ஸ்ரீமந் நாராயணீயம் - நங்கநல்லூர் J K SIVAN -
72வது தசகம்
72. அக்ரூரர் விஜயம்
சில சமயம் நல்லவர்களும் கெட்டவர்கள் சமூகத்தில் இருந்தாலும் தன்னிலை தடுமாறாது நேர்மையாகவே செயல்பட்டு வருவார்கள். அவர்கள் மீது ஒரு மதிப்பும் மரியாதையும் கூட அவரைப் பிடிக்காதவர்களுக்கு ஏற்படும்படி நடந்துகொள்பவர்கள். அப்படி ஒருவர் இருந்தார் கம்ஸனின் அரண்மனையில். அவர் பெயர் அக்ரூரர். அந்த யாதவ குல தலைவர் கிருஷ்ண பக்தர். எலியை மசால் வடை வைத்து பிடிப்பது போல ஒரு நல்ல யாதவ படைத்தலைவரை கிருஷ்ணனிடம் அனுப்பி அவனை மெதுவாக மதுராவிற்கு கொண்டுவந்து தீர்த்துக் கட்ட கம்ஸன் முடிவெடுத்தான். இதற்கென ஒரு பெரிய ''சாப'' யாகம் (சாப என்றால் வில் ) செய்யப்போவதாகவும் அதில் அவன் உறவினர்களான கிருஷ்ணன் பலராமனும் கலந்து கொள்ளவேண்டும் என்று சமாதானக் கொடி பறக்கவிட்டான் கம்ஸன் . அவன் எண்ணம் நிச்சயம் கிருஷ்ணனைக் கொல்வது தான்.
कंसोऽथ नारदगिरा व्रजवासिनं त्वा-
माकर्ण्य दीर्णहृदय: स हि गान्दिनेयम् ।
आहूय कार्मुकमखच्छलतो भवन्त-
मानेतुमेनमहिनोदहिनाथशायिन् ॥१॥
kamsO(a)tha naaradagiraa vrajavaasinaM tvaa
maakarNyadiirNa hR^idayassa hi gaandineyam |
aahuuya kaarmukamakhachChalatO bhavantamaanetu-
menamahinO-dahinaatha shaayin | 1
கம்ஸோ(அ)த² நாரத³கி³ரா வ்ரஜவாஸினம் த்வா-
மாகர்ண்ய தீ³ர்ணஹ்ருத³ய꞉ ஸ ஹி கா³ந்தி³னேயம் |
ஆஹூய கார்முகமக²ச்ச²லதோ ப⁴வந்த-
மானேதுமேனமஹினோத³ஹினாத²ஶாயின் || 72-1 ||
பாம்பணை மேல் பள்ளிக்கொண்ட ரங்கநாதா, கம்ஸன் நாரதர் மூலம் நீ கோகுலத்தில் இருப்பதை அறிந்து கொண்டான் அல்லவா. பல கலந்தாலோசனைகளுக்குப் பிறகு கிருஷ்னனுக்கு நன்றாக தெரிந்த அக்ரூரரை வரவழைத்தான். தனுர் (சாப) யாகத்தில் கலந்து கொள்ள அவர்களை கம்ஸன் சார்பாக நேரில் சென்று அழைக்க அக்ரூரரை கோகுலத்துக்கு தேரில் அனுப்பினான்.
अक्रूर एष भवदंघ्रिपरश्चिराय
त्वद्दर्शनाक्षममना: क्षितिपालभीत्या ।
तस्याज्ञयैव पुनरीक्षितुमुद्यतस्त्वा-
मानन्दभारमतिभूरितरं बभार ॥२॥
akruura eSha bhavadanghri parashchiraaya
tvaddarshanaakshamamanaaH kshitipaalabhiityaa |
tasyaaj~nayaiva punariikshitumudyatastvaa
maanandabhaaramatibhuuritaraMbabhaara || 2
அக்ரூர ஏஷ ப⁴வத³ங்க்⁴ரிபரஶ்சிராய
த்வத்³த³ர்ஶனாக்ஷமமனா꞉ க்ஷிதிபாலபீ⁴த்யா |
தஸ்யாஜ்ஞயைவ புனரீக்ஷிதுமுத்³யதஸ்த்வா-
மானந்த³பா⁴ரமதிபூ⁴ரிதரம் ப³பா⁴ர || 72-2 ||
அக்ரூரருக்கு உன்னை தரிசிக்க வெகுநாளாக ஆசை. என்ன செய்வார்? கம்ஸன் ராஜ்யத்தில் வாழ்ந்து கொண்டு உன்னை சந்திப்பது எவ்வாறு சாத்தியம்? இப்போது கம்ஸனே கூப்பிட்டு கிருஷ்ணனை நேரில் சந்தித்து மதுராவுக்கு அழைத்துச் செல்ல கிடைத்த சந்தர்ப்பத்தை பகவத் சங்கல்பமாக ஏற்றுக்கொண்டு ஆனந்த மடைந்தார்.
