ஸ்ரீமந் நாராயணீயம் - நங்கநல்லூர் J K SIVAN -
83வது தசகம்
83. தெரியாத பழங்கதைகள் சில.
பௌண்ட்ரக வாசுதேவன் என்று ஒரு ஏமாற்று பேர்வழி இருந்தான். சாமர்த்தியசாலி. நான் தான் மஹா விஷ்ணு , என்னைத் தவிர வேறே யாரும் இல்லை என்று விஷ்ணு போல் வேஷம் போட்டுக்கொண்டு திரிவான். அவனுக்கு காசி ராஜா துணை போனான். கிருஷ்ணன் அவர்களை மட்டும் அல்ல, அவர்களுடன் சேர்ந்திருந்த வேறு சில போலி ஆசாமிகளையும் கொன்றார் என்பது ஒரு விஷயம் இந்த தசகத்தில்.

रामेअ थ गोकुलगते प्रमदाप्रसक्ते
हुउतानुपेत यमुनादमने मदाण्धे |
स्वैरं समारामति सेवक वाद मुउढो
दुउतं नययुन्क्त तव पौण्ड्रक वासुदेवः ||1
raame(a)tha gOkulagate pramadaaprasakte
huutaanupeta yamunaadamane madaandhe |
svairaM samaaramati sevaka vaada muuDhO
duutaM nyayunkta tava pauNDraka vaasudevaH || 1
ராமே(அ)த²கோ³குலக³தே ப்ரமதா³ப்ரஸக்தே
ஹூதானுபேதயமுனாத³மனே மதா³ந்தே⁴ |
ஸ்வைரம் ஸமாரமதி ஸேவகவாத³மூடோ⁴
தூ³தம் ந்யயுங்க்த தவ பௌண்ட்³ரகவாஸுதே³வ꞉ || 83-1 ||
ஒரு சமயம் பலராமன் கோகுலத்திற்கு சென்று அங்கு பழைய கோப நண்பர்களுடன் நீராடியபோது காளிந்தி நதி பலராமனை புறக்கணித்தது. அவர்கள் இருக்கும் இடத்திற்கு நெருங்கி வரவில்லை.பலராமன் கையில் பலம் மிக்க ஒரு கலப்பை எப்போதும் ஆயுதமாக இருக்கும். அதால் பலராமன் பூமியில் பிளந்து காளிந்தி நதியின் போக்கை தனக்கு அருகே வருமாறு செய்கிறார். காளிந்தி நதியின் வருகையால் நீரில் நண்பர்களோடு சந்தோஷமாக நேரம் கழிந்தது.
ஒரு ராஜா அப்போது அந்தப்பகுதிக்கு இருந்தான் அவன் பெயர் பௌண்ட்ரக வாசுதேவன். அவன் சிலருடன் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டினான். ஒரு தூதுவனை கிருஷ்ணா உன்னிடம் அனுப்பினான். எதற்கு?
नारायणो(अ)हमवतीर्ण इहास्मि भूमौ
धत्से किल त्वमपि मामकलक्षनानि |
उत्सर ^जय तानि शरणं व्रज मामिति त्वां
दुउतो जगाद सकलैर्हसितः सभायाम् ||2
naaraayaNO(a)hamavatiirNa ihaasmi bhuumau
dhatse kila tvamapi maamakalakshaNaani |
utsR^ijya taani sharaNaM vraja maamiti tvaaM
duutO jagaada sakalairhasitaH sabhaayaam || 2
நாராயணோ(அ)ஹமவதீர்ண இஹாஸ்மி பூ⁴மௌ
த⁴த்ஸே கில த்வமபி மாமகலக்ஷணானி |
உத்ஸ்ருஜ்ய தானி ஶரணம் வ்ரஜ மாமிதி த்வாம்
தூ³தோ ஜகா³த³ ஸகலைர்ஹஸித꞉ ஸபா⁴யாம் || 83-2 ||
பௌண்ட்ரக வாசுதேவன் அனுப்பிய தூதன், கிருஷ்ணா, உன் அரண்மனைக்கு வந்தான். அவையில் தான் கொண்டு வந்த சேதியை சொல்லிவிட்டு நின்றபோது எல்லோரும் அவனைப் பார்த்து கை கொட்டி சிரித்தனர். அப்படி துவாரகையில் எல்லோரும் சிரித்து கேலி செய்யும்படியாக பௌண்ட்ரகனிடமிருந்து என்ன சேதி கொண்டுவந்தான் அந்த தூதன்?
