Wednesday, October 27, 2021

SRIMAN NARAYANEEYAM

 ஸ்ரீமந்  நாராயணீயம்- நங்கநல்லூர்  J K SIVAN 

85வது தசகம் 

85.  ராஜாதி ராஜன்  யுதிஷ்டிர சக்ரவர்த்தி.

இந்த்ரப்ரஸ்தத்தில்  மயனை  வைத்து  ஒரு பெரிய  நகரமே அமைத்து விட்டார்கள்.  அருமையான ஒரு மாளிகையை  மயன்  பாண்டவர்களுக்கு கட்டிக்  கொடுத்துவிட்டான்.  நாள் குறித்தாகி விட்டது.  பாண்டவ  சக்ரவர்த்தி  யுதிஷ்டிர மஹாராஜா தான்  ராஜாதி ராஜன் என்று உலகத்துக்கே  பிரகடனப்படுத்தும்  ராஜ சூய  யாகம் நடத்த  ஏற்பாடாகிவிட்டது.   கிருஷ்ணன் அதில் பங்கேற்க புறப்பட்டார்.  தடங்கல்களாக இருந்த சிசுபாலன்  ஜராசந்தன் ஆகியோர் கொல்லப்படுகிறார்கள்.  
இந்த தசகம் சொல்வது இதெல்லாம் பற்றி.

ततो मगधभूभृता चिरनिरोधसंक्लेशितं
शताष्टकयुतायुतद्वितयमीश भूमीभृताम् ।
अनाथशरणाय ते कमपि पूरुषं प्राहिणो-
दयाचत स मागधक्षपणमेव किं भूयसा ॥१॥

tatO magadha bhuubhR^itaa chiranirOdha sankleshitaM
shataaShTakayutaa yutadvitayamiisha bhuumiibhR^itaam |
anaatha sharaNaaya te kamapi puuruShaM praahiNOt
ayaachata sa maagadha kshapaNameva kiM bhuuyasaa || 1

ததோ மக³த⁴பூ⁴ப்⁴ருதா சிரனிரோத⁴ஸங்க்லேஶிதம்
ஶதாஷ்டகயுதாயுதத்³விதயமீஶ பூ⁴மீப்⁴ருதாம் |
அனாத²ஶரணாய தே கமபி பூருஷம் ப்ராஹிணோ-
த³யாசத ஸ மாக³த⁴க்ஷபணமேவ கிம் பூ⁴யஸா || 85-1 ||

என் ப்ரபோ, கிருஷ்ணா, இருபதாயிரத்து  எண்ணூறு  ராஜாக்கள்  பிடிபட்டு விட்டார்கள்.  அவர்களை சித்ரவதை செய்து சிறையில் அடைத்து வைத்திருக்கிறான்  ஜராசந்தன்.   காப்பாற்றுங்கள் என்று உனக்கு  ஒரு வேண்டுகோள்  யார்மூலமோ வந்து சேர்ந்தது.  நீ ஒருவன் தான் காப்பாற்ற முடியும் என்று நம்பிக்கை. திக்கற்றோருக்கு தெய்வமாகிய நீ தானே துணை. 

यियासुरभिमागधं तदनु नारदोदीरिता-
द्युधिष्ठिरमखोद्यमादुभयकार्यपर्याकुल: ।
विरुद्धजयिनोऽध्वरादुभयसिद्धिरित्युद्धवे
शशंसुषि निजै: समं पुरमियेथ यौधिष्ठिरीम् ॥२॥

yiyaasurabhimaagadhaM tadanu naaradOdiiritaat
yudhiShThira makhOdyamaat ubhayakaarya paryaakulaH |
viruddhajayinO(a)dhvaraat ubhaya siddhirityuddhave
shashamsuShi nijaiH samaM puramiyetha yaudhiShThiriim || 2

யியாஸுரபி⁴மாக³த⁴ம் தத³னு நாரதோ³தீ³ரிதா-
த்³யுதி⁴ஷ்டி²ரமகோ²த்³யமாது³ப⁴யகார்யபர்யாகுல꞉ |
விருத்³த⁴ஜயினோ(அ)த்⁴வராது³ப⁴யஸித்³தி⁴ரித்யுத்³த⁴வே
ஶஶம்ஸுஷி நிஜை꞉ ஸமம் புரமியேத² யௌதி⁴ஷ்டி²ரீம் || 85-2 ||

