Thursday, October 31, 2019

CLAY




பெற்றோர்களே......சற்று சிந்தியுங்கள்
J K SIVAN
.எழுபது  எழுபத்தைந்து வருஷங்களுக்கு முன்பு  நான்  ஆரம்ப பள்ளிக்கூடத்துக்கு  களிமண் எடுத்துக் கொண்டு போயிருக்கிறேன். அங்கே  ஒரு சிலநாள் மண்ணில் ஏதாவது பொம்மை செய்ய சொல்வார்கள். கைவேலை என்று ஒரு பாடம், வகுப்பு. அதில்  ஓலை முடைதல், காகிதத்தில்  பூக்கள் செய்வது, மாலை செய்வது போன்ற சில திறமைகள் வளர்ந்தது.  களிமண்ணில் நான்  பிள்ளையார் பண்ணி இருக்கிறேன். வீடு கட்டி இருக்கிறேன், மரம் ஆடு மாடு யானை எல்லாம் செய்தவன்.  களிமண்  எப்படி வளைத்தாலும் வளையும் தன்மை கொண்டது. சொன்னபடி கேட்கும்.
விநாயகரை மட்டும் களிமண்ணால் ஏன் செய்ய முன்னோர்கள்  வழக்கமாக் கினார்கள்?

அந்த ஒரு தெய்வம் எல்லோருக்கும்  பிடிப்பதற்கே காரணம் வளைந்து கொடுப்பதால்.  நமது தவறுகளை நீக்குபவர். விக்னங்களை விலக்குபவர், எடுத்த காரியம் நல்லபடியாக முடித்து வைப்பவர், எளிமையாக  ஆற்றங்கரை, குளத்தங்கரை, நாற்சந்தி, தெருமுனைகளில் சிறிதாக கல்லில் உட்கார்பவர்

அவர் ஒருவரை தான் நாம்  டெண்டுல்கர், கார்கில் போர் வீரன்,  ஸ்கூட்டர் ஓட்டி , மத்தளம், வாய்ப்பாட்டு பாடகர், மற்றும் மனதில் தோன்றும்  உருவமாக்கி மகிழ்கிறோம். நம்மை நல்ல வழிக்கு கொண்டுவருபவரை பல உருவங்களாக நாம் காண்பதில்  மகிழ்கிறோம்.

நம்மை சிறிய வயதில் வளைப்பவர்கள் பெற்றோர், ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

கடவுள் அதனால் தான் நாம் பிறக்கும்போது வெறும் களிமண்ணாக நம்மை படைத்தி ருக்கிறார். நம்மை ஒரு உருவமாக செய்வது நமது பெற்றோர்கள்.  பிறகு பள்ளி ஆசிரியர்கள், நண்பர்கள், மனைவி, குருமார்கள், ஆச்சார் யர்கள்,  அப்புறம் எல்லோருமே.  பெற்றோர்கள் தான் நம்மை முதலில் உருவாக்குபவர்கள், உருவமாக் குபவர்கள்.  ஆங்கிலத்தில்  CHILDREN  ARE  MOULDED  BY PARENTS என்று சொல்கிறோமே அது தான் இது.  சின்ன வயதில் அம்மா போல் புடவை உடுத்த, அப்பா சட்டையை, செருப்பை மாட்டிக்கொள்ள அப்பா அம்மா  விளையாட்டு  எல்லாம் இந்த அடிப்படையில் தான்.  அப்பனைப் போல் பிள்ளை, தாயைப்போல மகள்  வளர்வது குணம் பெறுவது இதனால் தான். அன்னையும் பிதாவும் நமக்கு முன்னறி தெய்வம் இல்லையா?

குழந்தைகள் எதிரில்  சிகரெட் குடிப்பது, அப்பா அம்மா சண்டை, அடிப்பது, திட்டுவது  எல்லாம் குழந்தைகள் பிற்காலத்தில் உபயோகிக்க பயிற்சி கொடுப்பவை.  ஜாக்கிரதையாக இருக்கவேண்டியது பெற்றோர்கள்  தான். பேய் பிசாசு கதை, பயமுறுத்துவது போன்ற செயல்கள் குழந்தைகளின் தைரியம் தன்னம்பிக்கையை கொன்றுவிடும். தாயோடு இருக்கும் நேரம் தான்  குழந்தைக்கு அதிகம் என்பதால்  தாய் இதில் அதிக கவனம் செலுத்தி குழந்தைகளுக்கு  அன்பு, நல்ல பண்பு, பக்தி, உறவு நட்பு இவைகளை நேசிப்பது .... இதை யெல்லாம் வளர்க்கலாம்.

ஐந்து அல்லது எட்டு வயது வரை தாய் தந்தை தான் குழந்தைகளின் உலகம்.  சரியாக வளர்க்கப்படாத குழந்தைகள் பிற்காலத்தில் பெற்றோராகும்போது அவஸ்தைப்படுவது அவர்கள் மட்டுமல்ல அவர்களது குழந்தைகளும் என்பது  நினைவிலிருக்கட்டும்.  நல்ல ஆசிரியர்கள், நண்பர்கள்  சிலரால் நிலைமை சரியாக்கப் பட வாய்ப்புண்டு.  குழந்தைகள் தானாக வே  கற்றுக்கொண்டு திருந்த காலம் அதிகம் தேவைப்படும் ஆனால் அது கிடைக் காதே.  கிடைத்த நேரத்தில் முன்னுக்கு வந்தால் தான் தானே நல்லது..பெற்றோர்களே......சற்று சிந்தியுங்கள்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...