''எல்லோரும் நன்றாக புரிந்து கொள்ளுங்கள், பௌண்ட்ரகன் வாசுதேவன் என்கிற நான் தான் மஹாவிஷ்ணுவின் உண்மையான அவதாரம், இந்த துவாரகை கிருஷ்ணன் அல்ல. அவன் விஷ்ணுவைப் போல வேஷம் போட்டுக்கொண்டவன். விஷ்ணுவாகிய என்னைப்போலவே நடிக்கிறான். என்னுடைய சங்கு சக்ரம் மாதிரி ஏதோ ஒன்றை தானும் தயாரித்து வைத்துக் கொண்டுள்ளான். இதை அறிந்த எல்லோரும் அவனை உடனே புறக்கணித்து என்னை சரணடையுங்கள்''
கிருஷ்ணா எப்படியிருக்கிறது இந்த சேதி?
दुउते(अ)थ यातवति यादव सैनिकैस्त्वं
यातो ददर्षिथ वपुः किल पौन्द्रकियम |
तापेन वक्षसि कर ^इतान्कमनल्पमूल्यश्रीकौस्तुभम्
मकरकुन्दल पीत चेलम् ||3
duute(a)tha yaatavati yaadava sainikaistvaM
yaatO dadarshitha vapuH kila pauNDrakiiyam |
taapena vakshasi kR^
makarakuNDala piita chelam || 3
தூ³தே(அ)த² யாதவதி யாத³வஸைனிகஸ்த்வம்
யாதோ த³த³ர்ஶித² வபு꞉ கில பௌண்ட்³ரகீயம் |
தாபேன வக்ஷஸி க்ருதாங்கமனல்பமூல்ய-
ஶ்ரீகௌஸ்துப⁴ம் மகரகுண்ட³லபீதசேலம் || 83-3 ||
பாவம், அந்த தூதன், அவன் அம்பு. எய்தவன் யாரோ வேறு ஒருவன். ஆகவே தூதனை பரிசு கொடுத்து அனுப்பிவிட்டு நீயே அந்த பௌண்ட்ரக வாசுதேவனைக் காணச் சென்றாய். அட, உன்னைப் போலவே அவனும் மார்பில் ஸ்ரீவத்சம் அடையாளம் பண்ணிக்கொண்டிருந்தான். அது உனக்கு ஆச்சர்யம் அளித்தது. கௌஸ்துபம் வேறு கழுத்தில் அணிந்திருக்கிறான். இடுப்பில் பட்டு பீதாம்பர வஸ்திரம். காதுகளில் மகர குண்டலம். அட, இப்படி ஒரு நிழலா உனக்கு?
कालायसं निजसुदर्शनमस्यतस्य
कालानलोत्करकिरेण सुदर्शनेन |
शीर्षं चकर्तिथ ममर्दिथ चास्य सैन्यं
तन्मित्र काशिप शिरोअपि चकर्थ काश्याम ||
kaalaayasaM nijasudarshanamasyatO(a)sya
kaalaanalOtkarakireNa sudarshanena |
shiirShaM chakartitha mamarditha chaasya sainyaM
tanmitra kaashipa shirO(a)pi chakartha kaashyaam ||4
காலாயஸம் நிஜஸுத³ர்ஶனமஸ்யதோ(அ)ஸ்ய
காலானலோத்கரகிரேண ஸுத³ர்ஶனேன |
ஶீர்ஷம் சகர்தித² மமர்தி³த² சாஸ்ய ஸைன்யம் [** ஸேனாம் **]
தன்மித்ரகாஶிபஶிரோ(அ)பி சகர்த² காஶ்யாம் || 83-4 ||
உன்னைப் பார்த்ததும் நீ தான் அந்த துவாரகா கிருஷ்ணனா என்று கேட்ட பௌண்ட்ரகன் ''உன்னைத் தீர்த்து கட்டுகிறேன் பார்'' என்று சுதர்சன சக்ரம் மாதிரி ஒரு இரும்பு வளையம் ஒன்றை வீசினான். உனது உண்மையான சுதர்சன சக்ரம் தனக்கு இப்படி நேர்ந்த அவமானத்தைப் பார்த்துக்கொண்டு சும்மாவா இருக்கும்? உன்னை வணங்கிவிட்டு தானே உன் கரத்திலிருந்து புறப்பட்டு அந்த இரும்பு சக்ரத்தை பொடியாக்கிவிட்டு அதே சூட்டோடு சூடாக பௌண்ட்ரகன் சிரத்தையும் துண்டாக்கியது. அவனது படைவீரர்கள் அனைவரையும் கொன்று சாம்பலாக்கியது. அவனைத் தூண்டி விட்டு ஆதரித்த காசிராஜன் தலையையும் துண்டித்து காசியில் வீசிவிட்டு உன்னிடம் திரும்பி வந்தது. எல்லாமே கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்தது.

