ஸ்ரீமந் நாராயணீயம் - நங்கநல்லூர் J K SIVAN
74வது தசகம்.
74. அழகிய மதுரை நகரினிலே ..
ஏன் அதிசயங்கள் அற்புதங்கள் எல்லாம் பிருந்தாவனத்திலிருந்து மதுராபுரிக்கு மாறி விட்டன என்று யோசிப்பவர்களுக்கு தெரிந்த ஒரே காரணம் இப்போது கிருஷ்ணன் பிருந்தாவனத்தை விட்டு மதுராவுக்கு வந்துவிட்டான் என்பது தான்.
सम्प्राप्तो मथुरां दिनार्धविगमे तत्रान्तरस्मिन् वस-
न्नारामे विहिताशन: सखिजनैर्यात: पुरीमीक्षितुम् ।
प्रापो राजपथं चिरश्रुतिधृतव्यालोककौतूहल-
स्त्रीपुंसोद्यदगण्यपुण्यनिगलै
sampraaptO mathuraaM dinaardhavigame tatraantarasmin vasan
aaraame vihitaashanaH sakhijanairyaataH puriimiikshitum |
praapO raajapathaM chirashrutidhR^ita vyaalOka kautuuhala
striipumsOdyadagaNyapuNya nigalairaakR^iShyamaaNO nu kim ||1
அக்ரூரரின் தேர் எவ்வளவு தான் வேகமாக வந்தாலும் மதுராவிற்குள் நுழையும் போது பகல் உச்சிநேரம் ஆகிவிட்டது. அக்காலத்தில் எங்கு வேண்டுமானாலும் மரத்தடியில், குளக்கரையில், எல்லாம் தங்குவார்கள். மதுராபுரி எல்லையில் இருந்த ஒரு அழகிய நந்தவனத்தில் இளைப்பாறினார்கள்.
கையில் கொண்டு வந்திருந்த ஆகாரங்களை காலி செய்து விட்டு கிருஷ்ணன் பலராமன் இருவரும் முதல் முறையாக மதுராபுரி நகரத்தை ஆர்வத்தோடு சுற்றி பார்க்க கிளம்பினார்கள். கம்ஸன் அரண்மனை எங்கே இருக்கிறது?
ஒரு கிராமத்திலிருந்து வந்தவன் பட்டணத்தைப் பார்ப்பது போல் என்பது கிருஷ்ணன் பலராமன் விஷயத்தில் நிஜமாகி விட்டது. தன்னையறியாமல் கால்கள் பெரும் சாலைகள், ஓடும் தேர்கள், எங்கும் அவசரம் அவசரமாக ஓடும் ராஜாவின் சேவகர்கள், வியாபாரிகள், பண்டிதர்கள், பொதுமக்கள் எல்லோரும் அவரவர் வசதிக்கேற்ப வண்டிகளிலும், குதிரை மேலும் நடந்தும் சென்று கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்தார்கள். அந்த ஊர் பெண்கள் உடை அலங்காரம் எல்லாமே கூட பிருந்தாவன கோபியர்கள் போல் இல்லை. வித்யாசமாக இருந்தது.
எப்படியோ மதுராபுரி வாசிகளுக்கு கிருஷ்ணன் பலராமன் இருவரும் மதுராவுக்கு வரப்போகிறார் கள் என்ற செய்தியும், இதோ வந்துவிட்டார்கள் என்ற அடுத்த அவசர சேதியும் கிடைத்துவிட்டது. கிருஷ்ணனின் சாகஸங்கள், பராக்ரமங்கள் எல்லை கடந்து எங்கெங்கோ பரவியிருக்கிறதே. அந்த அழகனை, வீரானை, குமரனை நேரில் பார்க்க ஆவலில், ஆசையில், இத்தனை நாளாக காத்தி ருந்தது இதோ நிறைவேறப்போகிறதே. எங்கும் மக்கள் வெள்ளம் அதனால் தான். அக்ரூரர் தேர் திரும்பி வந்து விட்டது கிருஷ்ணன் பலராமனோடு என்ற சேதி அவர்களுக்கு கிடைத்துவிட்டதே.
