Tuesday, October 5, 2021

MAHALAYA PAKSHA AMAVASYA


ஒரு நன்றிக்கடன் - நங்கநல்லூர் J K SIVAN
மஹாளய பக்ஷ தர்ப்பணம், மஹாளய அமாவாசை.
இன்று மஹாளய அமாவாசை . இது என்ன? அதன் முக்யத்வம் என்ன? பதினைந்து நாட்களாக தொடர்ந்த மஹாளய பக்ஷம் இந்த அமாவாசை யோடு நிறைவு பெறுகிறது. இனிமேல் நவராத்ரி கொலுவின் மேல் கவனம் செல்லும்.
யாராவது வீட்டுக்கு வந்தால், நாம் வரவழைத் தால்,என்ன செய்கிறோம்? மரியாதையோடு மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். நாம் வசிக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருக் கிறோம். அதுபோல் தான் நம் கண்ணுக்கு தெரியாமல் நம்மைத் தேடி வரும், நாம் வரவேற்கும் முன்னோர்களுக்கு கடந்த 15 நாட்களாக இருந்த மஹாளய பக்ஷத்தில் திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால், நம் வாழ்க்கை யும், சந்ததியும் விருத்தியடையும் என்பது காலம் காலமாக நாம் நம்புவது. நம் முன்னோர்கள் பரம்பரையாக செய்து நமக்கும் பழக்கப்படுத்திய வழக்கம்.
இறந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். இந்தியாவில் இருந்து வந்தவர்கள் இந்தியர்கள் போல பித்ரு லோகத்திலிருந்து வந்தவர்கள் பித்ருக்கள். அவர்கள் சரீரமற்றவர்கள், உணவு உடை தேவைப்படாதவர்கள், பேசாதவர்கள், அவர்களுக்கு நாம் அளிப்பது எள்ளும் நீரும் தான். அவர்களின் நினைவால் மற்றவர்களுக்கு உணவளிக்கிறோம். இதை அறிந்து உணர்ந்து அவர்கள் நம்மீது எப்போதும் கொண்ட பாசத்தோடு வாழ்த்தி ஆசி வழங்குகிறார்கள். இது அவசியமில்லையா? பித்ருக்கள் சாபம் பொல்லாதது என்கிறோம். என்ன காரணம்?
நாம் உதவியர்கள், நம்மிடம் பலன் பெற்றவர்கள் நம்மால் உருவானவர்கள், வளர்ந்தவர்கள், நம்மை உதாசீனப்படுத்தினால், நம்மை அலக்ஷியப் படுத்தினால், நமக்கு உள்ளம் கொதிக்கிறது. கோபம் மூக்குக்கு மேல் வரவில் லையா?
இந்த மஹாளய பக்ஷம் எப்போது வரும் என்று காத்திருந்து பித்ருலோக அதிகாரிகளிடம் அனுமதி பெற்று நம்மைத் தேடி ஓடோடி வரும் முன்னோர்கள் வீடு தேடி வந்தவர்களை நாம் மதிக்காவிட்டால், வா என்று அழைத்து நீரும் எள்ளும் கூட கொடுக்கா விட்டால் எவ்வளவு மனம் வருந்துவார்கள். உள்ளம் உடைந்து நீ உருப்படமாட்டே, நாசமாகத்தான் போவாய் என்று நாம் சொல்வதை அவர்கள் சொன்னால் அதை சாபம் என்று சொல்லலாமா? நாம் மற்றவரை அப்படிச் சொன்னால் அது சாப மில்லையா? நமது முன்னோர்களும் நம்மைப் போன்றவர்கள் தானே, அவர்கள் அவ்வாறு நினைப்பதில் சொல்வதில் என்ன தப்பு? அது தான் பித்ரு தோஷம். ரொம்ப சக்தி வாய்ந்தது. பல குடும்பங்கள் எவ்வளவு தான் உலகத்தில் செல்வம் வசதிகள் படைத்து இருந்தாலும் மனா நிம்மதி இன்றி கஷ்டப்படுவதன் காரணம்.