जाद्येन बालकगिरा अपि किलाहमेव
श्रि वासुदेव इति रुउधमतिश्चिरं सः |
सायुज्यमेव भवदैक्य धिया गतो अभुउत
कोनाम कस्य सुक्र ^इतं कथमित्यवेयात ||5
jaaDyena baalakagiraa(a)pi kilaahameva
shrii vaasudeva iti ruuDhamatishchiraM saH |
saayujyameva bhavadaikya dhiyaa gatO(a)bhuut
kO naama kasya sukR^itaM kathamityaveyaat || 5
ஜாட்³யேன பா³லககி³ரா(அ)பி கிலாஹமேவ
ஶ்ரீவாஸுதே³வ இதி ரூட⁴மதிஶ்சிரம் ஸ꞉ |
ஸாயுஜ்யமேவ ப⁴வதை³க்யதி⁴யா க³தோ(அ)பூ⁴த்
கோ நாம கஸ்ய ஸுக்ருதம் கத²மித்யவேயாத் || 83-5 ||

சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி மூளையை சலவை செய்தால் பொய் மெய்யாகிவிடும் என்பது பௌண்ட்ரகன் கதையில் நிரூபணம் ஆகிறது. நீ தான் மஹாவிஷ்ணு அவதாரம் என்று அவனை பலர் ஆரம்பம்முதலே நம்பவைத்து அவன் ஊரெல்லாம் அப்படியே நம்பும் என எண்ணினான். அவனுக்கு தூபம் போட்டு அவனுக்கு ஆதரவு தந்தவர்களுடைய தவற்றினால் பௌண்ட்ரகன் உயிரிழந்தான். விளையாட்டு விபரீதமாகிவிட்டது. வாசுதேவன் என்று தன்னை அவன் நம்பியதால் அவனுக்கும் மோக்ஷம் அளித்த நீ உண்மையிலேயே வாசுதேவன் தான் கிருஷ்ணா!.
काशीश्वरस्य तनयो अथ सुदक्षिनाख्यः
शर्वं प्रपुउज्य भवते विहिताभिचर्रः |
क्र् ^इत्यानलं कमपि बाणरणतिभीतैः
भूतैः कथा न्चन वर ^इतिः सममभ्यमुन्छत || 6
kaashiishvarasya tanayO(a)tha sudakshiNaakhyaH
sharvaM prapuujya bhavate vihitaabhichaaraH |
kR^ityaanalaM kamapi baaNaraNaatibhiitaiH
bhuutaiH katha~nchana vR^itaiH samamabhyamu~nchat || 6
காஶீஶ்வரஸ்ய தனயோ(அ)த² ஸுத³க்ஷிணாக்²ய꞉
ஶர்வம் ப்ரபூஜ்ய ப⁴வதே விஹிதாபி⁴சார꞉ |
க்ருத்யானலம் கமபி பா³ணரணாதிபீ⁴தை-
ர்பூ⁴தை꞉ கத²ஞ்சன வ்ருதை꞉ ஸமமப்⁴யமுஞ்சத் || 83-6 ||
இன்னொரு விஷயம் சொல்கிறேன், நீ மறந்துவிட்டாயா ஞாபகம் இருக்கிறதா சொல் கிருஷ்ணா? காசி ராஜன் பிள்ளைகளில் ஒருவன் சுதக்ஷிணன் என்று இருந்தானே, காசி விஸ்வநாதரின் பக்தன். அவன் சிவனை வேண்டி சக்தி பெற்று க்ருத்யா என்ற பூதத்தை மாந்த்ரீக சக்தியால் அக்னிஸ்வரூப பைசாசமாக்கி பூத கணங்களோடு சேர்த்து உன்னைக் கொல்ல ஏவினான். அந்த பூத கணங்கள் பாணாசுரனுடன் நீ புரிந்த யுத்தத்தில் உன் சக்தி அறிந்தவை. க்ருத்யாவுடன் சேர்ந்து கொண்டு விட்டன.

