Tuesday, October 19, 2021

ULLADHU NARPADHU


 உள்ளது நாற்பது  -  நங்கநல்லூர்  J K  SIVAN--

பகவான் ரமண மஹரிஷி .

24.  மனத்தின் வேறு பெயர்கள்...

சடவுடனா னென்னாது சச்சித்துதியா
துடலளவா நானொன் றுதமிடையிலிது
சிச்சடக்கி ரந்திபதஞ் சீவனுட்ப மெய்யகந்தை
யிச்சமு சாரமன மெண்ணெவிச்சை 24

நமது உடலை எப்போதும்  ஜடம்  என்று சொல்வது தான் வழக்கம்.   ஜட சரீரம் எப்போதும்  ''நான்'' என்று சொல்வதில்லை.  ரெண்டற்ற  ஒன்றேயான  ஆத்மா தான்  ''நான்''  என்றாலும்   எங்குமே அதற்காக இருக்கும்போது தனியாக '' நான்''  எதனிடமும் அது வெளிப்படுத்திக் கொள்ள  அவசியமில்லை.  ஆகவே,  இந்த  ரெண்டிற்கும் நடுவே    எது  எப்படி  சரீரம் மூலம்  ''நான்''  என்று சொல்ல வைக்கிறது? சித்திக்கும் ஜடத்திற்கும் இடையே தோன்றும் இது தான் சித் ஜட கிரந்தி.
பந்தம், ஜீவன், சூக்ஷ்ம சரீரம், மனம், ஸம்ஸாரம் (மனைவி அல்ல)   என்றெல்லாம் இதற்கு பெயர். 
அதை முழுதுமாக அழித்தால் தான் மோக்ஷம் கிட்டும்.

ஆழ்ந்த  உறக்க  நிலையான  ஸுஷுப்தியில்  ஆத்மா இருந்தும்  உணரப்படவில்லை.  மனமோ, தேஹமோ இல்லாத  நிலை அது. ஏதோ ஒரு ஆனந்தம் மட்டும் உணரமுடிகிறது. அது ஆத்மாவால் விளைந்தது என்று உணராத அஞ்ஞானம்.

மேலே  சொன்ன சித்த ஜட க்ரந்தி என்று சொன்னதற்கு இன்னொரு பெயர்  பந்தம். ஆத்மாவில் பந்தம் ஸத்யம்  இல்லை.  
பந்தம் தோன்றுகிறதே?  அது யாருக்கு தோன்றுகிறது?  
எனக்கு
அந்த  நான் யார்? அப்போது தான்  ஸத்யம்  புரியும். 
ஜீவன் என்றாலும்  மேலே சொன்ன பந்தம் தான்.   சுத்தமான ''நான்''எனும் ஆத்மாவை தானாக்கி காட்டும் அஹம்பாவம். அது தான் முன்பு சொன்ன  கட்டாகாசத்தில்  தோன்றும் மஹாகாஸம் . சூக்ஷ்ம சரீரம் என்பதும்  இந்த  சித் ஜட க்ரந்தி தான். ஸ்தூல சரீரத்தில் இருந்து கொண்டு  தானே  ஆத்மா என்று நம்பவைக்கிறது.  அகந்தை எனும்  அஹம்பாவமும்  அது தான்.  நான் எனது என்பது தான் ஸம்ஸார பந்தம். அதுவும் அந்த முடிச்சு தான்.  மனம் என்றாலும் அதுவே,  மனத்தை பற்றி கேட்கவே வேண்டாம். சகலத்திற்கும் காரணம் அது ஒன்றே. நமது முதல் துரோகி.    இந்த திரையெல்லாம் விலகினால் தான் ஆத்மஸ்வரூப அனுபவம் உண்டாகும்.

  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...