யாத்ரா விபரம் J K SIVAN
ஒரு அதிசய லிங்கம்
எனக்கு தெரிந்து பஞ்ச வர்ணம் என்ற பேர் கொண்டவர்களை பார்த்திருக் கிறேன். எதற்கு இப்படி ஒரு பெயர் என்று யோசித்ததுண்டு? அப்படி ஒரு பெயரில் சிவன் எங்கோ கோயில் கொண்டிருப்பது எனக்கு எப்படி தெரியும்? அந்த ஊர்க்கா ரர் கள், பக்தர்கள் அவர் பெயரை வைத்துக்கொள்வதும் மரபு தானே.
திருச்சியில் ஒரு நகரம் உறையூர் என்ற கோழிமாநகரம். உறையூருக்கு திருமுக்கீஸ்வரம் என்றும் பெயர். உறையூர் ஒரு காலத்தில் முற்கால சோழர்களின் தலைநகரமாக இருந்தது. புகழ் சோழன், கோச்செங்கட் சோழன், திருப்பாணாழ் வார் ஆகியோர் பிறந்த ஊர். சோழ ராஜாக்கள் கோழிவேந்தர் என்று பெயர் சூட்டிக்கொண்டார்கள்.
இங்குள்ள சிவன் கோயிலில் ஈஸ்வரன் ஐந்து வர்ணங்களில் உதங்க முனிவருக்கு காட்சி தந்தது தான் நான் இன்று சொல்லவந்த விஷயம். காலையில் ரத்னலிங்கம்,உச்சி காலத்தில் ஸ்படிக லிங்கம், மாலை வெயிலில் தங்க லிங்கம், (ஸ்வர்ணலிங்கம்)ல், இரவில் வைரலிங்கம். நள்ளிரவில் சித்ரலிங்கம் இப்படி காட்சி தருபவர் பஞ்சவர் ணேஸ்வரர். அம்பாள் காந்திமதி.
ஐந்து வர்ணங்கள் கொண்ட ஒரு கோழி யானையை தோற்கடித்த ஊர். இதைப் பற்றி பின்னால் சொ ல்கிறேன்.
அதற்கு நடுவில் ஒரு சின்ன ஒரு வரி கதை.
சோழ ராஜா,நாகதீர்த்தம் என்ற குளக் கரையில் நாகராஜனின் ஐந்து பெண்கள் ஆளுக்கொரு வர்ண லிங்கத் தை வைத்து பூஜை செய்வதை பார்த்து, கடைசி இளைய நாக கன்னிகை யை கல்யாணம் செய்து கொண்டு, மாமனார் நாகராஜ னிடம் சிவலிங்கம் கேட்க அவன் ஒரு பாதியை மட்டும் தர, ராஜாவின் மனைவி நாகராஜகுமாரி மற்ற சகோதரிகளிடமிருந்தும் தனதும் ஆகிய ஐந்து லிங்கங்களை கொடுத்து, மொத்தம் ஆறு லிங்கமும் ஒன்றாகி ஐந்து வர்ண பஞ்சவர்ண லிங்கம் அங்கே ஒரு வில்வமரத்தடியில் உருவாகி இந்த கோவில் தோன்றியது.. ஐந்து வர்ணங்கள் கொண்ட சிவன் என்பதால் சிவனுக்கு பஞ்சவர்ண சுவாமி என்று பெயர். 7ம் நூற்றாண்டு தேவாரங்களில் பெயர் இருக்கிறது
.வைகாசியில் பிரம்மோத்சவம் ரொம்ப கும்பல் சேரும்.
ஆலயத்திற்கு மூன்று பிரஹாரங்கள். வாசலில் ஐந்து நிலை ராஜ கோபுரம்.
எட்டு கல்வெட்டுகள் நிறைய சோழ கால விஷயங்களை சொல்கின்றன.
ராஜராஜன் போன்ற சோழ ராஜாக்கள் ரொம்ப தீர்க்க தரிசிகள். டயரி எழுத வசதி இல்லாததால் ராஜராஜன் தனது ஆட்சி காலத்தில் எந்த வருஷம் என்ன செய்தான், யார் யார் கோவிலுக்கு என்ன செய்தார்கள் என்றெல்லாம் கூட கல்லில் யாரையோ செதுக்க வைத்திருக்கிறான்.
