Sunday, October 17, 2021

SRIMAN NARAYANEEYAM

 ஸ்ரீமந்  நாராயணீயம் - நங்கநல்லூர்  J K  SIVAN  -

77வது தசகம் 

77 ஜராஸந்தனுடன் மோதல்.

இனி கிருஷ்ணன்  ஜராஸந்தனை   பீமன் மூலம்  வதம் செய்வதையும்  காலயவனை முசுகுந்தன் மூலம் கொன்றதையும்  காணப்போகிறோம்.

सैरन्ध्र्यास्तदनु चिरं स्मरातुराया
यातोऽभू: सुललितमुद्धवेन सार्धम् ।
आवासं त्वदुपगमोत्सवं सदैव
ध्यायन्त्या: प्रतिदिनवाससज्जिकाया: ॥१॥

sairandhryaastadanu chiraM smaraaturaayaa
yaatO(a)bhuuH sulalitamuddhavena saardham |
aavaasaM tadupagamOtsavaM sadaiva
dhyaayantyaaH pratidinavaasa sajjikaayaaH ||1

ஸைரந்த்⁴ர்யாஸ்தத³னு சிரம் ஸ்மராதுராயா
யாதோ(அ)பூ⁴꞉ ஸுலலிதமுத்³த⁴வேன ஸார்த⁴ம் |
ஆவாஸம் த்வது³பக³மோத்ஸவம் ஸதை³வ
த்⁴யாயந்த்யா꞉ ப்ரதிதி³னவாஸஸஜ்ஜிகாயா꞉ || 77-1 ||

கிருஷ்ணா  நீ   உத்தவனோடு உன் மீது மிகுந்த அன்பும் பாசமும் கொண்ட பக்தை சைரந்திரி என்பவளை காணச் செல்கிறாய். பக்தர்களின் அழைப்பை ஏற்று அருள் செய்வது உனது தனிச் சிறப்பு அல்லவா.  உன்னைக் கண்டதில் பரம திருப்தி கொண்டு அந்த பக்தை ஆனந்தம் எய்துகிறாள்.

उपगते त्वयि पूर्णमनोरथां
प्रमदसम्भ्रमकम्प्रपयोधराम् ।
विविधमाननमादधतीं मुदा
रहसि तां रमयाञ्चकृषे सुखम् ॥२

upagate tvayi puurNa manOrathaaM
pramada sambhrama kampra payOdharaam |
vividha maananamaadadhatiiM mudaa
rahasi taaM ramayaaM chakR^iShe sukham ||2

உபக³தே த்வயி பூர்ணமனோரதா²ம்
ப்ரமத³ஸம்ப்⁴ரமகம்ப்ரபயோத⁴ராம் |
விவித⁴மானநமாத³த⁴தீம் முதா³
ரஹஸி தாம் ரமயாஞ்சக்ருஷே ஸுக²ம் || 77-2 ||

ஒரு மஹாராஜா திடீரென்று நமது வீட்டுக்கு சொல்லாமல் கொள்ளாமல் வந்துவிட்டால் அந்த ஆனந்தத்தில் செய்வதறியாது திகைத்து அங்கும் இங்கும்  ஓடும் நிலையை தான் சைரந்திரி அடைந்திருந்தால்.  இவ்வளவு சீக்ரம் தனது மனோபீஷ்டம் நிறைவேறும் என்று எதிர்பாராத நிலையில்  ஆனந்த நிலை ஒன்றே  அவளை ஆட்கொண்டது. உன்னை அணைத்து  வரவேற்றாள். 

पृष्टा वरं पुनरसाववृणोद्वराकी
भूयस्त्वया सुरतमेव निशान्तरेषु ।
सायुज्यमस्त्विति वदेत् बुध एव कामं
सामीप्यमस्त्वनिशमित्यपि नाब्रवीत् किम् ॥३॥

pR^iShTaa varaM punarasaavavR^iNOdvaraakii
bhuuyastvayaa suratameva nishaantareShu |
saayujyamasitvati vadet budha eva kaamaM
saamiipyamastvanishamityapi naabraviit kim || 3

ப்ருஷ்டா வரம் புனரஸாவவ்ருணோத்³வராகீ
பூ⁴யஸ்த்வயா ஸுரதமேவ நிஶாந்தரேஷு |
ஸாயுஜ்யமஸ்த்விதி வதே³த்³பு³த⁴ ஏவ காமம்
ஸாமீப்யமஸ்த்வனிஶமித்யபி நாப்³ரவீத்கிம் || 77-3 ||

அந்த எளிமையான பக்தைக்கு  நீ  என்ன வரம் வேண்டும் கேள் தருகிறேன் என்று சொன்னவுடன் மோக்ஷமோ முக்தியோ கேட்க தெரியவில்லை. உன்னை அடிக்கடி சந்திக்கவேண்டும். அதுவே போதும் என்று மட்டும் கேட்க தெரிந்தது.ஒருவேளை  என்றும்  நான் உன்னோடு இருக்கவேண்டும் என்று கேட்டிருக்கலாமோ?

