ஸ்ரீமந் நாராயணீயம் - நங்கநல்லூர் J K SIVAN -
75வது தசகம்.75. கொடியவன் முடிவு
பொழுது விடிந்துவிட்டது. நேற்று மதுரா வந்த கிருஷ்ணன் இன்று காலை துயிலெழுந்தான். உலகத்துக்கும் விடியல் பிறந்துவிட்டது. கிருஷ்ணனின் அவதாரத்தில் வெகு முக்கியமான நிகழ்ச்சி நடைபெற நேரம் நெருங்கி விட்டது.
இன்று கம்ஸனின் அரண்மனைக்கு சென்றுவிட்டார்கள். கிருஷ்ணன் பலராமன் கம்ஸன் அரண்மனை மல்யுத்த வீரர்களுடன் மோதுவதை, கிருஷ்ணனைக் கொல்வதற்கென்றே பழக்கப்படுத்தப்பட்ட பெரிய யானையின் முடிவு, அதைத் தொடர்ந்து கம்ஸனின் முடிவு பற்றி இந்த தசகம் சொல்லும்.
प्रात: सन्त्रस्तभोजक्षितिपतिवचसा प्रस्तुते मल्लतूर्ये
सङ्घे राज्ञां च मञ्चानभिययुषि गते नन्दगोपेऽपि हर्म्यम् ।
कंसे सौधाधिरूढे त्वमपि सहबल: सानुगश्चारुवेषो
रङ्गद्वारं गतोऽभू: कुपितकुवलयापीडनागावलीढम् ॥१॥
praataH santrasta bhOjakshitipati vachasaa prastute mallatuurye
sanghe raaj~naa cha ma~nchaanabhiyayuShi gate nandagOpe(a)pi harmyam |
kamse saudhaadhiruuDhe tvamapi sahabalaH saanugashchaaruveShO
rangadvaaraM gatO(a)bhuuH kupita kuvalayaapiiDa naagaavaliiDham || 1
ப்ராத꞉ ஸந்த்ரஸ்தபோ⁴ஜக்ஷிதிபதிவசஸா ப்ரஸ்துதே மல்லதூர்யே
ஸங்கே⁴ ராஜ்ஞாம் ச மஞ்சானபி⁴யயுஷி க³தே நந்த³கோ³பே(அ)பி ஹர்ம்யம் |
கம்ஸே ஸௌதா⁴தி⁴ரூடே⁴ த்வமபி ஸஹப³ல꞉ ஸானுக³ஶ்சாருவேஷோ
ரங்க³த்³வாரம் க³தோ(அ)பூ⁴꞉ குபிதகுவலயாபீட³னாகா³வலீட⁴ம் || 75-1 ||
சுப்ரபாதம். கிருஷ்ணா நீ வந்ததிலிருந்து மதுராபுரி ஒரு புதிய ஆனந்தக் களை பெற்றுவிட்டது. கம்ஸன் ஏற்கனவே பல வருஷங்களாக தூக்கம் இழந்து தவிக்கிறவன். உலகத்திலேயே கிருஷ்ணனை இடை விடாது நினைவில் கொண்டவன் யார் என்னால் முதல் பரிசை தட்டிச் செல்பவன் கம்ஸன் தான். ஆகவே பொழுது விடிந்ததும் ஒரு நிகழ்ச்சி அன்று அவன் ஏற்பாடு செய்து வைத்திருந்ததை தண்டோரா, பறை யறிவிப்பு நகரெங்கும் ஒலி பரப்பியது.

''இன்று எல்லோரும் கலந்துகொள்ளும் ஒரு சிறப்பு மல்யுத்த போட்டி. அதில் சிறப்பு விருந்தி னர்கள் கிருஷ்ணன் பலராமன் இருவரும் கலந்து கொள்கிறார்கள்''
மல்யுத்த போட்டி மேடை யை சுற்றி எல்லோரும் அவரவர் இருக்கையில் அமர்ந்து கொண்டார்கள். கட்டுப்படுத்த முடியாத கூட்டம். நகரமே திரண்டு வந்து விட்டது. கிருஷ்ணன் மல்யுத்தத்தில் கலந்து கொள்கிறானே, பார்க்கவேண்டாமா?
அப்பா நந்தகோபன் வந்திருந்தான் பார்க்க. அவனால் முடிந்திருந்தால் இந்த விஷப்பரீக்ஷை வேண்டாமே கண்ணா என்று மகனைத் தடுத்திருப்பான். அவன் மனம் ''தெய்வமே என் செல்வங்களைக் கொடியவர்களிடமிருந்து காப்பாற்று'' என்று வேண்டிக்கொண்டிருந்தது. உப்பரிகையில் பிரதானமான ஆசனத்தில் கம்ஸன் உட்கார்ந்திருந்தான்.
