மனிதருள் ஒரு தெய்வம் J K SIVAN
ஷீர்டி பாபா
13 தத்தாத்ரேய ஜெயந்தி
சந்து பாய் என்பவன் மருமாள் கல்யாணம் ஷீர்டி கிராமத்தில் கோலாகலமாக ஏற்பாடு செய்திருந்தது. சந்துபாய் ஷீர்டிக்கு முன்னதாகவே சென்று எல்லா காரியங்களிலும் கலந்து கொள்ள ஆயத்தமானார். அவருக்கு பழக்கமாகி விட்ட அந்த இளம் பக்கிரியையும் '' என் கூட வா'' என்று அழைத்தார். காளை பூட்டிய வில்வண்டிகள் ஷீர்டிக்கு புறப்பட்டன. ஷீர்டி யில் மஹாலசாபதி வாசலில் காத்திருந்து வந்தவர்கள் அனைவரையும் தக்க மரியாதையோடு வரவேற்றார்.
அவர் கண்ணில் வண்டியிலிருந்து ஒரு இளம் பக்கிரி இறங்குவது தென்பட்டது. விடுவிடுவென்று அந்த வண்டி அருகே சென்றார். இரு கைகளை கூப்பி ''ஆயியே சாய்'' (வாங்கோ அப்பா) என்று உள்ளன்போடு வரவேற்றார். அதற்கு முன் ஒருவரை ஒருவர் பார்த்ததில்லை. யாரும் அவரை அப்படி கூப்பிட்டது மில்லை. அன்றிலிருந்து அந்த இளம் பக்கிரி சாயிபாபா ஆகிவிட்டார்
எல்லாவற்றிற்கும் ஒரு நேரம், காலம், தக்க கருவி வேண்டாமா?
ஒரு தரம் விசித்திர சம்பவம். பாபா ஒரு கிரிமினல் வழக்கில் சேர்க்கப்பட்டார். ஒரு பணக்காரன் வீட்டில் கொள்ளையடித்த திருடர் கும்பல் மேல் வழக்கு. திருடர்களை பிடித்த போலீஸ் விசாரணையில் அவர்கள் தாங்கள் திருடவில்லை, அந்த பொருள்களை பக்கிரி தான் கொடுத்தார் என்று வாக்கு மூலம் அளிக்க போலீஸ் சாய் பாபாவை தேடி வந்தது.
''ஏ பக்கிரி, நீ தான் திருடப்பட்ட பொருள்களை இந்த திருடர்களுக்கு கொடுத்தவனா?'' என்று பாபாவை கேட்டார்கள்
''ஆமாம்.''''
எங்கிருந்து அந்த திருட்டு பொருள்கள் உனக்கு கிடைத்தது. உண்மையை ச் சொல் '
'"இதில் என்ன பொய் . எங்கிருந்து எல்லாம் கிடைக்குமோ அங்கிருந்து கிடைத்தது'
''பூடகமாக பேசாதே. ஒழுங்காக பதில் சொல். பக்கிரி. யார் இதெல்லாம் உன்னிடம் கொடுத்தது விவரம் எல்லாம் சொல் '' "ஓ.
எனக்கு நானே கொடுத்துக் கொண்டேன்.
''போலீசுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
''நான் தானே எல்லாம் கொடுப்பவன். என்னுடைய அனுமதி இல்லாமல் யார் எதை பெற முடியும்? மேற்கொண்டு விளக்கினார் பாபா
].போலீஸ் இனி மேல் பேசி பிரயோஜனமில்லை என்று அவர் மேல் திருடன் என்று ஒரு குற்றச்சாட்டு பத்திரிக்கை தயார் செய்தது. வெள்ளைக்கார மாஜிஸ்திரேட் சம்மன் அனுப்பிவிட்டான். நீதிமன்றத்தில் உண்மையை கூறவேண்டும். பாபாவை ஷீர்டி பஞ்சாயத்து அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைத்து போனார்கள். நீதிபதி கேள்விகள் கேட்டான்.
''உன் தந்தை பெயர் என்ன ?''
''பாபா (அப்பா)''
உனக்கு எது மதம்?'
'''கடவுள் மதம் '''
'நீ எங்கிருந்து வந்தவன் ? "
ஆத்மாவிலிருந்து''
"நீ என்னய்யா ஜாதி ?''
"தெய்வீக ஜாதி''
மாஜிஸ்திரேட் விழித்தான்.
''சரி நீ போகலாம்''
இதற்குள் திருடர்கள் சரியான ''விருந்து'' கொடுத்ததும் திருடர்கள் உண்மையைக் கக்கி விட்டார்கள். எங்கிருந்து எடுத்தார்கள் எப்படி என்ற விவரம் எல்லாம் போலீஸ் அறிந்து கொண்டுவிட்டது. சாய் பாபா வந்தவழியே சென்றார்.
ஒரு மார்கழி பஞ்சமி திதி. தத்தாத்ரேயர் ஜெயந்தி கொண்டாடினார்கள். ஷிர்டியில் நல்ல கும்பல். பல்வந்த் கைஜாக் என்ற ஒரு பணக்கார கல்விமான் மசூதிபக்கம் நடந்து கொண்டிருந் தார். பாபா கையில் ஒரு கம்புடன் எல்லோரை யும் விரட்டிக் கொண்டிருந்தார். ''சைத்தான், சைத்தான்'' என்று சொல்லி சிலருக்கு அடியும் விழுந்தது. ஏன் பாபா இப்படி பைத்தியம் பிடித்தவன் போல் நடந்துகொள்கிறார்?? என்று அநேகருக்கு வியப்பு.
''எனக்கு பிரசவ வலி . எல்லோரும் தூர போய்விடுங்கள்.'
அப்போதெல்லாம் பாபா ரொம்ப இப்படியெல்லாம் கத்துவார். கொம்பால் சிலரறி விரட்டியும் அடித்தும் இருக்கிறார். கொம்பை வீசி எறிவதும் உண்டு. அவரைக்கண்டு பயந்து ஓடிடுவார்கள்.
அன்று சற்றுநேரம் கழித்து ''பல்வந்த் கைஜாக், வாருங்கள் '' என்று பாபா அழைத்ததும் கைஜாக் வந்தார்.மசூதிக்குள் சென்றார்கள். பாபாவோடு உள்ளே சென்ற கைஜாக் பாபாவை அங்கே காணவில்லை. எங்கே போனார். எப்படி மாயமானார்?
தரையில் மூன்று தலை குழந்தை ஒன்று. ''எனக்கு பிரசவ வலி என்று பாபா'' சொன்னதன் அர்த்தமா இது? மூன்று தலை இருந்தால் தத்தாத்ரேயரோ ? அன்று அவர் ஜெயந்தி யாயிற்றே ? பிறந்து விட்டாரோ? சின்ன கை குழந்தை. நிறைய கைகள். தத்தாத்ரேயர்
பல்வந்த் கைஜாக் வெளியே ஓடி ''எல்லோரும் வாருங்கள் இங்கே'' என்று உரக்க கூவினார். அதிசய குழந்தையை கண்ட எல்லோரும் கண்மூடி தத்தாத்ரேயரை வணங்கினார்கள்.
No comments:
Post a Comment