सोऽयं रथेन सुकृती भवतो निवासं
गच्छन् मनोरथगणांस्त्वयि धार्यमाणान् ।
आस्वादयन् मुहुरपायभयेन दैवं
सम्प्रार्थयन् पथि न किञ्चिदपि व्यजानात् ॥३॥
sOyaM rathena sukR^itii bhavatO nivaasaM
gachChanmanOratha gaNaamstvayi dhaaryamaaNaan |
aasvaadayanmuhurapaaya bhayena daivaM
sampraarthayan pathi na ki~nchidapi vyajaanaat || 3
ஸோ(அ)யம் ரதே²ன ஸுக்ருதீ ப⁴வதோ நிவாஸம்
க³ச்ச²ன்மனோரத²க³ணாம்ஸ்த்வயி தா⁴ர்யமாணான் |
ஆஸ்வாத³யன்முஹுரபாயப⁴யேன தை³வம்
ஸம்ப்ரார்த²யன்பதி² ந கிஞ்சித³பி வ்யஜானாத் || 72-3 ||
-
வெளுத்ததெல்லாம் பால் என்று நம்புபவர் அக்ரூரர். பரம சாது. உண்மையிலேயே கம்ஸன் பழைய விரோதம் எல்லாம் மறந்து அன்போடு கிருஷ்ணனையும் பலராமனையும் தனுர் யாகத்துக்கு அழைப்பதாக நம்பிவிட்டார். தன்னைச் சுற்றி நடப்பதை அறியாத அப்பாவி அவர்.
द्रक्ष्यामि वेदशतगीतगतिं पुमांसं
स्प्रक्ष्यामि किंस्विदपि नाम परिष्वजेयम् ।
किं वक्ष्यते स खलु मां क्वनु वीक्षित: स्या-
दित्थं निनाय स भवन्मयमेव मार्गम् ॥४॥
drakshyaami vedashatagiitagatiM pumaamsaM
sprakshyaami kimsvidapi naama pariShvajeyam |
kiM vakshyate sa khalu maaM kvanu viikshitaH syaat
itthaM ninaaya sa bhavanmayameva maargam ||4
த்³ரக்ஷ்யாமி வேத³ஶதகீ³தக³திம் புமாம்ஸம்
ஸ்ப்ரக்ஷ்யாமி கிம்ஸ்வித³பினாம பரிஷ்வஜேயம் |
கிம் வக்ஷ்யதே ஸ க²லு மாம் க்வனு வீக்ஷித꞉ ஸ்யா-
தி³த்த²ம் நினாய ஸ ப⁴வன்மயமேவ மார்க³ம் || 72-4 ||
அக்ரூரர் ஆனந்தத்தில் களித்தார் . உள்ளூர சந்தேகமும் கூட. வேதங்கள் போற்றும் அந்த நாராயணன் அம்ச கிருஷ்ணனை என்னால் தரிசிக்க முடியுமா?
கிருஷ்ணனை வாழ்வில் ஒருநாள் என்னால் தொட முடியுமா? அந்த பாக்யம் எனக்கு கிட்டுமா? அவனை இறுக்கிக் கட்டி ஆலிங்கனம் செய்ய மனம் விழைகிறது. அது நடக்கக்கூடியதா?
ஒருவேளை நான் கம்சனிடமிருந்த வந்த தூதுவன் என்பதால் என் மீது கோபத்தோடு என்னை சந்திக்க மறுத்தால்?
என்னை என்ன கேள்விகள் அவன் கேட்க வாய்ப்பு என்று மனதில் அலசினார்?
என்னிடம் என்ன பேசுவான் கிருஷ்ணன்? நான் அவனை எங்கே சந்திக்க வழி இருக்கிறது?
