பேசும் தெய்வம் - நங்கநல்லூர் J K SIVAN --
91 மகா பெரியவா கலந்துகொண்ட மஹாமஹம்.
அன்னாபிஷேகம் எல்லா சிவாலயத்திலும் ஐப்பசி பௌர்ணமி அன்று கண்கொள்ளா காட்சியாக தரிசனம் தரும். உலகில் உயிர்கள் இயங்குவது அன்னத்தினால் தான். எல்லாவற்றிலும் சிறந்த தானம் அன்னதானம். அது ஒன்றில் தான் எந்த உயிரும் திருப்தி அடைந்து ''போதும்'' என்று சொல்ல இயலும். அன்னதானம் செய்பவர்கள் என்றும் வாழ்த்தப்படுவார்கள். பணம் கொழித்தவர்கள் தான தர்மம் பண்ண வசதி படைத்தவர்கள் என்று எண்ணவேண்டாம். பணம் இருந்தால் போதாது. மனம் வேண்டும். பைசா இல்லாத பரம ஏழை பிரம்மாண்டமான அன்னதானம் பல முறை செய்திருக்கிறார் என்ற விஷயம் பிரமிக்க வைக்கிறது. அன்னதானம் என்றால் சுவையற்ற ஏதோ ஒரு சோறு அல்ல. மிக மிக ருசியாக அறுசுவை கொண்ட அற்புத சமையி வயிறார பலர் இலவசமாக உண்டு மகிழ்ந்திருக்கிறார்கள் என் முன்னோர்கள், பெற்றோர்கள் சாப்பிட்டதுண்டு. அப்படி ஒரு எளிய அன்னதான மஹான் தேப்பெருமாநல்லூர் ராமஸ்வாமி ஐயர். அவர் பெயர் யாருக்குமே தெரியாது. அவரை சிவன் என்று பெயர் சூட்டி அழைத்தவர் மஹா பெரியவா. அன்னதான சிவன் என்றால் அகிலஉலகமும் அறியும். அவரைப்பற்றிய சில ஸ்வாரஸ்ய விஷயங்கள் அறிவோம். 1933-34 மஹாமாஹம் கும்பகோணத்தில் நடந்தபோது காஞ்சிமடம் கும்பகோணம் கிளையில் பெரிய அன்னதானம் சிவன் முயற்சயால் நடைபெற்றது. எந்தெந்த கோவில்களில் விழாக்காலமோ அங்கெல்லாம் முன்கூட்டியே சென்று அன்னதானத்துக்கு ஏற்பாடு செயது விடுவார் தேப்பெருமாநல்லூர் அன்னதான சிவன்.
நூறாண்டுகள் காலம் வாழ்ந்த மஹா பெரியவா எத்தனை அன்னாபிஷேகங்களைக் கண்டவர்
ஸ்ரீ பெரியவாளின் பூர்வாசிரமத்தில், சுவாமிநாதன் என்கிற மூன்று வயது பாலகனாக அவர் கண்ட முதல் மகாமகம் 1897ல் வந்தது. அந்த விவரங்கள் இல்லை. ஆனால் பிற்பாடு மடாதிபதியாக பொறுப்பேற்றபின் தேப்பெருமாநல்லூர் சிவனின் மகாமகப் புகழ் சமாராதனைகளைப் பற்றி மஹா பெரியவா நிறைய சொல்லி இருக்கிறார்.
சந்திரசேகரேந்திர சரஸ்வதியாக காமகோடி பீடமேறிய 1907ஆம் வருடத்துக்குப் பின் இரண்டு வருடங்களில் 1909ம் ஆண்டு கும்பகோணத்தில் மகாமக விழா. மடாதிபதியாக மஹா பெரியவாளுக்கு இது முதல் மஹாமஹ விழா.
தஞ்சாவூர் மராத்திய ராஜ குடும்பத்தார் மஹா பெரியவாளை பல்லக்கில் வைத்து ஊர்வலத்தின் முன்னணியில் நடந்து சென்றனர்! கீலக வருஷம் மாசி 23, சனிக்கிழமை 6.3.1909-காமகோடி பீடத்தின் புது பீடாதிபதியாக மஹா பெரியவா கலந்து கொண்ட வைபவம்! அப்போதைய பிரிட்டிஷ் சர்க்கார் விசேஷமாக ஏற்பாடுகளைச் செய்தார்களாம். மடத்தில் அன்னதான சிவனின் அன்னதானம் வெகு விமரிசை! அதற்குச் சேர்ந்த அரிசி, பருப்பு, மளிகைச் சாமான்களின் மிச்சம் மீது அடுத்த ஒரு வருடத்துக்கு மடம் நடத்தப் போதுமானதாயிருந்ததாம் .
அதற்கு அடுத்த மஹா மஹம் ரௌத்திரி வருஷம் மாசி 1921 பெப்ரவரி 22 அன்று செவ்வாய்க் கிழமை. மஹா பெரியவா அப்போது காசி ராமேஸ்வரம், கங்கா யாத்திரைக்கு முறைப்படி சங்கல்பம் பண்ணிக்கொண்டிருந்தார். 1919ல் தொடங்கிய கங்கா பாத யாத்திரை திக்விட்ஜயம் நிறைவு பெற 21 வருஷங்கள் ஆயிற்று. இதற்கிடையில் கும்பகோணம் மடத்துக்குள் நுழைய முடியாதே. பாதில் யாத்திரை முறிந்ததாக ஆகிவிடுமே. முடித்தபிறகு தானே திரும்பவேண்டும்.
