यदुकुलमहिलावृत: सुतीर्थं समुपगतोऽसि समन्तपञ्चकाख्यम् ॥१॥
kvachidatha tapanOparaaga kaale
puri nidadhat kR^itavarma kaamasuunuu |
yadukula mahilaavR^itaH sutiirthaM
samupagatO(a)si samanta pa~nchakaakhyam || 1
க்வசித³த² தபனோபராக³காலே
புரி நித³த⁴த்க்ருதவர்மகாமஸூனூ |
யது³குலமஹிலாவ்ருத꞉ ஸுதீர்த²ம்
ஸமுபக³தோ(அ)ஸி ஸமந்தபஞ்சகாக்²யம் || 84-1 ||
சூர்ய கிரஹண புண்யகாலத்தில் பலர் சமந்த பஞ்சகம் சென்று தர்ப்பணம் பண்ணுவது வழக்கம். கிருஷ்ணன் துவாரகையிலிருந்து தனது குடும்பத்தோடு அங்கே செல்கிறார். இதற்காக கிருஷ்ணா, நீ க்ருதவர்மன், அநிருத்தன் இருவரையும் அழைத்து ''நாங்கள் திரும்பி வரும் வரை நீங்கள் துவாரகையை ஜாக்கிரதையாக பாதுகாத்துக் கொண்டிருங்கள்'' என்று சொல்லிவிட்டு கிளம்பினாய். உன்னோடு பல யாதவ குடும்பங்களும் சேர்ந்துகொண்டது.
द्विजगणपरिमुक्तवित्तराशि: सममिलथा: कुरुपाण्डवादिमित्रै: ॥२॥
bahutara janataahitaaya tatra
tvamapi punan vinimajjya tiirthatOyaM |
dvijagaNa parimukta vittaraashiH
samamilathaaH kurupaaNDavaadi mitraiH || 2
ப³ஹுதரஜனதாஹிதாய தத்ர
த்வமபி புனர்வினிமஜ்ஜ்ய தீர்த²தோயம் |
த்³விஜக³ணபரிமுக்தவித்தராஶி꞉
ஸமமிலதா²꞉ குருபாண்ட³வாதி³மித்ரை꞉ || 84-2 ||
பலரின் ஆத்ம சாந்திக்காக கிருஷ்ணா நீ எண்ணற்றோருக்கு தர்ப்பணங்கள் செய்தாய். அநேக பிராமணர்களுக்கு தான தர்மம் வழங்கினாய். பாண்டவ கௌரவ குடும்பங்களும் மற்றவர்கள் பலரும் அங்கே உன்னை சந்தித்தனர்.
तदुदितभवदाहृतिप्रकारै: अतिमुमुदे सममन्यभामिनीभि: ॥३॥
tava khalu dayitaajanaiH sametaa
drupadasutaa tvayi gaaDha bhaktibhaaraa |
taduditabhavadaahR^iti prakaaraiH
ati mumude samamanya bhaaminiibhiH || 3
தவ க²லு த³யிதாஜனை꞉ ஸமேதா
த்³ருபத³ஸுதா த்வயி கா³ட⁴ப⁴க்திபா⁴ரா |
தது³தி³தப⁴வதா³ஹ்ருதிப்ரகாரை-
ரதிமுமுதே³ ஸமமன்யபா⁴மினீபி⁴꞉ || 84-3 ||
तदनु च भगवन् निरीक्ष्य गोपानतिकुतुकादुपगम्य मानयित्वा।
चिरतरविरहातुराङ्गरेखा: पशुपवधू: सरसं त्वमन्वयासी: ॥४॥
tadanu cha bhagavanniriikshya gOpaan
ati kutukaatupagamya maanayitvaa |
chiratara virahaaturaangarekhaaH
pashupavadhuuH sarasaM tvamanvayaasiiH ||4
தத³னு ச ப⁴க³வன் நிரீக்ஷ்ய கோ³பா-
நதிகுதுகாது³பக³ம்ய மானயித்வா |
சிரதரவிரஹாதுராங்க³ரேகா²꞉
பஶுபவதூ⁴꞉ ஸரஸம் த்வமன்வயாஸீ꞉ || 84-4 ||
சமந்த பஞ்சகம் அங்கே வந்திருந்த பிருந்தாவன கோப கோபியர்களை சந்தித்து மிகவும் சந்தோஷமாக பேசி குசலம் விசாரித்தாயே கிருஷ்ணா ஞாபகம் இருக்கிறதா உனக்கு? எல்லோருமே நீ இல்லாமல், உனைக் காணாமல் துரும்பாக இளைத்திருந்தார்கள்.