ततो भवान् देव निशासु कासुचिन्मृगीदृशं तां निभृतं विनोदयन् ।
अदादुपश्लोक इति श्रुतं सुतं स नारदात् सात्त्वततन्त्रविद्बबभौ ॥४॥

tatO bhavaan deva nishaasu kaasuchit
mR^igiidR^ishaM taaM nibhR^itaM vinOdayan |
adaadupashlOka iti shrutaM sutaM
sa naaradaatsaattvata tantravidbabhau ||4

ததோ ப⁴வாந்தே³வ நிஶாஸு காஸுசி-
ந்ம்ருகீ³த்³ருஶம் தாம் நிப்⁴ருதம் வினோத³யன் |
அதா³து³பஶ்லோக இதி ஶ்ருதம் ஸுதம்
ஸ நாரதா³த்ஸாத்த்வததந்த்ரவித்³ப³பௌ⁴ || 77-4 ||

மதுராவில்  அந்த பக்தையின்  விருப்பத்தை பூர்த்தி செய்த கிருஷ்ணா  உன் அருளால் அவள் உபாசிலோகன்  என்ற  மகனை பெற்று மகிழ்ந்தாள்.  அவனே பிற்கலத்தில் நாரதரிடம் ஞானம் பெறுகிறான். அமரத்துவம் பெற்று  புகழடைகிறான்.

अक्रूरमन्दिरमितोऽथ बलोद्धवाभ्या-
मभ्यर्चितो बहु नुतो मुदितेन तेन ।
एनं विसृज्य विपिनागतपाण्डवेय-
वृत्तं विवेदिथ तथा धृतराष्ट्र्चेष्टाम् ॥५॥

akruura mandiramitO(a)tha balOddhavaabhyaam
abhyarchitO bahu nutO muditena tena |
enaM visR^ijya vipinaagata paaNDaveyavR^
ittaM viveditha tathaa dhR^itaraaShTra cheShTaam || 5

அக்ரூரமந்தி³ரமிதோ(அ)த² ப³லோத்³த⁴வாப்⁴யா-
மப்⁴யர்சிதோ ப³ஹு நுதோ முதி³தேன தேன |
ஏனம் விஸ்ருஜ்ய விபினாக³தபாண்ட³வேய-
வ்ருத்தம் விவேதி³த² ததா² த்⁴ருதராஷ்ட்ரசேஷ்டாம் || 77-5 ||

உத்தவன்  உன்னுடைய நிழலாகிவிட்டான். அவனுடனும்  பலராமனுடனும் நீ  ஒருநாள் அக்ரூரரை அவர் இல்லத்தில் சென்று காண்கிறாய்.  உன் வருகையில்  மிக்க சந்தோஷம் அடைகிறார் அக்ரூரர். அளவற்ற  மகிழ்வோடு உங்களை வரவேறு உபசரித்து வணங்கி  போற்றுகிறார். அக்ரூரரை பாண்டவர்களிடம் அனுப்புகிறாய்.  அவர்கள்  வனவாசத்திலிருந்து திரும்பியதை  அறிகிறாய்.  அக்ரூரர் மூலம் ஹஸ்தினாபுரத்தில்  திருதராஷ்டிரன் ராஜ்யத்தில் நடக்கும் செயதிகளை அறிகிறாய்.