त्वत्पादद्युतिवत् सरागसुभगा: त्वन्मूर्तिवद्योषित:
सम्प्राप्ता विलसत्पयोधररुचो लोला भवत् दृष्टिवत् ।
हारिण्यस्त्वदुर:स्थलीवदयि ते मन्दस्मितप्रौढिव-
न्नैर्मल्योल्लसिता: कचौघरुचिवद्राजत्कलापाश्रिता: ॥२॥
tvatpaadadyutivat saraagasubhagaaH tvanmuurtivadyOShitaH
sampraaptaa vilasatpayOdhararuchau lOlaa bhavad dR^iShTivat |
haariNyastvaduraHsthaliivadayi te mandasmita prauDhiva
nnairmallyOlasitaaHkachaugharu chivat raajatkalaapaashritaaH ||2
हारिण्यस्त्वदुर:स्थलीवदयि ते मन्दस्मितप्रौढिव-
न्नैर्मल्योल्लसिता: कचौघरुचिवद्राजत्कलापाश्रिता: ॥२॥
tvatpaadadyutivat saraagasubhagaaH tvanmuurtivadyOShitaH
sampraaptaa vilasatpayOdhararuchau lOlaa bhavad dR^iShTivat |
haariNyastvaduraHsthaliivadayi te mandasmita prauDhiva
nnairmallyOlasitaaHkachaugharu
த்வத்பாத³த்³யுதிவத்ஸராக³ஸுப⁴கா ³ஸ்த்வன்மூர்திவத்³யோஷித꞉
ஸம்ப்ராப்தா விலஸத்பயோத⁴ரருசோ லோலா ப⁴வத்³த்³ருஷ்டிவத் |
ஹாரிண்யஸ்த்வது³ரஸ்ஸ்த²லீவத³யி தே மந்த³ஸ்மிதப்ரௌடி⁴வ-
ந்னைர்மல்யோல்லஸிதா꞉ கசௌக⁴ருசிவத்³ராஜத்கலாபாஶ்ரிதா꞉ || 74-2 ||
எப்போதுமே மதுராவுக்கும் பிருந்தாவனம் கோகுலம் வாழ் மக்களுக்கும் தொடர்பு உண்டு என்பதால் கிருஷ்ணனைப் பற்றிய சகல செய்திகளும் மதுராவில் பரவி, கிருஷ்ணனைப் பார்க்க ஒரு கூட்டமே காத்திருந்தது. ஆண்கள் பெண்கள் அனைவருமே அலங்கரித்து வழி முழுதும் மலர்களைத் தூவிக் கொண்டு நின்று கொண்டிருந்தனர். கண் கவரும் வனப்புடைய அவர்கள் அழகு கண்ணைப் பறித்தது. எல்லோர் முகத்திலும் புன்னகைத்தாமரை மலர்ந்திருந்தது.

तासामाकलयन्नपाङ्गवलनैर्मोदं प्रहर्षाद्भुत-
व्यालोलेषु जनेषु तत्र रजकं कञ्चित् पटीं प्रार्थयन् ।
कस्ते दास्यति राजकीयवसनं याहीति तेनोदित:
सद्यस्तस्य करेण शीर्षमहृथा: सोऽप्याप पुण्यां गतिम् ॥३॥
taasaamaakalayannapaanga valanairmOdaM praharShaadbhuta
vyaalOleShu janeShutatra rajakaM kanchitpaTiiM praarthayan |
kaste daasyati raajakiiyavasanaM yaahiiti tenOditaH
sadyastasya kareNa shiirShamahR^ithaaH sO(a)pyaapa puNyaaM gatim || 3
தாஸாமாகலயன்னபாங்க³வலனைர்மோத³ம் ப்ரஹர்ஷாத்³பு⁴த-
வ்யாலோலேஷு ஜனேஷு தத்ர ரஜகம் கஞ்சித்படீம் ப்ரார்த²யன் |
கஸ்தே தா³ஸ்யதி ராஜகீயவஸனம் யாஹீதி தேனோதி³த꞉
ஸத்³யஸ்தஸ்ய கரேண ஶீர்ஷமஹ்ருதா²꞉ ஸோ(அ)ப்யாப புண்யாம் க³திம் || 74-3 ||
ராஜ வீதியில் கிருஷ்ணா, நீ கம்பீரமாக நடந்து சென்ற அழகே தனி. குருவாயூரப்பா, உன் பார்வையால் அனைவரையும் காந்தம் போல் கவர்ந்தாய். அனைவரும் ஆனந்தக் கடலில் மூழ்கி திக்கித் திணறினார்கள். நீங்கள் கிராமத்தில் இருந்து வந்தவர்கள். உங்கள் உடை பெரிய நகரத்து மக்கள் உடை போல் இல்லை. அந்த நேரம் பார்த்து ஒரு சலவைத் தொழிலாளி நிறைய துவைத்து உலர்த்திய உடைகளோடு எதிரே தென் பட்டான்.