तालप्रमान चरनामखिलं दहन्तीं
क्र् ^इत्यां विलोक्य चकितैः कथितोअपि पौरैः |
द्युउतोत्सवे किमपि नो चलितो विभोत्वं
पार्श्वस्थ्मषु विससरिजिथ कालचक्रम् || 7
taalapramaaNa charaNaamakhilaM dahantiiM
kR^ityaaM vilOkya chakitaiH kathitO(a)pi pauraiH |
dyuutOtsave kimapi nO chalitO vibhO tvaM
paarshvasthamaashu visasarjitha kaalachakram || 7
தாலப்ரமாணசரணாமகி²லம் த³ஹந்தீம்
க்ருத்யாம் விலோக்ய சகிதை꞉ கதி²தோ(அ)பி பௌரை꞉ |
த்³யூதோத்ஸவே கிமபி நோ சலிதோ விபோ⁴ த்வம்
பார்ஶ்வஸ்த²மாஶு விஸஸர்ஜித² காலசக்ரம் || 83-7 ||
வானளாவிய உருவத்தோடு க்ருத்யா பனைமரம் போன்ற கால்களோடு வழியில் கண்ட எல்லாவற்றையும் எரித்துக் கொண்டு உன்னை நோக்கி வேகமாக வந்தது. மக்கள் சிதறி ஓடினார்கள். எங்கும் பீதி பயம் நிலவியது. உயிர் தப்ப உன்னிடம் ஓடி வந்தார்கள். நீ சொக்கட்டான் ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தவன் கொஞ்சமும் பதட்டமில்லாமல் உன் ஆட்டத்தை தொடர்ந்து ஆடிக் கொண்டிருந்தாய்.

''சுதர்சனா, நம்மை எதிர்த்து வருவது யார் என்று கவனித்து நீயே வேண்டியதைச் செய் '' என்று உன் சக்ரத்தை அனுப்பிவிட்டாய்.
अभ्यापतत्यमित धाम्नि भवन्महास्त्रे
हा हेति विद्रुतवती खलु घोरक्र ^इत्या |
रोशात्सुदक्षिण मदक्षिनचेष्तितं तं
पुप्लोष चक्रमपि काशिपुरीमधाक्शीत् || 8
abhyaapatatyamita dhaamni bhavanmahaastre
haa heti vidrutavatii khalu ghOrakR^ityaa |
rOShaatsudakshiNa madakshiNacheShTitaM taM
puplOSha chakramapi kaashipuriimadhaakshiit || 8
அப்⁴யாபதத்யமிததா⁴ம்னி ப⁴வன்மஹாஸ்த்ரே
ஹா ஹேதி வித்³ருதவதீ க²லு கோ⁴ரக்ருத்யா |
ரோஷாத்ஸுத³க்ஷிணமத³க்ஷிணசேஷ்டி தம் தம்
புப்லோஷ சக்ரமபி காஶிபுரீமதா⁴க்ஷீத் || 83-8 ||
சுதர்சன சக்ரம் க்ருத்யாவை எதிர்நோக்கிச் சென்றது. அதன் வேகம், சப்தம், சக்தியை , உணர்ந்த க்ருத்யா படுவேகமாக பின்னோக்கி ஓடியது. தன்னை ஏவிய சுதக்ஷிணனை அடைந்தது. தீய மந்திர சக்திகளுக்கு ஒரு குணம். காரியம் தவறாகிவிட்டால், தன்னை ஏவியவர்கள் மேலேயே ஏவப்பட்ட சக்தி திரும்பிச் சென்று கொன்றுவிடும். அவ்வாறே சுதக்ஷிணன் தான் ஏவிய க்ருத்யாவால் கொல்லப்பட்டான். சுதர்சன சக்ரம் க்ருத்யாவின் சக்தியை அழித்து விட்டு பிறகு காசி ராஜ்யத்தை முழுவதுமாக நாசமாக்கி விட்டு, கிருஷ்ணா, உன்னிடம் சரணடைந்தது.
