Monday, October 21, 2019

CHANDRASHTAMAM

 சந்திரா படுத்தாதே !    J K  SIVAN 


 அடிக்கடி பஞ்சாங்கம், தினசரி காலண்டர்,  யாராவது ஒருவர்  என்னிடம் அலுத்துக்கொண்டு பேசும்போதோ சரி என்னை கொஞ்சம்  நெளிய வைக்கும் வார்த்தை  சந்திராஷ்டமம். அது என்ன?   எதற்காக அதைக்கண்டு மிரள்கிறார்கள்.


எனக்கு ரொம்ப  ஜோசியம் தெரியாது.  எதிர்காலத்தை தெரிந்து கொள்வதில் விருப்பமில்லை.  இன்னும்  பதினாறு  நாளில்  காலை ஒன்பதிலிருந்து பத்துக்குள்  ஒரு  பையன்  நான்  பேப்பர் படித்துவிட்டு  காய்கறி வாங்க ஒரு ஒரு பிளாஸ்டிக் வயர்  பின்னல் கூடையை  எடுத்துக்கொண்டு  பார்க் பக்கம் திரும்பும்போது எதிரே  ஒரு அரை பெடல் பையன்  பிரேக் இல்லாத சைக்கிளில் ஜெட் வேகத்தில் வந்து என் இடுப்பில் மோதி நான் ரெண்டு மாதம் எலும்பு முறிவில் பிறரை நம்பி படுத்துக்கொண்டிருப்பேன் என்று தெரிந்தால் இந்த கணமே எனக்கு இடுப்பு வலிக்க ஆரம்பித்து விடும். தெருவில் எந்த பையனை பார்த்தாலும் ஒளிந்து கொள்வேன்.  இது அவசியமா? நடப்பது நடக்கட்டுமே .   எதிர்காலம் தெரிந்தால் நிம்மதி குலையும் என்று தானே பகவான் ரொம்ப ஜாக்கிரதையாக நமக்கு எவ்வளவு முயற்சித்தாலும் தெரியாமல் வைத்திருக்கிறான்.

இருந்தாலும்  ஜோசியர் பிழைக்க வேண்டாமா? அவர்களும் தானே  பகவானை வேண்டி இதை செயகிறார்கள்.  அதில் கொஞ்சம் நுழைவோம். 

ஜாதகத்தில் ரொம்ப  இம்பார்ட்டண்ட்  லக்னம். அடுத்தது ராசி.   ராசி என்பது நாம் பிறக்கும்போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறானோ அந்த நட்சத்திரம் உட்கார்ந்திருக்கும் வீடு. சந்திரன் உள்ள வீடு நமது  ராசி. அதிலிருந்து  வலது பக்கமாக  எட்டு இடம் எண்ணவேண்டும். அது  அஷ்டமஸ்தானம் , அட  அதில் என்ன சௌகர்யமாக  சந்திரன் உட்கார்ந்திருக்கிறானே .  அது தான் சந்திராஷ்டமம்.

 ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டே கால் நாட்களைத்தான்‘சந்திராஷ்டம’ காலம் என்பது. இன்னொரு விஷயம். பிறந்தநட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன்  நடமாட்டம் இருந்தால், சஞ்சாரம் தென்பட்டால்  அதுவும்  சந்திராஷ்டம் தான் ஸார். 

இந்த சந்திரனின் எட்டாம் இட சந்திராஷ்டமம்   கொஞ்சமோ  நிறையவோ,  தொந்தரவுகள்  தடைகள், மனச்சங்கடங்கள், இடையூறுகள் எல்லாம் காசு கேட்காமல்  லஞ்சம் வாங்காமல் தாராளமாக தருமாம்.  சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து  சும்மா  இல்லாமல் நேராக தனது கூர்மையான பார்வையை,
 தனம்,   குடும்பம், வாக்கு தரும்  ஸ்தானமான இரண்டாம் இடத்தின் மேல் எதற்காக  செலுத்தவேண்டும்.  அதனால் ஏதோ நமக்கு உதவும் அந்த 2ம் வீடு  வசதிகளும்  பாதிக்கப்படுகிறது. நமக்கு நஷ்டம். ஏன் இப்படி சந்திரன் பண்ணுகிறான்?

 சந்திராஷ்டம தினத்தில்   முக்கிய, சுபகாரியங்களை செய்யாமல் தள்ளிப்போடுகிறார்கள்.  கல்யாணத்திற்கு முகூர்த்தம் பார்க்கும்போது  ரெண்டு பேர் ஜாதகத்தில் சந்திராஷ்டம்  இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம் வைப்பார்கள்,. பால் காய்ச்சுதல், கிரகப் பிரவேசம்,வளைகாப்பு எல்லாம் கூட  சப்ஜெக்ட்  டு  சந்திராஷ்டம் தான்.  புதுசாக ஒப்பந்தம், பேச்சு வார்த்தை. அக்ரீமெண்ட், எதுவும் தொடங்கி மாட்டிக்கொள்ள விரும்ப மாட்டார்கள். சந்திரன் மனசு சம்பந்தப்பட்டவர், புத்தியில் ஆட்சி செலுத்துபவர்.  அதற்காகத்தான் அவருக்கு மதி, மனோகாரகன், மனதை ஆள்பவன். ஆங்கிலத்தில் லூனார்  என்பது சந்திரனை குறிக்கும். அவன் புத்தியை  கோணலாக ஆக்கிரமித்தால்  புஹ்தி ஸ்வாதீனம் அடைந்து  சித்த ஸ்வாதீனம் அற்றவர் பைத்தியம்,  lunatic  என்று பெயர் வாங்குகிறோம். எண்ணங்களிலும் கருத்துகளிலும்  நிதானம் கிடையாது.

 சந்திராஷ்டம நாட்களை  தெரிந்து கொள்ள  யாரோ உதவி செய்து ஒரு டேபிள்  table  தந்திருக்கிறார்கள்.  கைவிரல் விட்டு உங்கள் பிறந்த நக்ஷத்திலிருந்து 17வது நட்சத்திரத்தில் சந்திரன் வந்தால் அந்த நாள்  சந்திராஷ்டம தினம். பேசாமல் சாப்பிட்டுவிட்டு  டிவி  பார்க்கலாம்.
பிறந்த நட்சத்திரம்,  அதற்கு 17ம் நக்ஷத்ரம் சந்திராஷ்டம நட்சத்திரம் ரெண்டும் கொடுத்திருக்கிறது.

அஸ்வினி - அனுஷம்
பரணி - கேட்டை
கிருத்திகை - மூலம்
ரோகிணி - பூராடம்
மிருகசீரிஷம் - உத்திராடம்
திருவாதிரை - திருவோணம்
புனர்பூசம் - அவிட்டம்
பூசம் - சதயம்
ஆயில்யம் - பூரட்டாதி
மகம் - உத்திரட்டாதி
பூரம் - ரேவதி
உத்திரம் - அஸ்வினி
அஸ்தம் - பரணி
சித்திரை - கிருத்திகை
சுவாதி - ரோகிணி
விசாகம் - மிருகசீரிஷம்
அனுஷம் - திருவாதிரை
கேட்டை - புனர்பூசம்
மூலம் - பூசம்
பூராடம் - ஆயில்யம்
உத்திராடம் - மகம்
திருவோணம் - பூரம்
அவிட்டம் - உத்திரம்
சதயம் - அஸ்தம்
பூரட்டாதி - சித்திரை
உத்திரட்டாதி - சுவாதி
ரேவதி - விசாகம்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...