எனக்குத் தெரிந்து அந்தக்காலத்தில் பொருத்தமான யாருடைய சட்டை வேஷ்டி அங்கவஸ்திரத்தை யோ நன்றாக வெளுத்து சலவை செய்து இரவலுக்கு வண்ணார்கள் தருவார்கள். முக்கியமான கல்யாணங்களுக்கு, விசேஷங்களுக்கு ஒரு நாள் அவற்றை வாங்கி உபயோகித்து திருப்பித் தரும் வழக்கம் இருந்தது. முன்பே சொல்லி வைத்தால் கொண்டு வந்து தருவார்கள். ஆகவே அந்த சலவைத் தொழிலாளியிடம் ஒரு நல்ல உடை கேட்டபோது அவன் நிர்தாக்ஷண்யமாக கொடுக்க முடியாது போ, இது கம்ச மஹாராஜா அரண்மனையைச் சேர்ந்த ஆடைகள் என்று கோபமாக சொன்னான் . கம்ஸன் என்ற பெயரே உனக்கு கோபமூட்டி அந்த தொழிலாளி சிரத்தை இழந்தான். உன் கையால் இறந்தவனுக்கு மோக்ஷம் கிடைத்தது என்று சொல்ல அவசியம் இல்லை. பூர்வ ஜென்ம புண்ய சாலி.
भूयो वायकमेकमायतमतिं तोषेण वेषोचितं
दाश्वांसं स्वपदं निनेथ सुकृतं को वेद जीवात्मनाम् ।
मालाभि: स्तबकै: स्तवैरपि पुनर्मालाकृता मानितो
भक्तिं तेन वृतां दिदेशिथ परां लक्ष्मीं च लक्ष्मीपते ॥४॥
bhuuyOvaayakamekamaayatamatiM tOSheNa veShOchitaM
daashvaamsaM svapadaM ninetha sukR^itaM kO veda jiivaatmanaam |
maalaabhiH stabakaiH stavairapi punarmaalaakR^itaa maanitO
bhaktiM tena vR^itaaM dideshitha paraaM lakshmiiM cha lakshmiipate ||4
பூ⁴யோ வாயகமேகமாயதமதிம் தோஷேண வேஷோசிதம்
தா³ஶ்வாம்ஸம் ஸ்வபத³ம் நினேத² ஸுக்ருதம் கோ வேத³ ஜீவாத்மனாம் |
மாலாபி⁴꞉ ஸ்தப³கை꞉ ஸ்தவைரபி புனர்மாலாக்ருதா மானிதோ
ப⁴க்திம் தேன வ்ருதாம் தி³தே³ஶித² பராம் லக்ஷ்மீம் ச லக்ஷ்மீபதே || 74-4 ||
இதைப் பார்த்த ஒரு நெசவுத்தொழிலாளி ஓடி வந்தான். அவனிடம் சிறந்த உயர்ந்த சில வஸ்திரங்கள் இருந்தது. உன் மேல் பிரியம் கொண்ட அவன் அவற்றை உனக்கு அளிக்க எடுத்து வந்தான். அவன் உடை கொடுத்து உள்ளம் கவர்ந்தான். உன்னத மோக்ஷ பதவி பெற்றான். லக்ஷ்மிமணாளா, உன் தயாள குணத்துக்கு ஈடேதும் உண்டா? இன்னொரு ஆச்சர்யம் ஒன்று அப்போது நடந்தது. ஒரு பூ விற்பவன். மாலைகள் தொடுத்து விற்பனை செய்பவன் எப்போதும் உன்னைப் போற்றி பாடிக்கொண்டே பூ தொடுப்பவன் உனக்கும் பலராமனுக்கும் மலர்மாலைகள் அணிவித்தான். அளவற்ற செல்வம் பெற்றான்.

