ஐந்தாம் வேதம் J K SIVAN
ஜனகரும் சுகரும்
அவனும் ராஜா, நாமும் இந்த நாட்டு மன்னர்கள் என்று நம்மை ராஜாவாக்கி விட்டார் பாரதியார்.
அவனுக்கும் பாரதம் தெரியாது, நமக்கும் தெரியாது.
அவன் காலத்தில் புஸ்தகங்கள், டிவி வீடியோ, யு ட்யூப், வாட்ஸாப், FB, மொபைல் இல்லே. அதனாலே தெரிஞ்சுக்க வழியிலேயே. நமக்கு இதெல்லாம் இருந்தும் சரியா சொல்ல ஆளில்லை.
ஜனமேஜயனுக்கு வைசம்பாயனம் உட்காரவைச்சு மஹாபாரதம் சொன்னார். நமக்கும் இப்போது தான் தெரியும்.
கடைசியா மஹாபாரதம் விறுவிறுப்பாக ரொம்ப இன்டெரெஸ்ட்டா இருக்குன்னு ஜனமேஜயன் சொல்றான் நாமும் அப்படியே தானே சொல்றோம்?
ஜனமேஜயனுக்கு பாண்டவர்கள் உறவு. கொள்ளு பாட்டனார். நமக்கு கிருஷ்ணன் எப்போதுமே சொந்தம், நெருங்கிய உறவு இல்லையா. அது தான் ஒற்றுமை வேற்றுமை விவகாரம். இனிமேல் பாரதத்துக்குள் வைசம்பாயனர் மேலே சொல்வதை கேட்போம்.
''ஜனமேஜயா, பீஷ்மர் யுதிஷ்டிரனுக்கு யாஞவல்க்யர் சொன்ன ஒரு விஷயத்தை சொல்கிறேன் கேள்.
பீஷ்மர் அம்பு படுக்கையில் யுதிஷ்டிரனுக்கு உபதேசங்கள் சொல்வதை தொடர்கிறார்.
'பூமியில் இறந்தவர்களின் ஜீவன் எங்கே போகும் தெரியுமா?.
பாதம் வழியாக உயிர் பிரிந்தால் அவன் விஷ்ணுலோகம் அடைகிறான்.
கெண்டைக்கால் சதை வழியாக உயிர் இருந்தால் வசுக்கள் இருக்கும் இடம் செல்கிறான்.
கால் முட்டி வழியாக உயிர் புரிந்தவன் சத்திய தேவதைகள் உள்ள இடம் அடைகிறான்.
வயிற்றின் கீழ் பகுதி குழாய்கள் வழியாக உயிர் புரிந்தவன் மித்ரனை சேர்கிறான்.
உடலின் பின்புற சருமம் வழியாக செல்லும் உயிர் பூமிக்கே திரும்புகிறது.
தொடை வழியாக பிரியும் உயிர் பிரஜாபதியை சேர்கிறது.
விலா எலும்புக்கும் இடுப்புக்கும் இடை யிலுள்ள பிரதேசத்தின் வழியாக செல்லும் உயிர் மருத்துகளை அடைகிறது.
மூக்கு வழியாக பிரியும் உயிர் சந்த்ரமண்டலத்தை அடையும்.
கைகள் வழியாக செல்லும் உயிர் இந்திரலோகம் செல்லும்.
மார்பிலிருந்து பிரிந்தால் ருத்ரனை அடைகிறது.
கழுத்து வழியாக செல்லும் ஜீவன் நர ரிஷியிடம் செல்கிறது.
வாய் வழியாக செல்லும் உயிர் விஸ்வ தேவர்களை அடையும்.
காது வழியாக செல்லும் ஜீவன் தொடு வானத்தை அடையும்.
மூச்சு விடும்போது அதோடு சேர்ந்து பிரிந்தால் வாயுவை அடையும்.
கண்கள் வழியாக செல்லும் உயிர் அக்னியை அடைகிறது.
