Wednesday, October 30, 2019

THEVITTADHA VITTALA 2





தெவிட்டாத  விட்டலா    2ம் பாகம்   J K SIVAN    
                                           
   2.    பசிக்கிறது  சீக்கிரம்  கொண்டுவா                                 

பூரி ஜகந்நாதர் ஆலயத்தில் ''பைஹண்டி பாக் , லட்சுமி பாக், மஹாதேவ் பாக் '' என்கிற  இந்த கிச்சடி மாதிரி பிரசாதம் நைவேத்தியம்  இன்றும் பிரசித்தம்.  தினமும்  அநேக பக்தர் களுக்கு  அவை விநியோகம் செய்யப் படுகிறது. 

இதற்குப் பின் ஒரு சுவாரஸ்யமான கதை. 
 ஒரிஸ்ஸா  பூரி ஊரை  அப்போது  நிருப  கஜபதி கேசரி என்கிற ராஜா ஆண்டுவந்தான்.  சரித்திர காரர்கள்  அது 1000 -1200 வருஷங்களுக்கு முன்பு இருக்கலாம்  என்று சொல்லட்டும் பரவா யில்லை. அது முக்கியமில்லை நமக்கு அப்போது அந்த ஊரில் கர்மா பாய் இருந்தாள். அவள் மராத்தி தேசத்தில்  பண்டரிபுரத்தில்  விட்டல பக்தை.. அவள் கணவன் வீட்டை விட்டு சொல்லாமல் ஒருநாள் காணாமல் போய்
விட்டான். யாரோ ''நீ  பூரியில் போய் தேடு கிடைப்பான்'' என்று சொல்லியதால் மஹாராஷ்ட்ராவிலிருந்து ஒரிஸ்ஸாவிற்கு நடந்து வந்திருக்கிறாள் கிழவி.  அவள் கணவன் என்ன ஆனான் என்றே தெரியவில்லை. கிடைக்கவில்லை. அவளும் பூரியில்  ஜெகந்நாதனிடம் மனதைப் பறி கொடுத்து விட்டதால் கணவனை மறந்தே போனாள் . அங்கேயே  பூரியில் ஒரு மடத்தில், சத்திரத்தில் தங்கி வாழ்ந்தாள் . ஜெகந்நாத  பக்தர் இந்திர வர்மா என்பவர்  அவள்  குரு . ஜெகந்நாதன் முன் அமர்ந்து அற்புதமாக பாடுவாள். 
எப்போதோ ஒரு துறவியை கர்மா பாய் வணங்கியபோது  ஒரு சிறு வெண்கல விக்ரஹத்தை அவளிடம் கொடுக்கிறார்.   அருகே இருந்த  சில வைஷ்ணவர்களிடம் அதை பெருமையாக காட்டி  எப்படி வழிபடவேண்டும் என்று கேட்டாள்.

''உனக்கு மந்திரம் எல்லாம் தெரியாது. உன் பிள்ளை இருந்தால் எப்படி அதீத அன்பு செலுத்துவாயோ அப்படி இந்த கிருஷ்ணனை  அன்போடு  உபசரித்து வழிபடு.. நீ எனக்கு பிள்ளை மட்டும் இல்லையடா கிருஷ்ணா எனக்கு பேரனும் கூட'' என்று வெகுகாலம் அந்த கிருஷ்ணனை தினமும்  வெதவெதவென்று  வெந்நீரில் குளிப்பாட்டி, புது வஸ்திரம் உடுத்தி, பூஜை பண்ணி,  ஒரு சின்ன தட்டில்  தயிர் சாதம் பிசைந்து ஊட்டுவாள்.  அவனும்  கபகப என்று பசியோடு ருசித்து சாப்பிடுவான். பிறகு அவனை தூக்கி  சின்ன தொட்டிலில் இட்டு கதை எல்லாம் சொல்லி,  தாலாட்டி  பாடி, தூங்க பண்ணுவாள்.  கர்மா பாய் இப்படி கிருஷ் ணனை வளர்த்தாள்  என்று சொல்லலாமா,  அவனோடு தானும் வளர்ந்தாள்  என்று சொல்ல   வேண்டுமா?  இப்படி ரெண்டு  பேரும் இணை பிரியாதவர்கள்.

கர்மா பாய் தினமும் காலையில் எழுந்து ஜெகந்நாதனுக்கு தன்னாலான ஏதாவது ஒரு  இட்டலி தோசை, பொங்கல், மாதிரி  ஏதோ ஒன்றை செய்து நைவேத்தியம் பண்ணி விட்டு சாப்பிடுவாள்.

ஒருநாள்  ஒரு பிராமணன்  கர்மா  பாய்  வசித்த சத்திரத்தில் வந்து தங்கினான். டம் வந்தான்.  அவன் வரும்போது கர்மா பாய்  கிருஷ்ணனுக்கு சாதம் ஊட்டிக் கொண்டிருந்தாள். 