विघाताज्जामातु: परमसुहृदो भोजनृपते-
र्जरासन्धे रुन्धत्यनवधिरुषान्धेऽथ मथुराम् ।
रथाद्यैर्द्योर्लब्धै: कतिपयबलस्त्वं बलयुत-
स्त्रयोविंशत्यक्षौहिणि तदुपनीतं समहृथा: ॥६॥

vighaataajjaamaatuH paramasuhR^idO bhOjanR^ipateH
jaraasandhe rundhatyanavadhiruShaa(a)ndhe(a)tha mathuraam |
rathaadyairdyOlabdhaiH katipaya balastvaM balayutaH
trayOvimshatyakshauhiNi tadupaniitaM samahR^ithaaH || 6

விகா⁴தாஜ்ஜாமாது꞉ பரமஸுஹ்ருதோ³ போ⁴ஜன்ருபதே-
ர்ஜராஸந்தே⁴ ருந்த⁴த்யனவதி⁴ருஷாந்தே⁴(அ)த² மது²ராம் |
ரதா²த்³யைர்த்³யோர்லப்³தை⁴꞉ கதிபயப³லஸ்த்வம் ப³லயுத-
ஸ்த்ரயோவிம்ஶத்யக்ஷௌஹிணி தது³பனீதம் ஸமஹ்ருதா²꞉ || 77-6 ||

கம்ஸனை  கிருஷ்ணன் வதம் செய்ததில்  உருவான எதிரி தான் ஜராஸந்தன்.  தனது மகளை கம்ஸனுக்கு மனைவியாக கொடுத்தவன். உன்னை பழிவாங்க காத்திருந்தவன். தக்க தருணம் வாய்க்க காத்திருந்தான்.  நீ வசிக்கும் மதுராவை,  உன்னை,  அந்த ராஜ்யத்தையே அழிக்க படையெடுத்து வந்தான்.  தேவலோகத்திலிருந்து தேரோட்டியோடு ஒரு தேர் உனக்கு உதவ வந்தது. பலராமன் துணையோடு  ஒரு சிறு  சேனையோடு நீ பலத்த ஜராசந்தன் படையை எதிர்கொண்டாய்.
ஜராசந்தன் சைன்யம்   இருபத்தி மூன்று  அக்ஷோவ்ணி  சக்தியும் பலமும் கொண்டது.  அதை அப்படியே  நாசம் செய்து  அழித்து ஜராசந்தனை வெற்றி கொண்டாய். ஜராசந்தனை கொல்லாமல் அவன் பீமன் கையால் மரணமடைய விட்டு வைத்தாய். 

बद्धं बलादथ बलेन बलोत्तरं त्वं
भूयो बलोद्यमरसेन मुमोचिथैनम् ।
निश्शेषदिग्जयसमाहृतविश्वसैन्यात्
कोऽन्यस्ततो हि बलपौरुषवांस्तदानीम् ॥७॥

baddhaM balaadatha balena balOttaraM tvaM
bhuuyO balOdyamarasena mumOchithainam |
nishsheSha digjaya samaahR^ita vishvasainyaat
kO(a)nyastatO hi balapauruShavaamstadaaniim || 7

ப³த்³த⁴ம் ப³லாத³த² ப³லேன ப³லோத்தரம் த்வம்
பூ⁴யோ ப³லோத்³யமரஸேன முமோசிதை²னம் |
நிஶ்ஶேஷதி³க்³ஜயஸமாஹ்ருதவிஶ்வஸைன்யாத்
கோ(அ)ன்யஸ்ததோ ஹி ப³லபௌருஷவாம்ஸ்ததா³னீம் || 77-7 ||

பலராமன்  ஜராசந்தனை பிடித்து கட்டி உன் முன் நிறுத்தினான்.  மற்றொரு பெரிய சேனையோடு அவன் உன்னை எதிர்க்க வருவதற்கு  வசதியாக அவனை விடுவித்தாய்.  அவன் வாழ்ந்த காலத்தில் ஜராசந்தனைவிட மிகுந்த பலம் கொண்டவன் எவனுமில்லை என்பது தெரிந்த விஷயம் தான். பல ராஜ்ஜியங்கள் மேல் படையெடுத்து மிகப்பெரிய படையை, சைன்யத்தை கொண்டவனாக இருந்தான் ஜராசந்தன். 

भग्न: स लग्नहृदयोऽपि नृपै: प्रणुन्नो
युद्धं त्वया व्यधित षोडशकृत्व एवम् ।
अक्षौहिणी: शिव शिवास्य जघन्थ विष्णो
सम्भूय सैकनवतित्रिशतं तदानीम् ॥८॥

bhagnaH sa lagna hR^idayO(a)pi nR^ipaiH praNunnO
yuddhaM tvayaa vyadhita ShODasha kR^itva evam |
akshauhiNiiH shiva shivaasya jaghantha viShNO
sambhuuya saikanavati trishataM tadaaniim || 8