रोशात्सुदक्षिण मदक्षिनचेष्तितं तं
पुप्लोष चक्रमपि काशिपुरीमधाक्शीत् || 8
abhyaapatatyamita dhaamni bhavanmahaastre
haa heti vidrutavatii khalu ghOrakR^ityaa |
rOShaatsudakshiNa madakshiNacheShTitaM taM
puplOSha chakramapi kaashipuriimadhaakshiit || 8
அப்⁴யாபதத்யமிததா⁴ம்னி ப⁴வன்மஹாஸ்த்ரே
ஹா ஹேதி வித்³ருதவதீ க²லு கோ⁴ரக்ருத்யா |
ரோஷாத்ஸுத³க்ஷிணமத³க்ஷிணசேஷ்டி
புப்லோஷ சக்ரமபி காஶிபுரீமதா⁴க்ஷீத் || 83-8 ||
சுதர்சன சக்ரம் க்ருத்யாவை எதிர்நோக்கிச் சென்றது. அதன் வேகம், சப்தம், சக்தியை , உணர்ந்த க்ருத்யா படுவேகமாக பின்னோக்கி ஓடியது. தன்னை ஏவிய சுதக்ஷிணனை அடைந்தது. தீய மந்திர சக்திகளுக்கு ஒரு குணம். காரியம் தவறாகிவிட்டால், தன்னை ஏவியவர்கள் மேலேயே ஏவப்பட்ட சக்தி திரும்பிச் சென்று கொன்றுவிடும். அவ்வாறே சுதக்ஷிணன் தான் ஏவிய க்ருத்யாவால் கொல்லப்பட்டான். சுதர்சன சக்ரம் க்ருத்யாவின் சக்தியை அழித்து விட்டு பிறகு காசி ராஜ்யத்தை முழுவதுமாக நாசமாக்கி விட்டு, கிருஷ்ணா, உன்னிடம் சரணடைந்தது.
स खलु विविदो रक्षोघाते क्र्^इतोपक्र^इतिः पुरा
तवु तु कलया म६इत्युं प्राप्तुं तदा खलतां गतः |
नरकसचिवो देशक्लेषं सर ^इजानगरान्तिके
झ तीति हलिना युध्यन्नद्धा पपात तलाहतः ||9
sa khalu vividO rakshOghaate kR^itOpakR^itiH puraa
tava tu kalayaa mR^ityuM praaptuM tadaa khalataaM gataH |
narakasachivO deshakleshaM sR^ijannagaraantike
jhaTiti halinaa yudhyannaddhaa papaata talaahataH || 9
ஸ க²லு விவிதோ³ ரக்ஷோகா⁴தே க்ருதோபக்ருதி꞉ புரா
தவ து கலயா ம்ருத்யும் ப்ராப்தும் ததா³ க²லதாம் க³த꞉ |
நரகஸசிவோ தே³ஶக்லேஶம் ஸ்ருஜன் நக³ராந்திகே
ஜ²டிதி ஹலினா யுத்⁴யன்னத்³தா⁴ பபாத தலாஹத꞉ || 83-9 ||
இதற்கிடையில் இன்னொரு விஷயமும் சொல்கிறேன். த்ரேதா யுகத்தில் நீ ராமனாக அவதரித்த போது உனக்கு உதவிய வானரங்களில் ஒருவன் விவிதா. நீண்டகாலமாக வாழ்ந்து காலப்போக்கில் குணம் மாறி, அடுத்த யுகமான துவாபரயுகத்தில் பிறந்து நரகாசுரனின் மந்திரிகளின் ஒருவனாகிவிட்டான். எல்லோரையும் துன்புறுத்தினான். துவாரகையைத் தாக்கி பலராமனோடு மோதினான். பலராமன் கையால் அவன் மரணம் சம்பவித்தது.
