குப்புசாமியின் கதை --நங்கநல்லூர் J K SIVAN
தாம்பரத்தில் வெகு காலமாக வாழ்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்த குப்புசாமிக்கு கல்யாணம் ஆகி 2வருஷம் 8 மாதம் 17 1/2 நாள் ஆகிறது. அதில் 2வருஷம் 7மாதம் 28 3/4 நாள் அவனுக்கும்
அவன் காதலித்து கட்டிக்கொண்ட செல்லாவுக்கும் ஒரே விஷயத்தில் தான் தகராறு. என்ன சுடுசொல் அவள் பேசினாலும் உம்மென்று பேசாமல் இருக்கும் தன்மை கொண்ட மகரிஷி குப்புசாமி.
அப்படி எந்த விஷயத்தில் தகராறு?
நாகசாமி குப்புசாமியின் அப்பா. ஒரு காது இப்போ தெல்லாம் கேட்காது. ஒரு கால் தொடை எலும்பு முறிவுக்குப் பிறகு அதிக நடமாட்டம் இல்லை. ஓயாமல் இருமல் அவர் காதலி. குப்புசாமியின் அம்மா நல்லவேளை 5 வருஷங்களுக்கு முன்னாலேயே மறைந்து விட்டதால் செல்லாவை பார்க்க வசதி இல்லை.
''உங்கப்பாவை எங்காவது ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்துடுங்க . என்னாலே பாத்துக்க முடியாது.''
''செல்லா, கொஞ்சம் அமைதியா இரும்மா . நான் தான் வீட்டுலே இருக்கற நேரமெல்லாம் அவரை பார்த்துக்கறேனே''
காலையிலே ஒன்றரை ரெண்டுமணி நேரம் ராத்திரி ஒரு மணிநேரமா. மிச்ச நேரத்திலே???
பேச வழியில்லாமல் அப்பாவை ஒருவிதமாக கன்வின்ஸ் பண்ணிவிட்டு ஒரு ஓல்ட் ஏஜ் ஹோமில் கொண்டு சேர்த்துவிட அரைமனசுடன் ஒப்புக் கொண்டான் குப்புசாமி.
அப்பாவை அழைத்துக் கொண்டு பல வருஷங்க ளாக தாம்பரத்தில் பிரபலமான ஒரு முதியோர் குழந்தை காப்பக இல்லத்திற்கு மனைவியோடு காரில் சென்றான் குப்புசாமி.
வரவேற்பு அறையில் குப்புசாமிக்கு என்ன தேவை என்றெல்லாம் கேட்டார்கள். அதற்கேற்ப காசு கட்டவேண்டும், குறைக்கப் போவதில்லை.'
'உங்களுக்கு டிவி ரூமில் இருக்கவேண்டுமா?
''அப்பா உங்களுக்கு தினமும் பார்க்கவேண்டுமா. வைக்கசொல்லட்டுமா''
"வேண்டாம்ப்பா"
"''ஏசி ?''''அதெல்லாம் எதுக்குப்பா, பேன் fan ஓடினா போதும் '
''உணவு சைவமா, அசைவமா''''அசைவம் நிறுத்தி பல வருஷம் ஆச்சுங்க. வேணாம்.'
'ஒருவருஷம் பணம் அட்வான்ஸ் கட்ட ஒப்புக் கொண்டான் குப்புசாமி.அப்பா நாகசாமி ஒன்றும் பேசவில்லை.
குப்புசாமி காரிலிருந்து அப்பாவின் சாமான்களை இறக்கி கொண்டுவந்தான். ரூமில் கொண்டு
வைக்க.
''பண்டிகை, விசேஷ நாளிலே வீட்டுக்கு போறீங்க ளா, அனுப்பி வைக்கறோம்'' என்றாள் வரவேற்பு அறை பெண்.'
'இல்லேம்மா எந்த பண்டிகை, விசேஷமும் இல்லை.. இங்கேயே இருந்துக்கறேன்'' -- நாகசாமி.
காரிலிருந்து சாமான்களை கொண்டு வரவேற்பறை இறக்கும்போது குப்புசாமி, அப்பாவுடன் யாரோ ஒரு பெரியமனிதர் மிகவும் அன்போடு சகஜமாக பேசிக்கொண்டிருப்பதை பார்க்கிறான்.ரிசெப்ஷன் பெண்ணிடம்
''யார் இவர் ?'' என்று கேட்கிறான்.பவ்யமாக எழுந்துநின்ற பெண், காதோடு அவனிடம்
''எங்க முதலாளி, இந்த ஹோம் ஓனர், ராஜவேலு முதலியார்'' பெரிய அரசியல் வாதி.
ராஜவேலுவின் கவனம் அதற்குள் குப்புசாமிமேல் பாய்ந்தது. அவனை உச்சிமுதல் உள்ளங்கால் வரை உற்று உற்று பார்த்தார். முகத்தில் புன்முறுவல்
.''அப்பா உங்களுக்கு இவரை முன்னாலேயே தெரியுமா? உங்களோடு அவ்வளவு நெருக்கமாக பேசுகிறாரே''
அப்பா ஒன்றும் பதில் பேசவில்லை.
ராஜவேலு முதலியார் பதில் சொன்னார்.'
'உங்கப்பாவா இவரு, ஓஹோ, இவரை எனக்கு ரொம்ப காலமா தெரியும் தம்பி.''
'ஆஹா அப்படியா? எங்கப்பாவை உங்களுக்கு
எப்படி பழக்கம் ஸார் ?'''
தம்பி உனக்கு என்ன வயசாவுது?''
''முப்பது முடிஞ்சுட்டுதுங்க ஸார்''
''அப்படி சொல்லு.. உங்கப்பா 29வருஷங்களுக்கு முன்னாலே என்கிட்டே வந்து இந்த காப்பக
இல்லத்திலே ஒரு அனாதைப் பையனை தத்து எடுத்துக்கறேன்னு என்கிட்டே வாங்கிட்டு போனதிலிருந்து அடிக்கடி சந்திப்போம்.'
'குப்புசாமியின் தலை சுற்றியது. உடல் வியர்த்தது. அப்பாவின் கால்களை கண்ணீரால் கழுவி வணங்கி அவர் சாமான்களை எடுத்து மீண்டும் காரில் எடுத்து வைக்க தூக்கிக் கொண்டு போனான்
.இதெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த செல்லா ???
No comments:
Post a Comment