कुब्जामब्जविलोचनां पथिपुनर्दृष्ट्वाऽङ्गरागे तया
दत्ते साधु किलाङ्गरागमददास्तस्या महान्तं हृदि ।
चित्तस्थामृजुतामथ प्रथयितुं गात्रेऽपि तस्या: स्फुटं
गृह्णन् मञ्जु करेण तामुदनयस्तावज्जगत्सुन्दरीम् ॥५॥
kubjaamabjavilOchanaaM pathi punardR^iShTvaangaraage tayaa
datte saadhu kilaangaraagamadadaastasyaa mahaantaM hR^idi |
chittasthaamR^ijutaamatha prathayituM gaatre(a)pi tasyaaH sphuTaM
gR^ihNan ma~nju kareNa taamudanaya staavajjagatsundariim || 5
குப்³ஜாமப்³ஜவிலோசனாம் பதி² புனர்த்³ருஷ்ட்வாங்க³ராகே³ தயா
த³த்தே ஸாது⁴ கிலாங்க³ராக³மத³தா³ஸ்தஸ்யா மஹாந்தம் ஹ்ருதி³ |
சித்தஸ்தா²ம்ருஜுதாமத² ப்ரத²யிதும் கா³த்ரே(அ)பி தஸ்யா꞉ ஸ்பு²டம்
க்³ருஹ்ணன்மஞ்ஜுகரேண தாமுத³னயஸ்தாவஜ்ஜக³த்ஸுந்த³ரீம் || 74-5 ||
கூட்டத்தில் ஒரு பெண்ணும் இருந்தாள் . சாதாரணமானவள் அல்ல அவள். ஊனம் மிக்கவள். பிறவியிலேயே கூனல் முதுகுடன் பிறந்தவள். த்ரிவக்ரா, கூனி, என்று ஊரார் கேலி செயது கூப்பிட்டது தான் அவள் பெயராகிவிட்டது. அவள் கமகமவென்று எங்கும் மணம் வீசும் அரைத்த சுத்தமான சந்தனத்தை ஒரு பாத்திரம் நிறைய கொண்டுவந்திருந்தாள். உன் மேல் அளவற்ற அன்பும் பக்தியும் கொண்டவள் அவள். கிருஷ்ணா, சந்தனம் அத்தனையும் கிருஷ்ணா, உன் மேல் பூசிவிட்டாள் . அவள் மனமும் உன் நினைவால் கமகமவென்று பக்திமணம் கமழ்ந்தது. உன் கரங்களால் அவளை நிமிர்த்தி நிற்கவைத்தாய். உன் கரம் பட்ட அடுத்தகணம் கூனல் மறைந்து அவள் ஒரு அழகான பெண்ணாக உலக அழகியாக உன் முன் நின்றாள். நன்றியுணர்வோடு உன்னை அவசியம் என் வீட்டுக்கு வா என்று வாய் நிறைய மனம் நிறைய அழைத்தாள் .

तावन्निश्चितवैभवास्तव विभो नात्यन्तपापा जना
यत्किञ्चिद्ददते स्म शक्त्यनुगुणं ताम्बूलमाल्यादिकम् ।
गृह्णान: कुसुमादि किञ्चन तदा मार्गे निबद्धाञ्जलि-
र्नातिष्ठं बत हा यतोऽद्य विपुलामार्तिं व्रजामि प्रभो ॥६॥
taavannishchita vaibhavaastava vibhO naatyanta paapaa janaaH
yatki~nchiddadate sma shaktyanuguNaM taambuula maalyaadikam |
gR^ihNaanaH kusumaadi ki~nchana tadaa maarge nibaddhaa~njaliH
naatiShThaM batahaa yatO(a)dya vipulaamaartiM vrajaami prabhO || 6
தாவன்னிஶ்சிதவைப⁴வாஸ்தவ விபோ⁴ நாத்யந்தபாபா ஜனா
யத்கிஞ்சித்³த³த³தே ஸ்ம ஶக்த்யனுகு³ணம் தாம்பூ³லமால்யாதி³கம் |
க்³ருஹ்ணான꞉ குஸுமாதி³ கிஞ்சன ததா³ மார்கே³ நிப³த்³தா⁴ஞ்ஜலி-
ர்னாதிஷ்ட²ம் ப³த ஹா யதோ(அ)த்³ய விபுலாமார்திம் வ்ரஜாமி ப்ரபோ⁴ || 74-6 ||
கிருஷ்ணா, கண்ணெதிரே நடுத்தெருவில் நடந்த இந்த அதிசயத்தைக் கண்ணால் கண்ட மதுராபுரி மக்கள் கூட்டம் அப்புறம் என்ன செய்தார்கள் என்று ஞாபகம் இருக்கிறதா உனக்கு?