பித்ருக்களின் ஆசி பெறவும், பித்ரு தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீள, மகாளய பக்ஷ காலத்தில், பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப் பது அவசியமாகிறது. வருஷத்தில் ஒருநாள், பதினைந்துநாள் ஒரு மணிநேரம் செலவழிக்கக் கூடவா முடியாது?
இந்த வருஷம் இப்படித்தான் புரட்டாசி 5ம் தேதி (செப்டம்பர் 21) முதல் புரட்டாசி 20ம் தேதி அதாவது இன்று வரை (அக்டோபர் 6) வரை மகாளய பக்ஷ காலம். இந்த பதினைந்து நாள் தான் பித்ரு லோகத்திலிருந்து முன்னோர்கள் அவரக்ளுக்கு விருப்பமான தமது வாரிசுகள் வீடுகளுக்கு சென்று வர அனுமதிக்கப்படுகிறார்கள். ஆகவே நம்மைத் தேடி ஆசை ஆசையாக ஓடிவருவார்கள். நம் வீடு தானே அவர்களும் வளர்ந்து வாழ்ந்த குடும்பம். அதனால் தான் மஹாளய பக்ஷத்தில் அவர்கள் நம் வீட்டுக்கு வந்து தங்கியிருப்பார்கள் என நம்பிக்கை.
மஹாளய பக்ஷ பித்ரு தர்ப்பணம் பண்ணினவனின் விருப்பங்கள் பெரியோர் ஆசியால் நிறைவேறும்.
கால சர்ப்ப தோஷங்களும் நீங்கும். உடல் ஆரோக்கி யத்துடன் இருப்பான். குடும்பம் சுபிக்ஷமாக இருக் கும்.
தர்ப்பைப் புல் புனிதமானது. மஹா விஷ்ணுவாக கருதப்படுவது. அதில் தான் வீட்டுக்கு வரும் பித்ருக்களை ஆவாஹனம் செய்து வணங்கி எள்ளும் நீரும் இறைக்கிறோம். ஸ்ராத்த நாளில் தர்ப்பை மேல் பிண்ட பிரதானம் செய்கிறோம்.
மஹாளய பக்ஷத்தில் இதர உறவினர்கள், வர்கத்தவர் அத்தனை பேர்களுடைய பேரையும் உறவையும் சொல்லி வணங்குகிறோம். திருப்தி அடை ,திருப்தி அடை ,திருப்திஅடை ''த்ரிப்தியதா'' என்று 3 தடவை சொல்கிறோம்.
வீட்டில் வளர்ந்த நாய் பூனை ஆடு மாடு கூட இறந்தபின் அடுத்த பிறவியில் அமைதியோடு திருப்தியாக நிம்மதியாக இருக்க, ஆசையாக, பாசமாக, மனதில் நினைத்து வேண்டிக் கொள்வ துமுண்டு. ஆத்மா ஒன்றே தான். அதற்கு உடல்கள் தான் வெவ்வேறு, பெயர்கள் அடையாளம் தான் வெவ்வேறு.
இன்னொரு விஷயம். பாற்கடலை தேவர்களும் ராக்ஷஸர்களை கடைந்தபோது ராக்ஷசர்களால் பல தேவர்கள் ரிஷிகள் மாண்டார்கள். அவர்களை நினைவு கூர்ந்து வணங்குவது மாஹளயம் என்று சொல்வதுண்டு. அவர்களை முன்னோர் களாக தர்ப்பணம் செயகிறோம். தேவரிஷி கணங்கள் ரிஷிகளின் பத்னிகளுக்கும் தர்ப்பணம் செயகி றோம். இதில் நவக்கிரஹங்கள் , அஷ்டதிக் பாலகர்கள், சகல தேவர்களும் சேர்த்தி. மஹாளய பக்ஷத்தில் தான் பாற்கடல் கடையப்பட்டது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...