நாம என்ன செய்யோணும்.... J K SIVAN
இது ஒரு நாட்டு பாடல் என்று நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. சுகாதாரம் தான் வாழ இன்றியமையாதது. நாம் என்ன செய்ய வேண்டும் என்று நம்மை தாய் போல காக்கும் நகர கார்பொரேஷன் நம்மை தொட்டிலில் ஆட்டு தாலாட்டு போல் இந்த அற்புத நாட்டு பாடலை பாடுகிறது. ஒவ்வொரு விஷயத்திலும் நம்ம எவ்வ்ளவு அக்கறையோடு பொறுப்பாக நடந்துகொள்ளவேண்டும் என்று பாடலின் வரியில் சொல்கிறது. பாட்டின் எளிய தமிழ், அர்த்தம், பொருள் செறிவு, இனிமை எல்லாமே ரசிக்கவைக்கிறது
கூட்டி பெருக்கி வாசலிலே கோலம் போடுங்க - நமது
வீட்டுக்கழகு வியாதி ஏதும் வராது
சுத்தம் சுகமெனவே சொன்னது பொய்யா? - அந்த
சுண்ணாம்பிலே ஆரோக்யம் இருக்குது ஐயா
தெருவின் அழகு தானே இந்த தேசத்தின் சிங்காரம்
மருவில்லாமே வீடிருந்தா மஹாலக்ஷ்மி வாசம்
சூட்டிலே ருசியிருக்கு என்பது பொய்யா - பழைய
சொல்லெல்லாம் சுகத்துக்காக என்பதே மெய்யா
ஈரத்தரையில் கொசுபிறக்கும் ஈயும் கரப்பும் மலிந்திருக்கும்
ஆறிப்போன சோறில் நோய்கள் ஆயிரம் பதினாயிரம்
கூட்டி குமித்த குப்பை கூளத்தை எல்லாம் ஒரு
கூடையாலே மூடிவைத்து கொட்டிட வேணும்
வீட்டுக்கு முன் வண்டிவந்து சென்றபின் அதை நீங்கள்
வெளிதனிலே கொட்டுவது வியாதியாகுமே
எச்சில் துப்பல் என்று சொன்ன பேர்களை எல்லாம் நாம்ப
ஏசினதும் பேசியதும் இப்ப தெரியுது.
எச்சிலிலே எத்தனையோ நோய் பிறக்குது - அதிலே
இருமலும் காசமும் ஒன்று என்று தெரியுது
உதடு பட்ட பாத்திரத்தில் உறிஞ்ச கூடாது ஒருவர்
உண்டுவிட்டு பாத்திரத்தில் உண்ணக்கூடாது.
பதனமாக இந்த நாட்டில் பிழைக்கவேணுமானா நாம்ப
பருகும் நீரும் உண்ணும் சோறும் பார்த்து வாழணும் ''
எவ்வளவு நல்ல அறிவுரை எக்காலத்திலும் சென்னையில் யாருக்கும் பொருந்தும். இதை எழுதினது கார்பொரேஷன் அதிகாரி இல்லை என்பது சத்யம். கார்பொரேஷனுக்காக வரிந்து கட்டிக்கொண்டு நம் உடல் நலம் ஆரோக்யம், சுக வாழ்வுக்காக எழுதியவர் அமரர் அற்புத கலைஞர் கொத்தமலங்கம் சுப்பு
No comments:
Post a Comment