भूय: क्रमादभिविशन् भवदंघ्रिपूतं
वृन्दावनं हरविरिञ्चसुराभिवन्द्यम् ।
आनन्दमग्न इव लग्न इव प्रमोहे
किं किं दशान्तरमवाप न पङ्कजाक्ष ॥५॥
bhuuyaH kramaadabhivishan bhavadanghripuutaM
bR^indaavanaM haraviri~nchasuraabhivandyam |
aanandamagna iva lagna iva pramOhe
kiM kiM dashaantaramavaapa na pankajaaksha || 5
பூ⁴ய꞉ க்ரமாத³பி⁴விஶன்ப⁴வத³ங்க்⁴ரிபூதம்
வ்ருந்தா³வனம் ஹரவிரிஞ்சஸுராபி⁴வந்த்³யம் |
ஆனந்த³மக்³ன இவ லக்³ன இவ ப்ரமோஹே
கிம் கிம் த³ஶாந்தரமவாப ந பங்கஜாக்ஷ || 72-5 ||
எப்போது பிருந்தாவனம் போய் சேருவோம் என்ற ஆர்வத்தோடும் ஆவலோடும் அக்ரூரர் தேரில் பயணம் செய்து கொண்டிருந்தார். தேர் பிருந்தாவனம் வந்து சேர்ந்தது. ஆஹா, என்ன அழகான திவ்ய க்ஷேத்ரம் இது. ஸ்ரீ கிருஷ்ணன் காலடி பட்ட புண்ய பூமி அல்லவா.? நம்மால் தலையால் நடக்க முடிந்தால் எவ்வளவு சௌகர்யமாக இருக்கும். நம் கால் இதன் மேல் படாமல் நடக்கலாமே . ப்ரம்மா சிவன் தேவாதி தேவர்கள் வழிபட்ட பூமி அல்லவா இது. ஆனந்தத்தால் ஒரு பக்கம் மதி மயங்கியது. அதே சமயம் ஆவலினால் படபடவென்று இதயம் துடிக்க கண்கள் இருண்டு அப்படி ஒரு வித மயக்கம். ரெண்டுமே சேர்ந்து கொண்டது அக்ரூரருக்கு.
पश्यन्नवन्दत भवद्विहृतिस्थलानि
पांसुष्ववेष्टत भवच्चरणाङ्कितेषु ।
किं ब्रूमहे बहुजना हि तदापि जाता
एवं तु भक्तितरला विरला: परात्मन् ॥६॥
pashyannavandata bhavadvihR^itisthalaani
paamsuShvaveShTata bhavachcharaNaankiteShu |
kiM bruumahe bahujanaa hi tadaa(a)pi jaataa
evaM tu bhaktitaralaa viralaaH paraatman || 6
பஶ்யன்னவந்த³த ப⁴வத்³விஹ்ருதிஸ்த²லானி
பாம்ஸுஷ்வவேஷ்டத ப⁴வச்சரணாங்கிதேஷு |
கிம் ப்³ரூமஹே ப³ஹுஜனா ஹி ததா³பி ஜாதா
ஏவம் து ப⁴க்திதரலா விரலா꞉ பராத்மன் || 72-6 ||
குருவாயூரப்பா, உன் பக்தன் அக்ரூரருக்கு ஏற்பட்ட இன்ப அதிர்ச்சியை சொல்கிறேன் கேள். பிருந்தாவனத்தில்
ஒவ்வொரு இடமாக தேரை நிறுத்த சொன்னார். ஆஹா, இங்கு தானே என் கிருஷ்ணன் விளையாடினான் என்று கேள்விப் பட்டேன்.இந்த இடத்திற்கு ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிடுகிறேன். இதோ இங்கு தான் அவன் தாமரை மலர் பாதங்கள் ஓடி விளையாடின என்று கேள்விப்பட்டேன். அதற்கும் ஒரு நமஸ்காரம். இங்கே தான் மரத்தின் அடியில் உட்கார்ந்திருப்பானாமே, அந்த விருக்ஷத்தை மூன்று முறையாவது பிரதக்ஷணம் செய்து வணங்குகிறேன். ஏ, மண்ணே, உன் மேல் தான் கன்றுக்குட்டிகளோடு ஓடி விளையாடி புரள்வானாமே கண்ணன், கேள்விப்பட்டேனே , உன்னை வணங்கி நெற்றியில் இட்டுக் கொள்கிறேன். அங்கப்ரதக்ஷணம் செயகிறேன் என்று மண்ணில் உருண்டார் அக்ரூரர்.