ப⁴க்³னஸ்ஸ லக்³னஹ்ருத³யோ(அ)பி ந்ருபை꞉ ப்ரணுன்னோ
யுத்³த⁴ம் த்வயா வ்யதி⁴த ஷோட³ஶக்ருத்வ ஏவம் |
அக்ஷௌஹிணீ꞉ ஶிவ ஶிவாஸ்ய ஜக⁴ந்த² விஷ்ணோ
ஸம்பூ⁴ய ஸைகனவதித்ரிஶதம் ததா³னீம் || 77-8 ||

கிருஷ்ணா நீ எதிர்பார்த்தபடி  ஜராஸந்தன்  பலமுறை உன்னை அழிக்க மதுராவை முற்றுகை யிட்டான். உன்னிடம் சந்தித்த தோல்வி  அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.  மொத்தத்தில் அவன் மூலம்  முன்னூற்றி தொண்ணுத்தோறு அக்ஷோவ்ணி  சைன்யம் உன்னால் அழிக்க பட்டது.  ஜராசந்தன் ஒரு முறை ரெண்டு முறை அல்ல  பதினாறு முறை உன்னை அழிக்க மதுராபுரி ராஜ்யத்தின் மேல் படையெடுத்தவன். துவாபர யுகத்தில் எத்தனை  தீயவர்களை அழிக்க முடியுமோ அதற்காக அவதரித்த மஹா விஷ்ணு அல்லவா நீ ?

अष्टादशेऽस्य समरे समुपेयुषि त्वं
दृष्ट्वा पुरोऽथ यवनं यवनत्रिकोट्या ।
त्वष्ट्रा विधाप्य पुरमाशु पयोधिमध्ये
तत्राऽथ योगबलत: स्वजनाननैषी: ॥९॥

aShTaadashe(a)sya samare samupeyuShi tvaM
dR^iShTvaa purO(a)tha yavanaM yavana trikOTyaa |
tvaShTraa vidhaapya puramaashu payOdhi madhye
tatraa(a)tha yOgabalataH svajanaananaiShiiH || 9

அஷ்டாத³ஶே(அ)ஸ்ய ஸமரே ஸமுபேயுஷி த்வம்
த்³ருஷ்ட்வா புரோ(அ)த² யவனம் யவனத்ரிகோட்யா |
த்வஷ்ட்ரா விதா⁴ப்ய புரமாஶு பயோதி⁴மத்⁴யே
தத்ராத² யோக³ப³லத꞉ ஸ்வஜனானநைஷீ꞉ || 77-9 ||


காற்றில் செய்தி பரவி  உன் காதுகளை எட்டியது.  ஜராசந்தன் பதினெட்டாவது முறை உன்னை எதிர்க்க தயாராகிவிட்டான்  என்று அறிந்தாய். இந்த முறை இன்னும் பெரிய  சைன்யம் மூன்று கோடி  யவனர்களுடன்  எதிர்பார்க்கப்பட்டான். அந்த படை  காலயவனன் எனும் பெயர் கொண்ட  எவரும் எதிர்க்கமுடியாத தளபதியோடு உன்னை அழிக்க புறப்பட்டது.  மதுராநகரம்  பாதுகாப்பாக இல்லை என்றுணர்ந்த கிருஷ்ணா  நீ,  சுற்றிலும்   ஆழமான  சமுத்ரமே   இயற்கை எல்லை, அரணாக  பாதுகாப்பு அளிக்க  ஒரு  நகரத்தை  கடல் நடுவே  நிர்மாணித்தாய். உனக்கு தான் தேவலோக ஸ்தபதி, சிற்பி  விஸ்வகர்மா துணை நிற்கிறான்.  விரைவில் நகரம் உருவாகியது. அது தான் துவாரகை.  மதுராவிலிருந்து அனைவரையும்  உனது யோக சக்தியால் புதிதாக ஸ்ருஷ்டித்த  துவாரகைக்கு மாற்றிவிட்டாய். 