ஜராசந்தனோடு போர் புரியவேண்டும்.  அதற்குள் நாரதர்  ஒரு சேதி கொண்டு வந்தார்.  பாண்டவ ராஜா  யுதிஷ்டிரன் ராஜசூய யாகம்  நடத்த போகிறான். நீ தான் முக்கிய  விருந்தாளி.  எதை முதலில்  நிறைவேற்றுவது   ஜராசந்தன் வதமா , ராஜசூய யாகத்தில் பங்கேற்பா?  உத்தவன் என்ன சொன்னான்.  ராஜ சூயயாகம்  எல்லா அரசர்களையும் யுதிஷ்டிரன் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது. ஆகவே  அதற்கு முதலிடம் கொடுப்பது அவசியம். அரசர்களையும்  கூட  சேர்த்துக்கொண்டு ஜராசந்தனையும் எதிர்ப்பது  ரெண்டுமே  அப்போது ஒன்றாக இணைந்துவிடும்.   எல்லோருடனும் இணைந்து  இந்திரப்பிரஸ்தம் புறப்பட்டாய் கிருஷ்ணா.

अशेषदयितायुते त्वयि समागते धर्मजो
विजित्य सहजैर्महीं भवदपाङ्गसंवर्धितै: ।
श्रियं निरुपमां वहन्नहह भक्तदासायितं
भवन्तमयि मागधे प्रहितवान् सभीमार्जुनम् ॥३॥

asheShadayitaayute tvayi samaagate dharmajO
vijitya sahajairmahiiM bhavadapaanga sanvardhitaiH |
shriyaM nirupamaaM vahannahaha bhaktadaasaayitaM
bhavantamayi maagadhe prahitavaan sabhiimaarjunam||3

அஶேஷத³யிதாயுதே த்வயி ஸமாக³தே த⁴ர்மஜோ
விஜித்ய ஸஹஜைர்மஹீம் ப⁴வத³பாங்க³ஸம்வர்தி⁴தை꞉ |
ஶ்ரியம் நிருபமாம் வஹன்னஹஹ ப⁴க்ததா³ஸாயிதம்
ப⁴வந்தமயி மாக³தே⁴ ப்ரஹிதவான்ஸபீ⁴மார்ஜுனம் || 85-3 ||

ராஜசூய யாகத்திற்கு  முன்பாக  பாண்டவர்கள் பல திசைகளுக்கு சென்று ராஜாக்களை சந்தித்து  இணைந்தவர்களை ஓன்று கூட்டி எதிர்த்தவர்களை வென்று அடிமையாக்கி விட்டார்கள். எண்ணற்ற பெரும் புகழும் அளவற்ற செல்வமும்  சந்தோஷமும்  பாண்டவர்களிடம் சேர்ந்துவிட்டது.  ஜராசந்தனை சந்திக்க  பீமனோடு அர்ஜுனனும் சேர்ந்துகொண்டு கிருஷ்ணா உன்னோடு  புறப்பட்டு விட்டார்கள். 

गिरिव्रजपुरं गतास्तदनु देव यूयं त्रयो
ययाच समरोत्सवं द्विजमिषेण तं मागधम् ।
अपूर्णसुकृतं त्वमुं पवनजेन संग्रामयन्
निरीक्ष्य सह जिष्णुना त्वमपि राजयुद्ध्वा स्थित: ॥४॥

girivrajapuraM gataastadanu deva yuuyaM trayO
yayaacha samarOtsavandvijamiSheNa taM maagadham |
apuurNa sukR^itaM tvamuM pavanajena sangraamayan
niriikshya saha jiShNunaa tvamapi raajyayudhvaa sthitaH ||4

கி³ரிவ்ரஜபுரம் க³தாஸ்தத³னு தே³வ யூயம் த்ரயோ
யயாச ஸமரோத்ஸவம் த்³விஜமிஷேண தம் மாக³த⁴ம் |
அபூர்ணஸுக்ருதம் த்வமும் பவனஜேன ஸங்க்³ராமயன்
நிரீக்ஷ்ய ஸஹ ஜிஷ்ணுனா த்வமபி ராஜயுத்⁴வா ஸ்தி²த꞉ || 85-4 ||