புருவம் வழியாக செல்லும் உயிர் அஸ்வினி தேவதைகளை அடையுமாம்.
நெற்றி வழி செல்லும் உயிர் பித்ருலோகம் அடையும்.
கபாலத்தை உச்சி வழி செல்லும் உயிர் நேராக பிரம்மலோகம் செல்லும்.''
இதெல்லாம் யாக்ஞவல்கியர் மிதிலை அரசன் ஜனகனுக்கு சொல்லித் தந்தது.
இன்னொரு விஷயமும் பீஷ்மர் சொல்கிறார். ''யுதிஷ்டிரா, ஜனகர் சுலபா என்கிற வேதாந்தி பெண்ணிடம் பேசும்போது அவள் உயிர்கள் எவ்வாறு உண்டாகிறது என்பதை விவரிக்கிறாள் . மிகவும் ருசிகரமான தகவல் இது.
ஆசையினால் தான் பிறவிகள் அடுத்து அடுத்து உண்டாகிறது. அந்த ஆசையைத் தான் ''வாசனா'' என்கிறார்கள். ஒரு முப்பது விதிகள் தான் பிரபஞ்சத்தில் பிறவியை உண்டாக்குகிறது என்று சாங்கிய யோகிகள் நம்புகிறார்கள். கர்மகாண்டம் பரம புருஷனும் பிரபஞ்ச அணுக்களும் சேர்ந்து பிறவி என்கிறது. அப்படியில்லை, புருஷன், அவன் மாயை, மற்றும் ஜீவன், அதோடு அவித்யா என்கிற அஞ்ஞானம் இது சேர்ந்து தான் பிறவி என்றும் சொல்லுகிற பிரிவும் உண்டு.
எது எப்படியானாலும் ப்ரக்ரிதி அரூபத்திலிருந்து ரூபமாக உடலாக உருவெடுக்கிறது. நீ, நான், மற்றும் எல்லா உயிர்களும் இப்படி தான் தோன்றியவை.

உயிர் அணு என்கிற ஜீவ சக்தி மற்றொரு ரத்தத்தோடு சேர்ந்து கருவாகிறது. இந்த நிலைக்கு ''கலலா'' என்று பெயர். அதற்கு அடுத்த நிலை, ஒரு கொப்புளம் (bubble )அதற்கு ''உத்வுதம்'' என்ற பெயர்.
அது வளர்ந்து ''பேசி''ஆகிறது. அப்போது தான் கருவிற்கு கால் கை முளைக்கிறது. நகம் முடி ஆகியவை உண்டாகிறது. ஒன்பது மாத காலம் ஆனவுடன் மண்ணில் கீழே விழுகிறது. அதன் உறுப்பு அதை ஆணா பெண்ணா என தெரிவிக்கிறது.
பளபளக்கும் தாமிர நிறத்தில் அதன் விரல்கள், நகங்களோடு காட்சி அளிக்கிறது.
அப்புறம் சிசுவின் உருவம் வளர வளர மாறுதல் நேருகிறது. முதுமை பெறுகிறது. ஒவ்வொரு பிறவியும் இந்த நிலைகளை அடையும்போது ஒரே மாதிரி இருப்பதில்லை.
எரியும் தீபங்கள் ஒரே மாதிரியாகவா உருவம் அசைவு எல்லாம் பெற்று ஒளி வீசுகிறது?.
விதி, ஆசை, வாசனா, என்பவை அல்லவோ அதன் போக்கை, நிர்ணயிக்கிறது.இப்படித்தான் ஒன்று பலவாகிறது. மாறுபடுகிறது. இதை உணர்ந்து மாறுபாட்டை மீறி எவன் சமமாக அனைவரையும் தானே என்று பாவிக்கிறானோ அவனே மோக்ஷமடைபவன்.
''தாத்தா,எனக்கு சுகப்பிரம்ம ரிஷி பற்றி சொல்லுங்கள்'' என்றான் யுதிஷ்டிரன்.