साम्बं कौरव्य पुत्रीहरण नियमितं सान्त्वानार्थी कुरुउनां
यातस्तद्वाक्य रोशोद्ध्र ^इतकारि नगरो मोचयामास रामः |
तेघात्याः पान्दवेयैरीति यदु पर ^इतनां नामुचस्त्वं तदानीं
तं त्वां दुर्ब्धलील्लं पवनपुरपते तापशान्त्यै निषेवे ||10
saambaM kauravya putriiharaNa niyamitaM saantvanaarthii kuruuNaaM
yaatastadvaakya rOShOddhR^itakari nagarO mOchayaamaasa raamaH |
te ghaatyaaH paaNDaveyairiti yadu pR^itanaaM naamuchastvaM tadaaniiM
taM tvaaM durbOdhaliilaM pavanapurapate taapashaantyai niSheve ||10
ஸாம்ப³ம் கௌரவ்யபுத்ரீஹரணனியமிதம் ஸாந்த்வனார்தீ² குரூணாம்
யாதஸ்தத்³வாக்யரோஷோத்³த்⁴ருதகரி னக³ரோ மோசயாமாஸ ராம꞉ |
தே கா⁴த்யா꞉ பாண்ட³வேயைரிதி யது³ப்ருதனாம் நாமுசஸ்த்வம் ததா³னீம்
தம் த்வாம் து³ர்போ³த⁴லீலம் பவனபுரபதே தாபஶாந்த்யை நிஷேவே || 83-10 ||
அடுத்தது இன்னொரு சம்பவம். துரியோதனனின் மகள் பெயர் லக்ஷணா. அவளை உன் மகன், சாம்பன் கடத்த முயற்சித்தான். அவனைப் பிடித்து சிறையிலிட்டார்கள். பலராமன் சென்று துரியோதனனிடம் பேசி அவனை விடுவிக்க முயன்றபோது, பலராமனை அவமதித்தார்கள். இதனால் கோபம் கொண்ட பலராமன் ஹஸ்தினாபுரத்தையே நாசமாக்கி அழித்துவிடுவேன் என்று கோபமாக எச்சரித்தார். துரியோதனன் விழித்துக் கொண்டான். உடனே சாம்பனை விடுவித்தான். கிருஷ்ணா நீ, அதனால் யாதவ படையை ஹஸ்தினாபுரத்துக்கு அனுப்ப வில்லை. கௌரவர்கள் பாண்டவர்களால் முடிக்கப்பட வேண்டும் என்று உனக்கு தெரியாதா? எல்லாம் உணர்ந்த எண்டே குருவாயூரப்பா என் நோய் தீர்த்து என்னையும் விடுவிக்கவேண்டும்.
यातस्तद्वाक्य रोशोद्ध्र ^इतकारि नगरो मोचयामास रामः |
तेघात्याः पान्दवेयैरीति यदु पर ^इतनां नामुचस्त्वं तदानीं
तं त्वां दुर्ब्धलील्लं पवनपुरपते तापशान्त्यै निषेवे ||10
saambaM kauravya putriiharaNa niyamitaM saantvanaarthii kuruuNaaM
yaatastadvaakya rOShOddhR^itakari nagarO mOchayaamaasa raamaH |
te ghaatyaaH paaNDaveyairiti yadu pR^itanaaM naamuchastvaM tadaaniiM
taM tvaaM durbOdhaliilaM pavanapurapate taapashaantyai niSheve ||10
ஸாம்ப³ம் கௌரவ்யபுத்ரீஹரணனியமிதம் ஸாந்த்வனார்தீ² குரூணாம்
யாதஸ்தத்³வாக்யரோஷோத்³த்⁴ருதகரி
தே கா⁴த்யா꞉ பாண்ட³வேயைரிதி யது³ப்ருதனாம் நாமுசஸ்த்வம் ததா³னீம்
தம் த்வாம் து³ர்போ³த⁴லீலம் பவனபுரபதே தாபஶாந்த்யை நிஷேவே || 83-10 ||
அடுத்தது இன்னொரு சம்பவம். துரியோதனனின் மகள் பெயர் லக்ஷணா. அவளை உன் மகன், சாம்பன் கடத்த முயற்சித்தான். அவனைப் பிடித்து சிறையிலிட்டார்கள். பலராமன் சென்று துரியோதனனிடம் பேசி அவனை விடுவிக்க முயன்றபோது, பலராமனை அவமதித்தார்கள். இதனால் கோபம் கொண்ட பலராமன் ஹஸ்தினாபுரத்தையே நாசமாக்கி அழித்துவிடுவேன் என்று கோபமாக எச்சரித்தார். துரியோதனன் விழித்துக் கொண்டான். உடனே சாம்பனை விடுவித்தான். கிருஷ்ணா நீ, அதனால் யாதவ படையை ஹஸ்தினாபுரத்துக்கு அனுப்ப வில்லை. கௌரவர்கள் பாண்டவர்களால் முடிக்கப்பட வேண்டும் என்று உனக்கு தெரியாதா? எல்லாம் உணர்ந்த எண்டே குருவாயூரப்பா என் நோய் தீர்த்து என்னையும் விடுவிக்கவேண்டும்.
No comments:
Post a Comment