என் தெய்வமே,  கிருஷ்ணா, நீயும்,  பீமா அர்ஜுனர்களும்  ப்ராமணர்களாக வேஷமிட்டு மகத ராஜ்ஜியம்  செண்றீர்கள். அதன் தலைநகரம்  கிரிவ்ரஜபுரம். அதில் தான் ஜராசந்தன் வசித்திருந்தான்.    ஜராசந்தன் மல்யுத்த பிரியன். ஆகவே  இந்த இரு பிராமணர்களும் மல்யுத்தம் பயின்றவர்கள்  ராஜா வின் முன்னே  மல்யுத்தப் போட்டியில் ஈடுபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.  ஜராசந்தனுக்கு உன் கையால் மரணிக்கும் பாக்யம் இல்லை. 

अशान्तसमरोद्धतं बिटपपाटनासंज्ञया
निपात्य जररस्सुतं पवनजेन निष्पाटितम् ।
विमुच्य नृपतीन् मुदा समनुगृह्य भक्तिं परां
दिदेशिथ गतस्पृहानपि च धर्मगुप्त्यै भुव: ॥५॥

ashaanta samarOddhataM viTapa paaTanaasanj~nayaa
nipaatya jarasaH sutaM pavanajena niShpaaTitam |
vimuchya nR^ipatiinmudaa samanugR^ihya bhaktiM paraaM
dideshitha gataspR^ihaanapi cha dharma guptyai bhuvaH || 5

அஶாந்தஸமரோத்³த⁴தம் விடபபாடனாஸஞ்ஜ்ஞயா
நிபாத்ய ஜரஸஸ்ஸுதம் பவனஜேன நிஷ்பாடிதம் |
விமுச்ய ந்ருபதீன்முதா³ ஸமனுக்³ருஹ்ய ப⁴க்திம் பராம்
தி³தே³ஶித² க³தஸ்ப்ருஹானபி ச த⁴ர்மகு³ப்த்யை பு⁴வ꞉ || 85-5 ||

பீமார்ஜுனர்கள் மற்ற  வீரர்களை ஜெயித்துவிட்டதால் ஜராசந்தன் தானே ஒரு சிறந்த மல்யுத்த வீரன் என்பதால் அவர்களோடு போட்டியிட  முன்வந்தான். என்னை எவரும் ஜெயிக்கமுடியாது என்ற ஆண வம் அவனுக்கு. பீமனோடு  மோத  முயன்ற  ஜராசந்தனை  இரு பாதியாக கிழித்தெறிந்தான் பீமன். 
எல்லாம் உன் அருள் ஆசி.  பீமன்  ராஜா  ஜராசந்தனைக் கொன்று,  சிறைப்பட்டிருந்த அனைத்து ராஜாக்களும் விடுதலையாகி  தத்தம் ஊருக்கு சென்றார்கள். எல்லாம்  கண்ணனின் சமயோசித  திட்டத்தின் படியே  நடக்கிறது.

प्रचक्रुषि युधिष्ठिरे तदनु राजसूयाध्वरं
प्रसन्नभृतकीभवत्सकलराजकव्याकुलम् ।
त्वमप्ययि जगत्पते द्विजपदावनेजादिकं
चकर्थ किमु कथ्यते नृपवरस्य भाग्योन्नति: ॥६॥

prachakruShi yudhiShThire tadanu raajasuuyaadhvaraM
prasanna bhR^itakii bhavat sakala raajakavyaakulam |
tvamapyayi jagatpate dvijapadaavane jaadikaM
chakartha kimu kathyate nR^ipavarasya bhaagyOnnatiH || 6

ப்ரசக்ருஷி யுதி⁴ஷ்டி²ரே தத³னு ராஜஸூயாத்⁴வரம்
ப்ரஸன்னப்⁴ருதகீப⁴வத்ஸகலராஜகவ்யாகுலம் |
த்வமப்யயி ஜக³த்பதே த்³விஜபதா³வனேஜாதி³கம்
சகர்த² கிமு கத்²யதே ந்ருபவரஸ்ய பா⁴க்³யோன்னதி꞉ || 85-6 ||