அவரவர் தங்களுக்கு கிடைத்த பொருள்களை எல்லாம் வாரி எடுத்துக் கொண்டு வந்து உன்னிடம் சமர்ப்பித்தனர். அடேயப்பா, எத்தனை வெற்றிலை, தாம்பூலம், மாலைகள், உணவுப் பண்டங்கள், வஸ்திரங்கள், பரிசுகள், வாசனாதி அலங்கார திரவியங்கள் எல்லாவற்றையும் கரம் கூப்பி வணங்கி அளித்தார்கள்.
एष्यामीति विमुक्तयाऽपि भगवन्नालेपदात्र्या तया
दूरात् कातरया निरीक्षितगतिस्त्वं प्राविशो गोपुरम् ।
आघोषानुमितत्वदागममहाहर्षोल्
वक्षोजप्रगलत्पयोरसमिषात्त्वत्
eShyaamiiti vimuktayaa(a)pi bhagavannaalepadaatryaa tayaa
duuraatkaatarayaa niriikshitagatistvaM praavishO gOpuram |
aaghOShaanumita tvadaagama mahaa harShOllaladdevakii
vakshOja pragalatpayOrasamiShaattvatkii
ஏஷ்யாமீதி விமுக்தயாபி ப⁴க³வன்னாலேபதா³த்ர்யா தயா
தூ³ராத்காதரயா நிரீக்ஷிதக³திஸ்த்வம் ப்ராவிஶோ கோ³புரம் |
ஆகோ⁴ஷானுமிதத்வதா³க³மமஹாஹர்ஷோல் லலத்³தே³வகீ-
வக்ஷோஜப்ரக³லத்பயோரஸமிஷாத்த்வத் கீர்திரந்தர்க³தா || 74-7 ||
கிருஷ்ணா, ஒரு சிறு துரும்புக்கும் கூட உன் பேரன்பை செலுத்துகிறவன் நீ. அந்தப் பெண் த்ரிவக்ரா ஆசையோடு உன்னை அழைத்தபோது ஆஹா நான் வருகிறேன் என்று கூறி அவளை மகிழ்வித்தாய். அவள் உன்னை ஆவலோடு வெகு தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டு காத்திருந்தாள். அதற்குள் நீ சாலையின் இரு மருங்கிலும் உயர்ந்த கோபுரங்கள் கொண்ட சிறந்த பகுதிக்கு சென்றுவிட்டாய். உனது தாய் தேவகி உன் மேல் கொண்ட பாசத்தைப் போல் மக்கள் எங்கும் அன்போடு உன்னைக் காண துடித்து நின்றார்கள். அந்த பட்டினமே உன்னை சூழ்ந்து கொண்டது எனலாம்.
தூ³ராத்காதரயா நிரீக்ஷிதக³திஸ்த்வம் ப்ராவிஶோ கோ³புரம் |
ஆகோ⁴ஷானுமிதத்வதா³க³மமஹாஹர்ஷோல்
வக்ஷோஜப்ரக³லத்பயோரஸமிஷாத்த்வத்
கிருஷ்ணா, ஒரு சிறு துரும்புக்கும் கூட உன் பேரன்பை செலுத்துகிறவன் நீ. அந்தப் பெண் த்ரிவக்ரா ஆசையோடு உன்னை அழைத்தபோது ஆஹா நான் வருகிறேன் என்று கூறி அவளை மகிழ்வித்தாய். அவள் உன்னை ஆவலோடு வெகு தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டு காத்திருந்தாள். அதற்குள் நீ சாலையின் இரு மருங்கிலும் உயர்ந்த கோபுரங்கள் கொண்ட சிறந்த பகுதிக்கு சென்றுவிட்டாய். உனது தாய் தேவகி உன் மேல் கொண்ட பாசத்தைப் போல் மக்கள் எங்கும் அன்போடு உன்னைக் காண துடித்து நின்றார்கள். அந்த பட்டினமே உன்னை சூழ்ந்து கொண்டது எனலாம்.