குருவாயூரப்பா, நீ பலராமன் மற்ற சில நண்பர்களோடு அரங்கத்திற்கு வந்துவிட்டாய். ஏதோ விழாவுக்கு போகிறது போல் உன் ஆடை அலங்காரம், சந்தனப் பூச்சு. மல்யுத்த அரங்க வாயில் கதவு திறந்திருந்தாலும் கிருஷ்ணணா நீ உள்ளே நுழையாமல் தடை யாக மல்யுத்தத்துக்கு முன்பே இன்னொரு பேராபத்து காத்திருந்தது. பேராபத்து என்று சொன்னேனே அந்த ஆபத்தின் பெயர் குவலயாபீடம், பெரிய ஆபத்து ஏன்? அவ்வளவு பெரிய மத யானையை யாரும் பார்த்ததே இல்லை. கண்ணனை அப்படி எதிர்கொண்டது குவலயாபீடம்.
पापिष्ठापेहि मार्गाद्द्रुतमिति वचसा निष्ठुरक्रुद्धबुद्धे-
रम्बष्ठस्य प्रणोदादधिकजवजुषा हस्तिना गृह्यमाण: ।
केलीमुक्तोऽथ गोपीकुचकलशचिरस्पर्धिनं कुम्भमस्य
व्याहत्यालीयथास्त्वं चरणभुवि पुनर्निर्गतो वल्गुहासी ॥२॥
paapiShThaapehi maargaad drutamiti vachasaa niShTurakruddhabuddheH
ambaShThasya praNOdaadadhika javajuShaa hastinaa gR^ihyamaaNaH |
keliimuktO(a)tha gOpiikucha kalasha chiraspardhinaM kumbhamasya
vyaahatyaaliiyathaastvaM charaNabhuvi punarnirgatO valguhaasii || 2
பாபிஷ்டா²பேஹி மார்கா³த்³த்³ருதமிதி வசஸா நிஷ்டு²ரக்ருத்³த⁴பு³த்³தே⁴-
ரம்ப³ஷ்ட²ஸ்ய ப்ரணோதா³த³தி⁴கஜவஜுஷா ஹஸ்தினா க்³ருஹ்யமாண꞉ |
கேலீமுக்தோ(அ)த² கோ³பீகுசகலஶசிரஸ்பர்தி⁴னம் கும்ப⁴மஸ்ய
வ்யாஹத்யாலீயதா²ஸ்த்வம் சரணபு⁴வி புனர்னிர்க³தோ வல்கு³ஹாஸீ || 75-2 ||
கிருஷ்ணா, நீ குவலயாபீடத்தை நோக்கி '' வேகமாக விலகிப்போ தீய சக்தி கொண்ட ஐந்துவே என்று அந்த யானையை எச்சரித்தாய். யானையை செலுத்திய மாவுத்தன் அதன் மேல் அமர்ந்தவனுக்கு ஏற்கனவே கம்ஸன் கட்டளை விட்டிருந்தான். உன்னை எப்படியும் கொன்றுவிடவேண்டும். . காத்திருந்தது போல் யானை தனது துதிக்கையை உன்னை நோக்கி நீட்டியது. அடுத்த கணம் உன்னை தூக்கி அடித்து மிதித்து கொல்வதற்கு வெகுநாளாக தயார். ஆனால் யானை நீட்டிய துதிக்கையில் பிடிபடாமல் எளிதில் உன்னை விடுவித்துக் கொண்டாய். அதன் அருகே சென்று சிரத்தில் பலமாக மரண அடி ஒன்று உன் கரங்களால் கொடுத்தாய், கதி கலங்கியது குவலயாபீடத்துக்கு. அதற்குள் மின்னல் வேகத்தில் அதன் கால்களுக்கு இடையே புகுந்துவிட்டாய். அதன் கண்ணுக்கு தெரியாமல் அதன் வயிற்றினடியில் நீ. வழக்கம் போல் ஒரு புன்சிரிப்பு உன் முகத்தில்.