पदभ्यां त्वां पद्ममाली चकित इव पुरान्निर्गतो धावमानो
म्लेच्छेशेनानुयातो वधसुकृतविहीनेन शैले न्यलैषी: ।
सुप्तेनांघ्र्याहतेन द्रुतमथ मुचुकुन्देन भस्मीकृतेऽस्मिन्
भूपायास्मै गुहान्ते सुललितवपुषा तस्थिषे भक्तिभाजे ॥१०॥

padbhyaaM tvaM padmamaalii chakita iva puraannirgatO dhaavamaanO
mlechCheshenaanuyaatO vadhasukR^ita vihiinena shaile nyalaiShiiH |
suptenaanghryaahatena drutamatha muchukundena bhasmiikR^ite(a)smin
bhuupaayaasmai guhaante sulalita vapuShaa tasthiShe bhaktibhaaje || 10

பத்³ப்⁴யாம் த்வம் பத்³மமாலீ சகித இவ புரான்னிர்க³தோ தா⁴வமானோ
ம்லேச்சே²ஶேனானுயாதோ வத⁴ஸுக்ருதவிஹீனேன ஶைலே ந்யலைஷீ꞉ |
ஸுப்தேனாங்க்⁴ர்யாஹதேன த்³ருதமத² முசுகுந்தே³ன ப⁴ஸ்மீக்ருதே(அ)ஸ்மின்
பூ⁴பாயாஸ்மை கு³ஹாந்தே ஸுலலிதவபுஷா தஸ்தி²ஷே ப⁴க்திபா⁴ஜே || 77-10 ||

கிருஷ்ணா, நீ காலயவனின் முடிவு எப்படி இருக்கவேண்டும் என்று தீர்மானித்து விட்டாய்.  அவன் படையை விட்டு அவனை தனியாகப்  பிரிக்க ஒரு திட்டமிட்டாய். அதன் படி நீ ஒரு மாலையணிந்து அவனைக் கண்டு அஞ்சியவன் போல் கோழையாக உன்னை காட்டிக்கொண்டு  அவன் கண்ணெதிரே  மதுரா நகரிலிருந்து  உயிர்தப்பி ஓடுபவன் போல்  தோன்றினாய். காலயவனான் உன்னைப் பார்த்து ஏளனமாக சிரித்தவன் உன்னை  தானே  கையோடு  பிடித்து இழுத்துச் செல்லவேண்டும் என்று எண்ணம் கொண்டு உன்னை துரத்திக்கொண்டு பின்னால் ஓடிவந்தான். அவன் பின்னால்  வருவதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு  நீ அவனுக்கு போக்கு காட்டிக்கொண்டே ஒரு  குகைக்குள்  காட்டில் ஓடி மறைந்தாய்.  அது ஏதோ ஒரு குகை அல்ல.  நீ  தேந்தெடுத்த  குகை. 
அதில் உள்ளே சென்று இருளில் ஒரு மூலையில்  மறைந்து கொண்டாய்.   இருண்ட  அந்த  குகையின்  உள்ளே  ஒரு உருவம்  அங்கே ஒரு யுககாலமாக  படுத்துக் கொண்டிருந்தது.  அது மஹா சக்தி வாய்ந்த முசுகுந்தன்.  உன் வஸ்திரத்தை அவன் மேல் பூர்த்தி விட்டு நீ இருளில் மறைந்திருந்தாய்.  இருட்டில்   உன்னை பின் தொடர்ந்த  காலயவனன்  படுத்து தூங்கி கொண்டிருந்த முகுகுந்தனை நீ என்று  நினைத்து காலால் பலமாக உதைத்து எழுப்பினான். முசுகுந்தன் இந்திரனிடம் ஒரு வரம் பெற்றிருந்தான்.  அவனை தூக்கத்திலிருந்து எழுப்புபவன் எவனாக இருந்தாலும், அவன் விழித்து நோக்கினால் உடனே எரிந்து சாம்பலாகிவிடுவான்.    இது கிருஷ்ணனுக்கு தெரியாமலா  காலயவனை மெதுவாக இங்கே  வரவழைத்தான். காலயவனான் யார் தன்னை உதைத்து தூக்கத்திலிருந்து எழுப்பியவன் என்று கண்ணைத் திறந்து  எதிரே நின்ற காலயவனனைப் பார்த்த அக்கணமே  காலயவனன் எரிந்து சாம்பலானான்.