आविष्टो नगरीं महोत्सववतीं कोदण्डशालां व्रजन्
माधुर्येण नु तेजसा नु पुरुषैर्दूरेण दत्तान्तर: ।
स्रग्भिर्भूषितमर्चितं वरधनुर्मा मेति वादात् पुर:
प्रागृह्णा: समरोपय: किल समाक्राक्षीरभाङ्क्षीरपि ॥८॥
aaviShTO nagariiM mahOtsavavatiiM kOdaNDashaalaaM vrajan
maadhuryeNa nu tejasaa nu puruShairduureNa dattaantaraH |
sragbhirbhuuShitamarchitaM varadhanurmaameti vaadaatpuraH
praagR^ihNaaH samarOpayaH kila samaakraakshiirabhaankshiirapi ||8
ஆவிஷ்டோ நக³ரீம் மஹோத்ஸவவதீம் கோத³ண்ட³ஶாலாம் வ்ரஜன்
மாது⁴ர்யேண நு தேஜஸா நு புருஷைர்தூ³ரேண த³த்தாந்தர꞉ |
ஸ்ரக்³பி⁴ர்பூ⁴ஷிதமர்சிதம் வரத⁴னுர்மாமேதி வாதா³த்புர꞉
ப்ராக்³ருஹ்ணா꞉ ஸமரோபய꞉ கில ஸமாக்ராக்ஷீரபா⁴ங்க்ஷீரபி || 74-8 ||
மதுராபுரி அழகாக விழாக்கோலம் பூண்டிருந்தது. கம்ஸன் ஏற்பாடு செயதிருந்த வில் விழா,''சாப பூஜா'' மண்டபத்துக்கு திரள் திரளாக கூட்டம் சேர்ந்து கொண்டிருந்தது. பெரிய தனுசு ஒன்று அங்கே மேடையில் வைக்கப்பட்டு இருந்தது. அதற்கு தான் அடுத்த நாள் காலை பூஜை. அதன் அருகே எவரும் நெருங்க முடியாத படி ஆயுதம் தாங்கிய வீரர்கள் காவல் இருந்தார்கள். இங்கே என்ன என்று ஆர்வமாக நீயும் பலராமனும் அங்கே சென்றீர்கள். உங்களை காவல் கார வீரர்கள் தடுத்தார்கள். அவர்களை மீறி உள்ளே நுழைந்தாய். மலர்களால் அழகாக அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த அந்த பெரிய தனுசு உன் கண்ணில் பட்டது. எவராலும் தடுக்க முடியாத நீ பழைய ஞாபகத்தில் ஆழ்ந்தாயோ? முன் பிறவியில் ஸ்ரீ ராமனாக அவதரித்து, எவராலும் அசைக்க முடியாத பெரிய சிவ தனுஸை அனாயாசமாக எடுத்து நாணேற்றி முறித்தது நினைவில் வந்ததோ? இந்த அவதாரத்திலும் ஒரு வில்லை முறிக்க எண்ணமோ? கண் மூடி திறக்கும் நேரத்தில் முன்பு போலவே இந்த பெரிய வில்லை எடுத்து நிறுத்தி நாணேற்றி இழுத்து உடைத்தாயே !!