हस्तप्राप्योऽप्यगम्यो झटिति मुनिजनस्येव धावन् गजेन्द्रं
क्रीडन्नापात्य भूमौ पुनरपिपततस्तस्य दन्तं सजीवम् ।
मूलादुन्मूल्य तन्मूलगमहितमहामौक्तिकान्यात्
प्रादास्त्वं हारमेभिर्ललितविरचितं राधिकायै दिशेति ॥३॥
hasta praapyO(a)pyagamyO jhaTiti munijanasyeva dhaavan gajendraM
kriiDannaapaatya bhuumau punarabhipatatastasya dantam sajiivam |
muulaadunmuulya tanmuulaga mahita mahaa mauktikaanyaatmamitre
praadaastvaM haaramebhirlalita virachitaM raadhikaayai disheti || 3
ஹஸ்தப்ராப்யோ(அ)ப்யக³ம்யோ ஜ²டிதி முனிஜனஸ்யேவ தா⁴வன்க³ஜேந்த்³ரம்
க்ரீட³ன்னாபத்ய பூ⁴மௌ புனரபி⁴பததஸ்தஸ்ய த³ந்தம் ஸஜீவம் |
மூலாது³ன்மூல்ய தன்மூலக³மஹிதமஹாமௌக்திகான்யாத்
ப்ராதா³ஸ்த்வம் ஹாரமேபி⁴ர்லலிதவிரசிதம் ராதி⁴காயை தி³ஶேதி || 75-3 ||
யானை உன்னை பிடிக்க முயன்றது. பல யுகம் தவம் செய்யும் மஹாயோகிகள், முனிவர்களிடமே பிடிபடாதவன், பிடியிலே நீ அடங்காதவன் இந்த யானையின் பிடியிலா சிக்குவாய்? அது தறிகெட்டு ஓடியது. அதற்கு நீ அடித்ததில் மூளை கலங்கிவிட்டது. சுற்றி சுற்றி அதற்கு விளையாட்டு காட்டிய நீ அதை உன்னை நோக்கி ஓடி வர வைத்தாய். வெகுவேகமாக ஓடி வந்தது. எல்லோரும் பார்க்க அதை இடறி விழச்செய்தாய். ஒரு நொடியில் அதன் பலமிகுந்த தந்தங்களை பிடுங்கி உன் நண்பன் தாமன் நின்ற இடத்திற்கு வீசினாய். ஓஹோ விலையுயர்ந்த நவரத்தினங்கள், மணிகள் அலங்கரித்த அந்த தந்தங்களின் மணிகளை வைத்து ராதைக்கு ஒரு மணி மாலை தயாரித்து பரிசு கொடுக்கவா? தந்தங்களை இழந்து ரத்த வெள்ளத்தில் குவலயாபீடம் உயிரை விட்டது.
गृह्णानं दन्तमंसे युतमथ हलिना रङ्गमङ्गाविशन्तं
त्वां मङ्गल्याङ्गभङ्गीरभसहृतमनोलोचना वीक्ष्य लोका: ।
हंहो धन्यो हि नन्दो नहि नहि पशुपालाङ्गना नो यशोदा
नो नो धन्येक्षणा: स्मस्त्रिजगति वयमेवेति सर्वे शशंसु: ॥४॥
gR^ihNaanaM dantamamse yutamatha halinaa rangamangaavishantaM
tvaaM mangalyaanga bhangiirabhasa hR^ita manOlOchanaa viikshya lOkaaH |
haM hO dhanyO hi nandO nahi nahi pashupaalaanganaa nO yashOdaa
nO nO dhanyekshaNaaH smasitrajagati vayameveti sarve shashamsuH॥4
க்³ருஹ்ணானம் த³ந்தமம்ஸே யுதமத² ஹலினா ரங்க³மங்கா³விஶந்தம்
த்வாம் மங்க³ல்யாங்க³ப⁴ங்கீ³ரப⁴ஸஹ்ரு
ஹம்ஹோ த⁴ன்யோ நு நந்தோ³ ந ஹி ந ஹி பஶுபாலாங்க³னா நோ யஶோதா³
நோ நோ த⁴ன்யேக்ஷணா꞉ ஸ்மஸ்த்ரிஜக³தி வயமேவேதி ஸர்வே ஶஶம்ஸு꞉ || 75-4 ||
என் தெய்வமே, உன்னை மல்யுத்த அரங்கம் ஏறாமல் தடுத்து நிறுத்தி கொல்வதற்கு தயார் செய்யப்பட குவலயாபீடம் மாண்டுவிட்டதில் கம்சனுக்கு அதிர்ச்சி. இதோ நீ அரங்கத்தில் குவலயாபீடத்தின் தந்தங்களோடு ஏறிவிட்டாய். உன்னுடன் பலராமனும். எங்கும் ஓ வென்ற பேரிரைச்சல், உன்னுடைய பராக்கிரமத்தை நேரில் பார்த்து வியந்த மக்களின் எதிரொலி.
''ஆஹா இந்த நந்த கோபன் எவ்வளவு அதிர்ஷ்டக்காரன், இப்படி ஒரு மகத்தான பிள்ளையை அடைய மூவுலகத்திலும் அவனைப் போல பாக்கியசாலி உண்டா ?''என்று பலரும் புகழ்ந்தார்கள்.
