21/10/2019
VEERABAHU is a dedicated person for the welfare of our society and the discipline of the next generation. i am glad he visited me in Nanganallur. He runs the popular magazine Vijayabharatham.. thank you FB for remembering and reposting this msg written by me two years ago.
J.K.Sivan
21. 10.2017
கோவில் போய கோர்ட் வந்தது டும் டும்
J.K. SIVAN
J.K. SIVAN
இன்று என்னை ஒரு நல்ல மனிதர் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. ஒழுக்கமானவர். ப்ரம்மச்சரியத்தை கடைபிடிப்பவர். இனிய குணத்தவர். மக்களிடம் நேசம் கொண்டவர். எல்லாவற்றிற்கும் மேலாக இந்திய தேசிய வார இதழ் ''விஜய பாரத'' ஆசிரியர் ஸ்ரீ ம . வீரபாகு. RSS இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட சமூக சேவகர்
விஜய பாரத ஏடு தனது அக்டோபர் 3-17 இதழில் ஒரு பூதாகரமான செயதியை வெளியிட்டது
ஆமாம். ஒன்றிரண்டு சிவ, விஷ்ணு கோயில்களை இடித்துவிட்டுதான் ஆங்கிலேயர்களால் இப்போதிருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் கட்டப்பட்டதாக அந்த செயதி சொல்லுகிறது.
என்னால் இதை ஜீரணிக்க முடியாமல் கொஞ்சம் விஷயம் தேடினேன். செய்தி ஆதார பூர்வமானது என்று தெரிய வருகிறது. முழு விவரமும் தேடவேண்டும்.
'' சென்னை சௌகார்பேட்டை பகுதியில் சென்னகேசவ பெருமாள் கோயில் என்று ஒரு கோயில். இதை பாரதத்தை சுரண்ட வந்த கிழக்கிந்திய கம்பெனி நிதி அளித்து கட்டச் செய்தது என்று 'வரலாறு' எழுதுகிறார்கள். உண்மை நேர்மாறானது. சென்னை உயர்நீதிமன்றம் உள்ள இடம். அதை தான் கிழக்கிந்திய கம்பெனி வெள்ளைக்காரர்கள் இடித்து விட்டு கோர்ட் கட்டினார்கள். அங்கு சென்னமல்லீஸ்வரர், சென்னகேசவ பெருமாள் என்ற சிவ-விஷ்ணு ஆலயம் இருந்தது. ஹை கோர்ட் கட்டிட 150வது ஆண்டுவிழா நிகழ்ச்சியின் போது இந்த வெளியே பரவாத செயதி அம்பலமானது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, 'ஆஹா நமது நீதிமன்றம் ஒரு புனிதமான இடத்தில் அமைந்திருக்கிறது' என்று கொண்டாடினார் . புனிதமான இடத்தில்' என்றால் கோயில் இருந்த இடம்.
சென்னை மாநகருக்கே அந்தப் பெயர் வருவதற்கு சென்ன கேசவ பெருமாள், சென்ன மல்லீஸ்வரர் இரட்டை ஆலயங்கள்தான் காரணமாக இருந்திருக்கிறது. கிழக்கிந்தியக் கம்பெனி செயின்ட் ஜார்ஜ் கோட்டையை விஸ்தரிப்பதற்காக இந்த இரட்டைக் கோயில்களை தகர்க்கப் போவதாக அறிவித்ததும் அன்றைய பக்தர்கள், ஹிந்து பெருமக்கள் புயலாய் சீறினார்கள். இதையடுத்து வேறு இடத்தில் கோயில் கட்ட பணமும் இடமும் தருவதாக கிழக்கிந்திய கம்பெனி சொல்லிப் பார்த்தது. அன்றைய ஹிந்துக்களின் ஆவேசமான தலைவராக உருவானவர் மணலி முத்துக்கிருஷ்ண முதலியார். இவர் ஆங்கிலேயர்களுக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்தவர். கோயில் இடிக்கப்படுவதைக் கேள்விப்பட்டு தன்னுடைய சொந்த செலவில் சென்னகேசவப் பெருமாளையும் சென்னமல்லீஸ்வரரையும் தேவராஜ முதலித் தெருவில் 1700ல் பிரதிஷ்டை செய்தார்.