श्व: कंसक्षपणोत्सवस्य पुरत: प्रारम्भतूर्योपम-
श्चापध्वंसमहाध्वनिस्तव विभो देवानरोमाञ्चयत् ।
कंसस्यापि च वेपथुस्तदुदित: कोदण्डखण्डद्वयी-
चण्डाभ्याहतरक्षिपूरुषरवैरुत्कू लितोऽभूत् त्वया ॥९॥
shvaH kamsakshapaNOtsavasya purataH praarambha tuuryOpamaH
chaapadhvamsa mahaadhvanistava vibhO devaanarOmaa~nchayat |
kamsasyaapi cha vepathustaduditaH kOdaNDakhaNDadvayii
chaNDaabhyaahata rakshipuuruSharavai rutkuulitO(a)bhuut tvayaa || 9
कंसस्यापि च वेपथुस्तदुदित: कोदण्डखण्डद्वयी-
चण्डाभ्याहतरक्षिपूरुषरवैरुत्कू
shvaH kamsakshapaNOtsavasya purataH praarambha tuuryOpamaH
chaapadhvamsa mahaadhvanistava vibhO devaanarOmaa~nchayat |
kamsasyaapi cha vepathustaduditaH kOdaNDakhaNDadvayii
chaNDaabhyaahata rakshipuuruSharavai rutkuulitO(a)bhuut tvayaa || 9
ஶ்வ꞉ கம்ஸக்ஷபணோத்ஸவஸ்ய புரத꞉ ப்ராரம்ப⁴தூர்யோபம-
ஶ்சாபத்⁴வம்ஸமஹாத்⁴வனிஸ்தவ விபோ⁴ தே³வானரோமாஞ்சயத் |
கம்ஸஸ்யாபி ச வேபது²ஸ்தது³தி³த꞉ கோத³ண்ட³க²ண்ட³த்³வயீ-
சண்டா³ப்⁴யாஹதரக்ஷிபூருஷரவைருத் கூலிதோ(அ)பூ⁴த்த்வயா || 74-9 ||
அடேயப்பா, எங்கும் செவிடு பொடிபடும் பெரிய சப்தத்தோடு ''ணங்'' என்று எதிரொலித்தபடி அந்த புராதன பெரிய வில் தெறித்து விழுந்தது. மறுநாள் கம்ஸன் பூஜை செய்வதற்காக வைக்கப் பட்டிருந்த வில் தூள் தூள். இந்த எதிரொலி விண்ணிலும் கேட்டு தேவர்கள் நடுங்கினார்கள். ஒருபக்கம் உன் செயலால் ஆனந்தம் மறு பக்கம் அந்த வில் எழுப்பிய சப்தத்தில் அதிர்ச்சி.. கோபமாக ஓடிவந்த காவல் படை வீரர்கள் உன்னைத் தாக்கிக் கொல்ல முயன்றபோது , அந்த உடைந்த வில்லின் பகுதிகளால் அவர்களை அடித்து விரட்டினாய் கிருஷ்ணா நீ.
ஶ்சாபத்⁴வம்ஸமஹாத்⁴வனிஸ்தவ விபோ⁴ தே³வானரோமாஞ்சயத் |
கம்ஸஸ்யாபி ச வேபது²ஸ்தது³தி³த꞉ கோத³ண்ட³க²ண்ட³த்³வயீ-
சண்டா³ப்⁴யாஹதரக்ஷிபூருஷரவைருத்
அடேயப்பா, எங்கும் செவிடு பொடிபடும் பெரிய சப்தத்தோடு ''ணங்'' என்று எதிரொலித்தபடி அந்த புராதன பெரிய வில் தெறித்து விழுந்தது. மறுநாள் கம்ஸன் பூஜை செய்வதற்காக வைக்கப் பட்டிருந்த வில் தூள் தூள். இந்த எதிரொலி விண்ணிலும் கேட்டு தேவர்கள் நடுங்கினார்கள். ஒருபக்கம் உன் செயலால் ஆனந்தம் மறு பக்கம் அந்த வில் எழுப்பிய சப்தத்தில் அதிர்ச்சி.. கோபமாக ஓடிவந்த காவல் படை வீரர்கள் உன்னைத் தாக்கிக் கொல்ல முயன்றபோது , அந்த உடைந்த வில்லின் பகுதிகளால் அவர்களை அடித்து விரட்டினாய் கிருஷ்ணா நீ.