சிலர் அதை ஆமோதிக்க வில்லை.
''இல்லை, இந்த கிருஷ்ணனின் அன்பை பெற்ற கோபியர்கள் அல்லவோ பரம பாக்கியசாலிகள்'' என்று சிலர் சொன்னதை வேறுசிலரின் வார்த்தைகள் திருத்தியது .
''அதெப்படி சொல்லலாம். அது சரியில்லை. '' அதி பாக்கியசாலி அவனைப் பெட்ரா யசோதை தான்''
''அதெல்லாம் எதுவுமே சரியில்லை. இதோ பாருங்கள் நாம் தான் ரொம்ப ரொம்ப பாக்ய வான்கள் கண்ணார எதிரில் கண்ணனைக் கண்டு மகிழும் பாக்யம் வேறு யாருக்கு கிடைக்கும்?'' என்று சொன்னதற்கு எல்லோரும் ஆமென்று தலையசைத்தனர் .
पूर्णं ब्रह्मैव साक्षान्निरवधि परमानन्दसान्द्रप्रकाशं
गोपेशु त्वं व्यलासीर्न खलु बहुजनैस्तावदावेदितोऽभू: ।
दृष्ट्वऽथ त्वां तदेदंप्रथममुपगते पुण्यकाले जनौघा:
पूर्णानन्दा विपापा: सरसमभिजगुस्त्वत्कृतानि स्मृतानि ॥५॥
puurNaM brahmaiva saakshaanniravadhi paramaananda saandraprakaashaM
gOpeShu tvaM vyalaasiirnakhalu bahujanaistaavadaaveditO(a) bhuuH |
dR^iShTvaathatvaaM tadedaM prathamamupagate puNyakaale janaughaaH
puurNaanandaa vipaapaaH sarasamabhijagustvatkR^itaani smR^itaani || 5
பூர்ணம் ப்³ரஹ்மைவ ஸாக்ஷான்னிரவதி⁴பரமானந்த³ஸாந்த் ³ரப்ரகாஶம்
கோ³பேஷு த்வம் வ்யலாஸீர்ன க²லு ப³ஹுஜனைஸ்தாவதா³வேதி³தோ(அ)பூ⁴꞉ |
த்³ருஷ்ட்வாத² த்வாம் ததே³த³ம்ப்ரத²மமுபக³தே புண்யகாலே ஜனௌகா⁴꞉
பூர்ணானந்தா³ விபாபா꞉ ஸரஸமபி⁴ஜகு³ஸ்த்வத்க்ருதானி ஸ்ம்ருதானி || 75-5 ||
''பகவானே, உன்னை யார் முழுமையாக அறிந்துகொள்ளமுடியும்? நீ அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாக ஒளிர்பவன். ஸாஸ்வதன் . ஆனந்த ஸ்வரூபன். எல்லையற்ற பிரம்ம ஸ்வரூபி. மதுராவுக்கு வரும் முன்பு கோபர்களில் ஒருவனாக மட்டுமே உன்னை காட்டிக்கொண்டவன். உன் அருளாசி பெற்ற வ்ரஜ பூமி மக்கள் பாபம் நீங்கியவர்கள். ஆனந்தமாக உன்னோடு வாழ்ந்ததையும் உன் பால்ய சேஷ்டிதங்களையும் ஆனந்தமாக என்றும் எப்போதும் நினைவு கூறுபவர்கள்.
गोपेशु त्वं व्यलासीर्न खलु बहुजनैस्तावदावेदितोऽभू: ।
दृष्ट्वऽथ त्वां तदेदंप्रथममुपगते पुण्यकाले जनौघा:
पूर्णानन्दा विपापा: सरसमभिजगुस्त्वत्कृतानि स्मृतानि ॥५॥
puurNaM brahmaiva saakshaanniravadhi paramaananda saandraprakaashaM
gOpeShu tvaM vyalaasiirnakhalu bahujanaistaavadaaveditO(a)
dR^iShTvaathatvaaM tadedaM prathamamupagate puNyakaale janaughaaH
puurNaanandaa vipaapaaH sarasamabhijagustvatkR^itaani smR^itaani || 5
பூர்ணம் ப்³ரஹ்மைவ ஸாக்ஷான்னிரவதி⁴பரமானந்த³ஸாந்த்
கோ³பேஷு த்வம் வ்யலாஸீர்ன க²லு ப³ஹுஜனைஸ்தாவதா³வேதி³தோ(அ)பூ⁴꞉ |
த்³ருஷ்ட்வாத² த்வாம் ததே³த³ம்ப்ரத²மமுபக³தே புண்யகாலே ஜனௌகா⁴꞉
பூர்ணானந்தா³ விபாபா꞉ ஸரஸமபி⁴ஜகு³ஸ்த்வத்க்ருதானி ஸ்ம்ருதானி || 75-5 ||
''பகவானே, உன்னை யார் முழுமையாக அறிந்துகொள்ளமுடியும்? நீ அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாக ஒளிர்பவன். ஸாஸ்வதன் . ஆனந்த ஸ்வரூபன். எல்லையற்ற பிரம்ம ஸ்வரூபி. மதுராவுக்கு வரும் முன்பு கோபர்களில் ஒருவனாக மட்டுமே உன்னை காட்டிக்கொண்டவன். உன் அருளாசி பெற்ற வ்ரஜ பூமி மக்கள் பாபம் நீங்கியவர்கள். ஆனந்தமாக உன்னோடு வாழ்ந்ததையும் உன் பால்ய சேஷ்டிதங்களையும் ஆனந்தமாக என்றும் எப்போதும் நினைவு கூறுபவர்கள்.
