Wednesday, October 9, 2019

ANAIKKUM KARANGAL

பிறந்த  நாளில் அணைத்த  கரங்கள் 
J K SIVAN

 நங்கநல்லூர் பகுதியில்  ''அணைக்கும் கரங்கள்''  என்ற நிறுவனத்தை எனது  நண்பர் லயன் திரு சத்ய கணேஷ் நடத்தி வருகிறார்.

பெற்றோரற்ற  குழந்தைகளுக்கு  பெற்றோராக  அவரும்  அவர் மனைவி மஹா லக்ஷ்மியும்  அருமையாக  50க்கு மேற்பட்ட  குழந்தைகளை வளர்த்து, கல்வி அளித்து  வாழ்க்கையில் முன்னேற  உதவுகிறார்கள்.  ஐந்து வயதுமுதல் 16-17 வயதுவரை குழந்தைகள் உணவு உடை, மருத்துவ கல்வி உதவி பெற்று வளர்வது பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சி.\


இன்று என்னுடைய 81வது பிறந்த நாளை (ஆங்கில காலண்டர் பிரகாரம்  அக்டோபர் 9) இந்த  ராதை கிருஷ்ணன்களோடு கொண்டாடினோம். அவர்களுக்கு இன்று காலை மதிய, இரவு உணவு  அளித்த  ஆனந்தத்திற்கு  ஈடு வேறு எதுவுமில்லை. 


பிறந்தநாள் என்றால் எங்காவது ஒரு பெரிய  நக்ஷத்ர ஹோட்டல், வாசலில் பசியோடு காக்க வைத்து உள்ளே யாரோ   நேபாளி,பீஹார்  மனிதன் உணர்ச்சி இன்றி பரிமாற ஒன்றன் பின் ஒன்றாக இதுவரை கண்டறியாத ஏதேதோ தின்பண்டங்களை பசியோடு எல்லோருமாக குறவர்களைப் போல சேர்ந்து தின்றுகொண்டு அடுத்ததுக்கு அரைமணி நேரம்  காத்திருந்து கடைசியில் சிறு  தோல் போர்த்திய  அட்டைக் குள்  பல  ஆயிரங்களை கொடுத்து விட்டு வந்து மறுநாள் வைத்தியரை தேடுகிறோம்.


இங்கே அப்படியில்லை, அன்றாட உணவு, குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான உயிர்ச்சத்து மிக்க  காய்கறிகள்,  தானியங் களால் சுத்தமாக தயாரிக்கப்படுகிறது. ருசியாகவும் இருந்தது.  நான் இன்று மதிய உணவு  அவர்களுக்கு பரிமாறியபின் அவர்களோடு  என் குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிட்டேன்.

நாங்கள்  வந்ததும் அத்தனை குழந்தைகளும் கைதட்டி வரவேற்று, கோரஸாக   ''ஹாப்பி பர்த்டே '' பாடியது எவ்வளவு மகிழ்ச்சி தந்தது!.  பீஹாரி, நேபாளி பாடுவானா, டேபிளை எப்போது காலி பண்ணுவேன்  என்று கழுகாக காத்திருக்கும்  மற்றவர்கள் தான்  பாடுவார் களா? 

பணத்தை செலவு பண்ண எத்தனையோ வழிகள் உண்டு. எதற்கு செலவழித்தால்  மற்ற  சில உள்ளங்கள் மகிழுமோ அது தான் முக்கியம். நமது  ருசிக்கும், ஏப்பத்துக்கும் அல்ல.  

50+  குழந்தைகள் அத்தனை பேரும் பள்ளியி லிருந்து நாங்கள் சென்ற போது  மதிய உணவுக்கு வரமுடியவில்லை.   சிறிய குழந்தைகள்  மட்டுமே எங்களோடு சேர்ந்துகொண்டார்.  மற்றவர்கள் வகுப்பு முடிந்தவுடன் வருவார்கள் உண்பார் கள். 

அவர்கள் எல்லோருமே  திரு  லயன்  சத்ய கணேஷ் நடத்து  கற்பக விக்னேஸ்வரா மெட்ரிகுலேஷன் ஹைய


















ர் செகண்டரி ஸ்கூலில்  அருகாமையில் உள்ளகரத்தில் படிக்கிறார்கள். 

ரெண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கும் அந்த பள்ளியில் நிறைய  நிகழ்சசி களை  ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா டிரஸ்ட் நடத்தியிருக்கிறது. அன்னதானம், புத்தக வெளியீடு பிரசங்கங்கள், கட்டுரைப்போட்டி, வினாடி வினா போட்டி எல்லாம் நடத்தி குழந்தைகளுக்கு நிறைய புஸ்தகங்கள் வழங்கியிருக்கிறோம்.  

இதற்கெல்லாம் மூலகாரணம்  ஸ்ரீ  சத்யகணேஷ் அவர் நிர்வாக குழு, ஆசிரியைகள், அணைக்கும் கரங்கள் நிர்வாகிகள், எல்லாவற்றிற்கும் மேலாக  ராதைகள் கிருஷ்ணன்கள்.  சந்தேகத்துக்கு இடமில்லாமல் இனி எனது வருங்கால பிறந்தநாளோ, மண நாளோ வந்தால் நிச்சயம்  அவர்களுடன் தான்.

அணைக்கும் கரங்கள் KSGR CHARITABLE TRUST  MOBILE  9884381831/9884381841   EMAIL:  anaikkumkarangal@yahoo.com.  bank account: KSGR CHARITABLE TRUST,  INDIAN BANK,  PUZHUDHIVAKKAM, CURRENT ACCOUNT  NO.  6096342279 IFSCODE  IDIB000P193

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...