शिष्टैर्दुष्टजनैश्च दृष्टमहिमा प्रीत्या च भीत्या तत:
सम्पश्यन् पुरसम्पदं प्रविचरन् सायं गतो वाटिकाम् ।
श्रीदाम्ना सह राधिकाविरहजं खेदं वदन् प्रस्वप-
न्नानन्दन्नवतारकार्यघटनाद्वाते श संरक्ष माम् ॥१०॥
shiShTairduShTajanaishcha dR^iShTamahimaa priityaa cha bhiityaa tataH
sampashyan purasampadaM pravicharan saayaM gatO vaaTikaam |
shriidaamnaa saha raadhikaavirahajaM khedaM vadan prasvapan
aanandannavataarakaarya ghaTanaat vaatesha sanraksha maam ||10
श्रीदाम्ना सह राधिकाविरहजं खेदं वदन् प्रस्वप-
न्नानन्दन्नवतारकार्यघटनाद्वाते
shiShTairduShTajanaishcha dR^iShTamahimaa priityaa cha bhiityaa tataH
sampashyan purasampadaM pravicharan saayaM gatO vaaTikaam |
shriidaamnaa saha raadhikaavirahajaM khedaM vadan prasvapan
aanandannavataarakaarya ghaTanaat vaatesha sanraksha maam ||10
ஶிஷ்டைர்து³ஷ்டஜனைஶ்ச த்³ருஷ்டமஹிமா ப்ரீத்யா ச பீ⁴த்யா தத꞉
ஸம்பஶ்யன்புரஸம்பத³ம் ப்ரவிசரன்ஸாயம் க³தோ வாடிகாம் |
ஶ்ரீதா³ம்னா ஸஹ ராதி⁴காவிரஹஜம் கே²த³ம் வத³ன்ப்ரஸ்வப-
ந்னானந்த³ன்னவதாரகார்யக⁴டனாத்³ வாதேஶ ஸம்ரக்ஷ மாம் || 74-10 ||
வாதபுரீசா, நல்லோர் எல்லோருக்கும் நன்மை தந்தருள்பவனே, துஷ்டர்களை வேருடன் அறுப்பவனே, மதுராபுரி நகரத்தின் வளமை, அழகு உன்னை கவர்ந்தது. ஊரெல்லாம் சுற்றிப் பார்க்க கிளம்பிய நீ, இதோ சாயந்திரம் நீ தங்கி இருந்த நந்தவனத்துக்கு திரும்பி வந்துவிட்டாய். உன் நண்பன் தாமன் உன்னோடு பிருந்தாவன பழங்கதைகள் பேசி மகிழ்ந்தான். ஆமாம் தாமா, ராதா எவ்வளவு அன்போடு என்னோடு பழகி விளையாடுவாள் தெரியுமா? என்று ராதையைப் பற்றி ஒரு கணம் நினைத்தாய். பேசிக்கொண்டே இருவரும் தூங்கிப்போய் விட்டீர்கள். எண்டே குருவாயூரா , என்னையும் கொஞ்சம் நினைத்துப் பார்த்து என் நோய் தீர்த்து வாழவையப்பா.
ஸம்பஶ்யன்புரஸம்பத³ம் ப்ரவிசரன்ஸாயம் க³தோ வாடிகாம் |
ஶ்ரீதா³ம்னா ஸஹ ராதி⁴காவிரஹஜம் கே²த³ம் வத³ன்ப்ரஸ்வப-
ந்னானந்த³ன்னவதாரகார்யக⁴டனாத்³
வாதபுரீசா, நல்லோர் எல்லோருக்கும் நன்மை தந்தருள்பவனே, துஷ்டர்களை வேருடன் அறுப்பவனே, மதுராபுரி நகரத்தின் வளமை, அழகு உன்னை கவர்ந்தது. ஊரெல்லாம் சுற்றிப் பார்க்க கிளம்பிய நீ, இதோ சாயந்திரம் நீ தங்கி இருந்த நந்தவனத்துக்கு திரும்பி வந்துவிட்டாய். உன் நண்பன் தாமன் உன்னோடு பிருந்தாவன பழங்கதைகள் பேசி மகிழ்ந்தான். ஆமாம் தாமா, ராதா எவ்வளவு அன்போடு என்னோடு பழகி விளையாடுவாள் தெரியுமா? என்று ராதையைப் பற்றி ஒரு கணம் நினைத்தாய். பேசிக்கொண்டே இருவரும் தூங்கிப்போய் விட்டீர்கள். எண்டே குருவாயூரா , என்னையும் கொஞ்சம் நினைத்துப் பார்த்து என் நோய் தீர்த்து வாழவையப்பா.
No comments:
Post a Comment