முக்கிய இடைஞ்சலாக இருந்த  ஜராசந்தன் மறைந்தபிறகு  யுதிஷ்டிரனின் ராஜசூய யாகம் இந்த்ரப்ரஸ்தத்தில் வெகு கோலாகலமாக நடைபெற்றது. எல்லா ராஜாக்களும்  பாண்டவர்கள் பக்கம் இப்போது. அனைவருமே  வெல்லப்பட்டவர்கள்.  யுதிஷ்டிரன் ஆணைக்கு கட்டுப்பட்டவர்கள். அவர்களது ஒத்துழைப்பால் ராஜசூய யாகம் அற்புதமாக  நடந்துகொண்டிருந்தது.  கிருஷ்ணா  நீ  பிராமணர்களின் பாதங்களை  அர்ச்சித்து அபிஷேகித்து  பூஜித்து  வரவேற்றாய் . எவ்வளவு பாக்யம் பண்ணவர்கள் அவர்கள். 

तत: सवनकर्मणि प्रवरमग्र्यपूजाविधिं
विचार्य सहदेववागनुगत: स धर्मात्मज: ।
व्यधत्त भवते मुदा सदसि विश्वभूतात्मने
तदा ससुरमानुषं भुवनमेव तृप्तिं दधौ ॥७॥

tataH savana karmaNi pravaramagrapuujaavidhiM
vichaarya sahadeva vaaganugataH sa dharmaatmajaH |
vyadhatta bhavate mudaa sadasi vishvabhuutaatmane
tadaa sasura maanuShaM bhuvanameva tR^iptiM dadhau || 7

ததஸ்ஸவனகர்மணி ப்ரவரமக்³ர்யபூஜாவிதி⁴ம்
விசார்ய ஸஹதே³வவாக³னுக³தஸ்ஸ த⁴ர்மாத்மஜ꞉ |
வ்யத⁴த்த ப⁴வதே முதா³ ஸத³ஸி விஶ்வபூ⁴தாத்மனே
ததா³ ஸஸுரமானுஷம் பு⁴வனமேவ த்ருப்திம் த³தௌ⁴ || 85-7 ||

யாருக்கு  அக்ரபூஜை  கௌரவம் செய்யவேண்டும் என்ற முடிவெடுக்கும்போது  தர்மபுத்ரன் யோசனையை அனைவரும் ஏகோபித்து ஏற்றுக்கொண்டனர். ஆமாம் கிருஷ்ணா,  நீ இருக்கும்போது வேறு எவர் அந்த மரியாதைக்குத்  தகுதியானவர்கள்?  சர்வ ஞானியான  சகாதேவன் தான் இதை அண்ணா  யுதிஷ்டிரனிடம் முதலில்  சொன்னவன்.  ப்ரபஞ்சத்துக்கே  முதல்வனான நீ இந்த ராஜசூய யாகத்துக்கு முதல்வனாக அமைந்தது பாண்டவர்களின் அதிர்ஷ்டம், பாக்யம்.  மண்ணில் மாந்தரும் விண்ணில் தேவரும் இதைக் கேட்டு மகிழ்ந்தனர். 

तत: सपदि चेदिपो मुनिनृपेषु तिष्ठत्स्वहो
सभाजयति को जड: पशुपदुर्दुरूटं वटुम् ।
इति त्वयि स दुर्वचोविततिमुद्वमन्नासना-
दुदापतदुदायुध: समपतन्नमुं पाण्डवा: ॥८॥

tataH sapadi chedipO muninR^ipeShu tiShThatsvahO
sabhaajayati kO jaDaH pashupadurduruuTaM vaTum |
iti tvayi cha durvachO vitati mudvamannaasanaat
udaapatadudaayudhaH samapatannamuM paaNDavaaH || 8

ததஸ்ஸபதி³ சேதி³போ முனின்ருபேஷு திஷ்ட²த்ஸ்வஹோ
ஸபா⁴ஜயதி கோ ஜட³꞉ பஶுபது³ர்து³ரூடம் வடும் |
இதி த்வயி ஸ து³ர்வசோவிததிமுத்³வமன்னாஸனா-
து³தா³பதது³தா³யுத⁴꞉ ஸமபதன்னமும் பாண்ட³வா꞉ || 85-8 ||