கிருஷ்ணா உனக்கு எண்ணற்ற பக்தர்கள் அன்றும் , இன்றும் ,என்றும் உண்டு. இருந்தாலும் தீவிர பக்தர்கள் வரிசையில் எல்லோரும் இருக்க முடியாதே. அக்ரூரர் அப்படி ஒரு தீவிர கிருஷ்ண பக்தர்.
सायं स गोपभवनानि भवच्चरित्र-
गीतामृतप्रसृतकर्णरसायनानि ।
पश्यन् प्रमोदसरितेव किलोह्यमानो
गच्छन् भवद्भवनसन्निधिमन्वयासीत् ॥७॥
saayaM sa gOpabhavanaani bhavachcharitra
giitaamR^ita prasR^ita karNarasaayanaani |
pashyan pramOdasariteva kilOhyamaanO
gachChan bhavadbhavana sannidhimanvayaasiit || 7
ஸாயம் ஸ கோ³பப⁴வனானி ப⁴வச்சரித்ர-
கீ³தாம்ருதப்ரஸ்ருதகர்ணரஸாயனானி |
பஶ்யன்ப்ரமோத³ஸரிதே³வ கிலோஹ்யமானோ
க³ச்ச²ன்ப⁴வத்³ப⁴வனஸன்னிதி⁴மன்வயாஸீத் || 72-7 ||
ஏ காற்றே, உன்னோடு கலந்து வருமாமே கண்ணனின் வேணுகானம், வேய்ங்குழல் நாதம். எங்கே உற்றுக் கேட்கிறேன். கொஞ்சம் அதை என்னாலும் கேட்கச் செய். அக்ரூரர் காதைத் தீட்டிக்கொண்டு அங்குமிங்கும் காற்றில் முகத்தை திருப்பினார்.
கிருஷ்ணா, ஐந்தாயிரம் வருஷங்களுக்குப் பிறகு கூட இப்போதும் உன் பழங்கதையை கேட்கும்போது புளகாங்கிதம் அடைகிறேன், அதை நேரில் அனுபவித்தவர்கள் எப்படி சந்தோஷத்தோடு வாழ்ந்தவர்கள். எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள். இதோ தெரிகிறதே இந்த வீடுகள் தான் கோபிகள் இல்லமா? இங்கு தான் கண்ணன் நண்பர்களோடு வெண்ணெய் வேட்டையாடுவானா? அக்ரூரர் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று வாசலில் நின்று வணங்கினார். பிருந்தாவனத்தில் அக்ரூரர் ஒரு தேன் குடித்த நரி போல் தன்னை மறந்த நிலையில் ஆனந்தத்தில் இருந்தார். பொழுது சாய்ந்து விட்டது .
கிருஷ்ணா அக்ரூரரின் தேர் உன் தந்தை நந்தகோபன் மாளிகை வாயிலில் வந்து நின்றது.
तावद्ददर्श पशुदोहविलोकलोलं
भक्तोत्तमागतिमिव प्रतिपालयन्तम् ।
भूमन् भवन्तमयमग्रजवन्तमन्त-
र्ब्रह्मानुभूतिरससिन्धुमिवोद्वमन्तम् ॥८॥
taavaddadarsha pashudOha vilOkalOlaM
bhaktOttamaagatimiva pratipaalayantam |
bhuuman bhavantamayamagrajavantamantaH
brahmaanubhuutirasa sindhumivOdvamantam || 8
தாவத்³த³த³ர்ஶ பஶுதோ³ஹவிலோகலோலம்
ப⁴க்தோத்தமாக³திமிவ ப்ரதிபாலயந்தம் |
பூ⁴மன் ப⁴வந்தமயமக்³ரஜவந்தமந்த-
ர்ப்³ரஹ்மானுபூ⁴திரஸஸிந்து⁴மிவோத்³வமந்தம் || 72-8 ||
அக்ரூரர் தேடியது இதோ அகப்பட்டு விட்டதே. வாசலிலேயே எதிர்கொண்டு அழைக்கிறதே அந்த தெய்வம். பலராமனோடு சேர்ந்து கொண்டு நீயும் அவனுமாக கோபர்கள் பசுக்களிடம் பால் கறப்பதை பார்த்துக் கொண்டிருந்தீர்கள். அதை அக்ரூரர் பார்க்கிறார். ஓஹோ நீ உனது ஒரு சிறந்த பக்தன் வரவை எதிர்பார்த்துக் கொண்டு, வாசலிலேயே வந்து காத்திருக்கிறாயோ? ஸத்ய ஸ்வரூபனான நீ உன் பரம பக்தனைக் கண்டதால் உண்டான மகிழ்ச்சியை , உன்னுள் ஒளிரும் ஆனந்தத்தை, வெளி உலகும் அறிய ஒளி வீசி நின்றாய்.
