உள்ளது நாற்பது - நங்கநல்லூர் J K SIVAN --
பகவான் ரமண மஹரிஷி .29. ஆத்ம ஸாக்ஷாத் காரம்
நானென்று வாயா னவிலாதுள் ளாழ்மனத்தா
னானென்றெங் குந்துமென நஞானநெறி–
யாமன்றி யன்றிதுநா னாமதுவென் றுன்னறுணை
யாமதுவி சாரமா மாவமீமுறையே 29
அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். அப்போது தான் மனதில் பதியும். '' நான்'' என்பது யார்? என்ற ஆத்ம விசாரத்தை பற்றி சொல்லும்போது முதலில் இந்த தேகத்தை ''இது , ஒரு சவம் '' என்று புறக்கணிக்க முடிகிறதா? வாய் வார்த்தையாக நான் என்று சொல்லாமல் உண்மையில் இந்த நான் யார்? எங்கிருந்து இது உற்பத்தியாகிறது என்று உள்நோக்கி கவனிப்பது தான் ஞானத்தை தேடுவது.
வாயினால் அளவில்லாமல் ''நான்'' இந்த தேஹமல்ல , மனம் அல்ல, பிராணன் அல்ல, ப்ரம்மம் என்று மனதளவில் மட்டும் சொல்வதும் தியானிப்பதும், உண்மையில் ஞான விசாரம் அல்ல. உண்மையாக உள் நோக்கி பிரயாணித்து அதை அலசி தேடுவது, அஹம்பாவம் எனும் அகந்தை தான் நான் அதை உருவாக்குவது மனம் என்று அறிந்து அதையும் விலக்குவது தான் ஞானவிசாரம்.
பட்டினத்தாரின் ஒரு எளிமையான அற்புத அர்த்த புஷ்டியான ஒரு பாடல்:
ஆவியொடு காயம் அழிந்தாலும் மேதினியில்
பாவி என்று நாமம் படையாதே - மேவியசீர்
வித்தாரமும் கடம்பும் வேண்டா மடநெஞ்சே
செத்தாரைப் போலே திரி.
No comments:
Post a Comment