चाणूरो मल्लवीरस्तदनु नृपगिरा मुष्टिको मुष्टिशाली
त्वां रामं चाभिपेदे झटझटिति मिथो मुष्टिपातातिरूक्षम् ।
उत्पातापातनाकर्षणविविधरणान्या
मृत्यो: प्रागेव मल्लप्रभुरगमदयं भूरिशो बन्धमोक्षान् ॥६॥
chaaNuurO mallaviirastadanu nR^ipagiraa muShTikO muShTishaalii
tvaaM raamaM chaabhipede jhaTa jhaTiti mithO muShTipaataatiruuksham |
utpaataapaatanaakarShaNa vividharaNaanyaasataaM tatra chitraM
mR^ityOH praageva mallaprabhuragamadayaM bhuurishO bandhamOkshaan || 6
சாணூரோ மல்லவீரஸ்தத³னு ந்ருபகி³ரா முஷ்டிகோ முஷ்டிஶாலீ
த்வாம் ராமம் சாபி⁴பேதே³ ஜ²டஜ²டிதி மிதோ² முஷ்டிபாதாதிரூக்ஷம் |
உத்பாதாபாதனாகர்ஷணவிவித⁴ரணான்யா
ம்ருத்யோ꞉ ப்ராகே³வ மல்லப்ரபு⁴ரக³மத³யம் பூ⁴ரிஶோ ப³ந்த⁴மோக்ஷான் || 75-6 ||
குவலயாபீட மரணம் விளைவித்த சலசலப்பு சற்று அடங்கியது. கம்ஸன் அறிவித்திருந்த மல்யுத்த நிகழ்ச்சி அடுத்து துவங்கியது. அவன் ஆணைப்படி, மல்யுத்தத்தில் தலை சிறந்த கொடிய பலசாலி சாணூரன் மேடையில் ஏறிவிட்டான். ''கிருஷ்ணா, வா என்னோடு மல்யுத்தம் செய் என்று அறை கூவினான், கிருஷ்ணா, நீ, அவனோடு மல்யுத்தம் செயதாய். முடிவு எல்லோருக்கும் தெரிந்தது தான். புதிதில்லை. சாணூரன் தோற்றான். மாண்டான். அவனைத் தொடர்ந்து முஷ்டீகன் எனும் மல்யுத்த பலசாலியும் பலராமனுடனும் கிருஷ்ணனுடனும் மோதி மாண்டான். அவனுடைய இழு பறி வித்தைகள் அங்கே செல்லவில்லை.