சிவலிங்கம் ஸ்வயம்பு. உருவத்தில் ரொம்ப சின்னது. அம்பாள், விநாயகர், முருகன், மஹாலக்ஷ்மி சந்நிதிகள் உண்டு. கிழக்கு பார்த்த மூலவர் தெற்கு பார்த்த அம்பாள். நடராஜா சந்நிதிக்கு எதிரே தான் உதங்க முனிவர் சந்நிதி. அவர் தானே முதலில் ஐந்து வர்ணங் களை லிங்கத்தில் பார்த்தவர். நாம் இந்த கோவிலை சென்று பார்ப்பதற்கு முன்பே கிரேக்க நாட்டு யாத்ரீகன் டாலமி பஞ்சவர்ண ஸ்வாமியை பார்த்து எழுதி வைத்திருக்கிறான். கொடுத்துவைத்த கிரேக்கன்.
சிற்ப வேலைப்பாடுகளில் சிறந்த இந்த ஆலயத்தில் சில அதிசய சமாச்சாரங்கள் என்ன தெரியுமோ? ஒரு தூணில் ஒரு சிலையில் ஒரு பக்கம் இருந்து பார்த் தால் நான்கு பெண்கள் தெரிவார்கள். அவர்களே இன்னொரு பக்கமாக இருந்து பார்த்தால் ஒரு பெரிய குதிரையாக மாறி இருப்பார்கள்.
இன்னொரு முக்கிய அதிசயம். இந்த கோவிலில் ஒரு சிற்பம். அதில் ஒருவன் சைக்கிள் ஓட்டுவது நன்றாக தெரிகிறது. ரெண்டு சக்ரம், ஹாண்டில் பார், சீட், கால் ஒரு பெடலை மிதித்து கொண்டு இருக்கிறது... சைக்கிள் என்பது இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு 1800ல் தான் ஒரு ஜெர்மன் காரன் ஒன்று பெரிய சக்ரமா கவும், ஒன்று சின்னூண்டாகவும் ரொம்ப கஷ்டப்பட்டு உட்காரும் சைக்கிள் கண்டுபிடித்தான். எப்படி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் சோழ நாட்டில் இப்போது இருக்கும் வசதியாக உட்காரும் சைக்கிள் இருந்தது. சிலை மனிதன் சௌகர்யமாக அமர்ந்து ஓட்டுகிறான். பிரேக் கூட இருந்திருக் கலாம்? யார் கண்டது? சோழனுக்கு தெரியாததே இல்லை. சோழ சிற்பி கோவிலில் தூணில் சிற்பங்கள் வெடிக்கும்போது தெருவில் எவனோ சைக்கிளில் போவதை பார்த்து அதை அப்படியே செதுக்கி இருக்கலாம்.
After careful consideration I am of opinion that this is a fake image and later on some mischievous sculptor during some renovation would have introduced this because there are two other images of which I did not comment. One is an Astronaut and the other a mobile phone!! I am therefore removing the picture from this article and request the above para may be ignored totally. It happens sometimes because of over enthusiasm of our people to discredit traditional values.
After careful consideration I am of opinion that this is a fake image and later on some mischievous sculptor during some renovation would have introduced this because there are two other images of which I did not comment. One is an Astronaut and the other a mobile phone!! I am therefore removing the picture from this article and request the above para may be ignored totally. It happens sometimes because of over enthusiasm of our people to discredit traditional values.
மேலே ஒரு கோழி ஒரு யானையை வென்றது என்றேன் அல்லவா. அந்த கதை இது தான்.
சோழராஜா வீராதித்தனின் யானைக்கு மதம் வந்து அதை யாராலும் அடக்க முடியவில்லை. எங்கோ அருகில் இருந்த ஒரு சேவல் விர்ரென்று பறந்து வந்து யானையை நகங்களாலும் மூக்கினாலும் கொத்தி துன்புறுத்தி அதன் தும்பிக்கை பிடியில் சிக்காமல் தப்பி யானையை வாட்டியது. துவண்டு போன யானை மீண்டும் சாதுவானது. பிறகு சேவல் பறந்து மறைந்தது. சரியான சண்டைக்கோழி போல் இருக்கிறது. இந்த விஷயத்தைக் கூட ஒரு கல்வெட்டில் எழுதி செதுக்கி வைத்திருக் கிறார்கள். அந்த வீர கோழியின் புகழைக் காக்க ராஜா உறையூர் இனிமேல் கோழியூர் என்று ஆணையிட்டுவிட்டான்.
No comments:
Post a Comment