Friday, October 15, 2021

sri lalitha sahasranamam






 ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - நங்கநல்லூர் J K SIVAN

ஸ்லோகங்கள் 13-17, நாமங்கள்:31 - 40

कनकाङ्गद केयूर कमनीय भुजान्विता ।
रत्नग्रैवेय चिन्ताक लोलमुक्ता फलान्विता ॥ 13 ॥

Kanakangada keyura kamaniya bhujanvita
Ratnagrai-veya chintakalola mukta phalanvita – 13

கநகாங்கத கேயூர கமநீய புஜாந்விதா |
ரத்நக்ரைவேய சிந்தாக லோலமுக்தா பலாந்விதா || 13

कामेश्वर प्रेमरत्न मणि प्रतिपणस्तनी।
नाभ्यालवाल रोमालि लताफल कुचद्वयी ॥ 14 ॥

Kameshvara prema-ratna mani prati-panastani
Nabhyalavala romali lata phala kuchadvaei – 14

காமேச்வர ப்ரேமரத்ந மணிப்ரதிபண ஸ்தநீ |
நாப்யாலவாலரோமாலி லதாபலகுசத்வயீ || 14

लक्ष्यरोमलता धारता समुन्नेय मध्यमा ।
स्तनभार दलन्-मध्य पट्टबन्ध वलित्रया ॥ 15 ॥

Lakshya romalata bharata samunneya madhyama
Stana-bhara dalanmadhya patta-bandha-valitraya – 15

லக்ஷ்யரோம லதாதாரதா ஸாமுந்நேய மத்யமா |
ஸ்தநபார தலந்மத்ய பட்டபந்த வலித்ரயா || 15

अरुणारुण कौसुम्भ वस्त्र भास्वत्-कटीतटी ।
रत्नकिङ्किणि कारम्य रशनादाम भूषिता ॥ 16 ॥

Arunaruna kaostunbha vastra bhasvatkatitati
Ratna kinkinikaramya rashanadama bhushita – 16

அருணாருண கௌஸும்ப வஸ்த்ர பாஸ்வத் கடீதடீ |
ரத்ந கிங்கிணிகாரம்ய ரசநாதாமபூஷிதா || 16

कामेश ज्ञात सौभाग्य मार्दवोरु द्वयान्विता ।
माणिक्य मकुटाकार जानुद्वय विराजिता ॥ 17 ॥

Kamesha-gynata saobhagya marda-voru dvayanvita
Manikya makuta kara janudvaya virajita – 17

காமேசஜ்ஞாதஸௌபாக்ய மார்தவோரு த்வயாந்விதா |
மாணிக்யமகுடாகார ஜாநுத்வய விராஜிதா || 17

31-40 நாமாக்களின் அர்த்தம்:

* 31 * कनकाङ्गदकेयूरकमनीयभुजान्विता - கநகாங்கத கேயூர கமநீய புஜாந்விதா -
அம்பாள் அணிந்துள்ள கேயூரம் எனும் தோள் வளை எப்படி கண்ணைப் பறிக்கிறது பார்த்தீர்களா? இப்போது இம்மாதிரியான ஆபரணங்கள் வழக்கத்தில் இல்லாத ஒரு நாகரீகம் நம்மை ஆக்ரமித்துவிட்டது.

* 32 * रत्नग्रैवेयचिन्ताकलोलमुक्ताफलान्विता - ரத்நக்ரைவேய சிந்தாக லோலமுக்தா பலாந்விதா -
உலகின் விலையுயர்ந்த எந்த நகைக் கடையிலும் காணமுடியாத அற்புத நெக்லெஸ் அம்பாள் அணிந்து கொண்டிருக்கிறாளே. சிப்பியிலிருந்து வெளிவந்த நல் முத்துக்கள், நவமணி முத்து மாணிக்கங்கள் கோர்த்த தேவலோக நகைச் சிற்பிகளின் கைவண்ணத்தில் உருவான நகாஸ் வேலைப்பாடு மிக்க ஆபரணம் அம்பாளிடம் வந்தபிறகு மேலும் அழகு பெறுகிறது.

* 33 * कामेश्वरप्रेमरत्नमणिप्रतिपणस्तनी -காமேச்வர ப்ரேமரத்ந மணிப்ரதிபண ஸ்தநீ | -
பெண்மைக்குரிய லக்ஷணங்களோடு காமேஸ்வரனை கவரும் லோக மாதா என்று அறிந்து கொண்டாலே போதுமானது. தாயை அதற்கு மேல் வர்ணிக்க நமக்கு உரிமையில்லை.

* 34 * नाभ्यालवालरोमालिलताफलकुचद्वयी - நாப்யாலவாலரோமாலி லதாபலகுசத்வயீ --
அற்புத பெண்ணுக்குரிய உடலமைப்பு கொண்டவள் அம்பாள். பெண்மை தாய்மை. அம்பாள் அழகிய சர்வலோக மாதா.

* 35 * लक्ष्यरोमलताधारतासमुन्नेयमध्यमा - லக்ஷ்யரோம லதாதாரதா ஸாமுந்நேய மத்யமா |
இல்லையோ என்னும்படியாக ஓடிவது போல் இடை கொண்ட , கொடியிடையாள் லலிதாம்பிகை என்கிறார் ஹயக்ரீவர், கடலையே குடித்த பெரிய தொப்பைகாரர் அகஸ்தியரிடம். அவரும் தொப்பையை தடவிக்கொண்டே ஆமாம் என்கிறார்.