हा धिक् कष्टं कुमारौ सुललितवपुषौ मल्लवीरौ कठोरौ
न द्रक्ष्यामो व्रजामस्त्वरितमिति जने भाषमाणे तदानीम् ।
चाणूरं तं करोद्भ्रामणविगलदसुं पोथयामासिथोर्व्यां
पिष्टोऽभून्मुष्टिकोऽपि द्रुतमथ हलिना नष्टशिष्टैर्दधावे ॥७॥
haa dhikkaShTaM kumaarau sulalitavapuShau mallaviirau kaThOrau
na drakshyaamO vrajaamastvaritamiti jane bhaaShamaaNe tadaaniim |
chaaNuuraM taM karOdbhraamaNa vigaladasuM pOthayaamaasithOrvyaaM
piShTO(a)bhuunmuShTikO(a)pi drutamatha halinaa naShTashiShTairdadhaave || 7
ஹா தி⁴க்கஷ்டம் குமாரௌ ஸுலலிதவபுஷௌ மல்லவீரௌ கடோ²ரௌ
ந த்³ரக்ஷ்யாமோ வ்ரஜாமஸ்த்வரிதமிதி ஜனே பா⁴ஷமாணே ததா³னீம் |
சாணூரம் தம் கரோத்³ப்⁴ராமணவிக³லத³ஸும் போத²யாமாஸிதோ²ர்வ்யாம்
பிஷ்டோ(அ)பூ⁴ன்முஷ்டிகோ(அ)பி த்³ருதமத² ஹலினா நஷ்டஶிஷ்டைர்த³தா⁴வே || 75-7 ||

அவையில் அரங்கத்தில் எல்லோருக்கும் அதிர்ச்சி. எவ்வளவு சிறிய பிள்ளைகள். இவர்களோடு இந்த பலசாலி பயில்வான்கள் மோதுகிறார்கள், கொன்று விடப்போகிறார்கள் என்று அஞ்சினார்கள். ஆனால் சாணூரனைப் பிடித்து அடித்து தலைக்கு மேல் தூக்கி சக்கரம் போல் சுழற்றி அவன் மயங்கி நுரை தள்ளி உன்னால் வேகமாக தரையில் வீசப்பட்டு நொறுங்கி ரத்தம் கக்கி மாண்டதைப் பார்த்து அதிசயித்தனர். முஷ்டீகனை பலராமன் அவ்வாறே கொன்றான். உன்னோடு மோத தயாராக இருந்த மற்ற மல்யுத்த வீரர்கள் கெட்டிக்காரர்கள். அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடியதால் உயிர் பிழைத்தார்கள்.
कंस संवार्य तूर्यं खलमतिरविदन् कार्यमार्यान् पितृंस्ता-
नाहन्तुं व्याप्तमूर्तेस्तव च समशिषद्दूरमुत्सारणाय ।
रुष्टो दुष्टोक्तिभिस्त्वं गरुड इव गिरिं मञ्चमञ्चन्नुदञ्चत्-
खड्गव्यावल्गदुस्संग्रहमपि च हठात् प्राग्रहीरौग्रसेनिम् ॥८॥
kamsa sanvaarya tuuryaM khalamatiravidan kaaryamaaryaan pitaR^Istaan
aahantuM vyaaptamuurtestava cha samashiShad duuramutsaaraNaaya |
ruShTO duShTOktibhistvaM garuDa iva giriM ma~nchama~nchannuda~nchat
khaDgavyaavalga duHsangrahamapi cha haThaat praagrahiiraugrasenim || 8
கம்ஸஸ்ஸம்வார்ய தூர்யம் க²லமதிரவித³ன்கார்யமார்யான் பித்ரும்ஸ்தா-
நாஹந்தும் வ்யாப்தமூர்தேஸ்தவ ச ஸமஶிஷத்³தூ³ரமுத்ஸாரணாய |
ருஷ்டோ து³ஷ்டோக்திபி⁴ஸ்த்வம் க³ருட³ இவ கி³ரிம் மஞ்சமஞ்சன்னுத³ஞ்சத்
க²ட்³க³வ்யாவல்க³து³ஸ்ஸங்க்³ ரஹமபி ச ஹடா²த்ப்ராக்³ரஹீரௌக்³ரஸேனிம் || 75-8 ||
''கம்ஸன் நிலை கலங்கினான். பெருமூசசு அனல் விட்டான். உடனே முரசொலியை நிறுத்த கட்டளையிட்டான். சிறையிலிருந்த வசுதேவர், தேவகியை கொல்ல ஆணையிட்டான்..உன்னைப் பிடித்து சிறையிலிட்டு நாடுகடத்த உத்தரவு பிறப்பித்தான். நேரம் வந்துவிட்டது உன் அவதாரத்தின் உச்ச கட்ட நிகழ்வுக்கு. கம்ஸனின் ஆணை உன்னை கோபம் கொள்ள செய்தது. இருந்த இடத்திலி ருந்து உயரே அமர்ந்திருந்த கம்ஸனின் ஆசனத்துக்கு தாவினாய் . பறந்தது நீயா கருடனா என்று யோசிக்க வைத்தது. கையில் வாளை உருவினான் கம்ஸன் .
