ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - நங்கநல்லூர் J K SIVAN
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரனாம மஹிமை - அறிமுகம்
லலிதா தேவி ஒரு சமயம் வாஸினி, மற்றும் வாக் தேவதைகளிடம் ''உங்களுக்கு எனது ஸ்ரீ சக்ர ரஹஸ்யம் தெரியும் அல்லவா?. ஸ்ரீ வித்யா மந்திரங்களும் தெரியும். ஆகவே, நீங்கள் எனது மஹிமையை பக்தர்கள் உணர 1000 நாமங்களாக ஸ்லோகங்களாக இதை இயற்றுங்கள். என் பக்தர்கள் எளிமையாக அதை பாராயணம் செய்ய உகந்ததாக இருக்கட்டும்'' என்று உத்தரவிடுகிறாள். அப்படி இயற்றப்பட்டது தான் இந்த ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமம் .
ஒருநாள் லலிதா தனது ஸம்ஹாஸனத்தில் அமர்ந்து தர்பாரில் எண்ணற்ற பிரம்மாக்கள், விஷ்ணுக்கள், ருத்ரர்கள், தேவாதி தேவர்களுக்கு தரிசனம் தருகிறாள். அங்கே சக்தி தேவதைகளான, மந்த்ரிணி, தண்டினி, போன்றவர் களும் உள்ளனர். அனைவர் முன்னிலையிலும் தான் இந்த லலிதா ஸஹஸ்ரநாமத்தை வாஸினி மற்றும் வாக்தேவதைகள் உச்சரிக்கிறார்கள். எல்லோரும் அனுபவித்து மகிழ்ந்த இந்த ஸஹஸ்ரநாமம் சக்தி வழிபாட்டில் மிக உயர்ந்தது. இதற்கு இணையான மற்றொரு உன்னத ஸஹஸ்ரநாமம் விஷ்ணு ஸஹஸ்ரநாமம்.
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் மூன்று அத்தியாயங்கள், 320 ஸ்லோகங்கள்கொண்டது லலிதாவின் ஆயிர நாமங்கள். இந்த மந்திர பாராயணம் அனுஷ்டுப் சந்தஸ் வகையை சேர்ந்தது. லலிதா பரமேஸ்வரி தான் இதற்கு தேவதை. மற்ற நியாஸ விபரங்கள் என்னவென்றால் இது வாக்பவ கூடத்தை சேர்ந்தது. முதல் மூன்று கூடங்களில் இது ஒரு பீஜம்.ரெண்டாவது பீஜம் காமராஜ கூடம் (சக்தி). சக்தி கூடம் தான் மூன்றாவது கீலகம். இந்த நுண்ணிய விபரங்களுக்குள் இப்போது செல்லவேண்டாம்.
லலிதா த்ரிசதி என்று முன்னூறு நாமங்கள் இருக்கிறது. அதி அற்புத சக்தி கொண்ட இந்த தோத்ரம். பஞ்சதசியை
சேர்ந்தது இது. த்ரிசதி ஸ்தோத்திரங்கள் பஞ்சதசி அக்ஷரங்களோடு ஆரம்பமாகுபவை.
சௌபாக்கிய பாஸ்கரம் என்ற ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வியாக்ஸ யானத்தை பாஸ்கரராயர் எழுதியதில் அனைத்து விபரமும் அறியலாம். தாந்த்ரீக சாதகர் பாசுரண்ட நாதர் என்றும் அவருக்கு பெயர். லலிதா ஸஹஸ்ரநாமத்துக்கு பலர் வியாக்கியானம் எழுதியிருக்கிறார்கள். முக்கியமாக ரெண்டு பெயர்கள் மட்டும் சொல்கிறேன். வித்யாரண்ய முனிவர், விமர்ஸானந்தர். இன்னும் அநேகர் உள்ளனர்.
லலிதா சஹஸ்ரநாமம் 10 பிரிவுகளாக உள்ளது. ஒவ்வொன்றிலும் நூறு நாமங்கள். அவற்றின் பெயர் மட்டும் சொல்கிறேன்.
1.ஸ்ரீமாதா, மணி பூராந்த ருதிதா. 3. ஸத்கதி ப்ரதா. 4. ஹ்ரீம்காரி 5. விவிதாகாரா.6. கூடான்ன ப்ரீத்தா மானஸா 7. தரோந்தோலித்தாதீர்காக்ஷி 8.தேசகால பரிச்சின்னா 9. புஷ்டா. 10 நாதரூபிணி. ஒவ்வொரு நாமத்துக்கு பல அர்த்தங்கள் உண்டு. புராதன பிரம்மாண்ட புராணத்தில் வரும் ஸம்ஸ்க்ரித நாமங்கள். சர்வ சக்தி வாய்ந்த மந்திராக்ஷர நாமங்கள். உச்சாடனம் செய்தால் உடலில் ஒவ்வொரு நாடி நரம்புக்கும் அதீத சக்தி பெருகும்.
''ஓம் '' என்று ஆரம்பித்து ''நமஹ'' என்று முடிப்பது தான் முறையான வழக்கம் .
சென்னைக்கு அருகிலே திருவள்ளூரின் வட கிழக்கு பக்கம் குசஸ்தல நதிவடகரையில் (கொசுத்தலை ஆறு என்று ஏனோ பேர் வழங்கிவிட்டது!) கிளாம்பாக்கம் எனும் சின்ன கிராமத்தில் ஒரு அழகிய ஸ்ரீ லலிதா மஹா திரிபுர சுந்தரி ஆலயம் புதிதாக அவதரித்துள்ளது. அதில் அம்பாளின் திவ்ய ஸ்வரூபம் பார்க்க பிடித்திருந்தது. அதை இணைத்துள்ளேன். அந்த ஆலயம் செல்ல விரும்புவோர் ஒரு இளம் அர்ச்சகர் அதை பராமரிப்பதில் அவரை தொடர்பு கொள்ள தொலைபேசி எண் 9551207784 .
தொடரும்
No comments:
Post a Comment