மணலி முத்துக்கிருஷ்ண முதலியார் வெள்ளையன் தருவதாகச் சொன்ன பணத்தை நிராகரித்தார். தன் சொந்த செலவில் கோயில் கட்டிமுடித்தார். குறிப்பாக சென்னமல்லீஸ்வரர் கோயிலை ஆலங்காத்தா பிள்ளை என்ற வணிகர் கட்டிக்கொடுத்தார். ஆதியில் இந்த இரு கோயில்களும் 1646லேயே கட்டப்பட்டவை என்கிறார் சென்னை பற்றி வரலாற்று குறிப்புகள் தரும் எஸ். முத்தையா. அந்த இரண்டு கோயில்களையுமே பேரி திம்மப்பா என்ற மொழிபெயர்ப்பாளர் கட்டியிருந்தார். யார் கட்டினால் என்ன?
கோயில் இருந்த காலத்தில் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வருகிறவர்கள் கோயிலிலிருந்து அர்ச்சகர்கள் கொண்டுவரும் துளசி தீர்த்தத்தை வார்த்து 'நான் சொல்லும் சாட்சி உண்மை. பொய் அல்ல' என்று சபதம் ஏற்பார்கள். இதைப் பார்த்துவிட்டு வழக்குத் தொடர்ந்தவர்கள் சிலரும் 'நான் தொடுத்திருப்பது உண்மையான வழக்கு. பொய் வழக்கு அல்ல' என்று சபதம் ஏற்பார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சாதாரண மக்களின் மன நிலை எப்படி இருந்தது,
புனித ஜார்ஜ் கோட்டையை விஸ்தரிக்க கோயிலை இடித்தது மட்டும் அல்ல. 1844ல் வெள்ளையன் ஒரு சட்டம் இயற்றி அதன்படி கிறிஸ்தவராக மதமாற்றப்பட்டவர் சொத்துக்கு வாரிசாக தொடர்ந்து இருக்க முடியும். ஏறக்குறைய அதே சமயத்தில் கிறிஸ்தவ இறை இயலை (தியாலஜி) சென்னை பல்கலைக்கழகத்தில் கட்டாயப் பாடம் ஆக்கினான்.
பிரபல அவுரி வர்த்தகரான கஜுலு லட்சுமிநரசு செட்டி இந்த மதமாற்ற சட்டத்தை எதிர்த்து 1846ல் சென்னை நகரில் கண்டன கூட்டம் நடத்தினார். இதையடுத்து அந்த சட்டம் வாபஸ் பெறப்பட்டது. 1888ல் சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் ஒரு மாணவர் மதமாற்றப்பட்டார். அது மாநிலமெங்கும் கடுமையான பதட்டத்தை ஏற்படுத்தியது.
இதெல்லாம் நடந்து 360 ஆண்டுகள் ஆகிவிட்டன. சென்னை கேசவர் சென்னை மல்லீஸ்வரர் கோயிலை இடித்து கிழக்கிந்தியக் கம்பெனி உயர்நீதிமன்றம் கட்டியது என்ற செயதியை இப்போது அறிந்தும் கூட இத்தனை ஆண்டுகள் கழித்தும் நம்மால் ஜீரணிக்க முடியவில்லை.
சென்னை என்ற நமது அருமை மாநகருக்கே பெயரை தந்துள்ள சென்ன மல்லீஸ்வரர், சென்ன கேசவ பெருமாள் ஹை கோர்ட் வருவதற்காக காணாமல் போனதா?? இடித்த கோயிலை வேறு இடத்தில் கட்டிக்கோ என்று வெள்ளையன் பணம் தந்தபோது அதை நிராகரித்த சென்னை ஹிந்துக்கள் என்றென்றும் போற்றுதலுக்கு உரியவர்கள்.