अतिरसपरिमुक्तकञ्चुलीके परिचयहृद्यतरे कुचे न्यलैषी: ॥५॥
sapadi cha bhavadiikshaNOtsavena
pramuShitamaanahR^idaaM nitambiniinaam |
atirasa parimukta ka~nchuliike
parichaya hR^idyatare kuche nyalaiShiiH || 5
ஸபதி³ ச ப⁴வதீ³க்ஷணோத்ஸவேன
ப்ரமுதி³தமானஹ்ருதா³ம் நிதம்பி³னீனாம் | [** ப்ரமுஷித **]
அதிரஸபரிமுக்தகஞ்சுலீகே
பரிசிதஹ்ருத்³யதரே குசே ந்யலைஷீ꞉ || 84-5 ||
इति कृतपरिरम्भणेत्वयि द्राक् अतिविवशा खलु राधिका निलिल्ये ॥६॥
ripujanakalahaiH punaH punarme
samupagatairiyatii vilambanaa(a)bhuut |
iti kR^ita parirambhaNe tvayi draak
ati vivashaa khalu raadhikaa nililye || 6
ரிபுஜனகலஹை꞉ புன꞉ புனர்மே
ஸமுபக³தைரியதீ விலம்ப³னாபூ⁴த் |
இதி க்ருதபரிரம்ப⁴ணே த்வயி த்³ரா-
க³திவிவஶா க²லு ராதி⁴கா நிலில்யே || 84-6 ||
கிருஷ்ணா, நீ வந்திருக்கிறாய் என்ற சேதி கேட்டு உனை மீண்டும் பார்க்க கிடைத்த ஆனந்தத்தில் ராதை உன்னைத் தேடி ஓடி வந்தாள் . உன்னை ஆரத் தழுவி அணைத்துக் கொண்டாள்
apagata viraha vyathaastadaa taa
rahasi vidhaaya dadaatha tattvabOdham |
paramasukhachidaatmakO(a)
vaH sphuTameva chetasiiti || 7
அபக³தவிரஹவ்யதா²ஸ்ததா³ தா
ரஹஸி விதா⁴ய த³தா³த² தத்த்வபோ³த⁴ம் |
பரமஸுக²சிதா³த்மகோ(அ)ஹமாத்மே-
த்யுத³யது வ꞉ ஸ்பு²டமேவ சேதஸீதி || 84-7 ||
सुखरसपरिमिश्रितो वियोग: किमपि पुराऽभवदुद्धवोपदेशै: ।
समभवदमुत: परं तु तासां परमसुखैक्यमयी भवद्विचिन्ता ॥८॥
sukharasa parimishritO viyOgaH
kimapi puraa(a)bhavaduddhavOpadeshaiH |
samabhavadamutaH parantu taasaaM
paramasukhaikya mayii bhavadvichintaa || 8
ஸுக²ரஸபரிமிஶ்ரிதோ வியோக³꞉
கிமபி புரா(அ)ப⁴வது³த்³த⁴வோபதே³ஶை꞉ |
ஸமப⁴வத³முத꞉ பரம் து தாஸாம்
பரமஸுகை²க்யமயீ ப⁴வத்³விசிந்தா || 84-8 ||
நீ பிருந்தாவனத்தை விட்டு சென்றதும் ஒரு நாள் உத்தவரை பிரிந்தவனத்துக்கு அனுப்பினாய். கிளிப்பிள்ளையாக நீ சொன்னதை அழகாக அப்படியே அந்த கோபகோபியருக்கு அந்த மஹான் எடுத்துச் சொன்னார். உன்னைக் காணாத கண்களுக்கு உத்தவர் விருந்தாக காட்சி அளித்ததுடன் உன் வார்த்தைகளால் அவர்கள் மனதில் இடம்பிடித்தார். இதயத்துக்கு இதமாக இருந்தது அவர் அளித்த ஆறுதல் சொற்கள். அவர்கள் மீண்டும் ஆனந்த பரவசம் எய்தினார்கள்.