ऐक्ष्वाकोऽहं विरक्तोऽस्म्यखिलनृपसुखे त्वत्प्रसादैककाङ्क्षी
हा देवेति स्तुवन्तं वरविततिषु तं निस्पृहं वीक्ष्य हृष्यन् ।
मुक्तेस्तुल्यां च भक्तिं धुतसकलमलां मोक्षमप्याशु दत्वा
कार्यं हिंसाविशुद्ध्यै तप इति च तदा प्रात्थ लोकप्रतीत्यै ॥११॥

aikshvaakO(a)haM viraktO(a)smyakhila nR^ipasukhe tvatprasaadaikakaankshii
haa deveti stuvantaM varavitatiShu taM niHspR^ihaM viikshya hR^iShyan |
muktestulyaaM cha bhaktiM dhutasakalamalaaM mOkshamapyaashu dattvaa
kaaryaM himsaa vishuddhyai tapa iti cha tadaa praattha lOkapratiityai || 11

ஐக்ஷ்வாகோ(அ)ஹம் விரக்தோ(அ)ஸ்ம்யகி²லன்ருபஸுகே² த்வத்ப்ரஸாதை³ககாங்க்ஷீ
ஹா தே³வேதி ஸ்துவந்தம் வரவிததிஷு தம் நிஸ்ப்ருஹம் வீக்ஷ்ய ஹ்ருஷ்யன் |
முக்தேஸ்துல்யாம் ச ப⁴க்திம் து⁴தஸகலமலம் மோக்ஷமப்யாஶு த³த்த்வா
கார்யம் ஹிம்ஸாவிஶுத்³த்⁴யை தப இதி ச ததா³ ப்ராஸ்த² லோகப்ரதீத்யை || 77-11 ||


அடுத்தது  முசுகுந்தன்  பார்வை  அந்த  குகையில் இருந்த உன் மேல்  விழுந்தது.  நீ அவன்  வெகுகாலமாக விரும்பி   வேண்டிய  உனது சதுர்புஜ  தரிசனம் தந்து அருள் புரிந்தாய்.

''நான்  இக்ஷ்வாகு குல ராஜாவாக இருந்தும் பகவானே இந்த ராஜ போக போக்ய  வாழ்க்கையை  துறந்து, உன் அருள் ஒன்றே  பெறவேண்டும் என்று காத்திருந்தவன்'' என்று வணங்கினான்.  முசுகுந்தன் எந்த வரமும் உன்னிடம் கேட்கவில்லை.  என்றாலும்  உன் மேல் பக்தி என்றும் நிலைத்திருக்க அருள் புரிந்தாய். அதுவே  மோக்ஷம்  பெறுவதற்கு சமமில்லையா?  அதோடு முக்தியும் அருளினாய். அவன் யுத்தத்தில் மற்றவரை துன்புறுத்திய பரிகாரமாக  தவமிருக்க செய்தாய். இது மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக அமையட்டும் என்று எண்ணினாய். 

तदनु मथुरां गत्वा हत्वा चमूं यवनाहृतां
मगधपतिना मार्गे सैन्यै: पुरेव निवारित: ।
चरमविजयं दर्पायास्मै प्रदाय पलायितो
जलधिनगरीं यातो वातालयेश्वर पाहि माम् ॥१२॥

tadanu mathuraaM gatvaa hatvaa chamuuM yavanaahR^itaaM
magadhapatinaa maarge sainyaiH pureva nivaaritaH |
charamavijayaM darpaayaasmai pradaaya palaayitO
jaladhi nagariiM yaatO vaataalayeshvara paahi maam ||12

தத³னு மது²ராம் க³த்வா ஹத்வா சமூம் யவனாஹ்ருதாம்
மக³த⁴பதினா மார்கே³ ஸைன்யை꞉ புரேவ நிவாரித꞉ |
சரமவிஜயம் த³ர்பாயாஸ்மை ப்ரதா³ய பலாயிதோ
ஜலதி⁴னக³ரீம் யாதோ வாதாலயேஶ்வர பாஹி மாம் || 77-12 ||


காலயவனன்  முடிவுக்குப் பிறகு நீ மதுராவுக்கு திரும்பினாய். அங்கே  காலயவனுக்காக கட்டளையிட காத்திருந்த சைன்யத்தை  அழித்தாய்.  பிறகு நீ  துவாரகைக்கு திரும்பும்போது மீண்டும் ஜராஸந்தன்  உனக்காக அங்கே காத்திருந்தவன்  தடுத்து நிறுத்தினான். அவனுக்கு ஒருமுறையாவது திருப்தி ஏற்படட்டுமே என்று அவனைக்கண்டு அஞ்சி ஓடுவதுபோல்  நடித்தாய்.   எண்டே குருவாயூரப்பா என்னே மாயா ஜாலக்காரன்  நீ.  அவனுக்கு முடிவு பீமன் கையால் என்று தான் நீ ஏற்கனவே  தீர்மானித்துவிட்டாயே. எனக்கும் அருள் புரி , என் நோய் தீர்த்து என்னையும் வாழவைக்கவேண்டுமப்பா. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...