सायन्तनाप्लवविशेषविविक्तगात्रौ
द्वौ पीतनीलरुचिराम्बरलोभनीयौ ।
नातिप्रपञ्चधृतभूषणचारुवेषौ
मन्दस्मितार्द्रवदनौ स युवां ददर्श ॥९॥
saayantanaaplava visheSha viviktagaatrau
dvau piitaniila ruchiraambara lObhaniiyau |
naatiprapa~ncha dhR^itabhuuShaNa chaaruveShau
mandasmitaardravadanau sa yuvaaM dadarsha || 9
ஸாயந்தனாப்லவவிஶேஷவிவிக்தகா³த்ரௌ
த்³வௌ பீதனீலருசிராம்ப³ரலோப⁴னீயௌ |
நாதிப்ரபஞ்சத்⁴ருதபூ⁴ஷணசாருவேஷௌ
மந்த³ஸ்மிதார்த்³ரவத³னௌ ஸ யுவாம் த³த³ர்ஶ || 72-9 ||
பலராமனும் நீயும் நாள் முழுதும் காட்டில் பசுக்களோடு, நண்பர்களோடு ஓடி ஆடி புழுதி அடைந்த தேகத்தை நன்றாக நீராடி சுத்தப் படுத்திக் கொண்டு அந்த மாலை வேளையில் உட்கார்ந்திருப்பதை பார்த்து அக்ரூரர் மயங்கினார்.
ஆஹா உன் கருநீல, கார்மேக தேகத்தில் மஞ்சள் பீதாம்பர வஸ்திரம் ஜொலிக்க, நீல அங்கவஸ்திரம் அதன் மேல் பரவி, இணைந்து லாகவமாக உன் தோளில் தவழ்ந்த அழகில் தன்னை மறந்தார். எல்லா ஆபரணங்களையும் நீங்கள் அணியவில்லை, ஏதோ சொல்பமாகத் தான் காதிலும் கழுத்திலும் தலையிலும் கரங்கள், கால்களிலும் இடுப்பிலும் அணிந்திருந்தீர்கள். அழகுக்கு அழகு செய்தாற்போல் உன் காந்தப் புன்னகை காண்போரை கவருகிறதே. கண்ணுக்கு தேனாக, அம்ருதமாக இனிக்கிறதே இந்த கிருஷ்ண தரிசனம் .
दूराद्रथात्समवरुह्य नमन्तमेन-
मुत्थाप्य भक्तकुलमौलिमथोपगूहन् ।
हर्षान्मिताक्षरगिरा कुशलानुयोगी
पाणिं प्रगृह्य सबलोऽथ गृहं निनेथ ॥१०॥
duuraadrathaatsamavaruhya namantamenam
utthaapya bhaktakulamauli mathOpaguuhan |
harShaanmitaakshara giraa kushalaanuyOgii
paaNiM pragR^ihya sabalO(a)tha gR^ihaM ninetha || 10
தூ³ராத்³ரதா²த்ஸமவருஹ்ய நமந்தமேன-
முத்தா²ப்ய ப⁴க்தகுலமௌலிமதோ²பகூ³ஹன் |
ஹர்ஷான்மிதாக்ஷரகி³ரா குஶலானுயோகீ³
பாணிம் ப்ரக்³ருஹ்ய ஸப³லோ(அ)த² க்³ருஹம் நினேத² || 72-10 ||
வாதபுரீசா, அக்ரூரர் தேரிலிருந்து இறங்கினார். நீ அருகே சென்று அவரை உபசரித்து வரவேற்றாய். மதுரா ராஜ்ய ப்ரதிநிதி என்பதை விட அக்ரூரர் உன் பக்தன் என்ற பெருமை அவருக்கு இருந்ததால் தானே நீ வலியச் சென்று உபசரித்தவன். தூரத்திலிருந்தே உன்னை பார்த்துவிட்ட அக்ரூரர் அப்படியே நெடுந் சாண்கிடையாக உன் திருவடிகளில் விழுந்தார். நீ அவருக்கு கைலாகு கொடுத்து உயர்த்தி, தூக்கினாய். ஆலிங்கனம் செய்து கொண்டாய். ''வாருங்கள் அக்ரூரர், நீங்கள் சௌக்கியமா'' என்று க்ஷேம லாபங்களை விசாரித்தாய். கையைப் பிடித்து மரியாதையோடு மாளிகைக்குள் அழைத்துச் சென்றாய். கூடவே பலராமன் நிழல் போல் வந்தான்.
