Monday, October 18, 2021

 ஒரு வித்தியாசமான  பதிவு.  -   நங்கநல்லூர்  J  K  SIVAN 

பழசை எல்லாம்  அப்பப்போ  தூக்கி எறிந்து குப்பையை குறைச்சுக்குவேன்.  ஒரு நாள்  இது ஆப்டுது.  (எங்கோ எவரோ  எப்போதோ  எழுதியதை   ஒரு  40 பேஜ் நோட்டில் ஒரு காலத்தில் குறித்து வைத்திருந்ததை பார்த்துவிட்டு அந்த சிதிலமடைந்திருந்த  பழைய  நோட்டை எரிந்து விட்டேன்.  அதில்  எழுதியிருந்த குறிப்புகளை ஒரு பாடலாக எழுதினால் என்ன என்று  எனக்கு ஏன்  தோன்றியது? எனக்கு பாடல் எழுதி பழக்கமில்லை. இலக்கணம் தெரியாது  என்பது இந்த எழுத்திலே  விளங்கும்.)

அடே நண்பர்களா  நான் போனப்பறம் அளாதீங்கடா,

உங்க கண்ணுலே  காவேரியை நான் அப்போ பாக்கமுடியாதுடா இப்போவே  அழுது  தொலைச்சா  நானே  பாத்துக்குடுவேன்லே...

இந்திரன்,  இல்லே,  சந்திரன்..னு  அப்போ கூவாதீங்கடா, என்னாலே கேக்கமுடியாதுடா,இப்போவே என்னை புகழ்ந்து தள்ளுங்க, கேட்டுத்தொலையறேன்.

போனப்புறம் என் தப்பெல்லாம் மறந்து இன்னாங்கடா  புண்யம் எனக்கு என்ன தெரியவா போவுது அப்போ இப்போவே மறந்துட்டேண்டா ன்னு  என்  கைலே  அடிச்சு சொல்லிடுங்கடா ..

நல்லவன்டா அவன்...போயிட்டானே, மிஸ் பண்ணிட்டமேன்னு  அப்போ சொன்னீங்கன்னா  எனக்கு  அது தெரியாமவே  போயிடுண்டா , இப்பவே  உன்னை மிஸ் பண்ணிட்டேனேடா ன்னு சொல்லிட்டு  நேரே வாங்களேண்டா..

பாவம்டா... அவனோடே  இன்னும்  ரவை நாழி  சேர்ந்து இருந்திருக்கலாமே  ..ங்காதீங்கடா எனக்கு  அது தெரியாமவே போயிடுமேடா இப்போ சும்மாத்தானே கிடக்கேன் வாங்களேண்டா..''

இந்த  பாடலின் கருத்து, நாம் ஒவ்வொருவரும் அடிக்கடி  ஒருவரையொருவர் சந்தித்து, பேசி, குடும்பங்களோடு பழகி, அன்பை வெளிப்படுத்தவேண்டும்.  எல்லோரும் நமக்கு ஸ்பெஷல் தான், எல்லோரும் ஒஸ்தி தான் என்று  ஒவ்வொருவருக்கும்  புரிய வைக்கணும்.  இந்த அன்பின் நெருக்கத்தை பண்போடு அனுபவிக்கவில்லை என்றால் எப்போது நம்மை காலம் பிரித்துவிடும் என்று தெரியாது. கொரோனா ஆ வென்று  வாயைத்  திறந்துகொண்டு பசியோடு இன்னும்  சுற்றிக்கொண்டிருக்கிறதாமே. 

போனா வராது பொழுது போனா நிக்காது  இந்த  சந்தர்ப்பம்.

வாழ்க்கை நீர்மேல் குமிழின்னு எத்தனையோ சாமியாருங்க  சொல்லியிருக்காங்களே. தப்பு பண்ணவனையெல்லாம் மன்னிச்சுடுவோம், தப்பைஎல்லாம்   மறந்துடுவோம். . மறுபடியும் சாமியாருங்க நேரிலே, புஸ்தகத்தில் சொன்னதை திருப்பி சொல்றேன்....''இன்னாடா  பணம்  கிணம் னு சேர்த்து வைச்சிக்கறே...செத்துட்டா,  பொணம்  தனியா தான்டா  போவும். பணம் அதோட போவாதேடா...மனசை திறந்துக்கடா  அதுக்கு தைர்யம் வேணும்டா.  ஜோடியா நாம சேந்தாத்தாண்டா ஒத்துமை ன்றது.  பேசி சிரிச்சா தாண்டா அன்புன்றது.  பழகுனா தாண்டா உறவுன்றது. எந்திரிடா முதல்லே....

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...