 ''என்ன பண்ணுகிறாய்  நீ  ?'' என்று அவன் கேட்க  அவள் கிருஷ்ணன் தன்னிடம் வந்ததி லிருந்து கதையை சொல்கிறாள். 

''இதோ பார்  கர்மா பாய்  நீ ரொம்ப தப்பு பண்ணுகிறாய்.  இப்படி எல்லாம் பகவானை தொட்டு ஒண்ணும்  பண்ணக் கூடாது. காலையில் எழுந்து குளித்துவிட்டு அப்புறம் தான் அவனைத்தொட வேண்டும். அசுத்தமாக உடை யோடு, குளிக்காமல் நைவேத்தியம் பண்ணி அளிக்கக்கூடாது.  அவன் தொடவே மாட்டான். சாபம்  தோஷம்  எல்லாம் வேறு உனக்கு கிடைக்கும்.  மஹா பாபம். 'பிராமணன்
போய்விட்டான்.  

தான் பண்ணியது தப்பு  என்று கர்மா பாய்  வருந்தி மறுநாள் காலையில் சீக்கிரமே எழுந்து  குளித்து, மடியாக வீடு எல்லாம் துடைத்து, புது ஜலம் கொண்டுவந்து,  சமைத்தாள். ஜெகநாதனுக்கு  ஸ்பெஷலாக  என்று  ஒரு குயவனிடம் சென்று ஒரு புது கலயம் வாங்கி, பருப்பு அரிசி தானியங்கள் எல்லாம் சுத்தமாக போட்டு கிச்சடி மாதிரி ஒன்றை  பண்ணி,  ஜெகந்நாதன் ஆலயத்தில்  சமர்பித் தாள் .  அன்று அவன் முன்  மடப்பள்ளியில்  தயாரான நைவேத்தியத்தோடு அவள் அர்ப்பணித்த கலயமும் வைக்கப் பட்டது . இதனால் வழக்கமாக இத்தனை  நாளாக குட்டி கிருஷ்ணனுக்கு  உணவு அளிக்கும் நேரம் தள்ளி போய்விட்டது. லேட்.  

நூற்றுக்கணக்கான  மண் கலயங்களில்  நைவேத்திய பிரசாதம்  நிரம்பி இருக்கும்.  அவைகளை  ஜகந்நாதன் முன்பு வைத்து விட்டு பிரதம அர்ச்சகர்  தனது இரு உள்ளங்கைகளை  அந்த பிரசாதங்கள் முன்பு  குவித்து அதில் பார்ப்பார்.  ஜகந்நாதன் உருவம் உள்ளங் கையில் தெரிந்தால்  எதிரே இருக்கும் பிரசாதத்தை ஜகந்நாதன் ஏற்றுக்கொண்டான் என்று அர்த்தம். 

கர்மா பாய்  கொண்டு போய் வைத்த கிச்சடியை அர்ச்சகர் ஏற்காமல் தள்ளி  வைத்துவிட்டார். ஒருவேளை மடியாக  தயார் பண்ணவில்லையோ?? கர்மா பாய் துடித்துப்போனாள் . எவ்வளவு ஆசையாக உனக்கு மனநிறைவோடு பண்ணிக் கொண்டு வந்தேன். ஜகன்னாதா, ஏற்க மறுத்துவிட்டாயே?.
உண்மையில் ஜகந்நாதன் பக்தர்கள் அன்போடு ஏதாவது அளித்தால் வேண்டாம் என்றா சொல்பவன்?  பூரி  ராஜாவின் கனவில் ''கர்மா பாய் என்று  என் பக்தை ஆலயத்துக்கு பக்கத்தில் சத்திரத்தில் இருக்கிறாள். எனக்கு ரொம்ப பிடித்த கிச்சடி பண்ணி இன்று அளித்தாள் . எனக்கு ரொம்ப திருப்தி.  நாளையிலிருந்து அவள் பண்ணிக்கொண்டு  வருவதை எனக்கு முதலில்  அளிக்க  அர்ச்சகரிடம் போய்ச்  சொல்''
ராஜாவே நேரில் ஆலயத்துக்கு வந்து இதை சொன்னபோது அர்ச்சகர் நடுங்கி விட்டார். தான் ஏதோ தவறு செய்து ராஜாவின் கோபம் தன்மேல்  பாய்ந்து  ஆபத்தாகி விட்டதே  என துடித்தார்.  இருந்தாலும்  வெளியே செய்யப்பட  நைவேத்தியங்கள் ஜெகந்நாதனுக்கு படைப்பதில்லை என்ற வழக்கத்தை சொன்னார். சரி  கோவில் மடப்பள்ளியிலேயே  கிச்சடி பண்ணுங்கள் என்று ராஜா சொல்லிவிட்டார் . வேறு என்ன செய்வது?
ராஜாவுக்கோ   கர்மாபாய்  ஜெகந்நாதனின் சிறந்த பக்தை என்று புரிந்தது.  அவளை மரியாதையோடு உபசரித்து ஆலயத்தில் தங்க  இட வசதி அமைத்து தந்தான்.
மடப்பள்ளியில் தயாராகும்  நைவேத்தியம்  லேட்டாகியது...  கர்மாபாய்  வழக்கமாக  தரும் நேரத்தில்  ஜெகந்நாதனுக்கு  ஆகாரம் கிடைக்கவில்லை.  அன்றிலிருந்து  ஒன்று  அவர்கள் தயாரிக்கும் கிச்சடி கெட்டுவிடும். இல்லையேல், ஏதோ ஒரு சம்பவம் அதை நைவேத்தியம் பண்ண விடாது.  ஏழு எட்டு நாள் இப்படி ஆகி விட்டது. 