ஒரே ஒரு குரல்  எதிர்த்து உரக்க பேசியது.  சிசுபாலன் தான்  அது.   'சே. என்ன  அவமானம் இது.  எத்தனை  மஹா ரதர்கள், மஹரிஷிகள், ராஜாதி ராஜர்கள்  வீற்றிருக்கிறார்கள் இங்கே.  அவர்களை புறக்கணித்துவிட்டு ஒரு முட்டாளுக்கு,  மாடு  மேய்ப்பவனுக்கு இந்த  முதல் மரியாதை அநியாயம், அக்கிரமம், ஆச்சர்யமும் கூட  என்று கத்தினான்.  அவனை என் கையாலேயே இங்கே தீர்த்து விடுகிறேன் என்று தனது உடைவாளை உருவிக்கொண்டு  கிருஷ்ணா  உன்மேல் பாய்ந்தான்.    பாண்டவர்கள் கடும் கோபம் கொண்டார்கள், அவனைத் தடுத்து நிறுத்த ஓடினார்கள். 

निवार्य निजपक्षगानभिमुखस्यविद्वेषिण-
स्त्वमेव जहृषे शिरो दनुजदारिणा स्वारिणा ।
जनुस्त्रितयलब्धया सततचिन्तया शुद्धधी-
स्त्वया स परमेकतामधृत योगिनां दुर्लभाम् ॥९॥

nivaarya nijapakshagaanabhimukhasya vidveShiNaH
tvameva jahR^iShe shirO danujadaariNaa svaariNaa |
janusitrataya labdhayaa satatachintayaa shuddhadhiiH
tvayaa sa paramekataamadhR^ita yOginaaM durlabhaam || 9

நிவார்ய நிஜபக்ஷகா³னபி⁴முக²ஸ்யவித்³வேஷிண-
ஸ்த்வமேவ ஜஹ்ருஷே ஶிரோ த³னுஜதா³ரிணா ஸ்வாரிணா |
ஜனுஸ்த்ரிதயலப்³த⁴யா ஸததசிந்தயா ஶுத்³த⁴தீ⁴-
ஸ்த்வயா ஸ பரமேகதாமத்⁴ருத யோகி³னாம் து³ர்லபா⁴ம் || 85-9 ||

''நிறுத்துங்கள், அமைதியாக இருங்கள் என்று எல்லோரையும்  அடக்கினாயே   கிருஷ்ணா , உன்னிடம் எந்த பதற்றமும் இல்லையே அது எப்படி?   சிசுபாலன் இதுவரை செய்த தவறுகளை மன்னித்து அமைதி காத்த  உனக்கு அவன் முடிவு நெருங்கிவிட்டது என்று தெரிந்ததும் உன்னுடைய சுதர்சன சக்ரத்தை அவன் மேல் ஏவினாய் .  எல்லோர்  கண் முன்னாலும்  சுதர்சன சக்ரம் சீறிப் பாய்ந்து சிசுபாலன் சிரத்தைக் கொய்தது.  உயிரற்ற உடலாக விழுந்தான் சிசுபாலன்.
உனது சுதர்சனம்  கொடிய  ராக்ஷஸர்களை மட்டும் தான் வீழ்த்த புறப்படும்.  சிசுபாலனுக்கு அந்த அங்கீகாரம் கிடைத்தது எதனால்?  ஆஹா  மூன்று பிறவிகளாக  உன்னையே சதா  நினைத்தவனுக்கு உனக்கு சமமான அந்தஸ்து தருபவன் அல்லவா நீ?  தவம் செய்த மஹா ரிஷிகளுக்கும் கிடைக்காத  அந்த பேரருள் சிசுபாலனுக்கு கிட்டியது. 

तत: सुमहिते त्वया क्रतुवरे निरूढे जनो
ययौ जयति धर्मजो जयति कृष्ण इत्यालपन्।
खल: स तु सुयोधनो धुतमनास्सपत्नश्रिया
मयार्पितसभामुखे स्थलजलभ्रमादभ्रमीत् ॥१०॥

tataH sumahite tvayaa kratuvare niruuDhe janO
yayau jayati dharmajO jayati kR^iShNa ityaalapan |
khalaH sa tu suyOdhanO dhutamanaaH sapatnashriyaa
mayaarpita sabhaamukhe sthalajalabhramaadabhramiit || 10

தத꞉ ஸ்ஸுமஹிதே த்வயா க்ரதுவரே நிரூடே⁴ ஜனோ
யயௌ ஜயதி த⁴ர்மஜோ ஜயதி க்ருஷ்ண இத்யாலபன் |
க²ல꞉ ஸ து ஸுயோத⁴னோ து⁴தமனாஸ்ஸபத்னஶ்ரியா
மயார்பிதஸபா⁴முகே² ஸ்த²லஜலப்⁴ரமாத³ப்⁴ரமீத் || 85-10 ||