नन्देन साकममितादरमर्चयित्वा
तं यादवं तदुदितां निशमय्य वार्ताम् ।
गोपेषु भूपतिनिदेशकथां निवेद्य
नानाकथाभिरिह तेन निशामनैषी: ॥११॥
nandena saakamamitaadaramarchayitvaa
taM yaadavaM taduditaaM nishamayya vaartaam |
gOpeShu bhuupati nidesha kathaaM nivedya
naanaakathaabhiriha tena nishaamanaiShiiH || 11
நந்தே³ன ஸாகமமிதாத³ரமர்சயித்வா
தம் யாத³வம் தது³தி³தாம் நிஶமய்ய வார்தாம் |
கோ³பேஷு பூ⁴பதினிதே³ஶகதா²ம் நிவேத்³ய
நானாகதா²பி⁴ரிஹ தேன நிஶாமனைஷீ꞉ || 72-11 |
ஆசனம், தீர்த்தம் எல்லாம் அளித்து விசிறி, அவருக்கு உபசாரங்கள் செய்து, உன் யாதவ குலத்தை சேர்ந்த ஒரு சிறந்த தலைவருக்குண்டான மரியாதைகளை செய்தாய். சாங்கோபாங்கமாக அக்ரூரர் கம்ஸன் பிரம்மாண்டமாக ஏற்பாடு செயதிருக்கும் வில் விழா, சாப யாகம், பற்றிய விவரங்கள் சொன்னார். கம்ஸன் அவரை அனுப்பிய நோக்கம் உன்னையும் பலராமனையும் கையோடு மதுராவிற்கு அவருடன் அழைத்து வருவதற்காக என்று கூறினார். அக்ரூரர் கம்ஸன் சார்பாக அனைத்து கோபர்களையும் மதுராவிற்கு இந்த விழாவில் பங்கேற்க அழைத்தார். கோபர்களுக்கு இந்த சேதி சென்றது. அன்றிரவு கிருஷ்ணா நீ அக்ரூரருடன் பேசிக்கொண்டே மதுராவில் நடக்கும் விஷயங்களை அறிந்து கொண்டாய். இருவரும் அருகில் படுத்துக் கொண்டே உறங்கினீர்கள்.
चन्द्रागृहे किमुत चन्द्रभगागृहे नु
राधागृहे नु भवने किमु मैत्रविन्दे ।
धूर्तो विलम्बत इति प्रमदाभिरुच्चै-
राशङ्कितो निशि मरुत्पुरनाथ पाया: ॥१२॥
chandraagR^ihe kimuta chandrabhagaa gR^ihe nu
raadhaa gR^ihe nu bhavane kimu maitravinde |
dhuurtO vilambata iti pramadaabhiruchchaiH
aashankitO nishi marutpuranaatha paayaaH ||12
சந்த்³ராக்³ருஹே கிமுத சந்த்³ரப⁴கா³க்³ருஹே நு
ராதா⁴க்³ருஹே நு ப⁴வனே கிமு மைத்ரவிந்தே³ |
தூ⁴ர்தோ விலம்ப³த இதி ப்ரமதா³பி⁴ருச்சை-
ராஶங்கிதோ நிஶி மருத்புரனாத² பாயா꞉ || 72-12 ||
நீ அக்ரூரருடன் சேர்ந்து நேரம் கழித்ததை அறியாத கோபியர்கள் எங்கே அந்த கிருஷ்ணன் வழக்கம்போல் நம்மிடம் வரவில்லையே, அந்த திருடன் நிச்சயம் சந்திரா வீட்டிலோ, சந்திரபகா வீட்டிலோ, ராதா வீட்டிலோ, மித்ராவ்ரிந்தா வீட்டிலோ தான் விளையாடிக்கொண்டிருப்பான். நம்மை ஏமாற்றிவிட்டு அங்கே சுகமாக இருக்கிறான். வரட்டும் அவனை ஒரு கை பார்த்துவிடுவோம்'' என்று உன்மேல் கோபமாக இருந்தார்கள். எண்டே குருவாயூரப்பா, என்னையும் நோய் தீர்த்து ரக்ஷிப்பாய்.
No comments:
Post a Comment