், தொந்தரவுகள் கூட சிரிப்ப தால் விலகுமாம்.
6. 'உர்ர்' ஆசாமிகளே, கொஞ்சம் உங்கள் காதுகளைக் கொடுங்கள் - ரத்த அழுத்தம் BP சிரிப்பதால் சீராகிறது. உங்களுக்கு ஹை , லோ bp இருந்தால்அதற்கு என்ற ஒரு மானிடர் கருவி இருக்கிறது. அதை உபயோகித்து என்ன அளவு என்று முதலில் பாருங்கள். பிறகு ஒரு ஹாஸ்ய புத்தகமோ ஒரு சிடியோ போட்டு பார்த்து விட்டு சிரித்து, பிறகு மானிட்டரை அளவு காட்டசொல்லுங்கள். நன்றாகவே குறைந்து சீரான ரத்த ஓட்டத்தை காட்டும். இது தெரிந்துதான் அந்த காலத்தில் நல்ல தங்காள், பாச மலர், கல்யாண பரிசு போன்ற சோக படங்களிலும் நடு நடுவே NSK TAM ஜோடிகள் போல் வந்து நகைச் சுவை காட்சிகளை இணைத்திருந்தார்கள். நகைச்சுவை இல்லாத தேவதாஸ் போன்ற படங்கள் அழுவதற் கென்றே எடுக்கப் பட்டவை. அவை பற்றி நான் இப்போது இங்கே பேசப்போவதில்லை
7. ஒரு வியாதி உடலில் வந்தால் வலியும் கூடவே தெரியும். இதற்கென்றே வலி கொல்வான் (pain killers ) கொடுப்பார்கள். சிரிப்பு ஒரு வலி கொல்வான் என்பது தெரியுமா?
சிரிக்கும்போது உடலில் எண்டார்பின் (endorfphin) செரோடொனின் (serotonin) போன்றவை சுரக்கிறதாம். நமது உடலில் நாம் சிரிப்பதால் உண்டாகும் வலி குறைப் பானும் , இந்த எண்டார்பின் செரோ டொனின் போன்ற மூன்றும் சேர்ந்து உடல் நிலை சீர்படுகிறது. இது படிக்கவே நன்றாக இருக்கிறதே.சிரிப்பதால் எத்தனை சுகம் பார்த்தீர்களா! எனவே சிரிப்பு ஒரு இயற்கை மருந்து, வைத்தியமும் கூட
8. சிரிப்பதால் நீ இளமை பெறுகிறாய்..!!! . எவ்வளவு அருமையாக இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே.....மேக் அப், ''வாலிப வயோதிகர்களே'' சிட்டுக்குருவி லேகியம் ஒன்றுமே வேண்டாம். இயற்கை யாகவே இளமை கொஞ்சும்.ஜனகராஜ் சிரிப்பு கொஞ்சம் ரசனை குறைவு எனக்கு. வீரப்பாவின் அதிர் வெட்டு சிரிப்பு செயற்கையானது. நாகேஷின் நடிப்பை சிரிப்பை மூட்டும். சிரிப்பின் மனித உருவம் கிரேஸி மோஹன்.
9. சிரிப்பு காரியம் சாதிக்க உதவும். சிரித்து மயக்குவது அனைவருக்கும் தெரியாத ஒரு கலை. சிரித்தே அவன் காரியம் சாதித்துக் கொள்வான் என்று சிலரைப் பற்றி சொல்கிறோம். அது கெட்டிக்காரத்தனம். சிரிப்பு ஒரு சர்வார்த்த சாதகி. கூட்டத்தில் பேசும்போது ஹாஸ்யமாக பேசுபவன் நிறைய கைதட்டல்களையும் 'ஹா ஹா' காரமும் பெறுகிறான். புள்ளி விவரம் மட்டும் நிறைய சேகரித்துக் கொண்டு வந்து குப்பை கொட்டுபவன் நிறைய தூங்கும் தலைகளை மட்டுமே எதிரே பார்க்க முடியும்.
10 சிரிப்பு இருக்கிறதே. அது ஒருவனை பாசிடிவ் ஆக இருக்க செய்கிறது. தைர்யம் அளிக்கிறது. சிரிக்கும்போது உள்ளே சில நரம்புகள் ஊக்குவிக்கப் படுகின்றன. வாழ்க்கை இனிக்கிறது. தொங்கு முகங்கள் ஓடிவிடும். கவலைக்கு அட்ரஸ் இருக்காது.
இதற்கு மேலும் சிரிப்பை பற்றி சொல்ல அவசியமில்லையே. ஒரு அருமையான பாடல் நினைவிருக்கிறதா. TMS குரலில் MGR என்று நினைக்கிறேன் அவர் பாடும், கண்ணதாச னோ வேறு யாரோ எழுதிய ஒரு அழுத்தமான பாடல் '' சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே'' இந்த பாடலில் இருந்து கிடைக்கும் மெசெஜ் ஒன்றே போறுமே . நாகேஷ், NSK , கிரேசி மோகன், தங்கவேலு SV சேகர்
போன்றவர்கள் சிரிப்பு வைத்ய நிபுணர்கள் என்பதில் இன்னமும் சந்தேகமிருக்கிறதா உங்களுக்கு?
No comments:
Post a Comment