சிசுபாலன் வதம்  முடிந்து  அமைதி மீண்டும்  நிலவியது.  குறித்த காலத்தில் நேரத்தில்  ராஜசூய யாகம்  பூரணமாக  நிறைவேறியது.   எல்லோரும் யுதிஷ்டிரனை வாழ்த்தினார்கள். கிருஷ்ணா, அதை வெற்றிகரமாக நடத்திக் கொடுத்த  உன்னை வாயார, மனமார புகழ்ந்தார்கள்.  எல்லோரும் மனதிருப்தியோடு அவரவர்  தேசத்துக்கு திரும்பினார்கள்.  துரியோதனன் ஹஸ்தினாபுரத்திற்கு திரும்பும்போது அவன் மனதில் பொறாமைத்தீ  வெகுண்டு எழுந்திருந்தது.   அவன் மூச்சு அனலாக வெளிப்பட்டது.  அவனது ஜென்ம  விரோதிகளுக்கு இத்தனை பாராட்டு, புகழ், செல்வம், பேர், மரியாதையா??  சக்ரவர்த்தி என்கிற அந்தஸ்து  யுதிஷ்டிரனுக்கா?  எனக்கில்லையா?  இந்த்ரப்ரஸ்தத்தின்  சீரும் சிறப்பும், அழகும், பொலிவும்  அவனை பலமுறை தடுமாறி விழவைத்த மாயாஜாலமும் அவனை கொடிய மிருகமாக மாற்றிக்கொண்டிருந்தது.  அவனது  தடுமாற்றத்தை கண்டு பலர் கேலி செய்தது அவனை  பொங்கி எழச்செய்தது.

 तदा हसितमुत्थितं द्रुपदनन्दनाभीमयो-
रपाङ्गकलया विभो किमपि तावदुज्जृम्भयन् ।
धराभरनिराकृतौ सपदि नाम बीजं वपन्
जनार्दन मरुत्पुरीनिलय पाहि मामामयात् ॥११॥
 
tadaa hasitamutthitaM drupadanandanaa bhiimayOH
apaangakalayaa vibhO kimapi taavadujjR^imbhayan |
dharaabhara niraakR^itau sapadi naama biijaM vapan
janaardana marutpuriinilaya paahi maamaamayaat ||11

ததா³ ஹஸிதமுத்தி²தம் த்³ருபத³ந்த³னாபீ⁴மயோ-
ரபாங்க³கலயா விபோ⁴ கிமபி தாவது³ஜ்ஜ்ரும்ப⁴யன் |
த⁴ராப⁴ரனிராக்ருதௌ ஸபதி³ நாம பீ³ஜம் வபன்
ஜனார்த³ன மருத்புரீனிலய பாஹி மாமாமயாத் || 85-11 ||
 
தரையை தண்ணீராகவும், தண்ணீரை தரையாகவும் பார்த்து அவன்  ஏமாற்றம் அடைந்தது, அதைக் கண்டு பீமன் பாஞ்சாலி ஆகியோர்  கேலியாக சிரித்தது, அதை நீ ரசித்த உன் குறும்புப் பார்வை, இதழோர புன்னகை,  துரியோதனனை  முழுதும் புரட்டிப் போட்டுவிட்டது.   கிருஷ்ணா இதெல்லாம் உன் திட்டப்படியே  இனி வரப்போகும்  மஹா பாரத போரில் எண்ணற்ற  க்ஷத்ரியர்கள் அழியப்போவதற்கு  அஸ்திவாரம்.  உன் அவதாரம் நிறைவேற வேண்டாமா?   பூமா தேவியின்  கண்ணீர் விடும் முகம்  ''என்னால் இந்த கொடியவர்களின்   பூமி பாரம் சுமக்க முடியவில்லையே'' என்ற  அபலைக் குரல்  காதில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்ததா?'' பூமாதேவியின் பாரத்தைக் குறைக்க நேரம் உனக்கு வந்துவிட்டதா?   எண்டே குருவாயூரப்பா  என் நோய் தீர்த்து என்னையும் ரக்ஷியப்பா.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...