* 36 * स्तनभारदलन्मध्यपट्टबन्धवलित्रया - ஸ்தநபார தலந்மத்ய பட்டபந்த வலித்ரயா -
அம்பாளின் இடையில் வயிறுபாகம் என்று ஒன்று இருக்குமானால் அதில் மூன்று வரிகள் போல் சுற்றிக் கொண்டிலிருக்கும் கொடிகள் போல் காணப்படுமாம். அதிலிருந்து ஓஹோ இடை என்று ஒன்று இருக்கிறது அம்பாளுக்கு என புரிந்துகொள்ளலாம்.

* 37 * अरुणारुणकौसुम्भवस्त्रभास्वत्कटीतटी -அருணாருண கௌஸும்ப வஸ்த்ர பாஸ்வத் கடீதடீi -
அம்பாளின் மெல்லிய இடையை சுற்றி அழகாக ஒரு இளம்சிவப்பு பட்டு வஸ்திரம் மினுக்குவது என்ன நேர்த்தியாக இருக்கிறது. மனத்தை கொள்ளை கொள்ளும் தெய்வீக அழகு அல்லவோ.

* 38 * . रत्नकिङ्किणिकारम्यरशनादामभूषिता -ரத்ந கிங்கிணிகாரம்ய ரசநாதாமபூஷிதா -
நமது பெண்கள் அக்காலத்தில் ஒட்டியாணம் என்று ஒரு பட்டை யான தங்க ஆபரணம் அணிவார்கள். பயமுறுத்துவார்கள். அம்பாள் அணியும் விதமே வேறு. மெல்லிய நூல் மாதிரி மெலிந்த பொன் கயிறு அவள் இடுப்பை அலங்கரிக்கும். அதில் சுநாதம் எழுப்பும் சிறிய மணிகள் அசைந்து அழகும் ஒளியும் ஒலியும் சேர்க்கும்.

39 * कामेशज्ञातसौभाग्यमार्दवोरुद्वयान्विता - காமேசஜ்ஞாதஸௌபாக்ய மார்தவோரு த்வயாந்விதா -- இடையழகை தொடர்ந்து ஹயக்ரீவர் தொடையழகை வர்ணிக்கிறார். அவள் தொடையழகு அவளது பிராண நாதன் காமேஸ்வரன் ஒருவனுக்கல்லவோ தெரியும் என்கிறார். நாம் பாதத்தை வணங்கி அருள் பெறுபவர்கள்.

* 40 * माणिक्यमकुटाकारजानुद्वयविराजिता - மாணிக்யமகுடாகார ஜாநுத்வய விராஜிதா -
இரு மாணிக்க பந்துகள் உருண்டு அழகிய முழங்கால் மூட்டுகளாக ஆனவை என்கிறார் அகஸ்திய ரிடம் ஹயக்ரீவர். அம்பாளின் தேஹ லாவண்யம் எவ்வளவு நேர்த்தி என்று சொல்கிறது இந்த நாமம்.

ஸ்ரீ சக்ர மஹா மேரு அம்பாள் திரிபுரசுந்தரி - ஏற்காடு.

நாம் ஏற்காடு எனும் உல்லாச ஸ்தலம் போகிறோம் அங்கே உள்ள மஹா மேரு சக்தி தேவதை அம்பாள் ஸ்ரீ சக்ர மஹா மேரு திரிபுரசுந்தரியை தரிசித்தி ருக்கிறோமா. நான் சென்றபோது யாரும் எனக்கு தெரிவிக்காதது எனது துர்பாக்கியம். யாரையோ இங்கே என்னென்ன கோயில்கள் உண்டு என்று கேட்டபோது காதை தடவிக்கொண்டே எங்கோ யோசித்து தெருமுனையில் உள்ள சிறு முச்சந்தி விநாயகரைக் காட்டினார். நல்ல வழிகாட்டி. வேறு யாரையும் கேட்க எனக்கு தோன்றாததன் காரணம், நாங்கள் அங்கிருந்து கிளம்பும் நேரம் வந்து விட்டது.
ஏற்காடு நகரத்திலிருந்து 6-7 கி.மீ தூரம். ஒரு பெரிய தனவந்தர் பங்களாவுக்கு பின் புறம் அம்பாள் குடியிருக்கிறாள். தனி வழி இருக்கிறது. ஏன் வாசலில் ஒரு புத்தர் காவல்? அவரைக் கடந்து சென்றால் சந்நிதி. புத்தருக்கு வலது புறம் தக்ஷிணாமூர்த்தி. ரெண்டு பேருமே பேசாதவர்கள். ரெண்டுபேரும் மௌனிகள் என்றாலும் ஞானிகள்.
நடுவே செல்லும் பாதை ஸ்ரீ லலிதா த்ரிபுரசுந்தரி யிடம் கொண்டு சேர்க்கிறது. அவளே ஸ்ரீ சக்ர மஹாமேரு . அவள் அருகே மூன்று புரங்களிலும் சரஸ்வதி, விஷ்ணு, பரமேஸ்வரன். மரத்தில் அற்புத வேலைப்பாடுகளோடு செதுக்கப்பட்டவை. கோபுரம் மஹா மேரு உருவில் உள்ளது. உலகில் பெரிய ''மஹா மேரு'' இந்த உருவம் தானோ? அம்பாள் அழகாக தரிசனம் தருகிறாள். ஸ்ரீ சக்ர மஹா மேரு பீடத்தில் அமர்ந்திருப்பவள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...