எனவே கும்பகோணத்துக்கு வெளியே பட்டீசுவரத்தில் முகாம். கும்பகோணம் வந்தால் ஸ்னானம், சுவாமி தரிசனம் அதோடு சரி. மடத்துப்பக்கம் செல்லவில்லை.
மகாமக குளம் நடுவே நீராழிமண்டபம் கட்ட நிதி திரட்டிக்கொண்டிருந்த சமயம் மகா பெரியவா மடத்தின் சார்பாக ரூபாய் 500 நன்கொடை வழங்கினார்.
நான் ஏற்கனவே எழுதி இருந்ததை மீண்டும் கவனப்படுத்துகிறேன். 1921ம் வருஷ மஹா மஹத்தில் மஹா பெரியவா 200 முஸ்லீம் இளைஞர்களை அழைத்து மஹாமஹம் வரும் பக்தர்களை ஒழுங்கு படுத்தி, உதவ பாதுகாப்பு சேவைக்கு பயன்படுத்தினார். அற்புதமாக அந்த இளைஞர்கள் ஒழுக்கத்தோடு, சுறுசுறுப்பாக அந்த இளைஞர்களை வைபவம் முடிந்த பின் பட்டீசுவரம் முகாமுக்கு அழைத்து, ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகப் பேசி அவர்கள் குடும்பம், கல்வி ஆகிய விவரங்களைக் கேட்டு ஆசிர்வதித்து அத்தனை பேருக்கும் மடத்திலேயே அறுசுவை விருந்தளித்து ஒரு வௌ்ளிக் கோப்பையையும் விருதாக வழங்கினார்.
செய்த காங்கிரஸ் தொண்டர்களையும் பாராட்டிப் பரிசளித்தார். அப்போது தான் தேச பக்தரான சுப்ரமணிய சிவம் உடல் நலம் குன்றிய நிலையில் மகாமக வைபவத்துக்கு வந்தார். அவர் பட்டீஸ்வரத்தில் பெரியவாளைத் தரிசிக்க கூட்டத்தோடு கூட்டமாக காத்திருந்தபோது, காவி உடையில் துறவி போல காட்சியளித்த அவரை மஹா பெரியவா அடையாளம் கண்டுகொண்டு, அருகில் வரவழைத்துப் பேசினார். சுப்ரமணிய சிவா மகிழ்ந்துபோனார். சிவா வேண்டிய வரம் என்ன தெரியுமா? ''மஹா பெரியவா, பாரத தேசம் விரைவில் விடுதலை பெற வேண்டும்' .
அதற்கு அடுத்த மஹாமஹம் 1933 மார்ச் 10 அன்று, ஆங்கிரஸ வருஷம் மாசி 27ம் தேதி.
காசியாத்திரை பூரணமடையாததால் பெரியவா மடத்தில் நுழையவில்லை. திருவிடை மருதூரில் முகாமிட்டிருந்தார்.
மிட்டிருந்த பெரியவாள் இநத முறை திருவிடைமருதூரிலேயே தங்கிக் கொண்டார். 'கலைமகள்' பத்திரிகை அதிபர் நாராயணசாமி ஐயரின் வீட்டில் ஸ்ரீ மடம் முகாமிட்டது. மகாமகத்தன்று அதிகாலை 4 மணிக்குத் திருவிடைமருதூரில் இருந்து புறப்பட்டு 5 மணியளவில் மகாமகக் குளத்தில் ஸ்ரீ பெரியவாள் ஸ்நானம் செய்து கொண்டார். தீர்த்தவாரிக்காக எழுந்தருளிய சுவாமிகளையும் தரிசனம் செய்து கொண்டார். திரும்பவும் திருவிடைமருதூருக்கே திரும்பி விட்டார். ஆனால் சிவனின் அன்னதானம் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது மடத்தில்.
1945 பெப்ரவரி 26 அன்று நடந்த அடுத்த மஹாமஹத்தின் போது மஹா பெரியவாளின் காசி கங்கா யாத்திரை பூர்த்தியாகிவிட்டது என்பதால் கும்ப கோணம் மடத்திலேயே முகாம் .ஆனால் அன்னதான சிவன் இல்லை, 1939லேயே முக்தி அடைந்துவிட்டார்
சூரியோதயத்துக்கு முன் ஒரு ஸ்நானம். உச்சி போதில் இன்னொரு ஸ்நானம்! மடத்தில் அன்னதானச் சிவன் பெயரால் நடைபெற்ற அன்னதானத்தில் இரண்டு குறைகள். ஒன்று, சிவன் உயிரோடு இல்லை! இரண்டு, அப்போதிருநத ரேஷன் சட்டம். அன்னதானத்துக்கு ரேஷன் அதிகாரிகளிடம் விசேஷ அனுமதி வாங்கித்தான் அன்னதானம் நடத்த வேண்டியிருந்தது. இருந்தாலும் தடையில்லாமல் அன்னதானம் நடைபெற்றது. பத்திரிகைகளில் வெளியான விளம்பரங்களை பார்த்து நாடெங்கிலும் இருந்து நன்கொடைகள் திரண்டதாம். தஞ்சாவூர் மிராசுதாரர்களும் மக்களும் சேர்ந்து அன்னதானம் சிறப்பாக அமைய உதவினார்கள! 1945ம் வருடத்து மஹா மஹமே ஸ்ரீ பெரியவாள் நேரில் கலந்து கொண்ட கடைசி மஹாமஹம்
என்கிறார்கள். அப்புறம் அவர் கலந்துகொள்ளவில்லையா?
தொடரும்
No comments:
Post a Comment