मुनिवरनिवहैस्तवाथ पित्रा दुरितशमाय शुभानि पृच्छ्यमानै: ।
त्वयि सति किमिदं शुभान्तरै: रित्युरुहसितैरपि याजितस्तदाऽसौ ॥९॥
munivara nivahaistavaatha pitraa
durita shamaaya shubhaani pR^ichChyamaanaiH |
tvayi sati kimidaM shubhaantaraiH
ityuruhasitairapi yaajitastadaa(a)sau || 9
முனிவரனிவஹைஸ்தவாத² பித்ரா
து³ரிதஶமாய ஶுபா⁴னி ப்ருச்ச்²யமானை꞉ |
த்வயி ஸதி கிமித³ம் ஶுபா⁴ந்தரைரி-
த்யுருஹஸிதைரபி யாஜிதஸ்ததா³ஸௌ || 84-9 ||
மீண்டும் சமந்த பஞ்சகத்துக்கே போவோம். நீங்கள் எல்லாரும் ஸ்னானம் செய்து பிரார்த்தனைகள் செய்யும்போது அங்கே கூடியிருந்த முனிவர்களை, ரிஷிகளை அணுகி உன் தந்தை வசுதேவர் ' இன்னும் பாபங்கள், தீமைகள் என்னை விட்டு விலக நான் என்னென்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் '' என்று கேட்டார்.
यदुजनमहितास्त्रिमासमात्रं भवदनुषङ्गरसं पुरेव भेजु : ॥१०॥
sumahati yajane vitaayamaane
pramudita mitrajane sahaiva gOpaaH |
yadujana mahitaasitramaasa maatraM
bhavadanuShangarasaM pureva bhejuH || 10
ஸுமஹதி யஜனே விதாயமானே
ப்ரமுதி³தமித்ரஜனே ஸஹைவ கோ³பா꞉ |
யது³ஜனமஹிதாஸ்த்ரிமாஸமாத்ரம்
ப⁴வத³னுஷங்க³ரஸம் புரேவ பே⁴ஜு꞉ || 84-10 ||
கிருஷ்ணா நீ சமந்த பஞ்சகத்தில் மூன்று மாத காலங்கள் இருந்தாய். அத்தனை கோப கோபியரும் உன்னோடு தாங்களும் தங்கிவிட்டார்கள். அவர்களைக் கண்ட யாதவர்கள் குடும்பத்தோடு, உனது அன்பு நண்பர்களான அவர்களை வணங்கி மகிழ்ந்தார்கள். அந்த மூன்று மாத காலமும் கோப கோபியர்கள் ஒவ்வொரு நிமிஷமும் தாங்கள் முன் போல் உன்னோடு பிருந்தாவனத்தில் இருப்பதாக தான் உணர்ந்தார்கள்.
व्यपगमसमये समेत्य राधां दृढमुपगूह्य निरीक्ष्य वीतखेदाम् ।
प्रमुदितहृदय: पुरं प्रयात: पवनपुरेश्वर पाहि मां गदेभ्य: ॥११
vyapagama samaye sametya raadhaaM
dR^iDha mupaguuhya niriikshya viitakhedaam |
pramudita hR^idayaH puraM prayaataH
pavanapureshvara paahi maaM gadebhyaH ||11
வ்யபக³மஸமயே ஸமேத்ய ராதா⁴ம்
த்³ருட⁴முபகூ³ஹ்ய நிரீக்ஷ்ய வீதகே²தா³ம் |
ப்ரமுதி³தஹ்ருத³ய꞉ புரம் ப்ரயாத꞉
பவனபுரேஶ்வர பாஹி மாம் க³தே³ப்⁴ய꞉ || 11
எல்லோரும் புறப்படும் நேரம் வந்தது. ராதா மறுபடியும் கண்களில் நீரோடு உன்னெதிரே சிலையாக நின்றாள். அவளை அப்படியே அணைத்து தாய் போல் முதுகைத்த தட்டி ஆறுதல் அளித்தாய். அவள் மனதில் இருந்த சோகம், துயரம் வருத்தம் வேதனை அனைத்தும் நீங்கச் செய்தாய். அவள் மலர்ந்து சிரித்தாள். அந்த மலர்ச்சியில் நீயும் புத்துணர்ச்சி பெற்றாய். நீங்கள் எல்லோரும் துவாரகைக்கு திரும்பினீர்கள். எண்டே குருவாயூரப்பா, நானும் மகிழ என் நோய் தீர்த்து ரக்ஷிப்பாயப்பா ..
No comments:
Post a Comment