रुष्टो दुष्टोक्तिभिस्त्वं गरुड इव गिरिं मञ्चमञ्चन्नुदञ्चत्-
खड्गव्यावल्गदुस्संग्रहमपि च हठात् प्राग्रहीरौग्रसेनिम् ॥८॥
kamsa sanvaarya tuuryaM khalamatiravidan kaaryamaaryaan pitaR^Istaan
aahantuM vyaaptamuurtestava cha samashiShad duuramutsaaraNaaya |
ruShTO duShTOktibhistvaM garuDa iva giriM ma~nchama~nchannuda~nchat
khaDgavyaavalga duHsangrahamapi cha haThaat praagrahiiraugrasenim || 8
கம்ஸஸ்ஸம்வார்ய தூர்யம் க²லமதிரவித³ன்கார்யமார்யான் பித்ரும்ஸ்தா-
நாஹந்தும் வ்யாப்தமூர்தேஸ்தவ ச ஸமஶிஷத்³தூ³ரமுத்ஸாரணாய |
ருஷ்டோ து³ஷ்டோக்திபி⁴ஸ்த்வம் க³ருட³ இவ கி³ரிம் மஞ்சமஞ்சன்னுத³ஞ்சத்
க²ட்³க³வ்யாவல்க³து³ஸ்ஸங்க்³
''கம்ஸன் நிலை கலங்கினான். பெருமூசசு அனல் விட்டான். உடனே முரசொலியை நிறுத்த கட்டளையிட்டான். சிறையிலிருந்த வசுதேவர், தேவகியை கொல்ல ஆணையிட்டான்..உன்னைப் பிடித்து சிறையிலிட்டு நாடுகடத்த உத்தரவு பிறப்பித்தான். நேரம் வந்துவிட்டது உன் அவதாரத்தின் உச்ச கட்ட நிகழ்வுக்கு. கம்ஸனின் ஆணை உன்னை கோபம் கொள்ள செய்தது. இருந்த இடத்திலி ருந்து உயரே அமர்ந்திருந்த கம்ஸனின் ஆசனத்துக்கு தாவினாய் . பறந்தது நீயா கருடனா என்று யோசிக்க வைத்தது. கையில் வாளை உருவினான் கம்ஸன் .
सद्यो निष्पिष्टसन्धिं भुवि नरपतिमापात्य तस्योपरिस्टा-
त्त्वय्यापात्ये तदैव त्वदुपरि पतिता नाकिनां पुष्पवृष्टि: ।
किं किं ब्रूमस्तदानीं सततमपि भिया त्वद्गतात्मा स भेजे
सायुज्यं त्वद्वधोत्था परम परमियं वासना कालनेमे: ॥९॥
sadyOniShpiShTasandhiM bhuvi narapatimaapaatya tasyOpariShTaat
tvayyaapaatye tadaiva tvadupari patitaa naakinaaM puShpavR^iShTiH |
kiM kiM bruumastadaaniiM satatamapi bhiyaa tvadgataatmaa sa bheje
saayujyaM tvadvadhOtthaa parama paramiyaM vaasanaa kaalanemeH || 9
ஸத்³யோ நிஷ்பிஷ்டஸந்தி⁴ம் பு⁴வி நரபதிமாபாத்ய தஸ்யோபரிஷ்டாத்
த்வய்யாபாத்யே ததை³வ த்வது³பரி பதிதா நாகினாம் புஷ்பவ்ருஷ்டி꞉ |
கிம் கிம் ப்³ரூமஸ்ததா³னீம் ஸததமபி பி⁴யா த்வத்³க³தாத்மா ஸ பே⁴ஜே
ஸாயுஜ்யம் த்வத்³வதோ⁴த்தா² பரம பரமியம் வாஸனா காலனேமே꞉ || 75-9 ||
கம்ஸன் மீது பாய்ந்து அவன் எலும்புகளை நொறுக்கினாய். அவனை உப்பரிகை ஆசனத்திலிருந்து கீழே வீசினாய். கீழே விழுந்த அவன் மீது தாவி குதித்தாய். விண்ணோர் இந்த காட்சியை காணத் தவறுவார்களா? மலர்களை தூவினார்கள்.கம்சனின் உயிர் அவன் உடலை விட்டு பிரிந்தபோது மோக்ஷத்தின் கதவுகள் திறந்து அவன் வரவேற்கப்பட்டான். முற்பிறவியில் காலநேமியாக பிறந்த போதும் உன் திருக்கரங்களால் முடிந்தவன் அல்லவா?