''சொல்கிறேன் கேள்.வியாசர் நூறு வருஷம் தவம் இருந்து புத்ரன் ஒருவன் வேண்டுமென்று பரமசிவனை வேண்ட, பஞ்சபூதங்களின் சக்தியும் ஞானமும் கொண்ட ஒரு மகன் அவருக்கு ஒரு அப்சரஸ் க்ரிடச்சி என்பவள் தொடர்பாக, அரணிக் கட்டைகளின் அக்னிப் பொறியாக பிறந்தான்.
சகல வேத சாஸ்திரங்களும் கற்றார் சுகர். வியாசர் அவரை மிதிலையில் ஜனகரிடம் மோக்ஷ மார்க்கம் பற்றி அறிந்துவா என்று அனுப்புகிறார். காடு மேடு மலை வனாந்திரங்கள் நடந்து சுகர் மிதிலை அடைந்தார். காவலாளிகள் உள்ளே விடவில்லை. காத்திருந்த பின் முதல் அறைக்கு சென்றார். அங்கிருந்த இடர்ப்பாடுகள், தடைகள் அவர் கவனத்தை சிறிதும் கலைக்கவில்லை. மோக்ஷமார்கம் ஒன்றே நினைப்பாக காத்திருந்த சுகரை அடுத்த அறைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே ஒரு பசுமையான பூம் பொழில் நந்தவனம்.அங்கே அழகிய பெண்கள் வரவேற்றனர். துளியும் அவர்களால் கவரப்படாமல் சுகர் தனது ஞான மார்கத்திலேயே கவனமாக இருந்தார்.
மூன்றாம் நாள் காலையில் ஜனகர் சுகரைத் தேடி வந்தார். ஜனகர் ''சுகரே, தாங்கள் என்னை தேடிவந்த காரணம் என்னவோ?'' என்கிறார்.

.
''குருவின் உதவியால் தான் ஞானம் விஞ்ஞானம் இரண்டுமே அறியமுடியும். இதுவே முக்தி மார்கத்துக்கு அடிப்படை. நதியைக் கடப்பதற்கு தோணி, தோணி ஒட்டி, இருவரும் தேவை. கரை அடைந்த பின் இரண்டுமே அவசியமில்லை. பல பிறவிகளில் தவமிருந்து பெற்ற ஞானம் முக்திக்கு அடி கோலுகிறது. முக் குணங்களையும் கடக்க உதவுகிறது. ஒவ்வொரு ஆன்மாவிலும் ஒளி வீசுகிறது. ப்ரம்ம ஞானம் அடைய அது காரணமாகிறது.
ப்ராம்மணோத்தமரே, நீங்கள் ஏற்கனவே அபேத ஞானி. அதிகம் சொல்ல தேவையில்லை. புதிதாக அறிந்து கொள்ள இங்கே எதுவுமில்லை என்கிறார் ஜனகர்.சுகர் பிறகு வியாசரிடம் செல்கிறார். வியாசர் தனது நான்கு சிஷ்யர்களுக்கும் உபதேசம் செய்து முடித்தார். அவர்களது குருகுல வாசம் முடிந்துவிட்டதால் அறிவுரை செய்து வழி அனுப்புகிறார்.
''ஒருவன் நல்ல மாணாக்கனா, நல்ல குணங்களை உடையவனா,ஒழுக்கம், சீலம், பக்தி,உடையவனா என அறிந்தே வேதம் கற்பிக்க வேண்டும். பொருத்தமானவன் மூலம் பரப்பப் படும் வேதம் சமூகத்துக்கு பயன்படும்.புரிந்து கொள்ளும் அளவுக்கு தான் ஒருவன் கற்கமுடியும். திணித்தல் பயனளிக்காது.பூமிக்கு செல்லுங்கள் வேதத்தை பரப்புங்கள்'' என வியாசர் நான்கு ரிஷிகளான சிஷ்யர்களை அனுப்புகிறார்.

No comments:
Post a Comment