இதனால்  பூரியில்  ஆலயத்தில்  ஜெகந்நாத
னுக்கு  பசி தாங்கவில்லை....  பிரதம அர்ச்சகர் கனவில் தோன்றி,  ''நேராக  சத்திரத்துக்கு போ, அங்கே  கர்மா பாய்  என்று ஒருவள் வசிக் கிறாள்.  ஒரு  ஆச்சார பிராமணன் அவளிடம் ஏதோ சொல்லி, அவள் சந்தேகமும் பயமும் கொண்டு மடியாக சமைத்து நைவேத்தியம் பண்ணு  என்று சொல்லியதால் நான் பட்டினி கிடக்கிறேன்.  அவளிடம் போய்  பரமாத்மா என்பது  இது போன்ற  கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்டது.  எதிலும் பட்டும் படாதவன்.  சாக்ஷி பூதமாக மனதில் இருப்பவன். சகல காரியங்களுக்கும் அவன் காரணன் என்றால் அதில் சம்பந்தமில்லாதவன். பக்தர்களின் மனதை அறிந்து தன்னை  அவர்கள் வயப்படுத்திக் கொள்பவன்.  பந்தங்களை, சடங்குகளை விரும்பாதவன். மனநிறைவோடு பக்தன் எதை  அளித்தாலும் அதை ஏற்பவன்''  

ஏதோ தெய்வ குற்றம் என்று உணர்ந்து ஒன்பதாவது நாளிலிருந்து  அர்ச்சகர்  கர்மா பாய் சமைத்த கிச்சடியை முதலில் ஜெகந்நாதனுக்கு நைவேத்தியம் பண்ண ஆரம்பித்தார்.  ஜகந்நாதன் ஆசையாக அதை ஏற்றுக்கொண்டான்.

அர்ச்சகர்  ஓடினார்.கரமாபாயை சந்தித்து ஜெகந்நாதன் கூறியதை எடுத்து சொன்னார். அவள் சந்தோஷமாக தான் ஒரு கிச்சடியை செயது அவரிடம் கொடுக்கிறாள். 

 ஜெகந்நாதன்  ஆசையோடு அதை கையில் வாங்கி உண்டதை அர்ச்சகர் கண்ணால் பார்க்கிறார். எல்லோரிடமும்  ராஜா  உட்பட தான்  பார்த்த அதிசயத்தை  சொல்கிறார்.
சில பிராமணர்கள்  பேசியது காதில் விழுகிறதா?  '' நாம்  எவ்வளவு வருஷங்கள் எல்லா வேத மந்திரங்களும் சொல்லி யாக யஞங்கள் விரதம், உபவாசம், நைவேத்தியம் எல்லாம் பண்ணுகிறோம். ஜெகநாதன் வரவில்லை... இந்த கர்மா பாய் கிழவி செய்த  சாதாரண கிச்சடியை எப்படி சந்தோஷமாக  கையை  நீட்டி அவளிடம் வாங்கி   உண்ணு கிறான். அவளது உண்மையான  பக்திக்கு முன்பு  மற்றதெல்லாம் தூசு..''ப்ரம்மாதி தேவர்கள், சிவன் எல்லாம் வணங்கும் விஷ்ணு எப்படி  கர்மாபாயிடம்  கை நீட்டி  கிச்சடி வாங்கி உண்கிறது ஒரு அதிசயம்.        எல்லோரும் கர்மா பாய்  பாதங்களில் விழுந்து வணங்கினார்கள்.   



மீண்டும் சொல்கிறேன்.   தினமும் பூரி ஜெகன்னாதனுக்கு  கர்மா பாய்  நைவேத்தியம் தயாராகி அளித்தபின் தான் மற்ற  நைவேத்தியங்கள் சமர்ப்பிக்கப்பட்டு பிரசாத விநியோகம் ஆகிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...