तद्भ्रातृनष्ट पिष्ट्वा द्रुतमथ पितरौ सन्नमन्नुग्रसेनं
कृत्वा राजानमुच्चैर्यदुकुलमखिलं मोदयन् कामदानै: ।
भक्तानामुत्तमं चोद्धवममरगुरोराप्तनीतिं सखायं
लब्ध्वा तुष्टो नगर्यां पवनपुरपते रुन्धि मे सर्वरोगान् ॥१०॥
tad bhraatR^InaShTa piShTvaa drutamatha pitarau sannamannugrasenaM
kR^itvaa raajaanamuchchairyadukulamakhi laM mOdayan kaamadaanaiH |
bhaktaanaamuttamaM chOddhavamamaragurOraaptaniiti M sakhaayaM
labdhvaa tuShTO nagaryaam pavanapurapate rundhime sarvarOgaan ||10
தத்³ப்⁴ராத்ருனஷ்ட பிஷ்ட்வா த்³ருதமத² பிதரௌ ஸன்னமன்னுக்³ரஸேனம்
க்ருத்வா ராஜானமுச்சைர்யது³குலமகி²லம் மோத³யன்காமதா³னை꞉ |
ப⁴க்தானாமுத்தமம் சோத்³த⁴வமமரகு³ரோராப்தனீதிம் ஸகா²யம்
லப்³த்⁴வா துஷ்டோ நக³ர்யாம் பவனபுரபதே ருந்தி⁴ மே ஸர்வரோகா³ன் || 75-10 |
கம்சனின் மரணம் ஏகப்பட்ட களேபரத்தை அங்கு உண்டாக்கியது. பலருக்கு சந்தோஷம் . சிலருக்கு அதிர்ச்சி, பயம். கோபம். கம்சனின் எட்டு சகோதரர்கள் உன்னை நோக்கி ஆக்கிரோஷத்தோடு வந்தவர்களை அப்படியே வந்த வேகத்தோடு எமனுலக்கு திருப்பி அனுப்பினாய். வசுதேவர் தேவகியை, நீ பிறந்த நேரத்த்தில் பிரிந்தவன் ஆவலோடு சிறைச்சாலைக்கு சென்று வணங்கி விடுவித்தாய். உன் பாட்டனார் உக்கிரசேனரை விடுவித்து மதுராபுரி மன்னனாக்கினாய். யாதவர்கள் குதூகலித்தனர், அவர்கள் வெகுநாளைய கனவு நினைவானதே. தேவகுரு ப்ரஹஸ்பதி யிடம் தர்மம் கற்றவன், உன் பக்தன், நண்பன், உத்தவனை மதுராவில் ராஜரீக உதவிகள் சந்தோஷமாக புரிய வைத்துவிட்டாய். எண்டே குருவாயூரப்பா இவ்வளவெல்லாம் செய்த நீ என் வாதநோயையும் தீர்த்து என்னை விடுவித்து வாழ அருள்புரிவாய்.
भक्तानामुत्तमं चोद्धवममरगुरोराप्तनीतिं सखायं
लब्ध्वा तुष्टो नगर्यां पवनपुरपते रुन्धि मे सर्वरोगान् ॥१०॥
tad bhraatR^InaShTa piShTvaa drutamatha pitarau sannamannugrasenaM
kR^itvaa raajaanamuchchairyadukulamakhi
bhaktaanaamuttamaM chOddhavamamaragurOraaptaniiti
labdhvaa tuShTO nagaryaam pavanapurapate rundhime sarvarOgaan ||10
தத்³ப்⁴ராத்ருனஷ்ட பிஷ்ட்வா த்³ருதமத² பிதரௌ ஸன்னமன்னுக்³ரஸேனம்
க்ருத்வா ராஜானமுச்சைர்யது³குலமகி²லம் மோத³யன்காமதா³னை꞉ |
ப⁴க்தானாமுத்தமம் சோத்³த⁴வமமரகு³ரோராப்தனீதிம் ஸகா²யம்
லப்³த்⁴வா துஷ்டோ நக³ர்யாம் பவனபுரபதே ருந்தி⁴ மே ஸர்வரோகா³ன் || 75-10 |
கம்சனின் மரணம் ஏகப்பட்ட களேபரத்தை அங்கு உண்டாக்கியது. பலருக்கு சந்தோஷம் . சிலருக்கு அதிர்ச்சி, பயம். கோபம். கம்சனின் எட்டு சகோதரர்கள் உன்னை நோக்கி ஆக்கிரோஷத்தோடு வந்தவர்களை அப்படியே வந்த வேகத்தோடு எமனுலக்கு திருப்பி அனுப்பினாய். வசுதேவர் தேவகியை, நீ பிறந்த நேரத்த்தில் பிரிந்தவன் ஆவலோடு சிறைச்சாலைக்கு சென்று வணங்கி விடுவித்தாய். உன் பாட்டனார் உக்கிரசேனரை விடுவித்து மதுராபுரி மன்னனாக்கினாய். யாதவர்கள் குதூகலித்தனர், அவர்கள் வெகுநாளைய கனவு நினைவானதே. தேவகுரு ப்ரஹஸ்பதி யிடம் தர்மம் கற்றவன், உன் பக்தன், நண்பன், உத்தவனை மதுராவில் ராஜரீக உதவிகள் சந்தோஷமாக புரிய வைத்துவிட்டாய். எண்டே குருவாயூரப்பா இவ்வளவெல்லாம் செய்த நீ என் வாதநோயையும் தீர்த்து என்னை விடுவித்து வாழ அருள்புரிவாய்.
No comments:
Post a Comment