ஹை கோர்ட் நாலு வாசலை கொண்டது என்பது பெரிய கோவில்களில் இன்றும் நாம் காணும் நான்கு வாசல்களை தான் நினைவூட்டுகிறது. ஆமாம் இங்கு தெற்கு வாசல், கிழக்கு வாசல், மேற்கு வாசல், வடக்கு வாசல் உள்ள பெரிய கோவில்கள் இருந்திருந்து இப்போது வெறும் வாசல் மட்டும் நீதி மன்றத்துக்கு என்று தெரிகிறது.
நல்ல நீதிபதி, நல்ல பக்தர் நல்ல நீதிபதியாக திகழ்ந்த டி. முத்துசாமி ஐயர் நல்ல பக்தராகவும் திகழ்ந்தார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அவர் அமரும் இடம் பழைய கோயிலில் மூலஸ்தானம் என்று அவருக்குத் தெரியும். எனவே, தனது பணிக்காலம் முழுதும் நீதிமன்றத்திற்கு உள்ளேயே அவர் காலணி அணிந்து செல்வது இல்லை.
Wikipedia படித்தேன். அதில் கோவில்களை அகற்றிய செயதி இருக்கிறது. சென்னை நில உடமை பற்றிய பழைய சில விவரங்களை படித்தேன். அதிலும் இது ருசுவாகிறது.
From 1817 to 1862, the Supreme Court of Madras, the precursor to the present Madras High Court, was situated in a building opposite the Chennai Beach railway station. From 1862 to 1892, the High Court was also housed in that building. The present buildings were officially inaugurated on 12 July 1892, when the then Madras Governor, Beilby, Baron Wenlock, handed over the key to the then Chief Justice Sir Arthur Collins
The Madras High Court was formed by merging the Supreme Court of Judicature at Madras, and the Sudder Dewanny Adawlut. The Court was required to decide cases in accordance with justice, equity and good conscience. The earliest judges of the High Court included Judges Holloway, Innes and Morgan. The first Indian to sit as a judge of the High Court was Justice T. Muthuswamy Iyer. Other early Indian judges included Justices V. Krishnaswamy Iyer and P. R. Sundaram Iyer.
The Madras High Court was formed by merging the Supreme Court of Judicature at Madras, and the Sudder Dewanny Adawlut. The Court was required to decide cases in accordance with justice, equity and good conscience. The earliest judges of the High Court included Judges Holloway, Innes and Morgan. The first Indian to sit as a judge of the High Court was Justice T. Muthuswamy Iyer. Other early Indian judges included Justices V. Krishnaswamy Iyer and P. R. Sundaram Iyer.
Construction of the High Court building, an exquisite example of Indo-Saracenic style of architecture, began in October 1888 and was completed in 1892 with the design prepared by J. W. Brassington, the then consulting architect to the government, and later under the guidance of the famed architect Henry Irwin, who completed it with the assistance of J. H. Stephens.
J. W. Brassington initially prepared a plan to construct a building with 11 court halls at an estimate of ₹945,000. Of these, six were meant for the High Court, four for the Small Causes court and one for the City Civil Court. An additional building to house the lawyers’ chambers was subsequently added to the plan, with a walkway on the first floor to connect it to the main building, increasing the total expenditure to ₹1,298,163. Complementing a 125-feet-tall standalone light house that was already in existence on the court campus, a dioptric light was built on the 142-feet-high main tower of the building, raising the total height of the tower to 175 feet.
Chenna kesava perumal and Chenna Malleeswarar) location was later occupied by the High court building. The original twin temples' history dates back to 1646 CE. Grants made to the original twin temples by Nagabattar and Thimmappar were recorded. Attack by other European powers and attack and looting of temples by Hyder Ali's forces caused the devotees to relocate some vigrahams to the Thiruneermalai Temple. The twin temples were demolished by the British, for the purpose of security and expansion of the nearby Fort St.George. Manali Muthu Krishna Mudaliar, translator for Lord Piccode, built new twin temples in 1700 CE in a different location at Devaraja mudali Street, later called Sowcarpet). He donated his lands, used his own funds to build and he refused the money from the British, accepting only land from them.
No comments:
Post a Comment